ஸீரா
பாகம் ௦1
✥ நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பல நூற்கள் வெளியாகியிருப்பினும் ஆதாரப்பூர்வமாக ஸஹீஹ் லயீஃப்களை பிரித்தெடுத்து தொகுக்கப்பட்ட நூலே
“சீரத்துன் நபவிய்யா ஸஹீஹா” என்ற இந்நூலாகும். இதை எழுதியவர்.
அக்ரம் (ض)தியா அல் உமரி என்பவராவார்.
💕நபித்துவத்திற்கு முந்திய காலம்:
الحياة الدينية فى مكة மக்கா வாழ்க்கை
✥ ஹாஜரா (அலை) அவர்களும் தனது மகன் இஸ்மாயில் (அலை) இருவருமாக முதல் முதலில் அந்த பாலைவனத்தில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தினரும் ஜம்ஜம் நீருக்கு அருகில் குடியமர்ந்தார்கள்.
✥ இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) இருவரும் கஃபாவை கட்டினார்கள் அது மனித சமூகத்தினர் அனைவருக்குமான பள்ளிவாசல்களில் முதன்மையான பள்ளிவாசலாக இருக்கிறது. ஜுர்ஹும் கோத்திரத்தினரும் இப்ராஹிம் (அலை) கொண்டு வந்த அதே கொள்கையையே பின்பற்றினார்கள். காலப்போக்கில் அவர்கள் கொள்கையில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.
✥ அம்ரு இப்னு லுஹை அல் ஹுஸாயீ என்பவன் ஜாஹிலிய்யா காலத்திலே ஷாம்(சிரியா) பகுதியிலிருந்து மக்காவிற்கு சில சிலைகளைக்கொண்டு வந்தான். அந்த சிலைகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதன் பக்கம் அவர்களை ஆர்வமூட்டினான்.
✥ நபி (ஸல்) – அம்ருப்னு லுஹை அல் ஹுஸாயீ தன்னுடைய குடல்களையெல்லாம் இழுத்தவனாக நரகத்திலே வலம் வருவதை நான் கனவிலே பார்த்தேன்;காரணம் وانه أَوَّلَ النَّاسِ سَيَّبَ السَّوَائِبَ முதல் முதலில் மிருகங்களை கடவுள் பெயரால் நேர்ந்து விட்டவன் அவன் தான். ஒட்டகங்களையெல்லாம் தெய்வங்களின் பேரில் நேர்ந்து விடுகின்ற ஒரு பணியை முதல் முதலில் ஆரம்பித்தவன் இவன் தான்
கருத்துரைகள் (Comments)