அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 128

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 128

2 – முஸ்லிம்களில் நபித்தோழர்கள் சிறந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளல்

ஸூரத்துத் தவ்பா 9:100

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ

عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ

الْـفَوْزُ الْعَظِيْمُ

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي لا تسبوا

أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم

ولا نصيفه

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – என்னுடைய தோழர்களை ஏசாதீர்கள் என்னுடைய உயிர் எவன் கைவசமிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களிலொருவர் உஹது மலையளவு தங்கத்தை செலவழித்தாலும் என்னுடைய தோழர்கள் கைப்பிடி அளவு கொடுத்ததற்கு சமமாகாது.

(ஸஹீஹ் முஸ்லீம்)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 127

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 127

ஸஹாபாக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்:

1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களை நேசிப்பதால் நாம் அவர்களை நேசிக்க வேண்டும்

ஸூரத்துல் மாயிதா 5:54

அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

♦️ ஸஹாபாக்கள் அப்படி பட்டவர்களாக இருந்தார்கள்.

ஸூரத்துல் ஃபத்ஹ் 48:29

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்;

عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” اللَّهَ اللَّهَ

فِي أَصْحَابِي ، اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي ، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي ، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي

أَحَبَّهُمْ ، وَمَنْ أَبْغَضَهُمْ ، فَبِبُغْضِي أَبْغَضَهُمْ ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي ، وَمَنْ آذَانِي فَقَدْ

آذَى اللَّهَ ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ

நபி (ஸல்) – என்னுடைய தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் எனக்கு பின்னால் அவர்களை நீங்கள் இலக்கு வைக்க வேண்டாம். யார் அவர்களை விரும்புகிறார்களோ எனது நேசத்தால் தான் அவர்களை நேசிக்கிறார்கள். யார் அவர்களை பகைக்கிறார்களோ என் மீது அன்பு கொண்ட  என் தோழர்களை பகைக்கிறார்கள். அவர்களுக்கு யார் தொந்தரவுகளை கொடுக்கிறாரோ அவர் எனக்கு தொந்தரவு தருகிறார். எவர் எனக்கு தொந்தரவு தந்தாரோ அவர் அல்லாஹ்வுக்கு தொந்தரவு கொடுத்தவராவார்.எவர் அல்லாஹ்வுக்கு தொந்தரவு கொடுக்கிறாரோ அல்லாஹ் அவரை வெகு சீக்கிரமாக பிடிக்கக்கூடும்.

♦️ ஷியாக்கள் நபித்தோழர்களை அதிகமாக விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 126

♦️நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் ?

ஈமானில் மிகச்சிறந்தவர்கள் ஹுலபாஉ ராஷிதூன்கள் (நேர்வழி பெற்று நேர்வழியில் நடந்த 4 கலீஃபாக்கள்)

وللحديث شاهد عن سَفِينَةُ رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه

وسلم: الْخِلاَفَةُ فِي أُمّتِي ثَلاَثُونَ سَنَةً، ثُمّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ. ثُمّ قَالَ سَفِينَةُ: امْسِكْ عَلَيْكَ

خِلاَفَةَ أَبي بَكْرٍ، ثُمّ قَالَ: وَخِلاَفةَ عُمَرَ وَخِلاَفَةَ عُثْمانَ، ثُمّ قَالَ لي: امسِكْ خِلاَفَةَ

عَلِيّ قال: فَوَجَدْنَاهَا ثَلاَثِينَ سَنَةً. رواه أحمد وحسنه الأرناؤوط.

♦️ நபி (ஸல்) – என்னுடைய உம்மத்தில் 30 வருடங்கள் ஹிலாஃபத் ஆட்சி நடக்கும்.

ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله

♦️ நபி (ஸல்) – நபித்துவத்தின் அடிப்படையில் ஒரு ஹிலாஃபத் உருவாகும்.

♦️ ஸஹாபாக்களின் மிகச்சிறந்தவர்கள்

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி)

♦️அதற்குப்பின்னர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேர்

  • அபூபக்கர் (ரலி)
  • உமர் (ரலி)
  • உஸ்மான் (ரலி)
  • அலீ (ரலி)
  • அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
  • ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி)
  • ஸஹ்த் இப்னு அபீவக்காஸ் (ரலி)
  • தல்ஹத் இப்னு உபைதுல்லாஹ்(ரலி)
  • சயீத் இப்னு ஸைத் (ரலி)
  • அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி)

மொத்த ஸஹாபாக்களில் 10 பேர் தான் சொர்கத்திற்கு செல்வார்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது.

