அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 108

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 108

6213ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல’ என்று பதிலளித்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்’ என்று கூறினார்கள்.244

Volume :6 Book :78 புஹாரி

❤ சூரா அல் ஜின் 72:8

وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ‏

“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 107

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 107

❤சூரா அல் கஹ்ஃப் 18:50

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖؕ

اَفَتَـتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗۤ اَوْلِيَآءَ مِنْ دُوْنِىْ وَهُمْ لَـكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا‏

அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர,

அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்;

ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா?

அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்;

அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 106

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 106

❤ சூரா அல் அஃராஃப் 7:27,30

ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ

(27)மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ‏

(30)ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் – எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 105

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 105

❤ சூரா அல் அன்ஆம் 6:128

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا‌ ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ‌ۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ

الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا‌‌ ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ

خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ

(128) அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே!

நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் – அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் – நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 104

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 104

اولياء الشيطان ஷைத்தானின் நேசர்கள்

காஃபிர்களுக்கு அல்லாஹ் அல்லாதவர்கள் தான் நேசர்களாக இருப்பார்கள்

❤ சூரா அல்பகறா 2:257

اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ

الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.

❤ சூரா அந்நஹல் 16:36

اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ

“அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்”…

🌰 இணைவைக்கப்படும் அனைவருக்கும் தாகூத் என்று கூறப்படுவர்.

❤சூரா அல் அன்ஆம் 6:121

وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ

(121) நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் – நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 103

வணங்கப்படுபவர்களிடம் அல்லாஹ் மறுமையில் கேள்வி கேட்பான்

🌹 ஸூரா அல்மாயிதா 5:116

وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ

قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ؕ تَعْلَمُ مَا

فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏

இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

ஜுரைஜ் அவர்கள் ஒரு குழந்தையிடம் பேசச்சொன்ன போது அது பேசியது

⚜ நெருப்பு குண்டத்தில் வீசப்பட்டு இருந்த குழந்தை பேசியது

⚜ மக்காவில் கைதுசெய்யப்பட்ட ஸஹாபியின் கையில் மக்காவிலேயே கிடைக்காத பேரீத்தம் பழங்களை அல்லாஹ் இறக்கி வைத்திருந்தான்.

⚜ எந்த ஒரு நல்ல மனிதனும்; தனக்கு இறைவனிடமிருந்து வரும் அற்புதங்களை வெளிப்படுத்தி பிறரை வழி கெடுக்க விரும்ப மாட்டான்.

⚜ ஒரு மனிதருக்கு தெரிந்து எந்த ஒரு அற்புதமும் நடக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 102

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 102

🏵 இறைநேசர்கள் கராமத் (அற்புதம்)

குகைவாசிகளுக்கு அல்லாஹ் பல அற்புதங்களை செய்தான் ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

🏵 ஆனால் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேலாக மக்கள் பள்ளி எழுப்பினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் பிறர் அறிந்து கொண்டனர்

🌹 ஸூரா அல் கஹ்ஃப் 18 : 21

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 101

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 101

💢إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحًا صَاحِبَهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ: أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا

أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ إِنْ كَانَ يَعْلَمُ ذَاكَ كَذَا وَكَذَا

அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவரை நல்லவர் என்று கூறாதீர்கள் மாறாக அவ்வாறு தான் நான் நினைக்கிறேன் அல்லாஹ்விற்கு மேல் நாம் யாரையும் தூய்மை படுத்தவில்லை (புஹாரி, அஹ்மத்)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 100

💠 சூபிஃத்துவத்தில் வழிகேட்டின் உச்சகட்டத்தை அடைந்து தம்மை தாமே இறைவன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார்கள்(எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாமே இறைவன் என்ற அடிப்படையில்)

💠 ஒருவரை இறைநேசர் என்று கூறவேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லித்தந்திருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) சொல்லி தந்திருக்க வேண்டும்,

💠 ஆகவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள இறைநேசர்களை நிச்சயமாக நாம் நம்புகிறோம்.

💠 குர்ஆன் ஹதீஸில் இடம் பெற்றுள்ள சில இறைநேசர்கள்:  

மரியம் (அலை), பிரௌனின் மனைவி, கஹ்ப் வாசிகள், உஸைர், குகைவாசிகள், சூரா யாஸீனில் ஒரு மனிதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, ஜுரைஜ், மஹதி, தஜ்ஜாலை எதிர்நோக்கி செல்லப்போகும் இளைஞன்  போன்றவர்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 99

💢தரீக்கா முறையில் தான் அல்லாஹ்வின் இறைநேசராக ஆக முடியும் என்று ஒரு செய்தியும் குர்ஆன் சுன்னாவில் இல்லையே,இவர்கள் இந்த விஷயங்களை எங்கிருந்து பெற்றார்கள்? இதை கொண்டு வந்தது யார்?

💢كان خلقه القرآن

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) குர்ஆனாக வாழ்ந்தார்கள் (முஸ்லீம்)