ஹிஸ்னுல் முஸ்லிம் 36

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 36

 ورواها النسائي أيضا في عمل اليوم والليلة من طريق أخرى عن أبي هريرة (958) وفيها ” آية

الكرسي أقرأها عند كل صباح ومساء “قال أبو هريرة : فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال : ” أو ما

علمت أنه كذلك ؟ “ .

அபூஹுரைரா (ரலி) – ஷைத்தான்; ஆயத்துல் குர்ஸி கற்றுத்தந்த அந்த ஹதீஸில் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் ஷைத்தானிடமிருந்து தப்பிவிடுவீர்கள் (இமாம் நஸாயீ – சுனனுல் குப்ரா 7963, அமலில் யவ்ம் வல்லைலா)(பலகீனமானது)

இப்னு சீரீன் வழியாக இதே செய்தி; உறங்கச்செல்லும்போது ஆயத்துல் குர்ஸி ஓதினால் ஷைத்தான் வரமாட்டன் என்று வருகிறது(ஸஹீஹ் புஹாரி)

இந்த செய்தியை அபூ ஹுரைரா (ரலி) இடமிருந்து அபுல் முத்தவக்கில் என்பவர் அறிவிக்கிறார் ஆனால் அபூஹுரைரா (ரலி) யின் மிக நெருக்கமான மாணவர்களில் ஒருவர் இப்னு சீரீன் (அபூஹுரைரா (ரலி) இடமிருந்து இப்னு ஸீரீன் அறிவித்தால் அது தான் அறிவிப்பு என்று உலமாக்கள் கருத்து இருக்கிறது).

இந்த அறிவிப்பில் முறிவுற்ற செய்தி இருக்கிறது.

உபை இப்னு கஹப் (ரலி) இடம் ஷைத்தான் வந்து ஆயத்துல் குர்ஸி ஓதச்சொன்னதாக; அதே போன்ற ஒரு அறிவிப்பு இருக்கிறது.

இதே செய்தி (முஹ்ஜமுல் கபீர் – தபறானீ 5401)

இந்த சம்பவம் இருவருக்கும் நடந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்த அறிவிப்பில் முஹம்மது இப்னு உபை இப்னு கஹப் என்பவர் அறியப்படாதவர்.ஆகவே இது பலஹீனமானது

ஹிஸ்னுல் முஸ்லீம் புத்தகத்தில்

وصححه الألباني في صحيح الترغيب والترهيب 1/ 273

(ஷேக் அல்பானி இதை ஸஹீஹாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது) ஆனால் அல்பானி அவர்கள் இதை(ஸில்ஸிலத்துல் ஆஹாதீசு லயீப் என்ற புத்தகத்தில் லயீப் என்ற தரத்தில் தான் பதிவு செய்திருக்கிறார்கள்).

ஹிஸ்னுல் முஸ்லிம் 35

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 35️

27-أذكار الصباح والمساء

காலை மாலை துஆக்கள்

துஆ 75:

أعوذ بالله من الشيطان الرجيم { اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا

فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَيُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا

شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ}

《☆》 أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حم المؤمن إلى إليه المصير وآية الكرسي

حين يصبح حفظ بهما حتى يمسي ومن قرأهما حين يمسي حفظ بهما حتى يصبح

قال أبو عيسى هذا حديث غريب

وقد تكلم بعض أهل العلم في عبد الرحمن بن أبي بكر بن أبي مليكة المليكي من قبل حفظه

1 – அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் எந்த ஒரு முஃமின்; ஹாமீம் சூராவை இலைஹில் மஸீர் என்ற ஆயத் வரையும், ஆயத்துல் குர்ஸியையும் ஓதுகிறாரோ காலையில் ஓதினால் மாலை வரையும் மாலை ஓதினால் காலை வரையிலும் பாதுகாவல் கிடைக்கும் (திர்மிதி 2879)

இதை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே غريب (இமாம் திர்மிதியின் உஸூலில் லயீப் என்று அர்த்தம்) மேலும் இமாம் பகவி غريب என்கிறார்கள்.

இதில் அப்துல் ரஹ்மான் இப்னு அபூபக்கர் இப்னு அபீ முலைக்கா என்பவரது மனன சக்தியில் விமர்சனம் உள்ளது.

இமாம் பஸ்ஸார் மற்றும் இமாம் முகைலி – இது போன்ற ஒரு அறிவிப்பு இந்த அறிவிப்பாளர் வரிசையைத்தவிர வேறெதிலும் நாங்கள் காணவில்லை.

இமாம் நவவி – பலஹீனமான அறிவிப்பாளர் வரிசையில் இது கிடைத்திருக்கிறது(அல் அத்கார்).

