❀ உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் 100 கசையடியும் கல்லால் எறிவதும் என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்)
❀ அபூஹனீபா, மாலிக் ஷாஃபீ (ரஹ்) கல்லால் எறிந்தால் போதும் மாயிஸ் (ரலி) வை நபி (ஸல்) கல்லால் தான் எரிந்து கொன்றார்கள் கசையடி கொடுக்கவில்லை. (புஹாரி, முஸ்லீம்)
❀ மேற்கூறப்பட்ட உதாரணங்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் ஹதீஸ்களை புரிந்து கொண்ட விதத்தில் தான் வருகிறது என நாம் அறிந்து கொள்ளலாம்.
(விபச்சாரம் செய்யும் ஆணையும் பெண்ணையும் கல்லால் எரிந்து கொள்ளுங்கள்) என்ற இந்த வசனத்தை நாங்கள் குர்ஆனில் ஓதி வந்தோம். பிறகு அது நீக்கப்பட்டு விட்டது. ஆகவே இந்த சட்டம் மாற்றப்படவில்லை இந்த செய்தி இப்போது ஹதீஸில் இருக்கிறது.
➥ விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
➥ நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
⭕நபி (ஸல்) – மிஃராஜ்- மேல் பக்கம் ஒடுக்கமாகவும் கீழ் பகுதி விரிவாகவும் இருக்கிறது அதில் நிர்வாணமான ஆண்களும் பெண்களும் நெருப்பில் எரிக்கப்படுகிறார்கள் – விபச்சாரம் செய்தவர்கள்.
⭕ விபச்சாரத்தில் மிக மோசமானது நெருக்கமானவர்களுடன் விபச்சாரம் செய்வதாகும்.
அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – பாவத்தில் மிகப்பெரும் பாவம் எது?- அல்லாஹ் உன்னை படைத்திருக்கும்போது அவனை விட்டுவிட்டு வேறு யாரையாவது வணங்குவது.-அடுத்தது – உன்னுடைய பிள்ளையை கொல்வது – பிறகு?- அண்டை வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது
➥ “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
♥ இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது. ♥ மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். ♥ 64 வசனங்கள் உள்ளன. ♥ பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில்
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது.
⇒ முஃபசிர்கள் ( திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் ) கூறுகிறார்கள் இந்த அத்தியாயத்தில் உள்ள சட்டங்களும், ஒழுங்குகளும் மனித சமுதாயத்திற்கு ஒளியாக இருப்பதால் தான் இப்பெயர் பெற்றது என கூறுகிறார்கள்.
[highlight color=”yellow”]அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் 5 முக்கியமான தலைப்புகளை தெளிவு படுத்துகிறான்.[/highlight]
❖ ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றக்கூடாது.
❖ அல்லாஹ்வுடைய வல்லமைகளை விளக்குகிறான்.
❖ ஒரு வீட்டில் நுழையும்போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்.
❖ ஆயிஷா ( ரலி ) வை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தினான்.
❖ அல்லாஹ்வுடைய சட்டங்கள், தண்டனைகள் பற்றி.
அல்லாஹ் இந்த சூராவை ஆரம்பிக்கும்போது இதன் சிறப்பைக் கூறி ஆரம்பிக்கிறான்.
وَفَرَضْنَاهَا ↔ மேலும் நாம் அதை கடமையாக்கியுள்ளோம்
وَأَنزَلْنَا ↔ மேலும் நாம் இறக்கியுள்ளோம்
فِيهَا ↔ அதில்
آيَاتٍ ↔ அத்தாட்சிகள்
بَيِّنَاتٍ ↔தெளிவுபடுத்த கூடியது
لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ ↔ நீங்கள் படிப்பினை பெறுவதற்காக
🔹 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருளச் செய்தோம்.
➥ இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
➥ தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
➥ அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
✥ அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்)
✥ தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் அழுத ஸஹாபாக்களை அல்லாஹ் பாராட்டுகிறான் குர்ஆனில் ….
✥ நபி (ஸல்) சஹாபாக்களிடம் ஏதேனும் வேண்டுமா என்று கேட்டபோதெல்லம் உங்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமென்றே கேட்டார்கள்.
✥ நபி (ஸல்) அல்லாஹ் சொர்க்கவாசிகளிடம் எல்லா இன்பங்களையும் கொடுத்த பின் உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா என்று கேட்டு சொர்க்கவாசிகள் அல்லாஹ்வை தங்கள் கண்ணால் காண்பார்கள். சொர்க்கத்தில் உள்ளவர்களிடம் உச்சகட்ட இன்பம் அதுதான்.
✥ அந்த சொர்க்கம் பயபக்தியுடையவர்களுக்கு மட்டுமே நபி(ஸல்) தக்வாவை அதிகப்படுத்த அதிகமாக துஆ செய்தார்கள்.
✥ நபி (ஸல்) – தக்வா என்பது இங்கே இருக்கிறது என நெஞ்சை காட்டி சொன்னார்கள்.
✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். காலித் (ரலி) அவர்களது இரத்தத்தை கண்டு அருவெறுப்பு பட்ட போது நபி(ஸல்) கூறினார்கள் இந்தப்பெண்ணின் பாவமன்னிப்பை மதினாவில் உள்ள 70 பேருக்கு பங்கு வைத்தாலும் மிஞ்சிவிடும் என்கிறார்கள்.
✤ இரவின் 3 வது பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு வந்து என்னிடம் பாவமன்னிப்பு கேட்க யாரேனும் இருக்கிறீர்களா என்று அல்லாஹ் கேட்கிறான்.
கருத்துரைகள் (Comments)