தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 85

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 85

❤ வசனம் : 43

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ

خِلٰلِهٖ‌ۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ

مَّنْ يَّشَآءُ‌ ؕ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ‏

↔ اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து

பிறகு இரண்டு மேகங்களை ஒன்றாக்கினான் ↔ ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ

பிறகு அதை தட்டு தட்டாக ஆக்குகிறான் ↔ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا

 அப்பால் அதன் நடுவிலிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர் ↔ فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ‌ۚ

↔ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَآءُ‌

இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான்

 يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ

தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.

 வசனம் : 44

يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ‏

  இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான் ↔ يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَ‌ 

↔ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ

நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.

இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.

 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 84

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 84

நபி (ஸல்) காலத்தில் உஹத் யுத்தத்தில் கணவனை, தந்தையையும் சகோதரனையும் இழந்த பெண் ஹன்சா (ரலி). காதிசிய யுத்தத்தில் தனது பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகள் அனைவரும் இறந்துவிட்டபோது அவர்களிடம் செய்தி சொல்லப்பட்ட போது இந்த மரணங்களின் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்று கூறினார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 83

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 83

 வசனம் : 42

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏

 வானங்களிலும் பூமியும்  அல்லாஹ்விற்கே சொந்தம் ↔ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ

அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.↔ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ

இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ‏ 

💠 மறுமையில் அல்லாஹ் வரும்போது;

20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.

أَنَا الْجَبَّارُ , أَنَا الْمَلِكُ , أَيْنَ الْجَبَّارُونَ ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் கூறுவான் நான் தான் அடக்கியாளக்கூடியவன், நான் தான் அரசன், பூமியில் அடக்கியாண்டவர்கள் எங்கே? பெருமையடித்தவர்கள் எங்கே என கேட்பான்….

 சூரா அல்ஃபஜ்ர் 89 : 15, 16, 17, 18

(15) ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்

(16) எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.

(17) அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

(18) ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 82

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 82

💠 ஒரு நாள் காலையில் நபி (ஸல்) பஜ்ர் தொழுதுவிட்டு வெளியே செல்லும்போது ஜுவைரியா (ரலி)  திக்ர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தார்கள் திரும்ப வரும்போதும் அதே நிலையில் இருந்து திக்ர் செய்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) – உனக்கு பிறகு நான் 4 வார்த்தைகளை 3 முறை சொன்னேன் நீ காலை முதல் சொன்ன அந்த வார்த்தைகளோடு நான் சொன்ன அந்த வார்த்தைகளை  ஒப்பிட்டு பார்த்தால் நான் சொன்ன வார்த்தைகள் தான் கனம் அதிகமானது.

سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته

💠 நபி (ஸல்) வித்ர் தொழுகைகளில் சுஜூதிலும் ருகூவிலும் سبحان الملك القدوس  ஓதினார்கள் (அபூதாவூத்)

💠 كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 81

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 81

💠ருகூவில் سبحان ربى العظيم என்று கூறுவதன் மூலம் தஸ்பீஹ் செய்கிறோம்

💠சுஜூதில் سبحان ربى الاعلى என்று சொல்கிறோம்

❤ சூரா அந்நஸ்ர் 110 : 3

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

💠இந்த வசனம் இறங்கியதிலிருந்து நபி (ஸல்) ருகூவிலும் சுஜூதிலும்

بحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي

என்று சொல்வதை விடவில்லை(புஹாரி,முஸ்லிம்).

💠நபி (ஸல்) ருகூவிலும் சுஜூதிலும் –

سبوح قدوس رب الملائكة والروح

(முஸ்லீம்).

💠 நபி (ஸல்) – திருடனின் மிக மோசமானவன் தொழுகையில் திருடுபவன் – ருகூவையும் சுஜூதையும் பூரணமாக செய்ய மாட்டான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 80

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 80

سبحان الله العظيم وبحمده

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவர் இப்படி சொன்னால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு பேரீச்சமரம் நடப்படுகிறது (திர்மிதி)

💠 சஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)-நாங்கள் நபி (ஸல்) உடன் உட்கார்ந்திருக்கும்போது  உங்களில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 1000 நன்மைகளை சம்பாதிப்பது கஷ்டமாகுமா?-அது எப்படி என்று ஒருவர் கேட்டபோது-நபி (ஸல்) – சுப்ஹானல்லாஹ் என்று 100 முறை கூறுங்கள்(ஸஹீஹ் முஸ்லீம்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 79

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 79

தஸ்பீஹ் செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள்

💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் ஒவ்வொரு நாளும் 100 முறை سبحان الله وبحمده(சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் அது அழிந்து விடும்(புஹாரி, முஸ்லீம்)

கடல் நுரையளவு – சிறிய பாவங்களை குறிக்கும் மேலும் பெரும்பாவங்களை தவ்பா செய்தால் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்.

💠 நபி (ஸல்) – யாரொருவர் காலையிலும் மாலையிலும் سبحان الله وبحمده என்று 100 முறை சொல்கிறாரோ மறுமையில் அவரை விட சிறந்தவர் யாரும் வர மாட்டார்கள் (முஸ்லீம்)

كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ : سُبْحَانَ اللَّهِ

الْعَظِيمِ ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) –இரண்டு வார்த்தைகள் நாவிற்கு இலேசானது மீஸானில் எடை கூடியது, ரஹ்மானுக்கு மிக விருப்பமானது சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்(புஹாரி, முஸ்லீம்)

 சூரா அல் அஃராஃப் 7 : 8

فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

 சூரா அல்காரிஆ 101 :6, 7

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏

(6) எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏

(7) அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

💠 நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை நினைத்தால் அந்த பாவம் எழுதப்படாது அந்த பாவத்தை செய்யாமல் விட்டால் அது நன்மையாக்கப்படும்.அந்த பாவத்தை செய்தால் பாவத்தை மட்டும் எழுதப்பட்டும். நன்மையை நினைத்தால் நன்மையை செய்தது போல எழுதப்படும். நன்மையை செய்தால் பன்மடங்காக நன்மையை எழுதப்படும்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 78

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 78

தஸ்பீஹ் செய்யுமாறு அல்லாஹ் இடும் கட்டளை

❤ சூரா அல்ஃபுர்கான் 25 : 58

எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.

❤ சூரா அல் ஹிஜ்ர் 15 : 98

நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!

 சூரா அல்வாகிஆ 56 : 74

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

❤ சூரா அல் அஃலா 87 : 1

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

💠 இப்னு தைமிய்யா (ரஹ்) – அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வது என்பதன் அர்த்தம்:அல்லாஹ் பூரணமானவன் எந்த குறைகளும் அற்றவன் என்று நாம் உறுதிப்படுத்துவது.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 77

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 77

❤ வசனம் : 41

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰٓفّٰتٍ‌ؕ

كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ‏

 நீர் பார்க்கவில்லையா ↔ اَلَمْ تَرَ 

 அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதை ↔ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ 

 எவர் வானங்களிலிருக்கிறாரோ மேலும் பூமியில் ↔ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ 

 வரிசையாக செல்லக்கூடிய பறப்பவைகள் ↔ وَالطَّيْرُ صٰٓفّٰتٍ‌ؕ 

 அனைத்தும் நிச்சயமாக அறிந்திருக்கின்றன ↔ كُلٌّ قَدْ عَلِمَ 

அவற்றின் தொழுகையையும் தஸ்பீஹயும் ↔ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ

وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ ↔ ‏ 

அவர்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் மிக அறியக்கூடியவனாக இருக்கிறான்.

மலக்குகளின் தஸ்பீஹ்

❤ சூரா அல் அன்பியா 21 : 20

يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ

இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

❤ சூரா ஹாமீம் ஸஜ்தா 41 : 38

فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْــٴَــمُوْنَ۩‏

ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.

❤ சூரா அல் அன்பியா 21 : 79

இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

மேலும் 13:13, 59:1

💠 அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் தஸ்பீஹ் செய்கின்றன ஆனால் அதை எப்படி என்று நாம் அறிந்து கொள்ள முடியாது.

❤ சூரா பனீ இஸ்ராயீல் 17 : 44

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 76

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 76

❤ வசனம் : 39

وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ

شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏

 நிராகரிப்பவர்களை பொறுத்த வரை  ↔ وَالَّذِيْنَ كَفَرُوْۤ

 அவர்களுடைய அமல்கள்  اَعْمَالُهُمْ 

போல ↔ كَ 

கானல்நீர் ↔ سَرَابٍۢ

தாகமுள்ளவன் அதை தண்ணீர் என்றே எண்ணுகிறான் ↔ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً 

அதன் அருகில் வரும்போது ஒன்றையும் காணாத வரை ↔ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا 

↔ وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌

ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்

 மேலும், அல்லாஹ் கணக்கு தீர்ப்பதில் துரிதமானவன். ↔ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏

 வசனம் : 40

اَوْ كَظُلُمٰتٍ فِىْ بَحْرٍ لُّـجّـِىٍّ يَّغْشٰٮهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ‌ؕ ظُلُمٰتٌۢ

بَعْضُهَا فَوْقَ بَعْضٍؕ اِذَاۤ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰٮهَا‌ؕ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ

نُّوْرٍ

🔹அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை