பிறரை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு நம்மை நாமே கண்காணித்துக்கொள்ளுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது
நம்மை பரிசோதிக்க வேண்டிய விஷயங்கள்:
நம்மிடம் خشية الله இறையச்சம் இருக்கிறதா என்று நாம் சோதித்து பார்க்க வேண்டும்.
நம்முடைய عمل அமல்களை சரியான முறையில் செய்து வருகிறோமா என்று பரிசோதிக்க வேண்டும்.
போதும் என்ற தன்மை(القناعة)
நபி (ஸல்) – செல்வம் என்பது போதும் என்ற தன்மையே கல்விக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கும் விஷயம் போதும் என்ற தன்மையில்லாமல் பிறருடன் நம்மை நாம் உலகவிஷயங்களில் ஒப்பிடுவதே.
நாம் அதிகமாக கல்விகற்றவரைப்போல காண்பித்துக்கொள்ளக்கூடாது. தெரியாத விஷயங்களை தெரியாது என்று கூறும் தைரியம் வேண்டும்.
உமர் (ரலி) – தன்னிடம் இல்லாததை உள்ளது போல காண்பிப்பவனுக்கு அல்லாஹ் போதுமானவன்(புரியவைப்பான்)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு “எனக்கு விடை தெரியாது” என்று பதிலளித்தவராவார். அவர் தம்முடைய மரணத்தருவாயில் “நான் அளித்த தீர்ப்புக்களில் எனது சொந்தக்கருத்தை மிகைப்படுத்தி எங்கேனும் கூறிவிட்டேனோ” என்று அஞ்சி கூறினார்கள்.
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
⚜சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள்.
⚜லாத் உஸ்ஸா என்ற சிலைகளின் பெயர்களில் சத்தியங்கள் செய்துக்கொண்டிருந்தார்கள்.
⚜ நபி (ஸல்) – ஒரு மனிதன் கவனிக்காமல் ஒரு வார்த்தையை சொல்கிறான் அதன் காரணமாக அவன் நரகத்தின் அடிபாதாளத்தில் விழுந்து விடுகிறான்.
⚜ நட்சத்திரங்களின் காரணமாக மழை பொழிந்தது என நம்புதல்
⚜ வம்சாவழியை சொல்லி பரம்பரை பெருமையை சொல்லுதலும் பிறரின் கோத்திரத்தை அவமானப்படுத்துவதும்
أن النبي صلى الله عليه وسلم قال: “أربع من أمتي من أمر الجاهلية لا
يتركونهن: الفخر في الأحساب، والطعن في الأنساب، والاستسقاء بالنجوم،
والنياحة…”.
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – என்னுடைய உம்மத்தில் 4 ஜாஹிலிய்யா பழக்கங்கள்:
🍃 குடும்ப கெளரவத்தை சொல்லிப்பெருமை கொள்வது
🍃 வம்சாவழியை சொல்லி குத்திக்காட்டுவது
🍃 நட்சத்திரங்களால் மழை பொழிகிறது என நம்புவது
🍃 ஒப்பாரி வைப்பது.
(புஹாரி)
🍃 பாட்டன் பூட்டன் செயல்களை வைத்து ஒருவரை குறைகாணுவார்கள்.
⚜கஃபாவிற்கு சொந்தக்காரர்கள் என பெருமைப்பட்டார்கள்
❣ஸூரத்துல் முஃமினூன் 23:67
مُسْتَكْبِرِيْنَ ۖ بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ
ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
🌹 ஆயிஷா (ரலி) – குறைஷிகள் ஹஜ்ஜில் முஸ்தலிஃபா வில் தங்குவார்கள் பிறர் அரஃபாத்தில் தங்குவார்கள்.பிறகு அல்லாஹ்வின் கட்டளை வந்தபின் அரஃபா வில் தங்க ஆரம்பித்தோம்.
….“அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள்….
இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
🌷 உலக ஆதாயங்களுக்காகவே அவர்கள் சிலைகளை வழிப்பட்டுக்கொண்டிருந்தனர்
🌷 அவர்களில் சில கவிஞ்ர்கள் மறுமை இருக்கிறது என்று நம்பியும் இருந்தார்கள்.
♦️ அவர்கள் அல்லாஹ் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டிருந்தபோதும்; ஆனால் அவர்களின் புரிதலில் கோளாறுகள் இருந்தன. அல்லாஹ்வின் திருநாமங்களைப்பற்றி தவறாக பயன்படுத்துபவர்காளாக இருந்தார்கள்.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
இறைவனுடைய பண்புகள் மற்றும் பெயர்களில் சிலவற்றையெல்லாம் மறுத்தனர். மேலும் மார்க்கம் சொல்லாத பெயர்களை அவர்களாக இறைவனுக்கு சூட்டினர். அவற்றில் தவறான கருத்துள்ள பெயர்களும் அடங்கின.
இறைவனுக்கு பிள்ளை இருப்பதாக நம்பினார்கள்
அல்லாஹ் தேவையுடையவன் என நம்பிக்கொண்டிருந்தனர்.
மலக்குமார்கள் அல்லாஹ்வின் பெண்பிள்ளைகள் என நம்பிக்கொண்டிருந்தனர் ஆயினும் அவர்கள் பெண்பிள்ளைகளை விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
ஜின்ங்கள் அல்லாஹ்வின் கூட்டாளிகள் என நம்பினர். மேலும் அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சியில் பங்கு இருக்கிறது என நம்பினர்.
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் – அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்;…
✤ இந்த வசனத்தின் மூலம் அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள் என்று விளங்குகிறது
✤ கஃபாவில் இப்ராஹிம் (அலை) இஸ்மாயில் (அலை) அவர்களுடைய சிலைகளையும் வைத்திருந்தார்கள்.
💕மூதாதையரின் வழியே சரி என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
💕ஹஜ்ஜில் கலக்கப்பட்ட மூட நம்பிக்கைகள்
கஃபாவில் சிலைகள் வைக்கப்பட்டன.
அந்த சிலைகளை சுற்றி தவாஃப் செய்தார்கள்.
ஸஃபாவிலும் மர்வா விலும் சிலைகள் வைத்திருந்தார்கள்.
இப்ராஹிம் நபி காட்டித்தந்த முறைக்கு மாற்றமாக அரபா தினத்தில் முஸ்தலிஃபா வில் தங்கினார்கள்.
பாவம் செய்த ஆடைகளுடன் கஃபாவை வலம் வர முடியாது என்று கூறி நிர்வானமாக வலம் வந்தார்கள்.
கருத்துரைகள் (Comments)