தொழுகையின் ஃபர்ளுகள் 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொழுகையின் ஃபர்ளுகள்

🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும்.

தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு):

அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும்

ஸூரத்துல் பய்யினா 98:5

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்…

🌼 انما الاعمال بالنيات

உமர் (ரலி) – நபி (ஸல்) – அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதெல்லாம் எண்ணத்தைக்கொண்டே. (புஹாரி)

🌼 نوى- ينوى- نية (நிய்யத்) எண்ணுதல்

நிய்யத் என்றால் அரபு மொழியின் அர்த்தத்தில் – ஒரு விஷயத்தை செய்வதென முடிவெடுப்பது என்று அர்த்தம்.

மார்க்க அடிப்படையில் : அல்லாஹ்வை நெருங்குவதற்காக ஒரு காரியத்தை செய்வதென உறுதிகொள்வது.

🌼 நிய்யத்தின் இடம் உள்ளமாகும்.

🌼 வாயால் மொழிவதற்கு அரபியில் تلفظ என்று கூறுவார்கள்  

🌼 இப்னுல் கய்யிம் (ரஹ்)- நிய்யத் என்றால் ஒரு காரியத்தை செய்ய நினைப்பது அல்லது முடிவெடுப்பது. அதன் இடம் உள்ளமாகும். அதற்கும் நாவிற்கும் எந்த சம்மந்தமுமில்லை.

🌼 தொழுகைக்கு வாயால் நிய்யத்தை கூற வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸும் இல்லை.

🌼 நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத் ஆகும் என பெரும்பாலான அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.

🌼 مَن أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد”  ورواه مسلم بلفظ ءاخر

وهو: ” من عمل عملا ليس عليه أمرنا فهو رد

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) – யார் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அதுவும் ஏற்றுக்கொள்ள படாது.

யாரொருவர் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறாரோ அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.(புஹாரி)

தொழுகையின் ஃபர்ளுகள் 1

ஃபிக்ஹ் பாகம் – 1

தொழுகையின் ஃபர்ளுகள்

தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்)

தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்:

  • ஃபர்ளு
  • வாஜிப்
  • சுன்னத்

🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள்.

தொழுகையில்  ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்:

 ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது.

 வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.

தொடர் உதிரப்போக்கு Doubt & Verification

தொடர் உதிரப்போக்கு 3

ஃபிக்ஹ் பாகம் – 3

தொடர் உதிரப்போக்கு

(3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்:

பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.

 

தொடர் உதிரப்போக்கு 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொடர் உதிரப்போக்கு

(2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்:

🌺 இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்).

எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?

🌺 மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும்

(அல்லது)

🌺 மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை குளிக்க வேண்டும்.

லுஹருடைய முடிவின் நேரம் வரை காத்திருந்து குளித்துவிட்டு லுஹரை தொழுத உடன் அஸருடைய நேரம் வந்து விடும் உடனடியாக அஸரை தொழுது விட வேண்டும். பிறகு இதே போன்று மக்ரிபையும் இஷாவையும் குளித்து விட்டு தொழ வேண்டும். சுபுஹ் தொழுகைக்கும் இதே போன்று குளித்து விட்டு தொழ வேண்டும்.

🌺 كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ،

فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً ، فَمَا تَرَى فِيهَا ؟

قَدْ مَنَعَتْنِي الصَّلاةَ وَالصَّوْمَ ، قَالَ : ” أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ ، فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ ” ،قَالَتْ 

هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ ، قَالَ : ” فَاتَّخِذِي ثَوْبًا ” ، قَالَتْ : هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ ، إِنَّمَا أَثُجُّ

ثَجًّا ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” سَآمُرُكِ بِأَمْرَيْنِ أَيَّهُمَا فَعَلْتِ أَجْزَأَ

عَنْكِ مِنَ الآخَرِ ، فَإِنْ قَوِيتِ عَلَيْهِمَا ، فَأَنْتِ أَعْلَمُ ” ، قَالَ لَهَا : ” إِنَّمَا هَذِهِ رَكْضَةٌ

