தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 104

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 104

⬇️↔ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا

ஏதேனும் ஒரு வீட்டில் நீங்கள் நுழைந்தால்

⬇️↔ فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ

உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுங்கள்

⬇️↔ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ

அல்லாஹ்விடமிருந்து காணிக்கையாக

⬇️↔ مُبٰرَكَةً طَيِّبَةً‌

பரக்கத் நிறைந்த சிறந்த காணிக்கை

💠 உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுதல்

அறிஞ்ர்களின் கருத்துக்கள் :

  • உங்களுடைய சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வதை தான் குறிக்கும்.

مَثَلُ المؤمنين في تَوَادِّهم وتراحُمهم وتعاطُفهم: مثلُ الجسد،

💠 நபி (ஸல்) முஃமின்கள் தங்களுக்கிடையில் அன்பு காட்டுவதிலும் பரிவு காட்டுவதிலும் ஓருடலை போன்றவர்கள்.

  • குடும்பத்தை குறிக்கும் .
  • السلام علينا وعلى عباد الله الصالحين  என்று கூறிவிட்டு செல்லுங்கள் என்று சிலர் கூறுகின்றனர் .

💠 மேற்கூறப்பட்ட 3 கருத்துக்களும் சரியானதே.

💠 நபி (ஸல்) விடம் அமல்களில் சிறந்தது எது என கேட்டபோது ஏழைகளுக்கு உணவளிப்பது, மக்கள் தூங்கும்போது விழித்தெழுந்து இபாதத் செய்வது அறிந்தவர்கள் அறியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுவது

💠 நபி (ஸல்) – உங்களில் சிறந்தவர் முந்திக்கொண்டு ஸலாம் சொல்பவரே .

💠 நபி (ஸல்) – தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஸலாம் சொல்வது மறுமையின் அடையாளமாகும் .

⬇️↔ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ

நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  

💠 மார்க்கத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் அல்லாஹ் நமக்கு தெளிவு படுத்தி இருக்கிறான் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 103

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 103

⬇️↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ

உங்கள் மீது குற்றமில்லை

⬇️↔ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا

சேர்ந்து சாப்பிடுவது

⬇️↔ اَوْ اَشْتَاتًا‌

அல்லது தனியாக சாப்பிடுவது

💠 நீங்கள் தனித்தனியே சாப்பிடுவதாக இருந்தால் கூட்டாக சாப்பிடுவதாக இருந்தாலும் குற்றமில்லை.

கூட்டாக சாப்பிடுவது இரண்டு வகைப்படும்

  • ஒரே தட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது.
  • ஒரே இடத்தில அனைவரும் சேர்ந்திருந்து சாப்பிடுவது

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 102

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 102

❤ வசனம் : 61

⬇️↔ لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ

குருடர்களும் குற்றமில்லை

⬇️↔ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ

ஊனமுற்றோர்களுக்கும் குற்றமில்லை

⬇️↔ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ

நோயாளிகளுக்கும் குற்றமில்லை

⬇️↔ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ

உங்களுக்கும் (குற்றமில்லை)

⬇️↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُم

உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ

அல்லது உங்களுடைய பெற்றோருடைய வீடுகளில்

⬇️↔ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ

அல்லது உங்கள் தாய்மார்களின் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ

அல்லது உங்களுடைய சகோதரர்களுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ

அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ

அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ

அல்லது உங்களுடைய தந்தையின் சகோதரிகள் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُم

அல்லது உங்கள் தாயின் சகோதரர்களுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ

அல்லது உங்கள் தாயின் சகோதரிகளுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗ

யாருடைய வீட்டு சாவிகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களா அவர்களுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ

அல்லது உங்களுடைய நண்பர்கள் வீடுகளிலும்

⬇️↔ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ

யாருடைய வீட்டு சாவிகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களோ அவர்களுடைய வீடுகளில் சாப்பிடுவதிலும்

கருத்து:-

அந்த காலத்தில் வெளி ஊர்களுக்கு செல்லும்போது வீட்டின் சாவிகளை கண்பார்வையில்லாதவர்களிடமோ அல்லது ஊனமுற்றவர்களிடமோ கொடுத்து வீட்டில் உள்ளதை சாப்பிடுமாறு கூறிச்செல்வார்கள். ஆயினும் அவர்கள் சாப்பிட கூச்சப்படுவார்கள். எனவே தான் இந்த சட்டத்தை அல்லாஹ் தெளிவு படுத்தினான் என்று ஒரு கருத்து உள்ளது.

لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه

💠 நபி (ஸல்) – ஒரு மனிதனுடைய பொருள் அவன் மனம் விரும்பித்தாராமல் அது ஹலால் ஆகாது

💠 மேற்கூறப்பட்ட வீடுகளில் உண்பதை அவர்கள் வெறுப்பர்களாயின் அவர்களிடம் அனுமதி கேட்பது சிறந்தது என்று சில விரிவுரையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

⬇️↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ

உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும்

💠 உங்களுடைய வீடு என்றால் அதில் உங்களுடைய பிள்ளைகளுடைய வீடும் அடங்கும்.

⬇️↔ أنت ومالك لأبيك

நபி (ஸல்) – நீயும் உன் சொத்தும் உன் தந்தைக்கு சொந்தம்.

⬇️↔ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ

அல்லது உங்களுடைய நண்பர்கள் வீடுகளிலும் (சாப்பிடுவதில் குற்றமில்லை)

💠 ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீட்டில் நண்பர்கள் வந்து சாப்பிட்டுக்  கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உணவை அருந்தினார்கள். அதை கண்ட ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் முகம் பிரகாசித்தது பிறகு ஸஹாபாக்கள் இப்படி தான் இருந்தார்கள் என கூறினார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 101

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 101

❤ வசனம் : 60

وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ

غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ‌ ؕ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏

மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.

 ⬇️↔ وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا

விவாகத்தை நாட முடியாத வயோதிக பெண்கள்

 ⬇️↔ فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ‌ ؕ 

தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை

 ⬇️↔ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ‌

அவர்கள் அதை பேணுவது அவர்களுக்கு சிறந்ததாகும்

 ⬇️↔ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏

அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்

இந்த சட்டம் யாருக்கு?

  • திருமண வாழ்வை அறவே விரும்பாத வயதாகி இருக்க வேண்டும்.
  • அவர்கள் பிறரை ஈர்க்கக்கூடிய தோற்றமுள்ளவர்களாக இருக்க கூடாது

💠 சில விரிவுரையாளர்கள் அந்த வயதை அடைந்தவர்கள் முகத்தையும் கையையும் திறப்பதில் குற்றமில்லை என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது என்று  இந்த உபதேசங்களை அல்லாஹ் 24:58 இல் ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து கூறுகிறான்

❤ ஸூரத்து தாஹா 20:124

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 100

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 100

❤ வசனம் : 59

وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ

اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்

⬇️↔ وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ 

உங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்து விட்டால்

⬇️↔ فَلْيَسْتَـاْذِنُوْا 

அவர்கள் அனுமதி கேட்கட்டும்

⬇️↔ كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ 

தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல்

⬇️↔ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ 

இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்

⬇️↔ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

💠 பிள்ளைகளும் பெற்றோரும் ஒரே அறையில் உறங்கும் நிலையிலிருந்தால் பெற்றோர் கவனமாக இருத்தல் அவசியமாக இருக்கிறது

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 99B

பருவ வயதை அடைந்தவர்கள் யார்?

ஆண்கள் :

  • மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும்
  • அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும்
  • அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும்

பெண்கள் :

மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும்.

இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :-

💠 பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க வேண்டிய அவயங்களை) பிரித்தறியக்கூடிய வயதினரை தான் இங்கே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99A

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 99A

 வசனம் : 58

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ

مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ

الْعِشَآءِ ‌ؕ  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ عَلَيْكُمْ

بَعْضُكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும்நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் – இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லைஇவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

வசனம் அருளப்பட்ட பின்னணி

இமாம் குர்துபி

💠 ஒரு நாள் நபி (ஸல்) முத்லிஜ் என்ற  ஒரு சிறுவரை உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு அனுப்பினார்கள். அவர் வீட்டின் கதவை  தட்டியபோது கதவு திறக்கப்பட்டவுடன் சிறுவர் உள்ளே நுழைந்தபோது உமர் (ரலி) யின் ஆடை லேசாக விலகியிருந்ததில் உமர் (ரலி) மனவேதனை அடைந்தார்கள். இவ்வாறான நேரங்களில் சிறுவர்களாக இருந்தாலும் அனுமதி பெற்றுக்கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று உமர்(ரலி) மனதில் நினைத்துக்கொண்டு அந்த சிறுவரை நபி (ஸல்) விடம் அழைத்து சென்றபோது நபி (ஸல்) இந்த வசனத்தை ஓதி காண்பித்தார்கள். உமர் (ரலி) அதை கேட்டவுடன் சுஜூதில் விழுந்தார்கள்.

(தஃப்ஸிர் குர்துபி)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 98

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 98

↔ لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம்

💠 காஃபிர்கள் எத்தனை சதி செய்தாலும் அவர்கள் வெற்றியடையவே மாட்டார்கள்  

💠 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது முஸ்லிம்கள் யூதர்களை ஓட ஓட துரத்துவார்கள் அப்போது ஒரு யூதன் ஒரு கல்லுக்கு பின்னால் ஒளிந்திருந்தால் அந்த கல் எனக்கு பின்னால் ஒரு யூதன் இருக்கிறான் அவனை கொலை செய் என்று கூறும்.

❤ ஸூரத்து இப்ராஹீம் 14:42

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌ ؕ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 97

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 97

❤ ஸூரத்து லுக்மான் 31:13

اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏

நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்

ஷிர்க் வைத்தவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்குகிறான்

ஆட்சி முக்கியமா தவ்ஹீத் முக்கியமா?

رسول الله صلى الله عليه وسلم قال إنك تأتي قوما من أهل الكتاب فادعهم إلى

شهادة أن لا إله إلا الله وأني رسول الله يوم وليلة

💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் தாவா செய்யச்செல்லும்போது முதலில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே நபி (ஸல்) அல்லாஹ்வின் தூதராவார் என்ற கொள்கைக்கு மக்களை அழையுங்கள் (புஹாரி).

💠 நபி (ஸல்) அலி (ரலி) இடம் நீங்கள் போகும் பாதையும் 1 ஜானிற்கு மேல் உயரமாக கட்டப்பட்ட கபர் இருந்தால் அதை தட்டி உடைத்து விட்டு வாருங்கள் என்றார்கள்.

 நீங்கள் கிருபை(அன்பு) செய்யப்படும் பொருட்டுلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ↔ ‏ 

💠 நபி (ஸல்) – அமல்களால் யாரும் சொர்க்கம் செல்ல முடியாது மாறாக அல்லாஹ்வுடைய கருணையால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும். அப்போது ஸஹாபாக்கள் உங்களுக்குமா யா ரசூலுல்லாஹ் என்று கேட்டபோது ஆம் எனக்கும் தான் என்று பதிலளித்து ஆனால் அல்லாஹ் அவனுடைய கருணையால் என்னை சூழ்ந்திருக்கிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 96

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 96

💠 முஸ்லீம் சமுதாயத்திற்கு தலைமை தேவை ஆனால் அதை சரியான முறையில் அடைந்து கொள்ள வேண்டும்.

❤ ஸூரத்துல் அஸ்ர் 103:3

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)

ஒரு அமல் ஸாலிஹானதாக இருக்க வேண்டுமென்றால்

  • இஹ்லாஸ்(அல்லாஹ்விற்காக செய்யப்பட வேண்டும்)
  • متابعة الرسول நபி (ஸல்) வின் வழிகாட்டலின் அடிப்படையில் அமல்களை செய்வது.

💠 இந்த அமலுடன் இபாதத்தும் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்ட அடிமையாக இருக்க வேண்டும்.

إن الله ابتعثنا لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد، ومن ضيق

الدنيا إلى سعة الآخرة، ومن جور الأديان إلى عدل الإسلام

ரூபீஹ் இப்னு அமீர்; ரோம் தலைவரிடம் கூறியது – அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான் , மனிதர்கள் மனிதர்களுக்கு அடிமைப்படுகிற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து இறைவனுக்கு அடிமையாக இருக்கும் நிலைக்கு திரும்புவதற்காக.

💠 அபூஹுரைரா (ரலி) – தங்கம் வெள்ளிக்காசுக்கு அடிமைப்பட்டவனும், பட்டாடைக்கு அடிமைப்பட்டவனும் அழிந்து விட்டார்கள் என சபித்தார்கள் (புஹாரி).