உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
⚜ عن أبي هريرة سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها
في النار أبعد مما بين المشرق
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூற நான் கேட்டேன் – ஒரு அடியான் ஒரு வார்த்தையை பேசுகிறார்அதன் விளைவு என்னவென்று அறியாமல் பேசிவிடுகிறார்அதன் காரணமாக நரகத்தில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தூரத்தில் விழுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
(65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
(66) புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
⚜ عبد الله بن مسعود رضي الله عنه قوله (مِنْ أَكْبَرِ الذَّنْبِ عِنْدَ اللَّهِ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ اتَّقِ اللَّهَ . فَيَقُولُ :
عَلَيْكَ بِنَفْسِكَ
அப்துல்லாஹ் இப்னு மசூது (ரலி) – ஒரு மனிதன் பேசுகிற வார்த்தையில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பான வார்த்தை அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்படும்போது நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று பதிலளிப்பதாகும்.
⚜ عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن العبد ليتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا
يرفعه الله بها درجات وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு வார்த்தை பேசுகிறான் அது அல்லாஹ் பொருந்திக்கொள்ளக்கூடிய ஒரு வார்த்தை அந்த வார்த்தையை கவனிக்காமல் அதன் மூலம் அல்லாஹ் நிறைய தரஜாக்களை(படித்தரங்களை) உயர்த்துவான். சில சமயம் ஒரு மனிதன் கவனமில்லாமல் ஒரு வார்த்தையை பேசிவிடுவான் அது அல்லாஹ்வை கோவப்படுத்தக்கூடியாதாக இருக்கும் அதன் மூலமாக அவன் நரகத்திற்கு செல்வான்.
⚜ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر
فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر
فليكرم ضيفه
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் மறுமை நாளையும் அல்லாஹ்வையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி மெளனமாக இருக்கட்டும்.மேலும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது அண்டை வீட்டாரை நோவினைப்படுத்த வேண்டாம் மேலும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும்.
⚜ عن أبي شريح الخزاعي قال سمع أذناي ووعاه قلبي النبي صلى الله عليه وسلم يقول الضيافة ثلاثة أيام
جائزته قيل ما جائزته قال يوم وليلة ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله
واليوم الآخر فليقل خيرا أو ليسكت
அபூஷுரைஹ் அல் ஹுஜாயீ (ரலி)- எனது இரண்டு காதுகளும் எனது உள்ளம் அதனை மனனம் செய்தது – நபி (ஸல்) – விருந்தளித்தல் என்பது 3 நாட்களாகும் மேலும் அவர்களுக்குரிய பரிசையும் கொடுத்து விடுங்கள் என்று கூறியபோது பரிசு என்றால் என்ன கேட்டபோது (மேலும்)ஒரு பகல் ஒரு இரவு. யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும்யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது அமைதியாக இருக்கட்டும்.
⚜باب حفظ اللسان وقول النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت
وقوله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد
நபி (ஸல்) – யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதைப்பேசட்டும் அல்லது மெளனமாக இருக்கட்டும்.
ஸூரத்து காஃப் 50:18
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
⚜ عن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه
أضمن له الجنة
சஹல் இப்னு சஹத் (ரலி)-நபி (ஸல்)- யார் தனது 2 காலுக்கு மத்தியில் இருப்பதையும் 2 தாடைக்கு மத்தியிலிருப்பதையும் நான் பாதுகாத்துக்கொள்வேன் என்று என்னிடத்தில் உறுதி கூறுகிறாரோ அவருக்கு சொர்கத்திற்கு நான் பொறுப்பு.
⚜ حدثنا علي بن مسلم حدثنا هشيم أخبرنا غير واحد منهم مغيرة وفلان [ ص: 2376 ] ورجل ثالث أيضا
عن الشعبي عن وراد كاتب المغيرة بن شعبة أن معاوية كتب إلى المغيرة أن اكتب إلي بحديث سمعته من
رسول الله صلى الله عليه وسلم قال فكتب إليه المغيرة إني سمعتهيقول عند انصرافه من الصلاة لا إله إلا الله
وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ثلاث مراتقال وكان ينهى عن قيل وقال
وكثرة السؤال وإضاعة المالومنع وهاتوعقوق الأمهات ووأد البنات وعن هشيم أخبرنا عبد الملك بن
عمير قال سمعت ورادا يحدث هذا الحديث عن المغيرة عن النبي صلى الله عليه وسلم
முகீரா (ரலி) – நபி (ஸல்) தொழுகை முடிந்த உடன் لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير என்று 3 முறை கூற நான் கேட்டேன். பிறகு செவியேற்பதையெல்லாம் பரப்பும் பழக்கத்தையும், கூடுதலாக கேள்வி கேட்பதையும், (கூடுதலாக மக்களிடம் உதவி கேட்பதை), பண வீண்விரயத்தையும், கொடுக்கக்கூடாதவர்களுக்கு கொடுப்பதும்; தடுக்கக்கூடாதவர்களுக்கு தடுப்பதையும்,பெற்றோருக்கு நோவினை செய்வதையும், பெண் குழந்தைகளை புதைப்பதையும் நபி (ஸல்) தடுத்தார்கள்
⚜ முஆவியா (ரலி); ஆட்சியில் மட்டுமே கவனமெடுக்காமல், மார்க்க விஷயங்களிலும்
மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்.
