மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 2

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 2

 நபி (ஸல்) – ஒரு இரவில் விழித்திருந்து இன்றைய தினம் யஃஜூஜ் மஃஜூஜ் இருக்கும் இடத்தின் ஒரு ஜான் திறக்கப்பட்டு விட்டது.

 ஸூரத்துஷ்ஷுஃரா 26:129

وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏

   இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

 ஸூரத்துல் அன்ஃபால் 8: 32, 33

(32) وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ

السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ

   (இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).

(33) وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ

   ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.

 மறுமை வெகு தூரம் என்ற சிந்தனை நம்மில் வராமல் இருக்க வேண்டும்.

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 1

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 1

  நபி (ஸல்) – எப்பொழுது மிம்பர்களில் தஜ்ஜாலைப் பற்றி பேசப்படுவது குறைகிறதோ அப்போது தஜ்ஜால் வெளியே வருவான்

  மறுமையின் சிறிய அடையாளங்கள் சில நடந்து முடிந்து விட்டது, சில நடந்து கொண்டிருக்கிறது, சில நடக்கவிருக்கிறது.

 ஸூரத்துல் கமர் 54:1

اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏

   (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.

 ஸூரத்துல் அன்பியா 21:1

اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِىْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ‌ۚ‏

   மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.

 ஸூரத்துந் நஹ்ல் 16:1

اَتٰۤى اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ‌ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏

   அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் – அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.

 ஸூரத்துந் நஹ்ல் 16:77

وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ‌ؕ ‏

   மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.

 ஸூரத்துல் கமர் 54:46

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ‏

   அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.

 ஸூரத்துந் நாஜிஆத் 79: 42, 43, 44, 46

 (42) يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ‏

   (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி – அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

(43) فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ

   அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

(44)  اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏

   அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

(46)  كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا

   நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 73

 கபரில் அடக்கப்பட்டவர் நல்லவராக இருந்தால் புதிய மணமகனைப்போன்று தூங்கு என்று மலக்குகள் கூறுவார்கள் காலையிலும் மாலையிலும் சொர்க்கத்தில் வாசல் திறந்து விடப்படும்

 கெட்டவராக இருந்தால் நரகத்தின் வாசல் திறந்து விடப்படும் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவான் (புஹாரி, முஸ்லீம்)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

♥ கபர் வேதனைக்கெதிரான பிரார்த்தனைகள் உள்ளன

 நபி (ஸல்) – இரண்டு கப்ருகளுக்கிடையில் நடந்து சென்றார்கள் அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்- சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர், புறம் பேசியவர் (புஹாரி)

 உயிரில்லாத உடலுக்கு தண்டனையா?

கபரில் தண்டனை உடலுக்கல்ல உயிருக்கு என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 72

மண்ணறை வேதனையும் இன்பங்களும்

ஸூரத்துல் அன்ஃபால் 8: 50, 51

(50) மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.

(51) இதற்கு காரணம், உங்களுடைய கரங்கள் முற்படுத்தி செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.

ஸூரத்துல் அன்ஆம் 6:93

இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்)

ஸூரத்துத் தவ்பா9:101

வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் – பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.

ஸூரத்துல் முஃமின் 40: 46

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 71

மறுமை நாள் நெருங்கும்போது பித்னா அதிகரிக்கும்

 மார்க்கத்தை விட்டு நம்மை திசைதிருப்பக்கூடிய அனைத்தும் பித்னா தான்

قال رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره تكفرها

الصلاة والصدقة

♥ உமர் இப்னு கத்தாப் (ரலி) -நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கு தன்னுடைய குடும்பம் சொத்து மேலும் அண்டைவீட்டில் பித்னா இருக்கிறது.  அது அவனுடைய தொழுகையையும் தர்மத்தையும் இல்லாமல் ஆக்கி விடும்

தஜ்ஜாலின் பித்னா

 மனிதர்களை பல விதத்தில் தஜ்ஜால் குழப்புவான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்

 நபி (ஸல்) – பாழடைந்த  ஓலை வீட்டுக்குள் மழை நீர் வருவது போல என் சமுதாயத்தில் பித்னா வரும் – அந்த காலத்தில் – வாளை உடையுங்கள் – வீட்டுக்குள் இருங்கள்.

