❖ நபி(ஸல்) விடம் ஒரு ஸஹாபி ஓடி வந்து நான் அழிந்துவிட்டேன். நோன்பு நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என அழுகிறார்கள்.
❖ நபி (ஸல்) விடம் மாயிஸ் (ரலி) ஓடி வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னை பரிசுத்தப்படுத்துங்கள் என்றார் . அவருக்கு பைத்தியமா என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். நீ தனிமையில் இருந்திருப்பாய், என அவரை சமாதானப்படுத்தி திருப்பியனுப்ப முயற்சித்தார்கள் ஆனால் அவர் தண்டனை அடைந்து தன்னை இறைவன் முன் தூய்மை படுத்த விரும்பியதால் கல்லெறிந்து கொன்றார்கள். அவர் ஓடும் போது துரத்தியவரிடம் நபி(ஸல்) அவரை ஓட விட்டிருக்கக்கூடாதா என்று கேட்டார்கள்,விரட்டிப்பிடித்தவரிடம் அவரை நீர் காப்பாற்றியிருக்க கூடாதா என்று கேட்டார்கள்.அவர் செய்த தவ்பாவை ஒரு சமுதாயத்திற்கு பங்கு வைத்தாலும் அது எஞ்சியிருக்கும் என நபி(ஸல்) கூறினார்கள்.
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
மேலும் தவறுகளுக்கும் மறதிக்கு இடையில் படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது அவன் அதிகமாக மன்னிக்கக்கூடியவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறான்.
➥ இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
போட்டி போட்டு அவசரப்படுங்கள்( வாருங்கள்) – وَسَارِعُوْۤا
மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ
உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ
மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ
அதன் விசாலம் – عَرْضُهَا
வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ
அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ
பயபக்தியுடையவர்களுக்கு – لِلْمُتَّقِيْنَۙ
الامر يقتضي الوجوب
✴ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒன்றை கட்டளையிட்டால் அந்த கட்டளையின் முடிவு வாஜிப் (கடமையாகும்)
➥ மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
❤ஒருவர் தான் மட்டும் இஸ்லாத்தில் பேணுதலாக இருந்தால் போதாது; தன் குடும்பத்தையும் அதற்காக வேண்டி பழக்கப்படுத்த வேண்டும்.
➥அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
❤நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு செல்லாமல் நட்டுவிட்டு செல்.
➥இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)
❤ மதுபானம் ஹராம் என்று அறிவிக்கப்பட்டவுடன் மதீனாவின் தெருவெல்லாம் மது ஆறுகளாக ஓடியது.(உடனே கட்டுப்பட்டார்கள்)
❤ இப்ராஹீம்(அலை) பிள்ளையை அறுக்கச்சொல்லி அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த உடன் கட்டுப்பட்டார். இஸ்மாயில்(அலை) ஆய்வு செய்து சம்மதிக்கவில்லை அல்லாஹ்வின் கட்டளை என்று தெரிந்த உடன் கொலை செய்யப்பட சம்மதித்தார்கள்.
➥ ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
தவ்பாவிற்குரிய நிபந்தனைகள்:
இஹ்லாஸ்
தான் செய்யும் தவறை உணர்ந்து கவலைப் பட வேண்டும்.
அந்த தவறை உடனடியாக விடுவது
அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று முடிவெடுப்பது
❤மனிதர்களுக்கிடையில் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة
ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம்
திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல்
கொலைக்கு கொலை பரிகாரம்
மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர்
இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் செய்யக்கூடாது.
விபச்சாரத்தை வேரோடு களையும் இஸ்லாம்
❤தேவை ஏற்பட்டால் நீங்கள் இரண்டோ அல்லது மூன்றோ நான்கோ திருமணம் முடித்துக்கொள்ளுங்கள், பெண்ணுக்கும் கணவனை தேர்வு செய்யவும் பிரியவும் எல்லா உரிமைகளும் இஸ்லாம் கற்றுத்தருகிறது, ஆண்களும் பெண்களும் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், ஆண்களுக்கு முன்னாள் நறுமணம் பூசாதீர், அந்நிய ஆடவன் உடன் தனிமையில் இருக்க வேண்டாம், ஒரு பெண் ஆண் துணையில்லாமல் தனிமையில் பயணம் செல்ல வேண்டாம்,பெண்கள் நளினமாக அந்நிய ஆணிடம் பேச வேண்டாம்.
الإسلام يهدم ما قبله ❤
ஒருவர் ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அதற்கு முன்னால் அவர் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்.
عن أبن عمر رضي الله عنهما قال : كنا نعدَّ لرسول الله صلي الله عليه وسلم ❤
في المجلس الواحد مائة مرة ((رب اغفر لي وتُب عليَّ، إنك أنت التواب
(((الغفور))، وفي لفظ : (الر حيم
➥ இப்னு உமர்(ரலி) – நாங்கள் நபி(ஸல்) உடன் ஒரு மஜ்லிஸில் அமர்ந்திருந்தோம் அவர்கள் ரப்பிக்பிர்லீ வதுப் அலய்ய இன்னக்க அந்தத் தவ்வாபுல் கஃபூர் அல்லது தவ்வாபு ரஹீம் என்று 100 முறை கூறினார்கள்.
❤ ஒரு தாய் குழந்தையை தொலைத்து அவளுடைய பிள்ளை அவளிடம் கிடைத்தபோது அவள் உடனே பால் கொடுத்தால் அந்த தாயை விட அல்லாஹ் நம் மீது கருணையுள்ளவன் என்று நபி(ஸல்) புரியவைத்தார்கள்.
➥ அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
❤அல்லாஹ் இருக்கிறான் என்று மக்கள் கூறுகிறார்கள், படைத்தவன் அவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அல்லாஹ்வை தவிர மற்றவர்களிடம் துஆ செய்வார்கள்.
❋ [highlight color=”green”]சூரா அல் அன்கபூத் 29:65[/highlight]
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
❤அல்லாஹ்வை பற்றிய சரியான அறிவை தேட நாம் முயற்சிக்க வேண்டும்.
➥ இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
➥ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
لا تزولُ قَدَمَا عبدِ يومَ القيامةِ حتَّى يُسألَ عن أربعِ عَن عُمُرِه فيما أفناهُ وعن ❤
جسدِهِ فيما أبلاهُ وعن عِلمِهِ ماذا عَمِلَ فيهِ وعن مالِهِ مِنْ أيْنَ أكْتَسَبَهُ وفيما أنفقَهُ
நான்கு விஷயத்தை பற்றி கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதம் நகர்த்தப்படமாட்டாது.
கருத்துரைகள் (Comments)