⚜باب ومن يتوكل على الله فهو حسبه قال الربيع بن خثيم من كل ما ضاق على الناس
ரபீஹ் இப்னு ஹுஸைம் என்ற அறிஞர் – மக்களுக்கு வாழ்வில் ஏற்படும் அனைத்து நெருக்கடிகளுக்கும் இறைவன் போதுமானவன் என நம்பியவருக்கு இறைவனே போதுமானவன்.
⚜ حصين بن عبد الرحمن قال كنت قاعدا عند سعيد بن جبير فقال عن ابن عباس أن رسول الله صلى الله
عليه وسلم قال يدخل الجنة من أمتي سبعون ألفا بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – என் உம்மத்தில் 70,000 நபர்கள் எந்த ஒரு விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் பிறரிடத்தில் தமக்காக மந்திரித்து கேட்க மாட்டார்கள் மேலும் சகுனம் பார்க்க மாட்டார்கள் மேலும் இறைவன் மீது மட்டுமே பொறுப்புச்சாட்டுவார்கள்.
ஆயிஷா (ரலி) விடம் உங்கள் உள்ளத்தை பாதித்த விஷயத்தை பற்றி கேட்டபோது ஒரு முறை நபி (ஸல்) என்னிடம் இருந்தபோது ஆயிஷாவே இந்த இரவில் இறைவனை வணங்க எனக்கு அனுபதி தருவீர்களா என்று கேட்டார்கள்.அப்போது ஆயிஷா (ரலி) உங்கள் பக்கத்தில் இருப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன் நீங்கள் இறைவனை வணங்குவதையும் நான் விரும்புகிறேன். அப்போது நபி (ஸல்) எழுந்து தொழுதார்கள்அப்போது தனது கண்ணீர் தாடியை, இதயத்தையும் மடியையும் நிலத்தையும் நனைக்கும் அளவிற்கு அழுதார்கள். பாங்கு சொல்வதற்காக வந்த பிலால் (ரலி) அழும் நபி (ஸல்) வை நோக்கிஉங்களது அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னித்திருக்க ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது “நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க கூடாதா என்று நபி (ஸல்) கேட்டார்கள்.
இந்த இரவில் எனக்கு ஒரு வசனம் இறக்கப்பட்டது யார் அதை ஓதி அதைப்பற்றி சிந்திக்கவில்லையோ அவர்களுக்கு கேடு உண்டாகட்டும்
அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – நபி (ஸல்) விடம் அன்சாரிகளில் சிலர் வந்து யாசகம் கேட்டார்கள்நபி (ஸல்) தன்னிடமுள்ளதெல்லாம் தீரும் அளவிற்கு கொடுத்து விட்டார்கள். தன் இரண்டு கரங்களில் உள்ளவற்றை அனைத்தையும் செலவழித்த பின் நபி (ஸல்) கூறினார்கள் என்னிடம் எந்த ஒரு செல்வம் இருந்தாலும் அதை உங்களுக்கு தராமல் சேமித்து வைக்க மாட்டேன். எவர் பேணுதலாக வாழ்வதற்காக முயற்சி எடுத்தாரோ நிச்சயம் அல்லாஹ் அவருக்கு பேணுதலாக வாழ்வை கொடுப்பான்யார் பொறுமையை உருவாக்குகிறாரோ அல்லாஹ் அவருக்கு பொறுமையை உருவாக்குவான்எவன் போதும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறானோ அல்லாஹ் அவனுக்கு போதுமென்ற வாழ்வை அமைப்பான. சிறந்த ஒரு பெறுமதி இறைவனிடத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கிறதென்றால் அது பொறுமையைத் தவிர வேறில்லை
இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
கருத்துரைகள் (Comments)