இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்)
وَاللّٰهُ↔மேலும் அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ↔அனைத்தையும்
عَلِيْمٌ↔அறிந்தவனாக இருக்கிறான்
💠 மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.
💠 நபி (ஸல்) – அல்லாஹ் உங்கள் ஒவ்வொருவருடனும் மறுமையில் நேரடியாக பேசுவான் அல்லாஹ்வின் முன் நிற்கையில் வலது பக்கம் அவன் செய்த அத்தனை செயல்களும் இருக்கும் இடது பக்கம் பார்த்தாலும் அவன் செய்த அத்தனையும் இருக்கும் முன்னால் நரகம் கொதித்துக்கொண்டிருக்கும்.
❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:49
وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا
இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்….
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை;
اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)
💠 அவர்களின் கருத்துப்படி இங்கு ஃபித்னா என்பது ஷிர்க்கை குறிக்கும். ஏனெனில் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து இறுதியில் ஷிர்க்கில் கொண்டு வந்து முடியும் என்றார்கள்.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்)
💠 அவர்களுடைய உள்ளங்களில் குஃப்ர், அல்லது நயவஞ்சகம் அல்லது பித்அத் ஏற்படும் என விளக்கமளித்தார்கள்.
اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
💠 நோவினை தரும் வேதனை இம்மையிலா அல்லது மறுமையிலா என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றது.
💠 இப்னு உமர் (ரலி) – ஒரு நாள் நபி (ஸல்) எங்களை நோக்கி வந்து ஓ முஹாஜிர்களே 5 விஷயங்களைக்கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டால் உங்களை அது பிடித்துகொள்ளாமலிருக்க நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். ஒரு சமுதாயத்தில் ஆபாசம் வெளிப்படும் அவர்களுக்கு முன்னால் சென்றவர்களுக்கு வராத நோய்களும் பிளேகு நோயும் வரும். அளவை நிறுவைகளில் அவர்கள் மோசடி செய்தல் அவர்களுக்கு பஞ்சமும் பொருளாதார சிரமமும் மன்னர்களுடைய அடக்குமுறை அவர்களை ஆக்கிரமிக்கும். ஜகாத் கொடுப்பதை அவர்கள் தடுத்துக்கொண்டால் வானத்திலிருந்து அவர்கள் மழை தடுக்கப்படும். விலங்குகள் இல்லையென்றால் அவர்களுக்கு மழை கிடைக்காது.அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் அவர்கள் செய்த உடன்படிக்கைகளை அவர்கள் மீறினால் அல்லாஹ் அவர்களுடைய எதிரிகளை அவர்கள் மீது ஏவி விடுவான்.இவர்களுடைய கையிலுள்ளவற்றை எதிரிகள் பறித்து செல்வார்கள். அவர்களுடைய ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் இருந்தால் அவர்களுக்கு மத்தியிலேயே அல்லாஹ் சண்டைகளை ஏற்படுத்துவான்.
💠 உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போன்று; அல்லாஹ்வின் தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்.
روى البخاري عن أبي سعيد بن المعلى قال : كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم
فلم أجبه ، ثم أتيته فقلت : يا رسول الله ، إني كنت أصلي . فقال : ألم يقل الله عز وجل استجيبوا لله وللرسول
إذا دعاكم لما يحييكم وذكر الحديث وقد تقدم في الفاتحة
💠 அபீ சயீத் இப்னு மஹ்லா (ரலி) – நான் மஸ்ஜிதில் தொழுதுகொண்டிருக்கும்போது நபி (ஸல்) என்னை அழைத்தார்கள் நான் பதிலளிக்கவில்லை தொழுகை முடிந்ததும் தொழுகையில் இருந்ததால் தான் பதிலளில்லவில்லை என்று நான் கூறியதும் நபி (ஸல்) இந்த ஆயத்தை ஓதி காட்டினார்கள்
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
💠 அனஸ் இப்னு நழ்ர் (ரலி) உஹதை நோக்கி விரைந்து إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ (உஹதிற்கு பக்கத்தில் சுவர்க்கத்தின் வாடையை நான் நுகர்கிறேன் என்றார்கள். அவருடைய உருவம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஷஹீத் ஆகினார்கள்.
💠 அப்பாஸ் (ரலி) – யார் அல்லாஹ்வை ரப்பாகவும் இஸ்லாத்தை தீனாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தூதராகவும் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர் ஈமானின் சுவையை பெற்றுக்கொண்டார்(முஸ்லீம்)
💠 இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் ஸஹாபாக்களின் சிலர் பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோதும் ஈமானின் சுவையை உணர்ந்திருந்த காரணத்தினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கவே இல்லை,
உதாரணம்
💠 அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி) விடம் ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளர் மதம் மாறினால் ஆட்சியில் பங்கு தருகிறேன், என் மகளை திருமணம் செய்து தருகிறேன், அல்லது ஒரு சில காலங்களாவது கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கொதிக்கும் எண்ணெயில் ஒரு முஸ்லிமை இட்டு அவர் கருகுவதை கண்டு அழுத அப்துல்லாஹ் (ரலி) விடம் இப்போதாவது கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்ட போது எனக்கு ஒரே ஒரு உயிர் தான் இருக்கிறது 1000 உயிர்கள் இருந்தால் 1000 முறை இந்த எண்ணெயில் என் உயிரை அல்லாஹ்விற்காக விட நான் தயாராகியிருப்பேன் என்றார்கள். அப்போது மன்னன் என்னுடைய நெற்றியில் முத்தமிட்டால் உன்னை விடுதலை செய்வேன் என்ற போது என்னை மட்டுமல்ல என்னுடன் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியபோது மன்னன் அதை ஏற்றுக்கொண்டான்.
கருத்துரைகள் (Comments)