ஹிஸ்னுல் முஸ்லிம் 34

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 34

26- “يدعو لنفسه بين الأذان والإقامة فإن الدعاء حينئذٍ لا يرد

إِنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது.(நஸயீ)

ஹிஸ்னுல் முஸ்லிம் 33

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 33

25- “اللهم رب هذه الدعوة التامة ،والصلاة القائمة، آت محمداً الوسيلة والفضيلة، وأبعثه مقاماً محموداً الذي وعدته،

[ إنك لا تخلف الميعاد]

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ :

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي

وَعَدْتَهُ ، حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ “

🌹 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) – நபி (ஸல்) – பங்கை கேட்கும்போது யார்

 اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي

وَعَدْتَهُ

என்று யார் கூறுகிறாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை மறுமையில் நிச்சயமாக உண்டு.

🌹 (சுனனுல் குப்ரா 1933 – பைஹகீ ) இல் வரும் அறிவிப்பில் இந்த செய்தி إنك لا تخلف الميعاد என்ற வார்த்தையுடன் சேர்த்து வருகிறது. இமாம் புஹாரி இதை தனது ஸஹீஹில் அலீ இப்னு அய்யாஷ் என்பவர் வழியாக இதை பதிவு செய்த்திருக்கிறார்.

🌹 இமாம் புஹாரியிடமிருந்து 70,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் ஃபரப்ரீ என்பவர். அவரிடமிருந்து நிறைய மாணவர்கள் அறிவித்திருக்கிறார்கள் அதிலொருவர் குஷ்மைஹனீ என்பவர். இந்த குஷ்மைஹனீ அவர்களது பிரதியில் إنك لا تخلف الميعاد என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.

🌹 அறிஞ்சர்களின் கருத்துப்படி குஷ்மைஹனீ எங்காவது முரண்பட்ட கருத்துக்கள் பதிவு செய்திருந்தால் அவரது கருத்துக்களை ஏற்க முடியாது. காரணம் அவர் ஹாஃபிழாகவோ ஹதீஸ் களை மனனம் செய்தவராகவோ ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்கவில்லை. ஆனால் ஹதீஸ்களை பிறருக்கு கொண்டு சேர்க்கும் ஆர்வமும் நேர்மையும் உடையவராக அவர் இருந்தார்.

🌹 வேறு எந்த வழிகளிலும் வந்த அறிவிப்புகளில் இந்த

إنك لا تخلف الميعاد என்ற வார்த்தைகளை காணவும் முடியவில்லை.

ஹிஸ்னுல் முஸ்லிம் 32

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 32

24- “يصلي على النبي صلى الله عليه وسلم بعد فراغه من إجابة المؤذن

பாங்கிற்கு பின்னால் நபி (ஸல்) வின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்

((عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا

يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي

الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ ))

《☆》 அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) முஅத்தின் சொல்வதை கேட்டால் அவர் சொல்வதைப்போல நீங்கள் சொல்லுங்கள் பின்னர் என் மீது ஸலவாத்து சொல்லுங்கள். நிச்சயமாக யார் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கிறாரோ அல்லாஹ் அவர் மீது 10 முறை அருள் புரிகிறான்.பின்னர் எனக்கு அல்லாஹ்விடத்தில் வஸீலாவை கேளுங்கள். அது சுவர்க்கத்தில் இருக்கக்கூடிய ஒரு தரம் அல்லாஹ்வுடைய அடியார்களில் ஒரே ஒரு அடியாருக்கு தான் அது கிடைக்கும் அது நானாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.யார் எனக்காக அப்படி கேட்கிறார்களோ அவர்களுக்கு நான் பரிந்துரை செய்வேன்.(முஸ்லீம்)

ஹிஸ்னுல் முஸ்லிம் 31

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 31

عيسى بن طلحة قال دخلنا على معاوية فنادى المنادي بالصلاة فقال الله أكبر الله أكبر فقال معاوية الله أكبر الله

أكبر فقال أشهد أن لا إله إلا الله قال معاوية وأنا أشهد قال أبو عامر أن لا إله إلا الله قال أشهد أن محمدا رسول

الله قال معاوية وأنا أشهد قال أبو عامر أن محمدا رسول الله قال يحيى فحدثنا رجل أنه لما قال حي على الصلاة

قال لا حول ولا قوة إلا بالله قال معاوية هكذا سمعت نبيكم صلى الله عليه وسلم يقول

《☆》 நாங்கள் முஆவியா (ரலி) இடம் சென்றோம் அப்போது பாங்கு சொல்லப்பட்டது; அப்போது الله أكبر الله أكبر என்று கூறப்பட்டதும் முஆவியா (ரலி) الله أكبر الله أكبر கூறினார்கள். أشهد أن لا إله إلا الله என்று கூறப்பட்டதும் முஆவியா (ரலி) நானும் சாட்சி கூறுகிறேன் என்றார்கள். பிறகு அந்த மிம்பரிலிருந்து; நபி (ஸல்) அவர்கள் இதே இடத்தில் பாங்கிற்கு இப்படி கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். (புஹாரி)

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 67

ஹதீஸ் பாகம்-67

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب البكاء من خشية الله

அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக அழுதல்

⚜ عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله رجل ذكر الله ففاضت عيناه

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – 7 பேருக்கு அல்லாஹ் மறுமையில் நிழல் வழங்குகிறான் அதில் ஒருவர் யாரென்றால்; (தனிமையில்) அல்லாஹ்வை நினைக்கும்போது அவன் கண்ணில் நீர் வருகிறது.

