அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 78

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 78

  1. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) இருப்பார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது.

பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான் அல்லாஹ்வின் மீதாணையாக! ‘உங்களில் ஒருவர்’, அல்லது ‘ஒருவர்’ நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துகொண்டே செல்வார்.

இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே ‘விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு’ அல்லது ‘ஒரு முழம்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.

(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே ‘ஒரு முழம்’ அல்லது ‘இரண்டு முழங்கள்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார், என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஆதம் இப்னு அபீ இயாஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (ஒரு முழமா இரண்டு முழங்களா? என்பதில் சந்தேகம் இல்லாமல்) ஒரு முழம் என்றே (தீர்மானமாக) இடம் பெற்றுள்ளது. (புஹாரி)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 77

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 77

🌹 ஸூரத்துல் அன்ஆம்6:59

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ

اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

🌹 ஸூரத்துத் தக்வீர் 81:29

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

🌹 ஸூரத்துல் அன்பியா 21 : 98 & 101

اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَـنَّمَؕ اَنْـتُمْ لَهَا وَارِدُوْنَ‏

(98) நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)

اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ‏

(101) நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.

🏵 நல்லவர்களை மக்கள் வணங்கினால் அதற்கு அந்த நல்லவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என இந்த வசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்

🌹 ஸூரத்துல் அஃராஃப் 7:43

وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ‌ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ

هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌ ‌ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ ؕ وَنُوْدُوْۤا

اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் – நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 76

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 76

🌷 ஸூரத்துல் கமர் 54:49

اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏

நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

🌷 ஸூரத்துல் ஹிஜ்ர் 15:21

وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ‏

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.

🌷 ஸூரத்துல் ஹதீத் 57:22

مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ

ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚ  ۖ‏

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

🌷 ஸூரத்துத் தஃகாபுன் 64:11

مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

🌷 பனீ இஸ்ராயீல்17:13

وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் – திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.

🌷 ஸூரத்துத் தவ்பா 9:51

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 75

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 75

விதியை நம்புதல்

விதியை நம்புதல் ஈமானின் அடிப்படையில் ஒன்றாக வராது என்று கூறும் மௌலானா மௌலூதியின் அவர்களின்  வாதம் அடிப்படையற்றது. ஒரு முஸ்லிமிற்கு குர்ஆனும் ஹதீஸும் 2 அடிப்படைகளாகும்.

விதியை மறுத்தவர் காஃபிராகி விடுவார்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 74

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 74

🌹 பொதுவாக ஈமான் கொள்ளுதல் என்று வருகிற இடத்திலெல்லாம் قدر ஐ பற்றி தான் வரும்.

وتؤمن بالقدر خيره وشره

🌹 ஈமானைப்பற்றி சொல்லும்போது சிலர்

أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من

الله تعالى

என்று கூறுவார்கள். இதில்  من الله تعالى என்பது ஆதாரமற்ற செய்தியாகும் அப்படி சொல்வதும் தவறாகும்.  

قضى ↔ இறைவனது தீர்ப்பு

தீர்ப்பு சொல்லுதல் (القاضى – நீதிபதி )

قدر ↔ நிர்ணயம்

சொல் அடிப்படையில் வெவ்வேறு விதமாக இருந்தாலும் இரண்டும் ஒன்றைத்தான் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

🌹 நபி (ஸல்)  ஒரு துஆ வில்

ماض في حكمك عدل في قضاؤك

(யா அல்லாஹ்)உனது தீர்ப்பு என்னில் நடந்தே தீரும், நீ என்ன தீர்ப்பளித்தாலும் அது நீதியான தீர்ப்பாக தான் இருக்கும்

🌹ஆகவே பொதுவாக قضى என்று கூறினாலும் அது قدر ஐ குறிக்கக்கூடியதாக இருக்கும்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 85

ஹதீஸ் பாகம்-85

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜ عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى

لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت

عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي

يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن

سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددي

عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் எனது நேசரை பகைக்கிறாரோ அவருடன் நான் யுத்த அறிவிப்பு செய்கிறேன் ஒரு அடியான் என்னை நெருங்குவதற்கு நான் விரும்பும் வழி அவர் மீது கடமையாக்கப்பட்ட அமல்களை செய்வது தான் அதற்கும் மேலாக உபரியான வணக்கங்களை செய்து என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான் நான் அவனை விரும்பும் வரை  நான் அவனை விரும்பி விட்டால் அவன் கேட்கும் காதாக நானிருப்பேன் அவன் பார்க்கும் பார்வையாக நானிருப்பேன் அவன் பிடிக்கின்ற கையாக நானிருப்பேன் அவன் நடக்கின்ற பாதமாக நானிருப்பேன் என்னிடத்தில் கேட்டால் உடனே நான் கொடுப்பேன் என்னிடத்தில் பாதுகாப்பு தேடினால் உடனே வழங்குவேன் எனக்கு விருப்பமான முஃமினின் உயிரைக்கைப்பற்றும் விஷயத்தை தவிர நான் தடுமாறுவதில்லை அவன் விரும்பாத மரணத்தை கொடுக்க நான் விரும்பவில்லை என அல்லாஹ் கூறுகிறான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 84

ஹதீஸ் பாகம்-84

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب التواضع

பணிவு

⚜ عن أنس قال كانت ناقة لرسول الله صلى الله عليه وسلم تسمى العضباء

وكانت لا تسبق فجاء أعرابي على قعود له فسبقها فاشتد ذلك على المسلمين

وقالوا سبقت العضباء فقال رسول الله صلى الله عليه وسلم إن حقا على الله أن لا

يرفع شيئا من الدنيا إلا وضعه

அனஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது  அதன் பெயர் அத்பாஹ் அதற்கு தோல்வியே இல்லை ஒரு அரபி வயதான ஒரு ஒட்டகத்தை கொண்டு வந்து போட்டி வைப்போமா என்றார் அவருடைய ஒட்டகம் வெற்றிபெற்றது முஸ்லிம்களுக்கு அது பெரும் பாரமாக இருந்தது அத்பாஹ் தோற்றுவிட்டதே என்றார்கள் அப்போது நபி (ஸல்) கூறினார்கள் இந்த உலகத்தில் எது உயர்ந்தாலும் அதை ஒரு முறை தாழ்த்தி விடுவது இறைவனின் விதிகளில் ஒன்றாகும்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 83

ஹதீஸ் பாகம்-83

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب من جاهد نفسه في طاعة الله

அல்லாஹ்வை வழிபடுவதற்காக போராடுதல்

⚜ معاذ بن جبل رضي الله عنه قال بينما أنا رديف النبي صلى الله عليه وسلم

ليس بيني وبينه إلا آخرة الرحل فقال يا معاذ قلت لبيك يا رسول الله وسعديك ثم

سار ساعة ثم قال يا معاذ قلت لبيك رسول الله وسعديك ثم سار ساعة ثم قال يا

معاذ بن جبل قلت لبيك رسول الله وسعديك قال هل تدري ما حق الله على عباده

قلت الله ورسوله أعلم قال حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا ثم

سار ساعة ثم قال يا معاذ بن جبل قلت لبيك رسول الله وسعديك قال هل تدري ما

حق العباد على الله إذا فعلوه قلت الله ورسوله أعلم قال حق العباد على الله أن لا

يعذبهم

முஆத் இப்னு ஜபல் (ரலி) – நான் நபி (ஸல்) உடன் ஒட்டகத்தில் பின்னாலிருந்தேன் எனக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் சாய்மானம் தவிர வேறெதுவும் இருக்கவில்லை நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன் சிறிது நேரம் சென்றார்கள் பிறகு நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன் சிறிது நேரம் சென்றார்கள் பிறகு நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன்  அல்லாஹ்விற்கு அடியார்கள் செய்யவேண்டிய கடமை என்னவென்று தெரியுமா என்று கேட்டார்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்றேன் அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு இணை வைக்கக்கூடாது பிறகு சிறிது நேரம் சென்றார்கள் நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன் அடியார்கள் இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை சரியாக செய்தால்; அடியார்கள் மீது அல்லாஹ்வின் கடமை என்னவென்று தெரியுமா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்றேன் அதற்கு நபி (ஸல்) அல்லாஹ் அவர்களை நரகத்தில் வேதனை செய்யக்கூடாது என்பதாகும்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 82


ஹதீஸ் பாகம்-82

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

 عن ابن عمر – رضي الله عنهما – قال : قال رسول الله – صلى الله عليه

وسلم – : “ إنما الناس كالإبل المائة ، لا تكاد تجد فيها راحلة ” . متفق عليه

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – மனிதர்கள் 100 ஒட்டகங்களைப்போலாவார், அதில் ஒருவரையும் தகுதிமிக்கவராக காணமாட்டீர்கள்.

باب الرياء والسمعة

முகஸ்துதிக்காக செயல்படல்

 جندبا يقول قال النبي صلى الله عليه وسلم ولم أسمع أحدا يقول قال النبي

صلى الله عليه وسلم غيره فدنوت منه فسمعته يقول قال النبي صلى الله عليه

وسلم من سمع سمع الله به ومن يرائي يرائي الله به

ஜூந்துப் (ரலி) – நபி (ஸல்) – ஒரு விஷயத்தை யார் அல்லாஹ்விற்காக செய்கின்றாரோ அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்  யார் ஒருவர் மனிதர்கள் பார்க்க கேட்க செய்கின்றாரோ அல்லாஹ் அவரை குறித்து, மோசமான பார்வையும், மோசமான செய்தியைக் கேட்கும் விதமாக மக்களை ஆக்குவான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 81

ஹதீஸ் பாகம்-81

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

 حذيفة قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين رأيت أحدهما وأنا

أنتظر الآخر حدثنا أن الأمانة نزلت في جذر قلوب الرجال ثم علموا من القرآن ثم

علموا من السنة وحدثنا عن رفعها قال ينام الرجل النومة فتقبض الأمانة من قلبه

فيظل أثرها مثل [ ص: 2383 ] أثر الوكت ثم ينام النومة فتقبض فيبقى أثرها

مثل المجل كجمر دحرجته على رجلك فنفط فتراه منتبرا وليس فيه شيء فيصبح

الناس يتبايعون فلا يكاد أحد يؤدي الأمانة فيقال إن في بني فلان رجلا أمينا ويقال

للرجل ما أعقله وما أظرفه وما أجلده وما في قلبه مثقال حبة خردل من إيمان

ولقد أتى علي زمان وما أبالي أيكم بايعت لئن كان مسلما رده علي الإسلام وإن

كان نصرانيا رده علي ساعيه فأما اليوم فما كنت أبايع إلا فلانا وفلانا

ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) எங்களுக்கு இரண்டு விஷயங்களை சொன்னார்கள்ஒன்றை நான் பார்த்துவிட்டேன் மற்றொன்றை எதிரிபார்த்திருக்கிறேன் அல்லாஹ் அமானிதத்தை மனிதனின் உள்ளத்தின் ஆழத்தில் வைத்திருந்தான் பின்னர் குர்ஆனிலிருந்து படித்தார்கள் மேலும் சுன்னத்திலிருந்து படித்தார்கள் அந்த அமானிதம் எப்படி போகும் என்று சொன்னார்கள். ஒரு மனிதன் தூங்குகிறான்; அமானிதத்தை அல்லாஹ் அவரது உள்ளத்திலிருந்து எடுத்து விடுவான்’ பின்னர் காயம் ஏற்பட்ட வடுவைப்போல அவனது உள்ளத்தில் ஒரு அடையாளம் இருக்கும். பின்பொரு தூக்கம் தூங்குவான் அப்போது அது ஒரு கொப்பளம் போலாகிவிடும் ஒரு நெருப்புக்கட்டி கையிலும் காலிலும் உருண்டு அவ்விடத்தில் வீக்கம் ஏற்பட்டு அதிலொரு வட்டமான கொப்பளத்தை காண்பீர்கள் அதை உடைத்தால் அதிலொன்றும் இருக்காது. மக்கள் வியாபாரம் செய்வார்கள் ஆனால் எவரும் அமானிதத்தை பேண மாட்டார்கள்; அந்த ஒரு இடத்தில ஒரு நேர்மையான மனிதர் இருக்கிறாராம் என்று கேள்விப்படும் அளவு ஆகி விடும் சில மனிதர்களைப்பற்றி கூறப்படும் அவர் மிகவும் புத்தியுள்ளவர், மிகவும் நுட்பமானவர், மிகவும் உறுதியானவர் என்றெல்லாம் கூறப்படும் ஆனால் அவருடைய உள்ளத்தில் அணுவளவும் ஈமான் இருக்காது. ஒரு காலத்தில் நான் யாருடன் வியாபாரம் செய்தலும் பயப்படாமல் செய்தேன் அவர் முஸ்லிமாக இருந்தால் அவருடைய இஸ்லாமிய தன்மை அந்த அமானிதத்தை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் அவர் கிறிஸ்தவராக இருந்தால் அவருடைய பொறுப்பாளர் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார் ஆனால் இன்றோ வியாபாரம் என்றால் குறிப்பிட்ட சிலரோடு மட்டுமே நான் செய்வேன் வேறெவரோடும் செய்ய மாட்டேன்.