💠 குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் தொழில் செய்து பிழைத்தவர்கள் என்று விளங்கமுடிகிறது.
💠 عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” ما من نبي
إلا وقد رعى الغنم . قالوا : وأنت [ ص: 57 ] يا رسول الله ؟ قال : نعم ، كنت
أرعاها بالقراريط لأهل مكة ” . رواه البخاري .
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எந்த ஒரு நபியாக இருந்தாலும் அவர்கள் ஆடு மேய்த்திருப்பார்கள் என்றபோது நீங்களுமா யா ரசூலுல்லாஹ் என்று கேட்கப்பட்டபோது ஆம்; மக்காவாசிகள் தரக்கூடிய அற்பமான ஹலாலாக்களுக்காக (பணத்திற்க்காக) ஆடு மேய்த்திருக்கிறேன் என பதிலளித்தார்கள் (புஹாரி, முஸ்லீம்)
(நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் – ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்
💠 நபிமார்களின் எண்ணிக்கை சம்மந்தமாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகும்.
(163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
(164) (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
(165) தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான்.
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்.
💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
باب قول النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا
நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்திருந்தால் அதிகமாக அழுதிருப்பீர்கள் குறைவாகவே சிரித்திருப்பீர்கள்
عن سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه كان يقول قال رسول الله صلى
الله عليه وسلم لو تعلمون ما أعلملضحكتم قليلا ولبكيتم كثيرا
சயீத் இப்னு முஸய்யிப் (ரலி) – அபூஹுரைரா (ரலி) சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் “நபி (ஸல்) – நான் அறிந்தவற்றையெல்லாம் நீங்கள் அறிந்திருந்தால் குறைவாகவே சிரித்திருப்பீர்கள் அதிகமாக அழுதிருப்பீர்கள்.
கருத்துரைகள் (Comments)