தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 15

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 15

❤வசனம் 12:

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏

அதை கேட்காமல் இருந்திருந்தால் ↔ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ

எண்ணினால் ↔ ظَنَّ

முஃமினான ஆண்கள் ↔ لْمُؤْمِنُوْنَ

முஃமினான பெண்கள் ↔ وَالْمُؤْمِنٰتُ

தங்களை↔ بِاَنْفُسِهِمْ

நன்மை ↔ خَيْرًاۙ

அவர்கள் கூறினார்கள் ↔ وَّقَالُوْا

இது பகிரங்கமான வீண் பழியாகும் ↔ هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ

   முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?

உலமாக்களின் கருத்து :

 புறம் பேசுவதும் கோள்மூட்டுவதும் அதை கேட்பதும் ஹராம்.

 தபூக் யுத்தத்தின் நேரத்தில் – நபி(ஸல்) – கஃஹப் இப்னு மாலிக் (ரலி) எங்கே? – ஒருவர் – அவருக்கு உலக ஆசை வந்துவிட்டது அதனால் தான் யுத்தத்திற்கு வரவில்லை – வேறொரு ஸஹாபி – கஃஹப் (ரலி) அல்லாஹ்வையும் அவருடைய தூதரையும் விரும்பக்கூடியவர் என்கிறார்.

தஃப்ஸீர் ஆசிரியர் கூறுகிறார் :

அபூ அய்யூப் உம்மு அய்யூப் (ரலி) இருவரும் ஆயிஷா(ரலி) வின் இந்த செய்தியைப் பற்றி பேசும்போது கணவர் கூறினார் உன்னைப்பற்றி இப்படியொரு செய்தி பரப்பப்பட்டிருந்தால் உன் நிலை எப்படியிருக்கும் உண்மையில் நீ இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்திருப்பாயா? – நான் இப்படி செய்திருக்கவே மாட்டேன். உன்னை விட பலமடங்கு சிறந்த ஆயிஷா(ரலி) இதை செய்திருப்பாரா என்று கணவர் கேட்டார்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 14

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 14

நன்மை

  • இதன் மூலம் பல விஷயங்களை நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான்.
  • ஷியாக்கள் ஆயிஷா(ரலி) வைப்பற்றி மிக மோசமாக பேசுகிறார்கள்; அல்லாஹ் குர்ஆனிலேயே அவர்களை பரிசுத்தமாக்கியிருக்கிறான்.

மகத்தான தண்டனை

(1893) مَنْ دَلَّ عَلَى خَيْرِ فَلَهَ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ) رواه مسلم

 அபூ மசூத் அல் அன்சாரி (ரலி) – யார் ஒரு நன்மையை ஏவுகிறாரோ (வழிகாட்டுகிறாரோ) அதை செயல்படுத்துபவருக்கு கிடைக்கும் அதே நன்மை அவருக்கும் கிடைக்கும்(முஸ்லீம்).

 நபி (ஸல்) – இந்த உலகத்தில் ஒரு கொலை நடந்தால் அதில் ஆதம் (அலை) மகனுக்கு ஒரு பங்கு உண்டு (உலகில் முதல் கொலை செய்தவர் அவர் தான்).

 நம்முடைய வாயினால் ஒரு பித்னா பரவி விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 13

لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌

நீங்கள் அதை நினைக்க வேண்டாம் ↔ لَا تَحْسَبُوْهُ

உங்களுக்கு தீங்கு என்று ↔ شَرًّا لَّـكُمْ‌

بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌

ஆனால் ↔ بَلْ

அது ↔ هُوَ

உங்களுக்கு நன்மைதான் ↔ خَيْرٌ لَّـكُمْ‌

لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌

அனைவருக்கும் ↔ لِكُلِّ امْرِى

அவர்களிலிருந்து ↔ مِّنْهُمْ

எதை சம்பாதித்தார்களோ (தேடினார்களோ) ↔ مَّا اكْتَسَبَ

தீமையிலிருந்து ↔ مِنَ الْاِثْمِ‌

وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ

எவர் பெரும்பங்கு வகித்தார்களோ ↔ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ

அவர்களில் ↔ مِنْهُمْ

அவனுக்கு ↔ لَهٗ

கடினமான வேதனையுண்டு ↔ عَذَابٌ عَظِيْمٌ

ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 12

 வசனம் 11

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ

امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

நிச்சயமாக ↔ اِنَّ

அத்தகையவன் ↔ الَّذِيْنَ

உங்களிடம் அவதூறைக் கொண்டு வந்தான் ↔ جَآءُوْ بِالْاِفْكِ

குழுவில் ↔ عُصْبَةٌ

உங்களிலிருந்து ↔ مِّنْكُمْ‌

✴ அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் செய்த பித்னாவின் காரணமாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி), மிஸ்தஹ் இப்னு அஸாலா (ரலி), ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) இவர்களெல்லாம் இதை நம்பி பேச ஆரம்பித்துவிட்டார்கள்

 ஸஹாபாக்களில் சிலர் மறுத்துவிட்டார்கள்

நம்பவில்லை ஆனால்; பேசினார்கள்

நம்பி பேசினார்கள் (மேற்கூறப்பட்ட அந்த 3 ஸஹாபாக்கள்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 11

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 11

மதீனாவை வந்தடையும் போது عبد الله بن أبي بن سلول பார்த்தான். மதீனா முழுவதும் அவதூறு பரப்பப்பட்டது ஆயிஷா (ரலி) அறியாமல் இருந்தார்கள். 1 மாதம் நபி (ஸல்) வழமை போல இல்லாமல் இருந்தார்கள். இயற்கை தேவைக்காக செல்லும்போது உம்மு மிஸ்தஹ் (ரலி) – மிஸ்தஹ் நாசமாக போவான் என்றார்கள். பிறகு செய்தியை கேட்டு அழுதுகொண்டே இருந்தார்கள். தந்தை வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு சென்றார்கள். இரண்டரை நாட்கள் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்தார்கள். நபி(ஸல்) வழமையை விட நீண்ட நேரம் உட்கார்ந்தார்கள். நீ தவறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் உன்னை பரிசுத்தப்படுத்துவான் தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேள் – ஆயிஷா(ரலி) கண்ணீர் வற்றிய நிலையில் – ஆயிஷா (ரலி) தாய் தந்தையிடம் நபி (ஸல்) விற்கு பதில் சொல்ல சொன்னார்கள் ஆனால் அவர்கள் சொல்லவில்லை – ஆயிஷா(ரலி) – நான் தவறு செய்தேன் என்று கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்கள்; இல்லை என்று சொன்னால் நம்பப்போவதில்லை அல்லாஹ் என்னை பரிசுத்தமானவள் என்பதை அறிவான் என்று கூறி படுத்தார்கள். நபி (ஸல்)  சிரித்துக்கொண்டு வந்தார்கள் – அல்லாஹ் குர்ஆன் வசனங்கள் மூலம் உன்னை பரிசுத்தப்படுத்திவிட்டான். ஆயிஷா(ரலி) வின் தாய் நபி (ஸல்) விடம் செல்லச் சொன்னார்கள். நான் செல்லவில்லை அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினேன். அல்லாஹ் நபி (ஸல்) வின் கனவில் நான் பரிசுத்தமானவள் என காட்டுவான் என எண்ணினேன் ஆனால் குர்ஆன் வசனம் இறங்குவான் என நினைக்கவில்லை.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 10

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) பயணம் செய்தால் மனைவிமார்கள் பெயர்போட்டு குலுக்குவார்கள் அதில் ஆயிஷா (ரலி) வின் பெயர் வந்தது – பனூமுஸ்தலக் போரிலிருந்து திரும்பும்போது – ஓய்வெடுக்கும் நேரத்தில் – நான் தேவைகளை நிறைவேற்ற சென்றபோது – கழுத்து மாலையை தேடி சென்ற போது – என்னை விட்டுவிட்டு நபி (ஸல்) வின் படை சென்றுவிட்டது – சப்வான் இப்னு முஅத்தால் (ரலி) (ஜாஹிலிய்யா காலத்திலேயே கண்ணியமாக வாழ்ந்தவர்) தூங்கும் என்னைப் பார்த்து; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்றார்கள் அப்போது நான் முகத்தை மூடிக்கொண்டேன் – நாங்கள் இருவரும் எந்த வார்த்தையும் பேசவில்லை.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 9

 வசனம் 5

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

தவ்பா செய்தவர்களை தவிர ↔ اِلَّا الَّذِيْنَ تَابُوْا

அதற்குப்பின்னர் ↔ مِنْۢ بَعْدِ ذٰلِكَ

மேலும் திருத்திக் கொள்கிறார்களோ ↔ وَاَصْلَحُوْا‌ۚ

நிச்சயமாக அல்லாஹ் ↔ فَاِنَّ اللّٰهَ

மிக்க மன்னிப்பவன் ↔ غَفُوْرٌ

மிகுந்த அன்புடையவன் رَّحِيْمٌ  ‏

   எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

 வசனம் 6 – 9

வசனங்கள் லிஆன் என்ற சட்டம்

 கணவன் தனது மனைவி மீது விபச்சாரம் குற்றம் சாட்டினால்.

 ஒரு ஸஹாபி நபி (ஸல்) விடம் ஒருவர் தன் மனைவி விபச்சாரம் செய்வதைக் கண்டால் என்ன செய்வது என்று கேட்டபோது தான் இந்த வசனம் இறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

 ஒரு கணவன் மனைவி விபச்சாரம் செய்வதைக்கண்டால் அவன் (ஜமாத்தினர் முன்) இப்படி நீ விபச்சாரம் செய்தாயா என்று கேட்க வேண்டும். அவள் ஆம் என்று கூறினால் அவளை கல்லெறிந்து கொல்லும் சட்டம் இஸ்லாத்தில் இருக்கிறது (இஸ்லாமிய ஆட்சியில்). அவள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இரண்டு பெரும் சத்தியம் செய்ய வேண்டும். முதலில் கணவன் சத்தியம் செய்ய வேண்டும். ( 4 முறை என்னுடைய மனைவியை ஒருவரோடு ஈடுபட்டார் என்ற என்னுடைய குற்றச்சாட்டு உண்மையானது என்று 4 முறை சத்தியம் செய்ய வேண்டும் 5 வது முறை நான் சொல்வதில் தவறு இருந்தால் அல்லாஹ் சாபம் என் மீது உண்டாகட்டும்; பிறகு இதே போல் மனைவியும் சத்தியம் செய்ய வேண்டும். அதற்கு பிறகு அவர்களது உறவு குறிக்கப்படும்.

 வசனம் 10

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ‏

   இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 8

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 8

 வசனம் 4

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً

وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் ↔ وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ

பிறகு அவர்கள் 4 சாட்சிகளை கொண்டு வரவில்லை ↔ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ

அவர்களை 80 கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً

அவர்களது சாட்சியங்களை எக்காலத்திலும் ஏற்காதீர்கள் ↔ وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌

அவர்கள்தான் பாவிகள் ↔ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ ‏

   எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

 நபி(ஸல்) – மிஃராஜில் – செம்பாலான நகங்களை கொண்டு தம்மை தாமே கீறிக்கொள்பவர்களை கண்டார்கள் – பிறரை பற்றி பேசியவர்கள்.

கருத்து:

ஒரு விபச்சாரத்தை (மேற்கூறப்பட்ட சுர்மா உதாரணம் அடிப்படையில் உள்ள) ஒருவர் பார்த்தால் அதை பற்றி பேசாமல் இருப்பது சிறந்தது, இருவரோ மூவரோ பார்த்தாலும் மௌனம் காப்பதே சிறந்தது, 4 பேர் பார்த்தால் அவர்கள் அதை பற்றி வெளியே கூறலாம், கூறாமலும் இருக்கலாம்.

