தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 35

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ

இல்லையென்றால் – وَلَوْلَا

 அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ

 உங்களுக்கு – عَلَيْكُمْ

 மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ

مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا

 உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க

முடியாது

 இல்லை – مَا

 பரிசுத்தம் – زَكٰى

 உங்களில் – مِنْكُمْ

 ஒருவரும் – مِّنْ اَحَدٍ

 ஒருபோதும் – اَبَدًا

 சூரா ஷம்ஸ் இல் 11 முறை சத்தியம் செய்து விட்டு அல்லாஹ் கூறுகிறான்

❤ ஸூரத்துஷ் ஷம்ஸ் 91: 9, 10

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ

(9) அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ‏

(10) ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌

 தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான்

 ஆனால் – وَّلٰـكِنَّ

 பரிசுத்தப்படுத்துகிறான் – يُزَكِّىْ

 யாருக்கு நாடுகிறானோ – مَنْ يَّشَآءُ‌

 நபி (ஸல்) அதிகமாக சுஜூதில் கேட்ட துஆ

اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

 அல்லாஹ்வே – اللَّهُمَّ

  என் ஆத்மாவிற்கு கொடு – آتِ نَفْسِي

  அதற்கு தக்வாவை – تَقْوَاهَا

அதை தூய்மை படுத்து – وَزَكِّهَا

 தூய்மை படுத்துவதில் நீயே சிறந்தவன் – أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا

நீதான் அதற்கு பொறுப்புதாரி – أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

❤ ஸூரத்துல் ஃபஜ்ரி 89: 22 , 23 , 24

وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۚ

(22) இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏

(23) அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது – அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏

(24) “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 34

وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ

ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن

அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ?                                    

நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ 

இப்னு அப்பாஸ் (ரலி) – இந்த உலகத்தில் தண்டனை ↔ بِالْـفَحْشَآءِ  – فاحشه 

பெற்றுத்தரக்கூடிய  பாவங்கள் (விபச்சாரம், ஓரினச்சேர்க்கை,

அவதூறு, மது அருந்துவது, திருடுவது…)

பொதுவாகவே தடுக்கப்பட்ட எல்லா பாவங்களையும் குறிக்கும் ↔ وَالْمُنْكَرِ‌ 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 33

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 33

ஷைத்தானை விரட்ட நம்மிடம் உள்ள ஆயுதம் தக்வா 

❤ ஸூரத்துல் அஃராஃப் 7:201 

اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌ۚ‏

   நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:102

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

   நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 32

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 32

❤ ஸூரத்துல் ஹஷ்ர் 59:16

كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ

الْعٰلَمِيْنَ‏

   (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 31

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 31

நபி(ஸல்) – இப்லீஸ் தன் சிம்மாசனத்தை கடலில் போடுகிறான் அவனுடைய படை பூமியில் குழப்பம் செய்துவிட்டு வரும் ஒவ்வொருவரும் தாம் செய்தவற்றை சொல்வார்கள் அதில் ஒருவன் நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவியை பிரித்துவிட்டேன் – அந்த ஷைத்தானை இப்லீஸ் பக்கத்தில் அழைத்து நீ தான் என்னுடைய ஆள் என்று கூறுகிறான். (முஸ்லீம்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 30

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 30

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا. فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً. فَحَدَّثْتُهُ، ثُمَّ قُمْتُ

لأَنْقَلِبَ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي – وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةض بْنِ زَيْدٍ – فَمَرَّ

رَجُلانِ مِنْ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أسْرَعَا. فَقَالَ النَّبِيُّ

صلى الله عليه وسلم: عَلَى رِسْلِكُمَا. إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ. فَقَالا : سُبْحَانَ اللهِ يَا

رَسُولَ اللهِ. فَفَالَ : إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدّمِ. وَإِنِّي خَشِيتُ

.أَنْيَقْذِفَ فِي قُلُو بِكُمَا شَرًا – أَوْ قَالَ شَيْئًا

நபி (ஸல்) இஹ்திகாஃப் இருக்கும்போது மனைவி சபிய்யா (ரலி) யுடன் பேசும்போது இது என் மனைவி என்று சஹாபாக்களிடம் கூறினார்கள். பிறகு நபி(ஸல்) ஷைத்தான் ஆதமின் மகனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் உங்களுடைய உள்ளத்தில் அவன் ஏதாவது ஏற்படுத்திவிடுவான் என்று நான் அஞ்சினேன் (புஹாரி).

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 29

உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள்.

يعقد الشيطان على قافين رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب كل عقدة عليك

ليل طويل فار قد فإن استيقظ فذكر الله انحات عقدة فإن توضأ انحلت عقدة فإن

صلى انحلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان

அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் இரவில் தூங்கச்சென்றால் ஷைத்தான் 3 முடிச்சுகளை போடுகிறான் பிறகு அதன் மீது அடித்து உனக்கு நீண்ட இரவு இருக்கிறது என்று சொல்லுவான் ஒருவர் பஜ்ருடைய நேரத்தில் எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அதிலிருந்து ஒரு முடிச்சி அவிழ்கிறது, பிறகு உளூ செய்தால் மற்றோரு முடிச்சும் பிறகு தொழுதால் 3 வது முடிச்சும் அவிழ்கிறது. (புஹாரி, முஸ்லீம்)

 நபி(ஸல்) – பஜ்ர் தொழாமல் தூங்குபவன் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 28

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 28

நபி (ஸல்) – ஷைத்தான் உங்களிடத்தில் ஊசலாட்டங்களை உண்டு பண்ணுகிறான். காட்சிகளை காண்பித்து இவற்றை படைத்தது யார் என்ற கேள்வியை உள்ளத்தில் வரச்செய்வான் அல்லாஹ் என்ற பதில் உள்ளத்தில் வந்ததும் அல்லாஹ்வை யார் படைத்தார்கள் என்ற கேள்வியை உருவாக்குவான். இந்த சிந்தனை வந்தால் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி இடது புறம் துப்புங்கள். (புஹாரி)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 27

لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ

وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا

இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால்

بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْـتَنَا

என்று கூறி விட்டு ஈடுபட்டால் அதில் பிறக்கும் குழந்தையை ஷைத்தான் ஒருபோதும் தீண்ட மாட்டான். (புஹாரி – 3283)

 நபி (ஸல்) – இந்த உலகத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் ஷைத்தான் அதை தீண்டுகிறான் அதனால் தான் குழந்தைகள் அழுது கொண்டு பிறக்கின்றன. ஈஸா(அலை) பிறந்தபோது அழவில்லை அல்லாஹ் பாதுகாத்தான். (புஹாரி)

 ஷைத்தானின் தீங்கில் மிக மோசமானது மனிதர்களின் உள்ளத்தில் அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டம் (சூரா நாஸ் )

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 26

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 26

ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்ன ?

உலமாக்களின் கருத்து:

அவனுடைய செயல்கள், அவனுடைய வழி,

சுத்தீ (ரஹ்)கத்தாதா (ரஹ்) :

அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய அனைத்து மாறுகளும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும் .

இப்னு அத்தீயா (ரஹ்) – சுன்னத்துகள் ஷரீஅத் சட்டங்கள் தவிர உள்ள பித்அத்துகளும் பாவங்களும்

உதைமீன் (ரஹ்) – அல்லாஹ் தடை செய்துள்ள அனைத்தும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும்.