தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 65

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 65

 வசனம் : 33

وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ

مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ

وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ

يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ

விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் – அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை – அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் – அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை – அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக – விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 64

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 64

 வசனம் : 32

وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ

يَدُ اللَّهِ مَلْأَى لا يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ 

அபூஹுரைரா (ரலி) – அல்லாஹ்வுடைய கை நிறைந்திருக்கிறது அல்லாஹ் கொடுப்பதால் அந்த நிறைந்த கையில் எதையும் குறைக்காது. (புஹாரி).

من لم يسأل الله يغضب عليه 

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -அல்லாஹ்விடத்தில் யாராவது கேட்காமல் இருந்தால் அல்லாஹ் கோவப்படுகிறான்(திர்மிதி)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 63

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 63

❤ வசனம் 32 :

اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌

அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான

முஃபஸ்ஸிர்களின் கருத்து :

அல்லாஹ் மன நிறைவை ஏற்படுத்துகிறான்

ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس 

அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) –  செல்வம் என்பது நிறைய பொருட்கள் வந்து சேருவதல்ல உண்மையான செல்வம் போதுமென்ற மனம் தான் (முஸ்லீம்)

💠 ஹலாலான மனைவி கிடைத்து விட்டால் மன நிறைவை அடைந்து விடுகிறான் அதை தான் இந்த வசனம் குறிக்கிறது என சிலரின் கருத்து

💠 பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள் இதில் பொருளாதாரத்தை தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்று. ஆகவே ஏழைகளாக இருந்தால் திருமணம் முடித்தால் அல்லாஹ் தன்னுடைய நாட்டத்திற்கேற்றார் போல வசதியுள்ளவராக மாற்றுவான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 62

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 61

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 61

ஸூரத்துல் முஃமினூன் 23: 5, 6, 7

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏

(6) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ۚ

(7) ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن 

للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء 

இப்னு மசூத் (ரலி) – இளைஞர்களே உங்களில் சக்தியுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

 அது உங்கள் பார்வைகளை தாழ்த்தச் செய்யும் ↔️ فإنه أغض للبصر

  உங்களுடைய கற்பை அது பாதுகாக்கும் ↔️ وأحصن للفرج

 யாரால் அதற்கு சக்திபெறவில்லையோ ↔️ ومن لم يستطع

  அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் ↔️ فعليه بالصوم

(முஸ்னத் அஹ்மத்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 60

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 60

⚜ திருமணத்திற்கு வயதை நிர்ணயிப்பதன் மூலம் நாம் தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். பித்னா வுடைய காலத்தில் ஒழுக்க சீர்கேட்டை தவிர்க்க ஒரே வழி திருமணம் தான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به

⚜ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் எவர் லூத்தின் சமுதாயம் செய்த (ஓரினச்சேர்க்கையை) எவரேனும் செய்வதை காண்கிறாரோ அதை செய்தவரையும் செய்யப்பட்டவரையும் கொன்று விடுங்கள் (திர்மிதி)

⚜ இந்த தவறு செய்பவர்களை எவ்வாறு கொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் உயரமான இடத்திலிருந்து அவரை கீழே தள்ளி விட்டு கீழே உள்ளவர்கள் அவரை கொல்ல வேண்டும் என்று (லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்பட்ட அதே முறையில்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 59

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 59

 ஸூரத்துன்னிஸாவு 4:3

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 58

 நபி (ஸல்) – பெண்கள் ஷைத்தானுடைய கோலத்தில் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வருவார்கள் உங்கள் மனங்களில் சஞ்சலங்கள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள்.

 நபி (ஸல்) – ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் 3 வதாக அங்கு ஷைத்தான் இருப்பான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 57

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 57

وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ

 ஸூரத்துன்னிஸாவு 4:3

فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ

உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்…

يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج

இப்னு மசூத் (ரலி)  

  இளைஞர்களே ↔️ يا معشر الشباب

   உங்களில் யாருக்கு சக்தி இருக்கிறதோ ↔️ من استطاع منكم

  திருமணம் முடிப்பதற்கான வலிமை, பொருளாதார வசதி ↔️ الباءة

  திருமணம்  செய்து கொள்ளுங்கள் ↔️ فليتزوج

(புஹாரி, முஸ்லீம்)

✴நபி (ஸல்) அவர்களை பற்றி விசாரித்த 3 பேர் ஒரு முடிவுக்கு வந்தனர். ஒருவர் சொன்னார் இனி நான் இரவில் முழுவதும் நின்று வணங்கப்போகிறேன்-இன்னொருவர் சொன்னார் நான் பகலெல்லாம் தினமும் நோன்பு வைக்கப்போகிறேன் – இன்னொருவர் சொன்னார் நான் திருமணம் முடிக்கப்போவதே இல்லை. இதை கேள்விப்பட்ட நபி (ஸல்) உங்களை விட அதிகமாக அல்லாஹ் வை அஞ்சி வாழ்பவன் நான் இரவில் தூங்கவும் செய்கிறேன் நின்று வணங்கவும் செய்கிறேன். நான் சில சமயம் நோன்பு வைக்கிறேன் சில சமயம் நோன்பை விடுகிறேன். நான் திருமணங்கள் முடித்திருக்கிறேன்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 56

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 56

 வசனம் : 32 

وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ

مِنْ فَضْلِهٖ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

திருமணம் முடித்து கொடுங்கள் ↔ وَاَنْكِحُوا

⇓ ↔ الْاَيَامٰى مِنْكُمْ

உங்களில் துணையில்லாதவர்களுக்கு.

⇓ ↔ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌

ஸாலிஹான (ஆண், பெண்) அடிமைகளுக்கும்

⇓ ↔ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ

அவர்கள் ஏழைகளாக இருந்தால்

⇓ ↔ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ

அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான்

⇓ ↔ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்