 மாயிஸ் (ரலி) நபி (ஸல்) விடம் தம்மை பரிசுத்தப்படுத்த கூறினார்கள். நபி (ஸல்) – அவருக்கு பைத்தியமா,போதையருந்தி இருக்கிறாரா என்றெல்லாம் கேட்டார்கள் பிறகு தனிமையில் இருந்திருப்பாய், முத்தமிட்டிருப்பாய் தவ்பா செய், அப்படி பல முறை அவரது மானத்தை காப்பாற்ற நபி (ஸல்) முயற்சித்தார்கள். அவரை ஓடவிட்டிருக்கலாமல்லவா, மடக்கிப்பிடித்தவரிடம் நீ அவரை உன் ஆடையால் மறைத்திருக்க கூடாதா என நபி (ஸல்) கேட்டார்கள்.

فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ المُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ

 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய சகோதரனுடைய குறைகளை தேட ஆரம்பிக்கிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் தேடுகிறான்.(திர்மிதி)

 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 7

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 7

❤ வசனம் 3

اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ ۚ  وَحُرِّمَ

ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏

விபச்சாரம் செய்பவன்↔ اَلزَّانِىْ

திருமணம் செய்ய மாட்டன் ↔ لَا يَنْكِحُ

விபசாரியைத் தவிர ↔ لَّا زَانِيَةً

அல்லது இணை வைத்து வணங்குபவளை ↔ اَوْ مُشْرِكَةً

மேலும் ஒரு விபசாரி ↔ وَّ الزَّانِيَةُ

திருமணம் செய்ய மாட்டள் ↔ لَا يَنْكِحُهَاۤ

விபச்சாரம் செய்பவனை தவிர ↔ اِلَّا زَانٍ

அல்லது இணை வைத்து வணங்குபவனை ↔ اَوْ مُشْرِكٌ‌

அது ஹராமாக்கப்பட்டிருக்கிறது ↔ وَحُرِّمَ ذٰ لِكَ

முஃமின்கள் மீது ↔ عَلَى الْمُؤْمِنِيْنَ

   விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.

விளக்கம்:

இப்னு அப்பாஸ் (ரலி) – விபச்சாரம் செய்ய ஒருவன் செல்வதாக இருந்தால் அவன் விபச்சாரியிடம் தான் செல்வான். அல்லது முஸ்லிமல்லாத ஒருத்தியிடம் செல்வான்

 மர்சத் இப்னு அபீ மர்சத் என்ற நபித்தோழர் ஒரு விபச்சாரியை திருமணம் முடிக்கவா என கேட்டபோது நபி (ஸல்) இந்த வசனத்தை ஓதிக்காட்டியதாக ஒரு விளக்கம் இருக்கிறது.

 

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 6

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 6

 விபச்சாரம் என்றால் என்ன?

சுர்மா குப்பிக்குள் சுர்மா குச்சியை விடுவது போல் மனைவியல்லாதவரிடம் உறவு கொள்வதாகும்.

لَأنْ يُطعَنَ فِي رأسِ أحدِكم بمِخيَطِ من حديدِ خيرٌ لهُ مِنْ أن يَمَسَّ امرأةً لا تَحِلُّ لهُ

أخرجه الطبراني في ” الكبير ” (212-211 / 20) رقم (487، 486 

والروياني في ” مسنده” (323 / 2 ) رقم (1283

 மஹ்கல் பின் யஸார் (ரலி) – நபி (ஸல்) – ஒரு அந்நிய பெண்ணை நீ தொடுவதை விட உன் தலையில் நீயே ஆணியை வைத்து அடிப்பதே மேலானதாகும். (தபறானீ – 212 – 211 / 20 ) ( இமாம் அல்பானி இதை ஹசன் ஆன ஹதீஸ் என கூறுகிறார்கள்.

 தண்டனை வழங்கும்போது கருணை வர வேண்டாம்.

நபி(ஸல்) – உஸாமா (ரலி) விடம் அல்லாஹ்வுடைய சட்டத்தில் சிபாரிசு செய்ய வந்திருக்கிறாயா? என்னுடைய மகள் பாத்திமா திருடினாலும் வெட்டுவேன் என நபி(ஸல்) கூறினார்கள்.