مِنْ رَكَضَاتِ الشَّيْطَانِ ، فَتَحَيَّضِي سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ فِي عِلْمِ اللَّهِ ، ثُمَّ اغْتَسِلِي 

حَتَّى إِذَا رَأَيْتِ أَنَّكِ قَدْ طَهُرْتِ ، وَاسْتَنْقَأْتِ فَصَلِّي ثَلاثًا وَعِشْرِينَ لَيْلَةً ، أَوْ أَرْبَعًا

وَعِشْرِينَ لَيْلَةً وَأَيَّامَهَا ، وَصُومِي ، فَإِنَّ ذَلِكَ يُجْزِئُكِ ، وَكَذَلِكَ افْعَلِي كُلَّ شَهْرٍ كَمَا

تَحِيضُ النِّسَاءُ ، وَكَمَا يَطْهُرْنَ مِيقَاتَ حَيْضِهِنَّ وَطُهْرِهِنَّ ، فَإِنْ قَوِيتِ عَلَى أَنْ

تُؤَخِّرِي الظُّهْرَ ، وَتُعَجِّلِي الْعَصْرَ ، فَتَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلاتَيْنِ الظُّهْرِ

وَالْعَصْرِ ، وَتُؤَخِّرِينَ الْمَغْرِبَ ، وَتُعَجِّلِينَ الْعِشَاءَ ، ثُمَّ تَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ

الصَّلاتَيْنِ فَافْعَلِي ، وَتَغْتَسِلِينَ مَعَ الْفَجْرِ ، فَافْعَلِي ، وَصُومِي إِنْ قَدَرْتِ عَلَى ذَلِكَ

” ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” وَهَذَا أَعْجَبُ الأَمْرَيْنِ إِلَيَّ ” ،

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) – அதிகமான கடினமான உதிரப்போக்கு உள்ளவளாக இருந்தேன். நபி (ஸல்) விடம் இதைப்பற்றி கேட்க என்னுடைய சகோதரி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் வீட்டிலிருக்கும்போது சென்று கேட்டேன். நபி (ஸல்) – பஞ்சை வைத்து துடைத்து கொள்ளுங்கள் என்றார்கள் அப்போது நான் அதை விடவும் அதிகமாக இருக்கிறது என்றேன் அப்போது அதை கட்டிக்கொள்ளுங்கள் என்றார்கள். என்றாலும் கொட்டிக்கொண்டிருக்கிறது என்று நான் கூறியபோது நபி (ஸல்) நான் இரண்டிலொன்றை உங்களுக்கு கூறுகிறேன் அதில் ஏதேனுமொன்றை நீங்கள் செய்தால் போதுமானது. உங்களுக்கு எது முடியுமோ அதை செய்துக்கொள்ளுங்கள். இது ஷைத்தானுடைய வேலையாகும்.நீங்கள் அல்லாஹ்வின் அறிவிலே 6 அல்லது 7 நாட்கள் மாதவிடாய் என்று நினைத்துக்கொண்டு பிறகு குளித்துவிட்டு சுத்தமாகிவிட்டதாக நினைத்து ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து விட்டு தொழுங்கள். ஆனால் லுஹரை பிற்படுத்தி அஸரை அதன் ஆரம்ப நேரத்தில் சேர்த்து அவையிரன்டிற்கும் ஒரு குளிப்பு, மஃரிபை பிற்படுத்தி இஷாவை ஆரம்ப நேரத்தில் சேர்த்து அவையிரண்டிற்கும் சேர்த்து ஒரு குளிப்பு மேலும் சுபுஹின் நேரத்தில் குளித்து தொழுங்கள்.  இது தான் எனக்கு விருப்பத்திற்குரியது.(அஹ்மத், அபூதாவூத், திர்மிதி – ஹஸன் ஸஹீஹ், கத்தாபி (ரஹ்) – மாதவிடாயின் ஆரம்பத்திலுள்ள பெண்ணுக்கும், தன்னுடைய மாதவிடாயின் காலத்தை அறிந்து கொள்ள முடியாத பெண்ணுக்குமுள்ள சட்டமாகும்.)

