Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 94
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 94
❤ வசனம் : 55
وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ
الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ
اَمْنًا ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
↔ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை
لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ↔ அவர்களுக்கு பூமியில் ஆட்சியை கொடுப்பதாக
↔ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னால் ஆட்சியை கொடுத்தது போன்று
↔ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ
அவன் பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் பிடிப்போடு இருப்பதற்காகவும்
↔ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا
அவர்களுடைய பயத்திற்கு பிறகு பாதுகாப்பை தருவதாக வாக்களித்துள்ளான்
↔ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا ؕ
அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்
ؕ ↔ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
❤ வசனம் : 56
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰ تُوا الزَّكٰوةَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
தொழுகையை நிலைநிறுத்துங்கள் ↔ وَاَقِيْمُوا الصَّلٰوةَ
ஜகாத் கொடுத்துவாருங்கள் ↔ وَ اٰ تُوا الزَّكٰوةَ
ரஸூலுக்கு கட்டுப்பாடுங்கள் ↔ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ
நீங்கள் கிருபை(அன்பு) செய்யப்படும் பொருட்டு ↔ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
❤ வசனம் : 57
لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَاْوٰٮهُمُ النَّارُؕ وَلَبِئْسَ الْمَصِيْرُ
↔ لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம்
அவர்கள் தங்குமிடம் நரகமாகும் ↔ وَمَاْوٰٮهُمُ النَّارُؕ
ஒதுங்கக்கூடிய இடங்களில் அது மிக மோசமான இடமாகும்.↔ وَلَبِئْسَ الْمَصِيْرُ
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.
وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مَيْتَةً جَاهِلِيَّةً “
இப்னு உமர் (ரலி)-நபி (ஸல்) – யார் பைஅத் செய்யாமல் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யத்தான மரணத்தை சந்திக்கிறார்.
இஸ்லாமிய கிலாஃபத்திற்கான நிபந்தனைகள்
- ஈமான் இருக்க வேண்டும்.
- நல்ல அமல்கள் இருக்க வேண்டும்.
- அல்லாஹ் வுக்கு கட்டுப்பட்ட அடிமைகளாக இருக்க வேண்டும்.
- ஷிர்க் செய்யக்கூடாது.
முஸ்லீம் மக்கள் நிதானமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 93
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 93
❤ வசனம் : 53
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۚ قُلْ لَّا تُقْسِمُوْا ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ
ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
அவர்கள் சத்தியம் செய்கிறார்கள் ↔ وَاَقْسَمُوْا بِاللّٰهِ
↔ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۚ
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக
கூறுங்கள் சத்தியம் செய்ய வேண்டாம் ↔ قُلْ لَّا تُقْسِمُوْا ۚ
(உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான் ↔ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்↔ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
❤ வசனம் : 54
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْؕ
وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْاؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
↔ قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ
அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்
அவர்கள் புறக்கணித்தால் ↔ فَاِنْ تَوَلَّوْ
அவருக்கு கட்டளையிடப்பட்டது அவருக்கு ↔ فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ
உங்களுக்கு கட்டளையிடப்பட்டது உங்களுக்கு ↔ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْؕ
நீங்கள் கட்டுப்பட்டால் உங்களுக்கு நேர்வழி ↔ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْاؕ
وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ↔
இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 92
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 92
💠நபி (ஸல்) – கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதை நபி (ஸல்) தடுத்தார்கள்.
💠உமர் (ரலி) – மரணப்படுக்கையில் இருக்கும்போது ஒருவரது ஆடை கணுக்காலுக்கு கீழ் இருந்ததை கண்டு உபதேசம் செய்தார்கள்.
❤ வசனம் : 51
اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا
وَاَطَعْنَاؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
↔ اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால்
↔ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَاؕ
அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்
இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள் ↔ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
💠நபி (ஸல்) – ஒரு ஸஹாபி தங்கமோதிரம் அணிந்ததை கண்ட போது நபி (ஸல்) அதை கழட்டி வீசச்சொன்னார்கள். பிற ஸஹாபாக்கள் அந்த மோதிரத்தில் பிற தேவைகளுக்கு பயன்டுத்தலாமே என்று கூறியபோது அவர் அல்லாஹ்வின் தூதர் தூக்கியெறியச்சொன்னதை நான் திருப்பி எடுக்க மாட்டேன் என்றார்கள்.
💠நபி (ஸல்) ஒரு முறை தொழுகையில் செருப்பை கழட்டியபோது ஸஹாபாக்கள் அனைவருமே செருப்புகளை கழட்டினார்கள்.
💠மதுபானம் ஹராம் என்று மதீனாவில் அறிவிக்கப்பட்டபோது வீதிகள் அனைத்தும் மதுவின் ஆறுகளாக ஓடியது
❤ ஸூரத்துர் ரஃது 13:11
اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْؕ…
..எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை….
❤ வசனம் : 52
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ
↔ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ
யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு
↔ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ
அல்லாஹ்வை அஞ்சி மேலும் அவனுக்கு தக்வா வுடன் இருந்து
அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ ↔
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து
خشى ↔ நடந்து முடிந்ததை நினைத்து பயப்படுவது
تقوى ↔ அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவது
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 91
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 91
❤ வசனம் : 50
اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ
الظّٰلِمُوْنَ
அவர்களுடைய உள்ளத்தில் நோயா இருக்கிறது? ↔ اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ
அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? ↔ اَمِ ارْتَابُوْۤا
↔ اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗؕ
அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா?
அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள். ↔ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
💠 உமர் (ரலி) -நபி (ஸல்) வின் இரகசியக்காப்பாளரான ஹுதைபா (ரலி) இடம்-நபி (ஸல்) உங்களிடம் முனாபிக்குகளின் பட்டியல் உங்களிடம் தந்துள்ளார்கள் அதை எனக்கு காட்டுங்கள் என்றார்கள். அதை தர ஹுதைபா (ரலி) மறுத்தவுடன் அதில் என்னுடைய பெயர் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் என்று உமர் (ரலி) கூறினார்கள்.
💠 அபூபக்கர் (ரலி) வழியில் ஹன்ளலா (ரலி) யிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டபோது ஹன்ளலா முனாஃபிக்காகிவிட்டேன் என்றார்கள்-ஏன் என்று கேட்டபோது-நபி (ஸல்) வின் சபையில் ஈமான் அதிகரிக்கிறது ஆனால் பிறகு ஈமான் குறைகிறது. இது முனாஃபிக்கின் நிலையல்லவா என்றார்கள் அப்போது அபூபக்கர் (ரலி) வும் எனக்கும் அப்படி தான் இருக்கிறது என்று கூறி இருவரும் நபி (ஸல்) விடம் தீர்ப்பு கேட்டு சென்றார்கள்.
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 90
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 90
❤ வசனம் : 49
وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ
ஆனால், அவர்களின் பக்கம் – உண்மை (நியாயம்) இருக்குமானால் ↔ وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ
வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள் ↔ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ
💠 குர்ஆன் ஹதீஸ் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அதை பின்பற்றுவார்கள். இல்லையென்றால் கட்டுப்பட மாட்டார்கள்.
💠 இமாம் தபரி (ரஹ்) – பிஷ்ர் என்ற முனாபிக் ஒரு யூதனோடு வியாபாரம் மேற்கொண்டபோது யூதனின் பக்கம் நியாயமிருந்தது. அப்போது யூதன் கூறினான் நபி (ஸல்) விடம் தீர்ப்பு கேட்டு போவோம் என்றான். ஆனால் பிஷ்ர் கூறினான் நாம் கஹப் இப்னு அஷ்ரபிடம் (யூதனிடம்)செல்வோம் என்றான்.
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 89
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 89
❤ வசனம் : 47
وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ
بِالْمُؤْمِنِيْنَ
↔ وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا
நாங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான் கொண்டோம் மேலும் கட்டுப்படுகிறோம்
↔ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَؕ
(ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர்
எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர். ↔ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ
“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் – எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
💠முனாபிக்குகள் இஸ்லாத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் கட்டுப்பட மாட்டார்கள்.
💠ஒருவரை விமர்சனம் செய்யும்போது நடுநிலையாக விமர்சிக்க வேண்டும்.
❤ ஸூரத்துன்னிஸாவு 4:142
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 88
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 88
💠 46 – 54 வசனம் வரை அல்லாஹ் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான்.
நயவஞ்சகர்களின் தன்மைகள்
💠அல்லாஹ் சூரா பகராவில் 2 : 8 – 16 வரையுள்ள வசனங்களில் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான்.
❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:188 , 167
(188) ….தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ …
(167) ஜிஹாத் செய்வதை அவர்கள் வெறுப்பார்கள்
❤ ஸூரத்துத் தவ்பா 9:67
பாவத்தை தூண்டுவார்கள் நன்மைகளை தடுப்பார்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்
❤ ஸூரத்துன்னிஸாவு 4:108
மக்கள் மத்தியில் பாவம் செய்வதற்கு பயப்படுவார்கள் அல்லாஹ்விற்கு முன்னால் பாவம் செய்ய பயப்பட மாட்டார்கள்
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 87
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 87
❤ வசனம் : 46
لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
↔ لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍؕ
தெளிவுபடுத்தக்கூடிய அத்தாட்சிகளை(வசனங்களை) நாம் இறக்கினோம்.
↔ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
💠 முன் கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் பிரபஞ்ச அத்தாட்சிகள் பல எடுத்துக்கூறினாலும் நேர்வழி என்பது அவனுடைய கையில் தான் இருக்கிறது அதை தான் நாடியவருக்கு தருகிறான்.
💠 நபி (ஸல்) – அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் மூலம் ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பதென்பது அது பல சிவப்பு ஒட்டகங்கள் சொந்தமாக இருப்பதை விட சிறந்தது.
عم قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله
நபி (ஸல்) தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிபின் மரண நேரத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் அதை வைத்து அல்லாஹ்விடம் நான் உங்களுக்காக வாதாடுவேன் என்றார்கள். அப்போது அல்லாஹ்
❤ ஸூரத்துல் கஸஸ் 28:56
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் – மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
என்ற வசனத்தை இறக்கினான்.
💠 நூஹ் (அலை) 950 வருடங்கள் மக்களை திருத்த முயற்சி செய்தார்கள்.
❤ ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 41:33
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 86
தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 86
❤ வசனம் : 45
وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚفَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى
رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍؕ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
↔ وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்
↔ فَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖۚ
அவற்றில் சில தன் வயிற்றால் நடந்து (ஊர்ந்து) செல்கின்றன
↔ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى رِجْلَيْنِ
அவற்றில் சில இரண்டு கால்களால் நடந்து செல்கின்றன
↔ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍؕ
அவற்றில் சில நான்கு கால்களால் நடந்து செல்கின்றன
↔ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُؕ
அல்லாஹ் நாடியதைப்படைக்கிறான்
اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ↔
நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
💠43-45 வசனங்களில் அல்லாஹ் தன்னுடைய வல்லமையை எடுத்துரைக்கின்றன்.
💠நூஹ் (அலை) இடம் தண்ணீருக்கு சம்மந்தமில்லாத இடத்தில் கப்பல் செய்ய கட்டளையிட்டான்
💠இப்ராஹிம் (அலை) நெருப்பில் இட்டபோது நெருப்பிடம் குளிர்ச்சியாக சலாமாக இருக்க சொன்னான்.
💠அனைத்திற்கும் ஆற்றலுடையவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே
💠கஃபாவை இடிக்க வந்த யானைப்படைகளை அழித்தவன் அல்லாஹ். அவனது ஆற்றலை முஸ்லிம்கள் அறிந்தவர்களாக இருப்பார்கள்.
கருத்துரைகள் (Comments)