ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80

ஹதீஸ் பாகம்-80

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب رفع الأمانة

அமானிதம் உயர்த்தப்படல்

⚜ أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت

الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير

أهله فانتظر الساعة

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள் அமானிதம் வீணடிக்கப்படுதல் என்றால் என்ன யா ரசூலல்லாஹ் தகுதியற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டால் மறுமையை எதிர் பாருங்கள் என பதிலளித்தார்கள்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79

ஹதீஸ் பாகம்-79

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب العزلة راحة من خلاط السوء

கெட்ட உறவுகளை விட தனிமை ராஹத்தானது(நிம்மதியளிக்கக்கூடியது)

⚜ عن أبي سعيد الخدري قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا

رسول الله أي الناس خير قال رجل جاهد بنفسه وماله ورجل في شعب من

الشعاب يعبد ربه ويدع الناس من شره

அபூஸயீது அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் வந்து மக்களில் சிறந்தவர் என்று கேட்டார் ஒரு மனிதர் தனது சொத்தாலும் தனது உயிராலும் போராடுகிறார் ஒரு ஒதுக்கமான பகுதியில் சென்று அல்லாஹ்வை வணங்கி தன்னால் பிறருக்கு தீங்கு வரக்கூடாதென்று வாழ்கிறார்.

⚜ عن أبي سعيد الخدري أنه سمعه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول

يأتي على الناس زمان خير مال الرجل المسلم الغنم يتبع بها شعف الجبال ومواقع

القطر يفر بدينه من الفتن

அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு காலம் வரும் மக்களின் சிறந்த சொத்தாக ஆடுகள் இருக்கும்; மலையடிவாரங்கள் மழை பொழியும் இடங்கள் போன்ற ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார் ஃபித்னாக்களுக்குள் தான் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 78

ஹதீஸ் பாகம்-78

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الأعمال بالخواتيم وما يخاف منها

செயல்களுடைய கூலிகளெல்லாம் இறுதி முடிவைப்பொறுத்து தான்(இறுதி முடிவை அஞ்ச வேண்டும்)

عن سهل بن سعد الساعدي قال نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل

المشركين وكان من أعظم المسلمين غناء عنهم فقال من أحب أن ينظر إلى رجل

من أهل النار فلينظر إلى هذا فتبعه رجل فلم يزل على ذلك حتى جرح فاستعجل

الموت فقال بذبابة سيفه فوضعه بين ثدييه فتحامل عليه حتى خرج من بين كتفيه

فقال النبي صلى الله عليه وسلم إن العبد ليعمل فيما يرى الناس عمل أهل الجنة

وإنه لمن أهل النار ويعمل فيما يرى الناس عمل أهل النار وهو من أهل الجنة

وإنما الأعمال بخواتيمها

சஹல் இப்னு சஹத் அஸ்ஸாஇதீ (ரலி) – யுத்தகளத்தில் முஷ்ரிக்குகளுடன் போராடும் ஒருவரை நபி (ஸல்) யுத்தகளத்தில் சந்தித்தார்கள். முஸ்லிம்களிலேயே மிகவும் அதிகம் போராடக்கூடிய போராளியாக அவர் இருந்தார். நரகவாதிகளில் ஒருவரைப்பார்க்க வேண்டுமென்றால் இவரைப்பார்த்துக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். ஒரு மனிதர் அவரை பின்தொடர்ந்தார் ஒரு கட்டத்தில் அந்த போராளிக்கு காயம் ஏற்பட்டது

மரணத்திற்காக அவசரப்பட்டு ஒரு வாளை நட்டுவைத்து தன்னை அதன் மீது குத்தவைத்து தற்கொலை செய்துக்கொண்டார் அப்போது நபி (ஸல்) கூறினார்கள் ஒரு மனிதன் அமல் செய்துக்கொண்டிருப்பான் மக்களுடைய பார்வையில் அது சொர்க்கவாசிகள் அமலைப்ப, போன்றிருக்கும் ஆனால் அவர் நரக வாதிகளில் ஒருவராக இருப்பார் சில மனிதர்களின் செயலைக்கண்டால் நரகவாதிகளின் செயல் போன்றிருக்கும் அவர் சுவர்க்க வாதிகளில் ஒருவராக இருப்பார் இறுதி முடிவை வைத்து தான் ஒருவருடைய அமல்  முடிவெடுக்கப்படும்.  

