கிப்லாவை முன்னோக்கி தொழ முடியாத சூழ்நிலையில் முடிந்தளவு கிப்லாவை முன்னோக்கி; பிறகு இருக்கும் திசையில் தொழுகையில் தொடர வேண்டும்.
ஸூரத்துத் தஃகாபுன் 64:16
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ….
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்
⚜ நோயாளிகளாக இருப்பவர்களுக்கோ, அல்லது நிர்பந்தமான சூழலில் அகப்பட்டு கிப்லாவை முன்னோக்க முடியாதவர்களுக்கோ வேறு வழி இல்லாத காரணத்தினால் கிப்லாவை முன்னோக்கி தொழ முடியவில்லையென்றால் வேறு திசையில் முன்னோக்கி தொழுவதில் அவர்கள் மீது குற்றமில்லை.
عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَامَ أعرَابٌِّي فَبَالَ في الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمُ النَّبِيُّ – صلى الله عليه وسلم -: ”
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒரு கிராம வாசி நபி (ஸல்) வின் பள்ளியில் சிறுநீர் கழித்துவிட்டார். அப்போது அந்த இடத்தில ஒரு வாலி தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினார்கள். பிறகு, பிறருக்கு ஒரு செய்தியை சொல்லும்போது அதை இலகு படுத்துவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள் கடினமாக்குவதற்காக அல்ல.
அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை தொழும்போது அவர்களது செருப்பை கழட்டிய போது அப்போது ஸஹாபாக்களும் அவர்களது செருப்பை கழட்டினார்கள். தொழுது முடிந்ததும் எனது செருப்பில் அசுத்தம் இருந்தது என்று எனக்கு அறிவிக்கப்பட்டபோது அதை கழட்டினேன். உங்களிலொருவர் பள்ளிக்கு வந்தால் அவர்களுடைய செருப்பில் அசுத்தங்கள் இருந்தால் அதை தரையில் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளட்டும் (அபூ தாவூத்)
(3) ஆடை மற்றும் தொழுமிடம் நஜீஸ்களிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும்
நபி (ஸல்) – சிறுநீரிலிருந்து உங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்
அலீ (ரலி) – நான் நபி (ஸல்) வின் மருமகனாக இருந்ததால் அவரிடம் என் சந்தேகத்தை நேரடியாக கேட்க வெட்கப்பட்டு வேறொருவரை அனுப்பி கேட்டேன். நான் மதி(இச்சை நீர்)அதிகமாக உள்ளவனாக இருந்தேன். நபி (ஸல்) நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள் ஆணுறுப்பை கழுவிக்கொள்ளுங்கள் என பதிலளித்தார்கள்.(புஹாரி)
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;
عن ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم يَقُولُ: “لاَ يَقْبَلُ الله صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ
غُلُولٍ” رواه مسلم
இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – சுத்தமின்றி தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் (முஸ்லீம். இப்னு மாஜா, அபூ தாவூத்)
கருத்துரைகள் (Comments)