தொடர் உதிரப்போக்கு 1

ஃபிக்ஹ் பாகம் – 1 

தொடர் உதிரப்போக்கு

الاستحاضة: هي استمرار نزول الدم وجريانه في غير أوانه

(மாதவிடாய் கால உதிரப்போக்கை விட) அதிகமான நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படுதல்:

இவர்கள் தங்களுடைய ஹைளுடைய காலத்தை எப்படி கணக்கிடுவது?

الاستحاضة உள்ள பெண் மூன்றில் ஒரு நிலையில் இருப்பாள்

(1) மாதவிடாயிற்குரிய கால எல்லை அறிந்தவளாக இருப்பாள்.

இவர்கள் தன்னுடைய மாதவிடாயின் காலத்தை கணக்கிட்டுக்கொண்டு மற்ற காலத்தில் சுத்தம் செய்து விட்டு தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் இரத்தம் வருமிடத்தை சுத்தம் செய்து விட்டு அது வெளி வராத விதத்தில் அதை சரிசெய்து தொழுகையுடைய நேரம் வந்ததற்கு பின்னால் உளூ செய்து தொழ வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வக்த்திற்கும் செய்ய வேண்டும்.

🌺” لِتَنْظُرْ عِدَّةَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا ، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ

ذَلِكَ مِنَ الشَّهْرِ ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ ، ثُمَّ لِتُصَلِّ فِيهِ

உம்முஸலாமா (ரலி) – நபி (ஸல்) விடத்தில் தொடர் உதிரப்போக்கு உள்ள ஒரு பெண்ணைப்பற்றி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) – ஒவ்வொரு மாதத்திலும் அந்த பெண்கள் மாதவிடாய் சரியாக ஆகிக்கொண்டிருந்த அந்த காலங்களின் அடிப்படையில் கணக்கிட்டு  அந்த பகலையும் இரவையும் மாதவிடாயாக கணக்கிட்டுக்கொள்ளட்டும். பிறகு அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு(சுத்தம் செய்து விட்டு, அது வெளியேறாத வண்ணம் பாதுகாத்துவிட்டு) தொழட்டும் (முஸ்லீம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, இமாம் நவவி இந்த ஹதீஸை சரி காண்கிறார்கள். ஹத்தாபி (ரஹ்) – இது ஏற்கனவே தன்னுடைய மாதவிடாயின் நாட்களை அறிந்திருந்த பெண்ணிற்கான சட்டமாகும்)

உசூலுல் ஹதீஸ் பாகம் 27

உசூலுல் ஹதீஸ்

பாகம்-27

ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு:

நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள்.

அவர்கள் நிராகரித்தவை:

  • திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள்.
  • உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள்.
  • திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை வெட்டவேண்டும் என்ற சட்டத்தை தோள்பட்டை வரை வெட்ட வேண்டும் என மாற்றியமைத்தார்கள்.
  • ஒரு தங்கக்காசின் நான்கின் ஒரு பங்கின் அளவு திருடியிருந்தால் தான் கை வெட்டப்படவேண்டும் என்ற ஹதீஸை நிராகரித்து ஒரு சிறிய முட்டையை திருடினாலும் கை வெட்டப்படவேண்டும் என்று கூறினார்கள்.
  • தஜ்ஜாலின் வருகை சம்மந்தமான ஹதீஸுகளை நிராகரித்தார்கள்.
  • மறுமையில் நபி (ஸல்) சிபாரிசு செய்யும் விஷயத்தையும் நிராகரித்தார்கள்.
  • சில ஸஹீஹான ஹதீஸுகளை குர்ஆனுக்கு முரண்படுவதாகக்கூறி நிராகரித்தனர்.
  • குர்ஆனில் ஒரு பெண்ணை அவதூறு சொன்னால் தான் கசையடி கொடுக்கவேண்டும் என்றிருக்கிறது ஆகவே ஆண்களை அவதூறு சொன்னால் கசையடி இல்லயென்றார்கள்.
  • சாராயம் குடித்தவருக்கு கசையடி இல்லையென்று மறுத்தார்கள்.

