Alif 05

Alif 04

Alif 03

Alif 02

Alif 01

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 7

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 7

قتال العجم

 அரபுகள் அல்லாதவர்களுடன் யுத்தம் நடக்கும்.

 அமானித மோசடி – ضياع الامانة

ஹுதைபா (ரலி) – இன்று நான் யாரிடமும் கொடுக்கல் வாங்கல் வைக்க மாட்டேன் ஏனெனில் இன்றைய நாளில் அமானிதத்தை பேணுபவர்களை அதிகமாக நான் காணவில்லை.

قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف

إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة

 நபி (ஸல்) – அமானிதம் பாழாக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள். அமானித மோசடியென்றால் என்ன யா ரசூலுல்லாஹ் – பொறுப்பற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படும் என்றால் மறுமை நாளை எதிர்பாருங்கள்.

قبض العلم وظهور الجهل

 அறிவு பறிக்கப்படல் அறியாமை பரவுதல்.

من أشراط الساعة أن يرفع العلم  ويثبت الجهل

 மறுமையின் அடையாளங்களில் ஒன்று அறிவு உயர்த்தப்பட்டு அறியாமை வெளிப்படும்.

إن الله لا يقبض العلم انتزاعا ينت عه من الناس ولكن يقبض العلم  بقبض العلماء

حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤساء جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا

وأضلوا

 நிச்சயமாக அல்லாஹ் மார்க்க அறிவை ஒரேடியாக உயர்த்துவதில்லை. அறிவுள்ள உலமாக்கள் மரணமடைவதன் மூலம் அல்லாஹ் அறிவை உயர்த்துவான். மக்கள் அறிவற்றவர்களை தலைவர்களாக எடுப்பார்கள் அவர்களிடம் மார்க்கத்தீர்ப்பு கேட்பார்கள் அவர்கள் தானும் வழி கெட்டு பிறரையும் வழி கெடுப்பார்கள்.

 ஹிஜ்ரி 10 ஆம் நூற்றாண்டில் இப்படியொரு காலமிருந்ததாக கணிக்கப்படுகிறது.

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 6

அகீதா 

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 6

لاتقوم الساعة حتى يبعث دخالون كذابون قريب من ثلاثين، كلهم يزعم أنه رسول

الله

 நபி (ஸல்) – தஜ்ஜால்கள் (பொய்யர்கள்) கிட்டத்தட்ட 30 பேர் வரும்வரை மறுமை வராது அவர்கள் ஒவ்வொருவரும் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுவார்கள்.

 பாதுகாப்பு ஏற்படுதல் 

انتشار الامن

 துருக்கியர்களுடன் யுத்தம் 

اتركوا الترك ما تركوكم

 நீங்கள் துருக்கியர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் உங்களை விட்டுவிடும் காலமெல்லாம்.

لا تقوم الساعة حتى يقاتل المسلمون الترك قوما وجوههم كالمجان المطرقة

 மறுமை நாள் ஏற்படாது முஸ்லிம்கள் துருக்கியர்களுடன் யுத்தம் செய்யாதவரை. யுத்தகேடயம் போல முகம் முகம் தட்டையானவர்களுடன் முடிகளால் ஆன செருப்புகளை அணிகின்றவர்களுடன் யுத்தம் செய்யாத வரை முடிகளால் ஆன உடைகளை அணிகின்றவர்களுடன் யுத்தம் செய்யாதவரை மறுமை ஏற்படாது.

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 5

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 5

 நபி (ஸல்) – பாழடைந்த ஓலை வீட்டை நோக்கி அந்த வீட்டில் மழை பொழிந்தால் எப்படி அந்த வீடு நனையுமோ அந்த அளவுக்கு குழப்பம் ஒவ்வொரு பகுதியிருந்தும் வரும்.

 உமர் (ரலி) – ஹுதைபாஹ் (ரலி) இடம் பித்னா வை பற்றி கேட்ட போது – உங்களுக்கும் பித்னாவுக்கும் இடையில் ஒரு மூடப்பட்ட கதவு இருக்கிறது.

