அபூஹுரைரா (ரலி) – நான் நேசிக்கக்கூடியவரை யார் தொல்லை செய்கிறாரோ அவருக்கெதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி)
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
(இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
(64) அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை – இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
3 – உயிருடனிருக்கும் நல்ல மனிதரிடம் துஆ கேட்க சொல்வது
நபி (ஸல்) இறந்த பிறகு மழை வேண்டி பிரார்தித்தபோது உமர் (ரலி) உயிருடன் இருந்த அப்பாஸ் (ரலி) விடம் தான் மழை வேண்டி பிரார்த்திக்க சொன்னார்களே தவிர இறந்த நபி (ஸல்) விடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கூறவில்லை.
எந்த நபித்தோழர்களும் நபி (ஸல்) விடம் என் பாவங்களை மன்னியுங்கள் என்று சொல்லவில்லை எனக்காக பாவ மன்னிப்பு தேடுங்கள் என்று தான் சொன்னார்கள்
நபி (ஸல்) விடம் மழையை கேட்கவில்லை மழை வருவதற்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள் என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள்.
இறந்தவர்களிடம் துஆ செய்வதும் துஆ செய்யச்சொல்வதும் மிகப்பெரும் தவறு தான். இது தெளிவான ஷிர்க் (இணைவைப்பாகும்)
2 – அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகளை வைத்து இறைவனை நெருங்குதல்
الحنَّان المنَّان بديع السموات والأرض ذو الجلال والإكرام ، لما رواه أبو داود :
أن رسول الله سمع رجلاً وهو زيد بن عياش الزرقي يقول : ( اللهم إني أسألك
بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السموات والأرض ذو الجلال والإكرام ) ،
فقال : لَقَدْ دَعا بِاسْمِ الله الأَعْظَمِ ، الّذِي إِذا دُعِيَ بِهِ أَجابَ ، وَإِذا سُئِلَ بِهِ أَعْطَى
ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ள சில பெயர்களை கூறி துஆ கேட்கும்போது நபி (ஸல்) கூறினார்கள் இவர் கேட்ட துஆ அல்லாஹ்வுடைய பெயர்களில் மிக உயர்ந்த பெயர்களாகும் அதன் மூலமாக துஆ கேட்டால் அல்லாஹ் அதை கொடுத்தே தீருவான் (அபூதாவூத்)
கவலை ஏற்பட்டால் ஓதும் துஆ வில்
أسألك بكل اسم هو لك -உன்னுடைய எல்லா பெயர்களையும் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்.
ஆகவே துஆ கேட்கும் விஷயத்தை பொறுத்து பெயர்களை கூறி அல்லாஹ் விடம் துஆ கேட்க வேண்டும்.
நபி (ஸல்) – முன்சென்ற சமுதாயத்தின் ஒரு சம்பவத்தை விளக்கியபோது அதில் 3 பேர் குகைக்குள் மாட்டிக்கொண்டார்கள் – ஒவ்வொருவரும் தாம் செய்த நல்லமல்களை கூறி அல்லாஹ்விடம் நான் உனக்காகவே பெற்றோரை பேணினேன் யா அல்லாஹ், உனக்காகவே விபச்சாரத்தை தவிர்த்தேன் யா அல்லாஹ் என்றெல்லாம் கூறி உதவி கேட்டார்கள் அந்த பாறை மெதுவாக நகர்ந்தது என்று வரும் அறிவிப்பில்
அவர்கள் செய்த அமலை அல்லாஹ்விடம் கூறி உதவி கேட்டார்கள்.
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் கூறுகிறான்-ஒரு அடியான் என்னை கட்டாயமாக்கப்பட விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் தான் என்னை நெருங்குகிறான். என்னை சுன்னத்தான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான் நான் அவனை விரும்பும் வரை. நான் அவனை விரும்பி விட்டால் நான் அவன் கேட்கின்ற காதாக, பேசுகின்ற வாயாக, நடக்கின்ற காலாக பிடிக்கின்ற கையாக நான் இருப்பேன்.
முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
தவறாக புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் ஷேக் விளக்குவதை கவனமாக புரிந்து கொள்ள முயற்சிப்போம் இன் ஷா அல்லாஹ்
கருத்துரைகள் (Comments)