 மறுமை நெருங்கும்போது மார்க்க ரீதியிலான பித்னா அதிகரிக்கும்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 70

சின்ன மறுமை:

مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ

நபி(ஸல்) – ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரது மறுமை நிகழ்ந்து விட்டது

 நல்லவர்கள் இருக்கும்பொழுது மறுமை நிகழுமா?

انتهى .  فهذه مرحلة خير وإيمان وظهور لأهل الإسلام ، ثم تأتي مرحلة أخرى

فينقص عدد المؤمنين ، حتى يرسل الله تعالى ريحا تقبض أرواحهم ولا يبقى

إلا شرار الخلق ، فعليهم تقوم الساعة

நபி (ஸல்) – அல்லாஹ் ஒரு காற்றை அனுப்புவான் அது நல்லவர்கள் அனைவரையும் அழித்துவிடும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சி இருப்பார்கள் அவர்களில் தான் மறுமை ஏற்படும் (புஹாரி).

அஞ்சிக்கொண்டிருப்பார்கள்  ↔ اشفاق – مشفقون

♥ நிறைய அமல்கள் செய்துவிட்டு அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வானா இல்லையா என்ற கவலையுடன் இருப்பார்கள் பாவங்கள் செய்து பாவ மன்னிப்புகள் கேட்டிருப்பார்கள் அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா இல்லையா என்ற கவலையுடன் இருப்பார்கள்.

 أَمَانِي – அல்லாஹ் மன்னித்திருப்பான் என்ற நம்பிக்கை

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 69

 உலகத்தில் மறுமையை நம்பக்கூடியவர்கள் : முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள்

 மேற்கூறப்பட்ட கூட்டத்தினர் பொதுவாக நம்பக்கூடிய சம்பவம் :
குகைவாசிகளின் சம்பவம் (இது மறுமை இருக்கிறது என்பதற்கான  ஆதாரம் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்)

 உலக மக்களில் அதிகமானோரின் நம்பிக்கை அறிவுக்கு முரண்படாமல் இருந்தால் அது உண்மை என்பதற்கான சான்றாகும்.

சூரா பகரா வில் 3 சம்பவங்கள் (மரணித்தவர்களை உயிர்ப்பித்த சம்பவங்கள்):

  1.  இப்ராஹிம் (அலை) பறவைகளை வெட்டி பிறகு வா என்று அழைத்தபோது அது உயிருடன் வந்தது.
  2.  மூஸா (அலை) – மாட்டை அறுத்து அதன் துண்டை மரணித்தவர் மீது அடிக்கச்செய்து அவரை உயிருடன் எழுப்பிய சம்பவம் .
  3. அழிந்து போன கிராமத்தை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான் என எண்ணிய (உஸைர் அலை) அவர்களை அல்லாஹ் 100 வருடம் மரணிக்க வைத்தான். அவர் எழுந்து பார்த்தபோது உணவு நன்றாகவும் கழுதை உக்கிப்போன நிலையிலும் இருந்தது

சுவர்க்கமும் நரகமும் அழிக்கப்படுமா?

 ஸூரத்துர் ரஹ்மான் 55: 26, 27

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلالِ وَالإِكْرَامِ

(26)(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே –

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

(27) மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

 ஸூரத்துந் நம்ல் 27:87

وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ

இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்வர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.