إن بين يدي الساعة فتنا كقطع الليل المظلم، يصبح الرجل فيها مؤمناً ويمسي

كافراً، ويمسي مؤمناً ويصبح كافراً، القاعد فيها خير من القائم، والقائم فيها خير

من الماشي، والماشي فيها خير من الساعي، فكسروا قسيكم، وقطعوا أوتاركم

 واضربوا سيوفكم الحجارة، فإن دخل على أحدكم فليكن كخير ابني آدم

 காரிருள்களின் தொடரைப்போல் குழப்பங்கள் மறுமைநாளுக்கு இடையில் இருக்கின்றன. காலையில் முஃமினாக இருப்பான் மாலையில் காஃபிராகி விடுவான், மாலையில் முஃமினாக இருப்பான் காலையில் காஃபிராகி விடுவான். அந்த காலத்தில் நிற்பவனை விட அமர்ந்திருப்பவர் சிறந்தவர். நிற்பவர் நடப்பவரை விட சிறந்தவர். நடப்பவர் ஓடுபவரை விட சிறந்தவர். உங்களுடைய அம்புகளை உடைத்து விடுங்கள் வாளை கல்லில் அடியுங்கள். வீட்டுக்குள் அந்த குழப்பம் வந்தால் ஆதமுடைய மகன்களில் சிறந்தவரே போல அமைதியாய் இருந்துவிடுங்கள்.

تَّواعَوُّذُ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ

 வெளிப்படையான மற்றும் உள்ளரங்கமான அனைத்து பித்னாவை விட்டும் பாதுகாவல் தேடுங்கள்.

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 4

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 4

நடந்து முடிந்த அடையாளங்கள்

اعدد ستا بين يدي الساعة موتي، ثم فتح بيت المقدس

 பைத்துல் முகத்தஸ் வெற்றிக்கொள்ளப்படும் (ஹிஜ்ரி 16 உமர் (ரலி) ஆட்சியில் வெற்றிக்  கொள்ளப்பட்டு விட்டது. சில உலமாக்கள் இது மீண்டும் வெற்றிக் கொள்ளப்படும் என்றும் கருத்து கூறுகிறார்கள்)

طاعون عمواس

 நபி (ஸல்) – அம்வாஸ் என்ற தொற்றுநோய் பரவும் (உமர் (ரலி) காலத்தில் இந்த நோய் பரவியது)

استفاضة المال والاستغناء عن الصدقة

 பொருளாதாரம் முஸ்லீம் சமுதாயத்தில் வழிந்தோடும்.

للا تَقُومُ السَّاعةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُهُ مِنْهُ

صَدَقَةً، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُ لَهُ لا إِرَبَ لِي فِيهِ

 உங்களில் பொருளாதாரம் அதிகரிக்கும் வரை மறுமை ஏற்படாது. எந்த அளவிற்கு என்றால் ஒருவருக்கு சாதகா கொடுக்கப்பட்டால் எனக்கு தேவையில்லை என்று கூறுவார். அந்த அளவிற்கு செல்வம் பெருகும்.

 நபி (ஸல்) முன்னாள் பசியால் விழுந்தார்கள் – சாப்பாடு இருந்திருந்தால் உங்களுக்கு தான் தந்திருப்பேன். ஒரு காலம் வரும் உலகம் உங்களுக்கு கீழ் குவியும் – இன்று நீங்கள் சிறந்தவர்களா? அன்றா? – இன்று தான் நீங்கள் சிறந்தவர்கள்.

 குழப்பங்கள் அதிகமாகுதல் ↔ ظهور الفتن

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 3

 ஸூரத்து முஹம்மது(ஸல்) 47:18

قَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌

   அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன;

بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى

 நானும் மறுமையும் இந்த இரு விரல்களைப்போல நெருக்கமானவர்கள் எனக்கூறி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காண்பித்தார்கள் (இஸ்லாத்தின் இறுதி நபி நம் நபியவர்கள்)

اعدد ستا بينلايدي الساعة اولهن موتي

 நபி (ஸல்) – மறுமை நாளுக்கு முன்னாள் 6 விஷயம் நடக்கும் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்; அவைகளில் முதலாவது எனது மரணம்.