Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 87
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 87 & 88
توحيد الألوهية
توحيد العبادة
إنك تأتي قوما أهل كتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن
محمدا رسول الله فإن هم أطاعوا لك بذلك فإعلمهم أن الله افترض عليهم خمس
صلوات في اليوم والليلة فإن هم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم
صدقة تؤخذ من أغنيائهم فترد في فقرائهم
⭕ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு – முஆத் இப்னு ஜபல் (ரலி) யை நபி (ஸல்) எமன் நாட்டிற்கு அனுப்பினார்கள்- (புஹாரி, முஸ்லீம்)
↔ إنك تأتي قوما من أهل الكتاب
நீங்கள் வேதக்காரர்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு செல்கிறீர்கள்.
↔ أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله
முதலாவதாக அவர்களை அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் இல்லையென்றும் முஹம்மத் அல்லாஹ் வின் தூதர் என்றும் கூறுங்கள்
↔ فإن هم أطاعوا لك بذلك
அவர்கள் அதற்கு கட்டுப்பட்டால் சொன்னால்
↔ فإعلمهم أن الله افترض عليهم خمس صلوات
அல்லாஹ் கடமையாக்கிய 5 வேளை தொழுகையை கற்றுக்கொடுங்கள்.
🔵 ஸூரத்துல்ஆல இம்ரான் 3:64
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
🔵 ஸூரத்து ஹூது 11:117
وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ
(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 86
الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى
مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا
وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
அபூஹுரைரா (ரலி) -பலஹீனமான முஃமினை விட பலமான முஃமின் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவன். இருவரில் நன்மை உண்டு அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் சோர்வடைய வேண்டாம் நீங்கள் ஆசை பட்டு அது கிடைக்காமல் மீறி நடந்தால் நான் இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாதீர்கள்.
அல்லாஹ் நாடியதே நடக்கும் ↔ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ
↔ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
ஆல் (அது செய்திருந்தால் இது செய்திருந்தால் என்ற வார்த்தை) ஷைத்தானின் அமல்களை திறந்து விடும்.
(முஸ்லீம் 2664)
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 85
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 85
மறுமையில் அல்லாஹ்விடம் இணைவைத்தவர்கள் பொய் கூறுவார்கள்
💕 ஸூரத்துல் அன்ஆம் 6:23
ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ
“எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
💕 ஸூரத்து யாஸீன்36:65
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
💕 ஸூரத்து ஹாமீம்41:21
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
💕 ஸூரத்துல் முல்க்67:11
(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் – எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” يُقَالُ لِلْكَافِرِ يَوْمَ
الْقِيَامَةِ: أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا، أَكُنْتَ تَفْتَدِي بِهِ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيُقَالُ
لَهُ: قَدْ سُئِلْتَ أَيْسَرَ مِنْ ذَلِكَ “
அனஸ் (ரலி) – நபி (ஸல்) – மறுமை நாளில் காஃபிர்களிடம் அல்லாஹ் கேட்பான் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் தந்தாவது நீ இப்போது நரகத்தை விட்டு வெளியேறியிருக்க கூடாத என்று எண்ணுகிறாயா என்று கேட்பான் அதற்கவர் ஆம் என்றதும் அல்லாஹ் கேட்பான் அதை விட எளிதான ஒன்றையல்லவா நான் உன்னிடம் செய்ய சொன்னேன். (முஸ்லீம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே” என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 84
விதியின் விஷயத்தில் வழி கெட்ட கூட்டங்கள்
❣ கத்ரிய்யா – விதியை மறுத்தவர்கள்
இறைவன் அனைத்தையும் படைத்தான் விதி இருக்கிறது. ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள்.
இஸ்லாமிய அறிஞர்கள் – நாளை நடக்கக்கூடியவை அல்லாஹ் அறிவானா இல்லையா என்று கேள்வி கேட்டபோது?
கத்ரிய்யா – அல்லாஹ் நாளை நடப்பதை அறிந்தவன் தான் ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள்.
❣ ஜாபரிய்யா – மனிதனுக்கு சுதந்திரமே இல்லை. அல்லாஹ் நாடியவை மட்டுமே நடக்கும்.
