ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
இந்த வசனத்திற்கு நபி (ஸல்) விடம் விளக்கம் கேட்டபோது:
நபி (ஸல்) வடிகட்டிய கஞ்சத்தனம் வரும் காலத்தையும், மனோஇச்சையை பின்பற்றும் சூழலையும்,உலகத்திற்கு பின் மக்கள் செல்லும் காலத்தை நீங்கள் கண்டால் ஒவ்வொருவரும் தன் கருத்தை வைத்து சந்தோஷப்படும் சூழலை நீங்கள் கண்டால் உங்களுடைய விஷயத்தை நீங்கள் முதலில் சரிசெய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு பின்னால் வரக்கூடிய காலத்தில் மிகப்பெரிய இருள் இருக்கிறது அதில் யாரெல்லாம் மார்க்கத்தை பின்பற்றி வாழுகின்றார்களோ அவர்களுக்கு உங்களில் 50 பேர் செய்யும் கூலி வழங்கப்படும். அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் அந்த காலத்து மக்களின் 50 பேரின் கூலியா என்று கேட்டதற்கு இல்லை உங்களில் 50 பேர் அமல் செய்த கூலி என்று நபி (ஸல்) கூறினார்கள் (ஹாகிம்)
❣ சில ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த செய்தியை விமர்சித்தாலும் இது ஹசன் தரத்தில் உள்ள செய்தி என சில அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
❣ நன்மையை ஏவ வேண்டும் தீமையை தடுக்க வேண்டுமென்றாலும் முதலில் நாம் நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் அல்லாஹ் வின் கேள்வியிலிருந்து தப்புவதற்காகவே
❣ நபி (ஸல்) கூறினார்கள் பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் இன்னொருவரை எப்போதும் உபதேசம் செய்து கொண்டிருந்ததால் கோபமடைந்த அவர் என்னை திருத்தவா அல்லாஹ் உன்னை அனுப்பியிருக்கிறான் என்று கேட்டதும் கோபமடைந்த வணக்கசாலி அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் என்று கூறிவிட்டார். மறுமையில் அல்லாஹ் அந்த வணக்க சாலியிடம் நான் மன்னிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தது யார்? மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் என்னுடைய அதிகாரத்தில் உள்ளது என்று கூறிவிட்டு வணக்கசாலியை நரகத்திற்கு அனுப்பிவிட்டு உபதேசம் செய்யப்பட்டவரை சொர்க்கத்திற்கு அனுப்புவான்.
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!(தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக!நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل
أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم
நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாகநீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள்அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான்அதற்கு பின் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டாலும் பதில் தரப்படமாட்டாது (அபூதாவூத்)
(78)இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
(79)இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை;அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
(164)(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
(165)அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது,அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்;வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
(32)(இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
(33)ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
ஒரு ஊரில் பாவங்கள் நடக்கும் நேரம் அங்கு அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கும் அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் மக்களை சீர்திருத்தம் செய்யும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால்,இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
இப்னு தைமிய்யா (ரஹ்)- ஒரு தீமையை தடுக்கும்போது சில மனசங்கடமாகும் சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும் ஆயினும் வலது கையில் அழுக்கு ஏற்பட்டால் அந்த அழுக்கை நீக்க பலமாக நாம் அதை கழுவுவதை போல நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விஷயங்களும் சில சந்தர்ப்பங்களில் பலத்தை பிரயோகிக்க வேண்டியிருக்கும்
நபி (ஸல்) -ஒருவருக்கொருவர் நேசித்து இருவரும் பிரிந்து விடுகிறார் என்றால் இருவரில் ஒருவர் செய்கின்ற தவறு தான் அதற்கு காரணம்.
நபி (ஸல்) – தொழுகையில் காலோடு கால் சேர்த்து நில்லுங்கள் இல்லையேல் உங்கள் உள்ளங்களுக்கிடையில் அல்லாஹ் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுவான்.