 அல்லாஹ் எதை நாடுவான் என்று நாம் அறியமாட்டோம் ஆகவே இதைப்பற்றி எவ்வாறு அல்லாஹ் குர்ஆனில் விளக்கி இருக்கிறானோ அவ்வாறே புரிந்து கொள்வது சிறந்தது

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 68

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 68

மறுமையின் ஆதாயங்களை நம்புதல்

மறுமையின் அடையாளம் இரண்டாக பிரிப்பார்கள்

சிறிய அடையாளம் – உதாரணம் – எழுதுகோல் பரவும், கல்வி உயர்த்தப்படும், வட்டி, விபச்சாரம் பெருகும், கொலை அதிகரிக்கும், ஆடு மேய்ப்பவர்கள் மாளிகை கட்டுவார்கள், அரேபிய நாடு பசுமையாக மாறும், வியாபாரத்தில் கணவனுக்கு பெண்கள் துணையாக இருப்பார்கள், அமானிதம் பாழ் ஆக்கப்பட்டு தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்க படும், போட்டியிட்டு கட்டங்கள், பள்ளிகளுக்கிடையில் போட்டி, …….

பெரிய அடையாளம்  – நபி (ஸல்) – அதில் ஒன்று நடந்தால் மற்றவை தொடர்ந்து வரும் அதற்குப்பின்னால் மறுமையை  தவிர வேறெதுவும் இருக்காது.

💕 சூரியன் மேற்கிலிருந்து உதித்ததற்கு பின் யார் ஈமான் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
💕 பெரிய அடையாளங்களில் சில  

  • தஜ்ஜால்
  • ஈஸா (அலை) வருகை
  • பேசும் மிருகம்
  • யஃஜூஜ்  மஃஜூஜ்
  • நெருப்பு மக்களை மஹ்ஷர் வரை அழைத்துச் செல்லும்
  • அரேபிய தீபகற்பத்தில் கிழக்கிலும் மேற்கிலும் ஒரு பூகம்பம்
  • ஈஸா (அலை) மற்றும் மஹதி வருதல்

இந்த அடையாளங்கள் மணிமாலை போல ஒன்று வந்தால் மற்றொன்று அதை தொடர்ந்து வரும்.

💕 மறுமையின் அடையாளங்களில் ஒன்றை மறுப்பதன் மூலம் அவரை நாம் வழிகேடர் என கூற மாட்டோம் ஆனால் அந்த கருத்து வழிகேடான கருத்தாகும். (தஜ்ஜால் வருகை, மஹதியாய் மாறுதல், மேற்கிலிருந்து சூரியன் வருவதற்கு வேறு விளக்கம் கொடுத்தல், …..)
💕 மஹதியை மறுப்பவர்கள் காதியாநிகள்

மறுமையை நம்புதல் என்பதில் 3 பகுதிகள் இருக்கிறது :

  • மறுமை நிகழும்
  • மறுமையை நம்புதல்
  • மறுமையில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் மறுமைக்காக நடக்கக்கூடிய நிகழ்வுகள் (பெரிய சிறிய அடையாளங்கள்)

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 67

10- الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல்

அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது)

மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள்:

(1) மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும் 
(2) ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம் 
(3) கேள்விக்கணக்கு இருக்கிறது 
(4) சொர்க்கம் நரகம் வழங்கப்படும் 
(5) தராசு 
(6) இறைவனைப் பார்த்தல் 
(7) சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடத்தல் 
(8) அல்லாஹ் நிழல் வழங்குவான் 
(9) மரணம் ஒரு ஆட்டின் வடிவத்தில் கொண்டு வரப்பட்டு அது அறுக்கப்படும். ஆகவே அதற்குப் பின்னால் மரணம் கிடையாது 
(10) முதல் சூர் இரண்டாவது சூர் ஊதப்படல் 
மறுமையை நம்பி இவையில் எதையேனும் மறுத்தால் அவர் சரியான முறையில் நம்பவில்லை.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 66

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 66

الفصل التاسع : الإيمان برسالة محمد ﷺ

முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளுதல்

பிற நபிமார்களை விட முஹம்மத் ﷺ சிறப்பு வாய்ந்தவர்கள்

  • முஹம்மத் ﷺ முழு உலகத்தாருக்கும் அனுப்பப்பட்டவர்
  • முஹம்மத் ﷺ அணைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்டவர்
  • முஹம்மத் ﷺ இறுதியானவர்
  • ஈஸா (அலை) மீண்டும் வந்தாலும்; முஹம்மத் ﷺ அவர்கள் தான் இறுதி நபியாக இருப்பார்கள்.