உசூலுல் ஹதீஸ் பாகம் 26

உசூலுல் ஹதீஸ்

பாகம்-26

🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர்  தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட சில விஷயங்களில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட காரணத்தினால் உஸ்மான் (ரலி) வை கண்டித்தார்கள். ஆயினும் அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை காஃபிர் என்று கூறவில்லை. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதன் பிறகு அலீ (ரலி) அவர்களுடன் இணைந்து கொண்டு ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்டார்கள்.  

🔷 பின்பு அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டபோது; இவர்கள் அலீ (ரலி) உடனிருந்தார்கள். ஒரு மத்யஸ்தரின் வார்த்தைக்கு அலீ (ரலி) கட்டுப்பட்டதுடன் குர்ஆவினர் அலீ (ரலி) வை விட்டும் விலகினர். உஸ்மான் (ரலி) யை கொன்றவர்கள் கிளர்ச்சியாளர்கள். அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பத்தில் அலீ (ரலி) ஒரு நடுவரின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு போரிலிருந்து பின்வாங்கியதை தவறு என்று கூறி வெளியேறியவர்களே ஹவாரிஜுகள் ஆவர். இவர்களை தான் நாம் ஹவாரிஜ் என்று கூறுகிறோம்.

உசூலுல் ஹதீஸ் பாகம் 25

உசூலுல் ஹதீஸ்

பாகம்-25

🌷 அதற்கு பிறகு யஸீத் இப்னு முஆவியா அவர்களும் மரணித்தபோது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்தார்கள், சிலர் அதற்கு உடன்பட்டாலும் ஷாமிற்கு சென்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு மர்வான் என்பவர் கலீஃபா வாகினார்கள். பிறகு இராக்கில் நாஃபிஹ் இப்னு ஹஜ்ரத் என்ற ஹவாரிஜின் தலைமையிலும் யமாமாவில் நஜ்தா இப்னு ஆமிர் என்பவன் தலைமையின் கீழும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு படி கொள்கையில் மாற்றம் செய்து ஹவாரிஜ் கொள்கையை நம்பியவராக இருப்பினும் யுத்தம் செய்ய வராதவர்களுக்கு காஃபிர்கள் தான் என்று அறிவித்தார்கள்.  

🌷 காஃபிர்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை முஸ்லிம்களை மட்டுமே அடிமைப்படுத்தினார்கள், கொள்ளையடித்தார்கள், கொன்றுகுவித்தார்கள் இவ்வாறு அநியாயம் செய்தார்கள்.

🌷 மொராக்கோ பகுதியில் அல்ஜீரியா போன்ற பகுதிகளில் ஹவாரிஜ் கொள்கையை பரப்பினார்கள்

🌷 ஹதீஸ் கலையில் மிகவும் முக்கியமான விஷயம் ஹதீஸை அறிவிப்பவர் العدول(நன்னடத்தை) உள்ளவராக இருக்க வேண்டும். இந்த ஹவாரிஜுகள் அலீ (ரலி) யையும் மற்ற பிற சஹாபாக்களையும் தடம்புரண்டவர்கள் என்ற கருத்தில் இருப்பதால் அவர்களுடைய ஹதீஸுகளையெல்லாம் நிராகரித்தனர். ஆகவே தான் ஹவாரிஜுகளை பித்அத் காரர்கள் என்ற சட்டத்திற்குள் அடங்குகின்றனர். ஆகவே தான் பித்அத் காரர்களின் ஹதீஸுகளை எடுப்பதா நிராகரிப்பதா என்ற விஷயங்களில் அறிஞர்களுக்கு மத்தியில் சர்ச்சைகள் ஏற்பட்டன.

உசூலுல் ஹதீஸ் பாகம் 24

உசூலுல் ஹதீஸ்

பாகம்-24

🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள்.

🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.