கெட்ட நண்பர்கள் இறைவனுடைய அருளல்ல என்பதை புரிந்து கொள்வோம்
(110) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; ….
யார் நன்மையை ஏவுவதும் தீமையை தடுத்தலும் இல்லையென்றால் அவர் ஈமான் கொள்ளவில்லை
(104) மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
❈ ஷேக் நாஸிருத்தீன் அல்பானி – யார் பொதுவான விஷயங்களை வைத்து தங்கள் செயல்களுக்கு ஆதாரம் காட்டுகிறார்களோ அங்கு தான் பித்அத்திற்கான பிறப்பிடம் இருக்கிறது.
நல்ல விஷயங்களை ஏவுதல் வாஜிப் கெட்ட விஷயங்களை தடுத்தல் வாஜிப் மேலும் அவைகளுடைய ஒழுக்கங்கள்
நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் அகீதாவின் ஒரு பகுதியாகும்
عن أبي سعيد الخدري قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : من
رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ،
وذلك أضعف الإيمان . رواه مسلم
அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) -நபி (ஸல்) – உங்களில் யார் ஒரு தீமையை காண்கிறாரோ அதை தன் கையால் (அதிகாரத்தால்)தடுக்கட்டும், அதற்கு அவர் சக்திபெறவில்லையென்றால் நாவால் தடுக்கட்டும், அதுவும் அவரால் முடியவில்லையென்றால் உள்ளத்தால் அதை அவர் வெறுக்க வேண்டும்அது தான் அவரது ஈமானின் குறைந்த படித்தரமாகும்
அதிகாரபூர்வமாக ஒரு தீமையை தடுக்க சக்தியிருந்தும் தடுக்கவில்லையென்றால் அவரது கொள்கையில் குறைபாடு இருக்கிறது.
முஹ்தஸிலாக்கள் தான் வரலாற்றில் முதல் முறையாக முஹ்ஜிஸத் என்ற வார்த்தை உபயோகித்ததாக கருதப்படுகிறது.
அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் நடப்பது போலவே மோசமானவர்களுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே அற்புதங்களை வைத்து ஒருவரை நல்லவர் என்று முடிவெடுக்க முடியாது
நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் அற்புதம் எந்த சவாலாலும் முறிக்க முடியாததாக இருக்கும்.
நல்லவர்களுக்கு நடக்கும் அற்புதம் அவர்களை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருக்கும்
கெட்டவர்களுடைய கையாலும் அற்புதங்கள் நடக்கும் ஆனாலும் அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு அவர்களுடைய வாழ்வே சாட்சியாக இருக்கும்.
முஹ்தஸிலாக்கள் நபிமார்களுக்கு மட்டுமே அற்புதம் நடக்கும், நல்லவர்களுக்கோ கெட்டவர்களுக்கோ அற்புதம் நடக்காது என மறுத்தார்கள் ஏனெனில் அற்புதம் நடந்தால் அவர்களுக்கும் நபிமார்களுக்கும் என்ன வித்தியாசம் என புத்திப்பூர்வமான வாதமாக நினைத்து வாதிக்கின்றனர். ஆனால் நாம் கூறுகிறோம் அற்புதம் அனைவருக்கும் நடக்கும் ஆனால் நபிமார்களுக்கு நடக்கும் அற்புதம் சவால் விடத்தக்கதாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.
நல்லவர்களுக்கு அல்லாஹ் அவர்களை சங்கைப்படுத்துவதால் அதை நாம் கராமத் என்று நாம் கூறுகிறோம்.
கெட்டவர்களுக்கு அற்புதம் நடக்கும் என்பதற்கு தஜ்ஜாலின் சம்பவங்களே சாட்சியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவன் தன்னைத் தானே அல்லாஹ் என்று கூறிக்கொண்டு அற்புதங்களை செய்வான்.
கருத்துரைகள் (Comments)