நபி (ஸல்)- 3 கண்களை அல்லாஹ் நரகத்தை விட்டும் பாதுகாக்கிறான்:

  • அல்லாஹ்வுடைய பாதையில் பாதுகாவலுக்காக விழித்திருந்த கண்கள்.
  • அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்கள்.
  • அல்லாஹ் தடுத்த ஹராமான காட்சிகளை பார்க்காமல் தவிர்த்த கண்கள்.

 

தொழுகையின் ஃபர்ளுகள் 5

ஃபிக்ஹ் பாகம் – 5

தொழுகையின் ஃபர்ளுகள்

(3) சூரத்துல் ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரகாஅத்திலும் ஓத வேண்டும்:

🌼 لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب

உபாதா இப்னு ஸாமித் (ரலி) – நபி (ஸல்) –  சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

🌼 من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب فهي خداج فهي خداج غير تمام

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் தொழுகிறாரோ அது முழுமையில்லாத தொழுகையாகும்(புஹாரி, முஸ்லீம்)

🌼 صلوا كما رأيتموني أصلي

நபி (ஸல்) – என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.

🌼 இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தாலும் நபி (ஸல்) தனது தொழுகைகளில் அனைத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஓதியதாக காண முடிகிறது.

தொழுகையின் ஃபர்ளுகள் 4

ஃபிக்ஹ் பாகம் – 4

தொழுகையின் ஃபர்ளுகள்

(2) நின்று தொழ சக்தி பெற்றவர் நின்று தொழ வேண்டும்:

ஸூரத்துல் பகரா 2:238

حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

🌼 இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – எனக்கு மூலநோய் இருந்தது ஆகவே எப்படி தொழவேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அப்போது நபி (ஸல்) நின்றுகொண்டு தொழுங்கள் என்றார்கள். அதற்கு உங்களால் முடியவில்லையென்றால்; உட்கார்ந்து தொழுங்கள்; அதற்கும் முடியவில்லையென்றால் ஒரு பக்கமாக சாய்ந்து தொழுங்கள்  (புஹாரி)

🌼 அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) – ஒரு அடியான் ஒரு சுன்னத்தான அமலை பிரயாணத்தின் காரணத்தாலோ நோயின் காரணத்தாலோ விட்டுவிட்டால்  ஊரிலிருக்கும்போதும் ஆரோக்கியமான நேரத்திலும் வழமையாக செய்துக்கொண்டிருந்த நன்மையை அல்லாஹ் அவருக்கு வழங்குகிறான்.

சுன்னத்தான தொழுகைகளை உட்கார்ந்தும் தொழலாம்:

🌼 صلاة الرجل قاعدا نصف الصلاة

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதன் உட்கார்ந்து தொழுதால் அவருக்கு பாதி நன்மைகள் தான் கிடைக்கும் (புஹாரி, முஸ்லீம்)

 

தொழுகையின் ஃபர்ளுகள் 3

ஃபிக்ஹ் பாகம் – 3

தொழுகையின் ஃபர்ளுகள்

(1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام:

عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ

رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، قَالَ : ارْجِعْ فَصَلِّ ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ ، فَرَجَعَ الرَّجُلُ

فَصَلَّى كَمَا كَانَ ، صَلَّى ، ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَلَيْهِ ، فَقَالَ

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَعَلَيْكَ السَّلَامُ ، ثُمَّ قَالَ : ارْجِعْ فَصَلِّ ، فَإِنَّكَ لَمْ

تُصَلِّ ، حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ، فَقَالَ الرَّجُلُ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ ، مَا أُحْسِنُ

غَيْرَ هَذَا عَلِّمْنِي ، قَالَ : إِذَ قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ

الْقُرْآنِ ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ، ثُمَّ اسْجُدْ حَتَّى

تَطْمَئِنَّ سَاجِدًا ، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا ، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا

ஒரு ஸஹாபி தொழும்போது நபி (ஸல்) மீண்டும் மீண்டும் தொழச்சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். 3 வது முறையும் தொழுது விட்டு அவர் எனக்கு தொழுகையை கற்றுத்தாருங்கள் யா ரசூலுல்லாஹ் என்றார். அப்போது நபி (ஸல்) நீங்கள் தொழுகைக்காக நின்றால் தக்பீர் சொல்லுங்கள் என்றார்கள்.

🌼 நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தன் இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். (திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)

🌼 مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ.

அலீ (ரலி) – நபி (ஸல்) – தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்; அதன் தக்பீர் ஆகுமாக்கப்பட்டதெல்லாம் ஹராமாக்கி விடும், ஸலாம் கொடுப்பது அதை ஹலாலாக்கி விடும்  (அஹ்மத், அபூதாவூத்,இப்னு மாஜா, திர்மிதி)