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 83
விதியை நம்பும்போது
💕 علمه – அறிந்தான்
💕 كتبه – எழுதினான்
💕 شاءه – நாடினான்
💕 خلقه – படைத்தான்
🛡 அதே நேரம் மனிதனுக்கான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையிலான சம்மந்தத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 82
💠 ஸூரத்துல் அன்ஆம்6:148
(அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
💠 ஸூரத்துல்ஆல இம்ரான் 3:168
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 81
⚜ ஸூரத்துல் அன்ஆம் 6: 28
بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ
எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது;
⚜ விதி என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் இரகசியங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்வோம்.
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 80
إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ : اكْتُبْ ، قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبْ
مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ
🛡 உபாத இப்னு ஸாமித் (ரலி) – அபூ தாவூத்
↔ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ
அல்லாஹ் முதலாவதாக எழுதுகோலை படைத்தான்
↔ فَقَالَ لَهُ : اكْتُبْ
அதனிடம் நீ எழுது என்று கட்டளையிட்டான்
↔ قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ
இறைவா நான் என்ன எழுதுவது?
↔ قَالَ : اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَة
அல்லாஹ் கூறினான். மறுமை நாள் வரை நடக்கவிருக்கும் அனைத்தையும் எழுதி விடு
மற்றொரு அறிவிப்பில்
إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ فَقَالَ لَهُ : اكْتُبْ ، فَقَالَ : يَا رَبِّ ، وَمَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبِ
الْقَدَرَ ، فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ فِي ذَلِكَ إِلَى أَنْ تَقُومَ السَّاعَةُ ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ ،
ثُمَّ رُفِعَ بُخَارُ الْمَاءِ ، فَتَفَتَّقَتْ مِنْهُ السَّمَوَاتُ ، ثُمَّ خَلَقَ النُّونَ ، فَتَحَرَّكَ النُّونُ
فَمَادَتِ الأَرْضُ ، فَأُثْبِتَتْ بِالْجِبَالِ ، فَإِنَّهَا لَتَفْخَرُ عَلَيْهَا
↔ فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ فِي ذَلِكَ إِلَى أَنْ تَقُومَ السَّاعَةُ
மறுமை நாள் வரை நடக்கவிருக்கும் அனைத்தையும் அந்த எழுதுகோல் எழுதிவிட்டது
என்று இடம் பெற்றுள்ளது.
🛡 விதியைப் பற்றி அதிகமாக ஆய்வு செய்யாமல் இருப்பதே ஒரு முஸ்லிமுக்கு சிறந்தது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
❈ ஸூரத்துல் கஹ்ஃபு 18:67,68
قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا
(67) (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا
(68) “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!”(என்று கேட்டார்.)
மூஸா (அலை) ஹிழ்ர் (அலை) அவர்களது விஷயத்தில் உள்ள படிப்பினையை விளங்க முயற்சிப்போம்.
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79
அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 79
يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ
فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ
بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ
يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ
🛡 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) யுடன் நபி (ஸல்) செல்லும்போது
சிறுவரே ↔ يَا غُلَامُ
சில வார்த்தைகளை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன் ↔ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ
அல்லாஹ்வை பேணி நடந்தால் அல்லாஹ் உன்னை பாதுகாப்பான்↔ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ
அல்லாஹ்வை பேணி நடந்தால் அவனை உன் முன்னால் காண்பாய் ↔ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ
நீ கேட்டால் அல்லாஹ்விடம் மட்டும் கேள் ↔ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ
உதவி தேடினால் அல்லாஹ்விடம் தேடு ↔ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ
தெரிந்து கொள் ↔ وَاعْلَمْ
மனிதர்கள் அனைவரும் ஒன்று கூடி↔ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ
உனக்கு ஒரு நன்மையை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தாலும் ↔ أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ
அல்லாஹ் உனக்கென்று நாடியதை தவிர அவர்களால் செய்ய முடியாது ↔ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ
அவர்கள் அனைவரும் ஒன்று கூடி உனக்கொரு தீமையை செய்ய நினைத்தாலும் ↔ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ
உனக்கென்று அல்லாஹ் நாடியதை தவிர உன்னை வந்தடையாது. ↔ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ
எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன ↔ رُفِعَتْ الْأَقْلَامُ
ஏடுகள் காய்ந்து விட்டன ↔ وَجَفَّتْ الصُّحُفُ
(திர்மிதி)
கருத்துரைகள் (Comments)