தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5

தஃப்ஸீர் 
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5

 வசனம் 65

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ   اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

   “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.

 நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் பாதுகாவல் தேடுவீர்.

ان عذاب ربك لوا قع ماله من دافع

 உமர்(ரலி) – நிச்சயமாக உன்னுடைய ரப்பின் வேதனை வந்தே தீரும் அதை தடுக்க யாருமில்லை என்ற வசனத்தை திரும்ப திரும்ப ஓதியே நோய்வாய்ப்பட்டார்.

 நபி(ஸல்) – ஒரு முறை மிம்பரிலிருந்து أنذرتكم النار (உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன்) என்று சத்தத்தை உயர்த்தி கூறிக்கொண்டே இருந்தார்கள். நபி(ஸல்) வில் தோளிலிருந்து துண்டு கீழே விழுந்தது. ஸஹாபாக்கள் அனைவரும் கையால் முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுதார்கள்.

 நரக நெருப்பின் நிறம் கருப்பு. நரகத்தின் குறைந்த தண்டனை நெருப்பாலான செருப்பு அதை காலில் அணிந்தால் மூளை கொதிக்கும்.

 நரகத்தில் தரப்படும் சூடான நீர் முகத்தை பொசுக்கும். அதை குடித்தால் அவர்களுடைய குடல்கள் துண்டு துண்டாகிவிடும்.

 பசித்தால் அவனுக்கு சீழும் சலமும் தான் கொடுக்கப்படும். அதை விழுங்க முடியாமல் தடுமாறுவான். மரணம் எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் ஆனால் அவன் மரணிக்க மாட்டான். தோல் பொசுங்கி விட்டால் வேறு தோல்களை அல்லாஹ் மாற்றுவான்.

 ஜக்கூம் உலகில் ஒரு சொட்டு விழுந்தால் உலகமே விஷமாகிவிடும். ஆனால் நரகவாசிகள் உணவே அதுதான். 

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 4

 வசனம் 64

وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏ 

ஸுஜூத் –  سُجَّدًا

நின்ற நிலையிலும் –  وَّقِيَامًا‏  

   இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

،أوصاني  خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر 

وركعتي الضحي، وأن أوتر قبل أن أنام

 

   அபூஹுரைரா (ரலி) – என்னுடைய தோழர் நபி (ஸல்) எனக்கு மாதத்தில் 13, 14, 15 ஆம் நாட்கள் நோன்பு வைக்குமாறும், லுஹா தொழுமாறும், தூங்கும் முன் வித்ர் தொழுமாறும் உபதேசம் செய்தார். அன்றிலிருந்து நான் இந்த 3ஐயும் விடவில்லை.

  அழைப்புப்பணியில் இருப்பவர் இரவுத்தொழுகை(தஹஜ்ஜுத்) தொழுவது சிறந்தது.

 சூரா அல் முஜ்ஜம்மில் 73 : 2, 3, 4, 5

  (2) قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا 

   இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;

(3) نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا

   அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

(4) اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا

   அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

 (5) اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا

➥   நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.

(6) اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا

➥   நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.

  இரவுத்தொழுகை அசதி அல்லது நோயின் காரணமாக விட்டுவிட்டால் பகலில் அதற்கு நிகராக தொழுவார்கள் (இரவில் 11 என்றால் பகலில் அதை 12 ஆக்கி தொழுவார்கள்)

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 3

அர் ரஹ்மானின் அடியார்கள்

  ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள்.

  ஜாஹில் என்றால் யார்?

رجل يدري ولا يدري أنه يدري 

  தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில்.

اللهم أهد قومي فإنهم لا يعلمون 

  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி காட்டுவாயாக.

اللهم اغفر لقومي فإنهم لا يعلمون 

  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 2

 சூரா பனீ இஸ்ராயீல் 17:37

وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏

   மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

 சூரா லுக்மான் 31:19

وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ

➥   உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.

  நபி (ஸல்) வின் கையை பிடித்து அடிமைப்பிள்ளைகள் இழுத்துச்செல்லும்.

  நபி (ஸல்) – வீட்டிலுருக்கும்போது வேலைகளை தானே செய்வார்கள். அவருடைய செருப்பை தானே தைப்பார்கள். ஆடைகளை தானே துவைப்பார்கள்.

  நபி (ஸல்) – கருப்பான பிலால் (ரலி) இடம் நடந்து கொண்ட விதம்.

  பணிவோடு நடப்பதென்றால் நடையில் பணிவு அதை சரியான முறையில் புரிந்துகொள்ளுங்கள்.

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1

தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான்

பாகம் 1

ரஹ்மானுடைய அடியார்கள்

 வசனம் 63 

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏

➥   இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக அவன் அன்புள்ளவன், கருணையுள்ளவன்.

ரஹீம் – தன்னிடத்தில் உள்ள அன்பை அவன் பிறருக்கு கொடுக்கக்கூடியவன்.

 முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை அர் ரஹ்மான் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தான் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

அவனுடைய அடியார்கள் எப்படி இருப்பார்களென்றால்:

1. அவர்கள் பூமியில் நடந்து சென்றால் பணிவுடன் நடப்பார்கள்.

இப்னு தய்மிய்யாஹ் (ரஹ்) – அகீதா வை பூரணப்படுத்தக்கூடியது எது என்று கேட்டபோது நல்ல பண்பு என்று கூறினார்கள்.

 [highlight color=”yellow”]சூரா அல்பகறா 2:85[/highlight]

اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌ۚ

➥   வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா?

 

Protected: LESSON 19

This content is password protected. To view it please enter your password below:

Protected: LESSON 18

This content is password protected. To view it please enter your password below:

Protected: LESSON 17

This content is password protected. To view it please enter your password below:

Protected: LESSON 16

This content is password protected. To view it please enter your password below:

Protected: LESSON 15

This content is password protected. To view it please enter your password below: