தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 75

 வசனம் – 37

رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ

يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ

 சில மனிதர்களை வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ தடுக்காது. ↔ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ

தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ↔ وَاِقَامِ الصَّلٰوةِ

 ஜகாத் கொடுப்பதிலிருந்தும் ↔ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌

ۙஅந்த நாளை அஞ்சுவார்கள்  يَخَافُوْنَ يَوْمًا

உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும் அதில் தடுமாறும் ↔ تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ‏

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

❤ சூரா அல் பகறா 2 : 281

اتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்.

 வசனம் : 38

وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ

شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏

அல்லாஹ் அவர்களுக்கு கொடுப்பான் ↔  لِيَجْزِيَهُمُ اللّٰهُ

அவர்கள் செய்த அமல்களுக்கு மிக அழகானதை ↔ اَحْسَنَ مَا عَمِلُوْا

அவனுடைய அருளிலிருந்து அதிகப்படுத்துவதற்காகவும் ↔ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ‌ؕ

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் அளிக்கிறான்  وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ

கணக்கின்றி கொடுக்கிறான் ↔ بِغَيْرِ حِسَابٍ‏ 

அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 74

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 74

 வசனம் – 36

↔ فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ

இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

 அதில் அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள் ↔ يُسَبِّحُ لَهٗ فِيْهَا

பஜர் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரம் ↔  بِالْغُدُوِّ

மாலையில் அஸர் தொழுகை முதல் சூரியன்  மறையும் வரையுள்ள நேரம். ↔ وَالْاٰصَالِۙ

🌹நபி (ஸல்)-அல்லாஹ்விற்கு மிக விருப்பமான இடம் மஸ்ஜித் அல்லாஹ்விற்கு மிக வெறுப்பான இடம் கடைத்தெருவாகும்(Shopping)

ومن بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة

🌹நபி (ஸல்) – யாரொருவர் அல்லாஹ்விற்காக பள்ளிவாசலை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்

🌹நபி (ஸல்) – யார் அல்லாஹ்விற்காக ஒரு பறவை தங்க கூடிய அளவில் மஸ்ஜிதை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டை காட்டுகிறான்

🌹மறுமையில் அர்ஷின் நிழல் கிடைக்கும் 7 கூட்டத்தில் ஒருவர் பள்ளியோடு உள்ளம் இணைப்பாக இருக்க கூடிய ஒருவர்

🌹நபி (ஸல்) – ஷைத்தான் பாங்கு சொல்லப்பட்டால் விரண்டோடுகிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 73

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 73

(இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும் ↔ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌

அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் ↔ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌

 சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்                                    

اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك

யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே என்னுடைய உள்ளத்தை உன்னுடைய தீனில் நிலைக்கச்செய்.

 நபி (ஸல்) -ஒரு அடியான் சொர்க்கவாசிக்குரிய செயல்களையே செய்துக்கொண்டு அவனுக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு ஜான் இருக்கும்போது நரகவாசியின் அமல் செய்து நரகம் நுழைந்து விடுவான்………………

 நபி (ஸல்) விடம் ஒருவரைப்பற்றி அனைவரும் பாராட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர் நரகவாசி என்று கூறியதும் ஏன் நபி (ஸல்) அப்படி சொன்னார்கள் என்று ஸஹாபாக்கள் அவரைப்பின்தொடர்ந்த போது போரில் வலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து விட்டார்.

 நபி (ஸல்) விடம் ஒருவர் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு உடனே போரில் கலந்து ஷஹீத் ஆக மரணித்து சுவர்க்கம் சென்ற ஸஹாபி…. ஒரு தொழுகை கூட தொழவில்லை. அதற்கு முன் மரணித்து விட்டார்கள்.

மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை ↔  وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏

அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.                                                                    

அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.                                                                  

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 72

❊ நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது

நோன்பு தக்வா வை அதிகரிக்கும்

❊ யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல பாவங்கள் நீக்கப்பட்டவராக ஆகிவிடுவார்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” إِنَّ هَذِهِ

الْقُلُوبَ تَصْدَأُ كَمَا يَصْدَأُ الْحَدِيدُ ” ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ فَمَا

جَلَاؤُهَا ؟ قَالَ : ” تِلَاوَةُ الْقُرْآنِ “

شُعَبُ الْإِيمَانِ لِلْبَيْهَقِيِّ >> فَصْلٌ فِي إِدْمَانِ تِلَاوَةِ الْقُرْآنِ “>>

 நபி (ஸல்)- இரும்பு துருபிடிப்பது போல உள்ளம் துரு பிடிக்கும். குர்ஆன் ஓதுதல் மூலமும் மரணத்தை நினைப்பதன் மூலமும் அதை பரிசுத்தப்படுத்துங்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 71

❖ நபி (ஸல்) – பாலைவனத்தில் தொலைத்த ஒட்டகத்தை பார்த்தபோது யா அல்லாஹ் நீ எனது அடிமை நான் உனது எஜமானன் என்று கூறுவதை விட அல்லாஹ் நாம் தவ்பா செய்யும்போது சந்தோஷமடைகிறான்

 சூரா அந்நூர் 24:31

நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

يا أيها الناس توبوا إلى الله واستغفروه، فإني أتوب إلى الله في اليوم مائة مرة

நபி (ஸல்) – நீங்கள் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுங்கள் நான் ஒரு நாளைக்கு 100 முறை அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுகிறேன்.

❖ ஒவ்வொரு நாளும் மூன்றாவது இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வந்து என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர்கள் இருக்கிறார்களா நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 70

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 70

 நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்தால் அவருடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளியிடப்படும் அவன் தவ்பா செய்தால் அந்த புள்ளி அகன்று விடும்.(முஸ்லீம்)

 நபி (ஸல்)- அடியார்களுடைய உள்ளங்கள் 2 நிலைகளை அடைகின்றன்றது.

1 – பாவக்கரைகளால் துருப்பிடித்த உள்ளம்

2 – நன்மைகளால் பரிசுத்தப்படுத்தப்பட்ட உள்ளம்

பரிசுத்தமான உள்ளத்தில் எந்த பித்னாவும்  நுழையாது துருப்பிடித்த உள்ளம் தலைகீழாக கவிழ்த்தி வைக்க பட்ட கின்னதைப்போன்றது.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 69

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 69

 உமர் (ரலி) வின் ஆட்சி நேரத்தில்; தன்னை தானே சுயபரிசோதனை செய்தார்கள்.

 பதர்  யுத்தத்தில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்வது என்று ஆலோசனை கேட்ட சம்பவத்தின்போது உமர் (ரலி) வின் கருத்தை அல்லாஹ் ஏற்றதை எண்ணி அழுதுகொண்டிருந்த நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரலி) வை கண்டு உமர் (ரலி) வும் அழுதார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لا تَشْبَعُ وَمِنْ

 دَعْوَةٍ لا يُسْتَجَابُ لَهَا في بعض الروايات من عين لا تدمع، ومن أذن لا تسمع

நபி (ஸல்) – அல்லாஹ்விடம் அழாத கண்களை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று துஆ செய்திருக்கிறார்கள்.

مثل المؤمنين في توادهم وتعاطفهم وتراحمهم كمثل الجسد الواحد, إذا اشتكى منه

عضو تداعى له سائر الجسد بالسهر والحمى

நபி (ஸல்) – முஃமின்கள் ஒரு உடம்பை போன்றவர்கள் அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பு வலித்தால் உடல் முழுவதும் அதை அனுபவிக்கும்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 68

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 68

⚜ ஆயிஷா (ரலி)-நபி (ஸல்)-இரவில் தொழுது அழுதுகொண்டே இருந்தார்கள். பிலால் (ரலி) யிடம் அதைப்பற்றி கூறியபோது- யா ரசூலுல்லாஹ் அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்திருக்கிறான் ஏன் அழுகிறீர்கள்?-நேற்றிரவு எனக்கு 3:189-191 வசனங்கள் அருளப்பட்டது யார் அதை ஓதி படிப்பினை பெறவில்லையே அவருக்கு நாசம் தான் என்று கூறி அழுதார்கள்.

❤ சூரா அல்மாயிதா 5 : 118

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

இந்த வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) என்னுடைய உம்மத் என்னுடைய உம்மத் என்று கூறி கூறி அழுதார்கள்.

[ ص: 439 ] 1241 حدثنا الحسن بن عبد العزيز حدثنا يحيى بن حسان حدثنا

قريش هو ابن حيان عن ثابت عن أنس بن مالك رضي الله عنه قال دخلنا مع

رسول الله صلى الله عليه وسلم على أبي سيف القين وكان ظئرا لإبراهيم عليه

السلام فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمه ثم دخلنا عليه

بعد ذلك وإبراهيم يجود بنفسه فجعلت عينا رسول الله صلى الله عليه وسلم تذرفان

فقال له عبد الرحمن بن عوف رضي الله عنه وأنت يا رسول الله فقال يا ابن

عوف إنها رحمة ثم أتبعها بأخرى فقال صلى الله عليه وسلم إن العين تدمع

والقلب يحزن ولا نقول إلا ما يرضى ربنا وإنا بفراقك

நபி (ஸல்) வின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்தபோது நபி (ஸல்) அழுவதை பற்றி கேட்ட அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) உள்ளம் வேதனை படுகிறது கண்கள் கண்ணீர் சிந்துகின்றன என்னுடைய ரப்புக்கு பொருத்தமில்லாததை நாங்கள் சொல்ல மாட்டோம்

⚜ நபி (ஸல்) வின் மகள் இறந்தபோது நபி (ஸல்) கப்ருக்கு அருகில் உட்கார்ந்திருந்து இரவு இல்லறத்தில் ஈடுபடாத யாரேனும் கப்ரில் இறங்குங்கள் என்று கூறி அழுதுகொண்டிருந்தார்கள்.

فقال للرسول ارجع إليها فأخبرها أن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده

بأجل مسمى فمرها فلتصبر ولتحتسب

நபி (ஸல்) வின் பேரனின் மரணத்தின் போது தன் மகளுக்கு – அல்லாஹ் எடுத்ததும் அல்லாஹ் கொடுத்ததும் அவனுக்கே சொந்தம்.அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒரு தவணையில் தான் இருக்கின்றன என்னுடைய மக்களிடத்தில் பொறுமையாக இருக்கச்சொல்லுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்க்க சொல்லுங்கள்-நபி (ஸல்) வர சொல்லி மீண்டும் மகள் அழைத்ததும் பேரனை பார்த்து கண்ணீர் சிந்தினார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 67

مَثَلُ نُوْرِهٖ 

அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்)  உதாரணம்

  ஒரு மாடம் போன்றது ↔ كَمِشْكٰوةٍ

   அதில் ஒரு விளக்கிருக்கிறது ↔ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ

அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது ↔  الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ 

அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ

பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் எண்ணெயை கொண்டு அது மூட்டப்படுகிறது ↔ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ

 அந்த விளக்கு கிழக்கிலுமில்லை மேற்கிலுமில்லை ↔ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ

அந்த எண்ணெய் நெருப்பு மூட்டாமலேயே பிரகாசிக்கக்கூடியது ↔ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌

⭕அல்லாஹ் முஃமினுடைய உள்ளத்தை கண்ணாடியுடன் ஒப்பிடுவதன் மூலம் அது மென்மையானது என்று கூறுகிறான்.

❤ சூரா அல்ஃபத்ஹ் 48:29

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்.

❤ சூரா அல் அன்பியா 21:107

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.

சூரா அத்தவ்பா 9 : 128

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ

رَءُوْفٌ رَّحِيْمٌ‏

இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் இரக்கமும் உடையவராக இருக்கின்றார்.

 சூரா ஆலுஇம்ரான் 3 : 159

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்…..

⭕நபி (ஸல்)வின் மென்மையான உள்ளம்- மிக கடுமையான எதிரிகளையும் மன்னிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 66

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 66

 வசனம் : 35

اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ – அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கிறான்.(ஆகவே அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான்)

இதை வசனத்தை வைத்து தான் இந்த சூராவிற்கு சூரா நூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது

தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து

இப்னு அப்பாஸ் (ரலி) – வானங்களிலுள்ளவர்களுக்கும் பூமியிலுள்ளவர்களுக்கும் வழிகாட்டக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.பெரும்பாலானவர்கள் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான் என்ற கருத்தையே முன்வைகின்றார்கள்.

அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் போன்றவர்களும் இந்த கருத்தை கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் ஒளி

இதை இரண்டாக பிரிக்கலாம்

(1) அல்லாஹ் படைத்த ஒளி

(2) அல்லாஹ்வினுடைய ஸிஃபத்தாக (பண்பாக) இருக்கும் ஒளி.

وعَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ نُورٌ أَنَّى أراه رواه مسلم ( الإيمان/261

அபூதர் (ரலி) – நபி (ஸல்) விடம் மிஹ்ராஜ் சென்ற போது நீங்கள் ரப்பை பார்த்தீர்களா? என்று கேட்டபோது அவன் ஒளியாயிற்றே எப்படி பார்ப்பது என்று பதிலளித்தார்கள்(முஸ்லீம்)

❤ சூரா அல் அஃராஃப் 7 : 143

அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்…

⭕ ஆகவே அல்லாஹ்வுடைய சிஃபத்தாகவும் ஒளி இருக்கிறது அல்லாஹ்வுடைய படைப்பாகவும் ஒளி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.