♦️ அடுத்ததாக பதரில் கலந்துகொண்ட ஸஹாபாக்கள்.

பிறகு மேற்கூறப்பட்ட 10 பேரை தவிர வேறு சந்தர்ப்பங்களில் சொர்கத்திற்

காக நன்மாராயம் கூறப்பட்டவர்கள்.(பாத்திமா (ரலி) அவர்களது இரண்டு பிள்ளைகள், ஸாபித் இப்னு கைஸ் (ரலி),

♦️ பின்னர் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டதாக கூறுகிறான்.

♦️ ஹதீஸுகளை அறிவித்த நபித்தோழர்கள் மொத்தமாகவே 1000 பேர் தான்.

ஹதீஸுகளை அறிவித்தவர்களை 3 ஆகா பிரிக்கலாம்

  • கூடுதலாக அறிவித்தவர்கள்
  • குறைவாக அறிவித்தவர்கள்
  • மிக குறைவாக அறிவித்தவர்கள்

சூரா அல் ஹஷர் 59:10

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

ليس منا من لم يوقر الكبير ويرحم الصغير

நபி (ஸல்) – யார் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையே சிறியவர்கள் மீது கருணை காட்டவில்லையோ அவர்கள் எம்மை சேர்ந்தவரல்லர்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 125

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 125

ஷியாக்களின் நம்பிக்கை:

நபி (ஸல்) வின் தோழர்கள் அவர்களுக்கு துரோகம் செய்தவர்கள். விதிவிலக்காக 4 பேர் மட்டுமே உள்ளனர் என்று நம்புகிறார்கள்.

♦️இப்னு தைமிய்யா

பக்தாதில் (ஈராக்) யூதர்களின் ஆட்சி வருமாயின் அவர்களுக்கு சிறந்த தோழர்களாக ஷியாக்கள் இருப்பார்கள்.

சூரா அல்பகறா 2:129

وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ

அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை….

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 124

♦️உர்வா இப்னு மசூத் ஸகபீ (ரலி) – இஸ்லாத்தை ஏற்கும் முன் – முஹம்மதுடைய தோழர் முஹம்மதை கண்ணியப்படுத்துவதை போன்று வேறெந்த சமுதாயமும் தங்கள் தலைவர்களை கண்ணியப்படுத்துவதை நான் கண்டதில்லை.

சூரா அஷ்ஷுஅரா 26:61

فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.

சூரா அலஃபத்ஹ் 48:29

مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا

يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ

فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى

عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ

مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.

சூரா அத்தவ்பா 9:40

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 123

நபித்தோழர்களை நேசித்தல் அவர்களது சிறப்பை ஏற்றல் இமாம்களுடைய கண்ணியத்தை ஏற்றல் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுத்தல் என்பவற்றை நம்புவது

ஒரு முஸ்லீம் நபித்தோழர்களை நேசித்தல் வாஜிப் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.

قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي

فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني

ومن آذاني فقد آذى الله عز وجل ومن آذى الله يوشك أن يأخذه

நபி (ஸல்) யார் அன்சாரிகளை விரும்புகிறார்களோ எனது நேசத்தின் காரணமாகவே அவர்கள் விரும்புகிறார்கள். யார் அவர்களை பகைக்கிறார்களோ எனது பகைமையின் காரணத்தினாலேயே பகைக்கிறார்கள். (அஹ்மத்)

حبهم ايمان وبغضهم نفاق

♦️️நபி (ஸல்) – அன்சாரிகளை நேசிப்பது ஈமானாகும் அவர்களை பகைப்பது நயவஞ்சகமாகும்.(புஹாரி, முஸ்லீம்)

♦️நபியவர்களின் குடும்பத்தினரை நேசித்தல்.

♦️இது நபி (ஸல்) வை நேசிப்பதின் வெளிப்பாடாகும்.

♦️நபித்தோழர்கள் நம்மை விட சிறந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளுதல்.

♦️நபித்தோழர்கள் சிலர் சிலரை விட தரத்தில் உயர்ந்தவர்களாக இருந்தார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 122

நபி (ஸல்) – மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு தாவா செய்யும்போது கண் தெரியாதவரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தபோது நபி (ஸல்) முகம் கடுகடுத்தார்கள் அப்போது அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களை இறக்கினான்.

சூரா அபஸ 80:1 – 12

(1)அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

(2)அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

(3)(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

(4)அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.

(5) (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

(6)நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

(7)ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

(8)ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

(9)அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-\

(10)அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

(11)அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

(12)எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

❣நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் முஸ்லிமுக்கு செய்தலும் முஸ்லீம் இல்லாதவருக்கு செய்தலும் சமமே என்று புரிந்துகொள்வோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 121

ஒரு மனிதனுக்கு நன்மையை ஏவுவதற்கு முன்னர் அது நன்மை என்று  கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தீமையை தடுப்பதற்கு முன்னர் அது தீமை என்று கற்றுக்கொடுக்க வேண்டும் .

ஒரு தீமையை தடுக்க முடியவில்லையென்றால் மனதார  வெறுக்க வேண்டும்.

சூரா அல்ஃபுர்கான் 25:72

மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 120

(4) உளவுபார்த்து தீமையை கண்டு பிடித்து தடுக்கக்கூடாது

المؤمن غِر كريم والفاجر خب لئيم

ஒரு முஃமின் எப்பொழுதும் ஏமாறக்கூடிய சங்கையுள்ள தன்மையுள்ளவன்

إنما المؤمن كالجمل الأنف، حيثما قيد انقاد

ஒரு முஃமின் ஒட்டகத்தின் கடிவாளம் வளைப்பது போல வளைவான். (அவனிடம் பிடிவாத குணம் இருக்காது; மென்மையான குணம் கொண்டவனாக இருப்பான்).

முனாபிக்குகளின் இயல்பு:

சூரா அல் முனாஃபிகூன் 63:4

كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ…

சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்.(எந்த மாற்றமும் இருக்காது)

சூரா அல்ஹுஜுராத் 49:12

وَّلَا تَجَسَّسُوْا

நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்…

❣நபி (ஸல்) – பிறரை அவமானப்படுத்துபவனை தன்னுடைய வீட்டில் அல்லாஹ் அவமானப்படுத்துவான்.

❣நபி (ஸல்) – என் தோழர்களை பற்றிய தவறான செய்திகளை என்னிடம் கூற வேண்டாம் நான் அவர்களை நல்ல நிலையில் சந்திக்க விரும்புகிறேன்.

اِطَّلَعَ رَجُلٌ مِنْ جُحْرٍ فِي حُجَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ

عَلَيْهِ وَسَلَّمَ مِدْرىً يَحُكُّ بِهِ رَأْسَهُ ، فَقَالَ : (( لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُ ، لَطَعَنْتُ بِهِ فِي

عَيْنِكَ ، إِنَّمَا جُعِلَ الاسْتِئْذَانُ مِنْ أَجْلِ الْبَصَرِ ((.

நபி (ஸல்) வின் வீட்டில் ஒருவர் எட்டிப்பார்த்தார் அப்போது நபி (ஸல்) தலை வாரிக்கொண்டிருந்தார்கள் அப்போது நபி (ஸல்) உங்கள் கண்களை சீப்பால் நோண்டியிருப்பேன் என்று கூறிவிட்டு அவரிடம் அனுமதி கேட்பதென்பதே பார்வைக்காகத்தான் என்று கூறினார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 119

(3) நல்ல பண்புடையவராக இருக்க வேண்டும்

ஷேக் அல்பானி – உண்மையென்பது உள்ளத்திற்கு பாரமானது நம்முடைய பண்புகளால் பாரத்தை நாமாகவே அதிகரித்துவிடக்கூடாது.

عليك بالرفق

நபி (ஸல்) ஆயிஷா (ரலி) இடம் வாகனத்திடம் மென்மையாக நடந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்

إِنَّ الرِّفْقَ لا يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ ، وَلا نُزِعَ مِنْ شَيْءٍ إِلا شَانَهُ

நளினம் எந்த ஒன்றோடு கலந்தாலும் அதை அழகாக்கிவிடும் எந்த ஒன்றை விட்டு போனாலும் அதை அலங்கோலமாக்கிவிடும்.(முஸ்லீம்)

ஸூரத்துல்ஆல இம்ரான் 3:159

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ

عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ

الْمُتَوَكِّلِيْنَ‏

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

❣அழகிய முறையில் தீமையை தடுக்கக்கூடியவர்களாக இருக்க நாம் முயற்சிக்க வேண்டும்.