தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 45

 ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும்.

لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من

جناح

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உன் அனுமதியின்றி உன் வீட்டை ஒருவர் எட்டிப்பார்த்தால் ஒரு கல்லால் எரிந்து அவரது கண்ணை நீ காயப்படுத்தினால் உன் மீது எந்தக்குற்றமும் இல்லை (புஹாரி, முஸ்லீம்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 44

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 44

✴ நபி (ஸல்) உத்மான் (ரலி) வின் வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களது தலையில் தண்ணீர் இருந்தது -நான் பிறகு வருகிறேன் என்று கூறி நபி (ஸல்) திரும்பி விட்டார்கள்

 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 43

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 43

  பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள்.

إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ 

கைஸ் இப்னு சகட இப்னு உபாதா (ரலி) – நபி (ஸல்) எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்தார்கள். ஸலாம் கூறினார்கள் என் தந்தை வ அலைக்கும் ஸலாம் என்று மெதுவாக சொன்னார்கள் அப்போது தந்தையே அல்லாஹ் வுடைய தூதருக்கு அனுமதி கொடுக்க மாட்டீர்களா என்று என் தந்தையிடம் கேட்டேன்-அப்படியல்ல நபி (ஸல்) வின் ஸலாம் நமக்கு கிடைக்குமல்லவா-நபி (ஸல்) 3 முறை ஸலாம் கூறினார்கள் பதில் கிடைக்காததால் திரும்பினார்கள்.-பிறகு ஓடி வந்து கதவை திறந்து வரவேற்று உங்களது ஸலாம் கிடைப்பதற்காகவே மெதுவாக ஸலாம் சொன்னோம் என்றார்கள்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 42

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 42

❤ வசனம் 28 :

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏

அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் – அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.

↔  فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا

நீங்கள் அதில் எவரையும் காணவில்லையென்றால்

↔  فَلَا تَدْخُلُوْهَا

அதில் நுழைய வேண்டாம்

↔  حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ

உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை

↔  وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا

உங்களிடம் திரும்பிவிடுங்கள் என்று கூறப்பட்டால்

↔  فَارْجِعُوْا‌ۚ

 நீங்கள் திரும்பி சென்றுவிடுங்கள்

↔  هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ 

அதுவே உங்களுக்கு பரிசுத்தமாகும்

  وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிகிறான்

 வசனம் 29 :

لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّـكُمْ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ‏

(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.

↔  لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ

உங்கள் மீது குற்றமாகாது

↔  اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا

வீட்டில் நுழைவது

↔  غَيْرَ مَسْكُوْنَةٍ

அதில் உங்கள் பொருட்கள்  எவரும் வசிக்காத

فِيْهَا مَتَاعٌ لَّـكُمْ‌ ↔ இருந்து

 ↔  وَاللّٰهُ يَعْلَمُ

மேலும் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

↔  مَا تُبْدُوْنَ

நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்.

↔  وَمَا تَكْتُمُوْنَ

மேலும் நீங்கள் மறைத்து வைப்பதையும்.

 இந்த வசனங்களின் பின்னணி

ஒரு அன்சாரி பெண்மணி நபி (ஸல்) விடம் வந்து நான் பிறர் காண்பதை விரும்பாத கோலத்தின் என் வீட்டில் இருக்கும்போது உறவினர்கள் வந்தால் என்ன செய்வது என்று கேட்டபோது இந்த வசனம் இறங்கியதாக கருத்து கூறுகின்றனர்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 41

  வசனம் 27 :

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا

ஈமான் கொண்டவர்களே

↔  لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ

உங்கள் வீடு அல்லாத வீடுகளில் நுழைய வேண்டாம்

↔  حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا

 அவர்களிடம் அனுமதி பெற்று ஸலாம் கூறும் வரை

↔  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ

அதுதான் உங்களுக்கு நல்லது

↔  لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

நீங்கள் நற்போதனை பெறுவதற்கு

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 40

إنما بعثت لأتمم مكارم الأخلاق

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே

❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ

وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ

   அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 39

 வசனம் 26:

اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ

مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏

   கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  

 கெட்ட பெண்கள் – اَلْخَبِيْثٰتُ

கெட்ட ஆண்களுக்கு – لِلْخَبِيْثِيْنَ 

 கெட்டஆண்கள் – وَالْخَبِيْثُوْنَ

கெட்டபெண்களுக்கும் – لِلْخَبِيْثٰتِ‌ۚ

தூய்மையுடைய பெண்கள் – وَالطَّيِّبٰتُ

 நல்ல தூய்மையுடைய ஆண்களுக்கு – لِلطَّيِّبِيْنَ

 தூய்மையான ஆண்கள் – وَالطَّيِّبُوْنَ

 தூய்மையான பெண்களுக்கு – لِلطَّيِّبٰتِ‌ۚ

 அவர்கள் – اُولٰٓٮِٕكَ

 தூய்மையானவர்கள் – مُبَرَّءُوْنَ

 அவர்கள் சொல்வதிலிருந்து – مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ

 அவர்களுக்கு மன்னிப்பும் – لَهُمْ مَّغْفِرَةٌ

கண்ணியமான உணவும் இருக்கிறது (சொர்க்கம்) – وَّرِزْقٌ كَرِيْمٌ

 இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நபி (ஸல்) விற்கு ஆறுதல் கூறுகிறான்.

21 – 26 வசனங்கள் ஆயிஷா (ரலி) அவர்களது நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 38

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 38

  நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள்.

 வசனம் 23 :

اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏ 

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

 வசனம் 24 :

يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.

 வசனம் 25 :

يَوْمَٮِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَـقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ‏ 

அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 37

❤ வசனம் 22 :

وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ

فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌ۖ  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌ ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

   இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

  அபூபக்கர் (ரலி) விஷயத்தில் இந்த வசனம் இறங்கியது

ஆயிஷா (ரலி) மீது அவதூறு பரப்பப்பட்டபோது அதை சில ஸஹாபாக்களும் நம்பிவிட்டார்கள் அதில் மிஸ்தஹ் என்ற ஸஹாபி இதை நம்பி அதை பற்றி பேசிவிட்டார்கள். அவருக்கு அன்று வரை செலவுக்கு பொறுப்பெடுத்திருந்த அபூபக்கர் (ரலி) இந்த விஷயம் கேள்விப்பட்டதும் இனிமேல் மிஸ்தஹ்விற்கு நான் எதுவும் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அப்போது தான் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கினான்

  இந்த வசனம் இறங்கியவுடன் மிஸ்தஹ் (ரலி) வை மன்னித்து ஏற்கனவே செலவுக்கு கொடுத்ததை விட அதிகமாக கொடுத்தார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 36

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 36

அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ 

நன்கறிவோனாகவும்  இருக்கின்றான்                          

 அனைத்தையும் கேட்பவன் – سَمِيْعٌ

  அனைத்தையும் அறிபவன் – عَلِيْمٌ

❤ ஸூரத்து ஃகாஃப் 50:18

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

   கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.

❤ ஸூரத்துஸ் ஸபா 34:2

يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا ؕ وَهُوَ

الرَّحِيْمُ الْغَفُوْرُ‏

   பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.

❤ ஸூரத்துல் அன்ஆம் 6:59

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ

اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

   அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

❤ ஸூரத்துல் முஃமின் 40:19

يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏

   கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.