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 77

ஹதீஸ் பாகம்-77

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ما يتقى من محقرات الذنوب

அலட்சியமாக கருதப்படும் பாவங்களிலும் பயந்து நடக்க வேண்டும்

عن أنس رضي الله عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن

كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات قال أبو عبد الله

يعني بذلك المهلكات

அனஸ் (ரலி) – நீங்கள் சில வேலைகளில் ஈடுபடுகிறீர் உங்களுடைய பார்வையில் முடியை விட அது இலேசானது.  ஆனால்; நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எங்களை அழிக்கக்கூடிய பெரும்பாவங்கள் அவை என்று நாங்கள் கருதினோம் (இமாம் புஹாரி இதற்கு விளக்கமளிக்கையில்) அழிக்கக்கூடிய பாவங்கள் என்று அர்த்தம் கூறினார்கள்

விளக்கம்:

இல்மின் மூலம் பெரும்பாவம் எதுவென்று நமக்கு தெரிந்தாலும் ஈமானின் காரணமாக சிறிய பாவமும் பெரிதாக தெரியும்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 76

ஹதீஸ் பாகம்-76

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب من هم بحسنة أو بسيئة

நல்ல விஷயத்தை செய்ய ஆர்வமும் தீமை செய்ய ஆர்வமும்

أبو رجاء العطاردي عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه

وسلم فيما يروي عن ربه عز وجل قال قال إن الله كتب الحسنات والسيئات ثم بين

ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها

فعملها كتبها الله له عنده عشر حسنات إلى سبع مائة ضعف إلى أضعاف كثيرة

ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها

كتبها الله له سيئة واحدة

இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) அல்லாஹ் கூறுவதாக அறிவித்தார்கள் (ஹதீத் குதுஸி)அல்லாஹ் நன்மைகளையும் பாவங்களையும் எழுதினான் பின்னர் அதை விளக்கினான் ஒருவர் நன்மையை செய்ய வேண்டும் என்று ஆர்வப்பட்டு அதை செய்யவில்லையென்றாலும் அந்த நன்மை முழுமையாக செய்ததாக அல்லாஹ் எழுதுகிறான் அவன் அந்த நன்மையை செய்தால் அல்லாஹ் அதற்கு 10-700 மடங்கு வரையோ அல்லது அதற்கு மேலும்  கூலியை எழுதுகிறான். எவரேனும் ஒரு பாவத்தை செய்ய எண்ணி அதை செய்யாமல் விட்டு விடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு கூலியை எழுதுகிறான் ஆனால் அவன் பாவத்தை செய்ய எண்ணி அதை செய்தால் ஒரே ஒரு பாவம் செய்ததாக அல்லாஹ் எழுதுவான்.  

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 75

ஹதீஸ் பாகம்-75

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب لينظر إلى من هو أسفل منه ولا ينظر إلى من هو فوقه

தனக்கு கீழுள்ளவரைப்பார்க்கட்டும் மேலுள்ளவரைப்பார்க்க வேண்டாம்

أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا نظر أحدكم إلى من فضل

عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சொத்திலும் உடலமைப்பிலும் தன்னை விட சிறந்தவரைப் பார்த்தால்; தன்னைவிட கீழுள்ளவரை அவர் பார்த்துக்கொள்ளட்டும்

Arabic Book 1 Revision

Lesson 1:

Lesson 2:

Lesson 3:

Lesson 4 Part 1:

Lesson 4 Part 2:

Lesson 5:

Lesson 6:

Lesson 7:

Lesson 8:

 

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 18

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 18

ظهور النساء كاسيات عاريات

ஆடையணிந்தும் நிர்வாணியாக இருக்கும் பெண்.

صنفان من أهل النار لم أرهما رجال بأيديهم سياط كأذناب البقر يضربون بها

الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا

يدخلن الجنة ولا يجدن ريحها

💝 நபி ஸல்-ஆடை அணிந்திருப்பார்கள் ஆனால் நிர்வாணமாக இருப்பார்கள் சாய்ந்து நடக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் மக்களை சாய்க்க கூடியவர்களாக இருப்பார்கள் தலை முடியை ஒட்டகத்தின் திமில் போல வைத்திருப்பார்கள். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் மேலும் சொர்க்கத்தின் வாசனையை கூட நுகர மாட்டார்கள் (முஸ்லீம்)

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 17

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 17

ظهور الخسف والمسخ والقذف

உருமாற்றம் பூகம்பம் வானத்திலிருந்து எறியப்படல் அதிகரித்தல்.

قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسخ وقذف

💝ஆயிஷா (ரலி) – நபி (ஸல்)- பூமி விழுங்குவது, உருமாற்றம் செய்தல், வானத்திலிருந்து கல்மாரி பொழிதல் ஏற்படுதல் மறுமையின் அடையாளங்களில் பட்டதாகும். ஆயிஷா (ரலி) கேட்டார்கள் எங்களில் நல்லவர்கள் இருக்கும்போது அல்லாஹ் அழிப்பானா? நபி (ஸல்) கூறினார்கள் கெட்ட விஷயங்கள் வெளிப்பட ஆரம்பித்தால் நல்லவர்களையும் சேர்த்து தான் அல்லாஹ் அழிப்பான் நல்லவர்களுடைய நிய்யத்திற்கேற்ப அல்லாஹ் எழுப்புவான் (திர்மிதி)

சூரா ஹூது 11:117

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ

↪(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.

ذهاب الصالحين↔ நல்லவர்கள் குறைதல்

تقوم الساعة حتى يأخذ الله – عز وجل – شريطته من أهل الأرض فيبقى عجاج لا

يعرفون معروفا ، ولا ينكرون منكرا ” ” هذا حديث صحيح على شرط الشيخين ،

إن كان الحسن سمعه من عبد الله بن عمرو .

💝அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)- நபி (ஸல்)-அல்லாஹ் தனது நல்ல மக்களை கைப்பற்றும் வரை மறுமை நாள் ஏற்படாது அதில் சிலர் மிஞ்சியிருப்பார்கள் அவர்களுக்கு நன்மையென்றால் என்னவென்று தெரியாது தீமையென்றால் என்னவென்று தெரியாது(முஸ்னத் அஹ்மத்).

ارتفاع الاسافل⬇↔

கெட்டவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள்

إِنَّهَا سَتَأْتِي عَلَى النَّاسِ سِنُونَ خَدَّاعَةٌ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ،

وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ “، قِيلَ: وَمَا

الرُّوَيْبِضَةُ يا رسول الله؟ قَالَ: ” السَّفِيهُ يَتَكَلَّمُ فِي أَمْرِ العامة

💝அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)-ஏமாற்றக்கூடிய ஒரு காலம் வரும் பொய்யனை உண்மைப்படுத்துவார்கள் உண்மையாளனை பொய்ப்படுத்துவார்கள் மோசடிக்காரனை நம்புவார்கள் நம்பிக்கையாளனை நம்பாமல் இருப்பார்கள் ருவைபிலாக்கள்(மடையன், அறிவு கெட்டவன், விளக்கமில்லாதவன்) பேச ஆரம்பிப்பார்கள்.  (அஹ்மத்)

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 16

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 16

كثرة التجارة↔ வியாபாரம் பெருகுதல்

إن بين يدي الساعة تسليم الخاصة ، وفشو التجارة حتى تعين المرأة زوجها على

التجارة ، وحتى يخرج الرجل بماله إلى أطراف الأرض فيرجع فيقول : لم أربح

شيئا.

💝அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) தொழுதுகொண்டிருக்கும்போது ஒருவர் அவருக்கு மட்டும் தனியாக ஸலாம் சொல்லிவிட்டு சென்றார் அப்போது அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) நபி (ஸல்) சொன்னது உண்மையாயிற்று ஏனெனில் நபி (ஸல்) கூறினார்கள் தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் சொல்லுவது மறுமையின் அடையாளமாகும் மேலும் வியாபாரத்தில் கணவனுக்கு மனைவி உதவி செய்யும் காலம் வருவது மறுமையின் அடையாளமாகும்

كثرة الزلزال↔ பூகம்பங்கள் அதிகரிக்கும்

لا تقوم الساعة حتى يقبض العلم، وتكثر الزلازل

💝அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – பூகம்பங்கள் அதிகரிக்கும் வரை மறுமை நாள் நிகழாது (அஹ்மத்).