தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 6)

தஃப்ஸீர் 

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 6)

நபி (ஸல்) அதிகமாக சுஜூதில் கேட்ட துஆ 

اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

நபி (ஸல்) – அத்தஹிய்யாத்தில் 

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ. فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

(யா அல்லாஹ் நான் என்னுடைய ஆத்மாவிற்க்கே அதிகமாக அநீதி இழைத்துள்ளேன் என்னை மன்னிப்பாயாக)

ஜகாத்

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5)

தஃப்ஸீர் 

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5)

❤ வசனம் 3

 

عَنِ هُمْ وَالَّذِينَ
பற்றி அவர்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்றால்
مُعْرِضُون اللَّغْوِ
விலகியவர்களாக இருப்பார்கள் பயனற்ற பேச்சுக்களும் செயல்களும்

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُون

 

இன்னும்அவர்கள் வீணான (பேச்சுசெயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 4)

தஃப்ஸீர் 

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 4)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 3)

தஃப்ஸீர் 

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 3)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)

தஃப்ஸீர்

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)

  صلوا كما رأيتموني أصلي

 நபி (ஸல்) கூறினார்கள், என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.

 நபி (ஸல்) அவர்களின் வெளிப்படையான தொழுகை மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களிடம்
இருந்த ஹுஷூஹும்
 (அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுதலும் தொழுகையில்) நம்மிடம் இருக்க வேண்டும்.

♥️ சூரா அல்அன்கபூத்   29:45

(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராகஇன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக;நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்;அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

ஒரு தொழுகையாளியின் உள்ளம் விசாலமானதாக இருக்க வேண்டும்.

♥️ சூரா அல்மாஊன்   107:4, 5, 6, 7  

 இன்னும், தொழுகையாளிகளுக்குக் கேடுதான் (107:4)

 அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்,அசிரத்தையாக)வும் இருப்போர் (107:5)

 அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள் (107:6)

 மேலும்அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் (107:7)

 ஈஸா (அலை) யின் துஆ 

♥️ சூரா அல்மாயிதா   5:118

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்அன்றிநீ அவர்களை மன்னித்து விடுவாயானால்நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்)

(இந்த சூராவை ஓதும்போது நபி (ஸல்) சத்தமிட்டு அழுது துஆ செய்தார்கள். அல்லாஹ்விடமிருந்து நற்செயதி வரும்வரை அழுது அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1)

தஃப்ஸீர் 

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1)

❤ வசனம் 1

 

الْمُؤْمِنُونَ أَفْلَحَ قَدْ
ஈமான் கொண்டவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள் நிச்சயமாக( உறுதியாக)

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 18) – 14

தஃப்ஸீர் பாடம் 18

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)

       

الضَّآلِّيْنَ لَا وَ عَلَيْهِمْ المَغْضُوْبِ غَيْرِ
வழித்தவறியவர்கள் இல்லை மேலும் அவர்கள்
மீது
கோபத்திற்கு
உள்ளாக்கப்பட்டவர்கள்
தவிர
ضلَّ غضب
வழிதவருதல் கோபப்பட்டான்

 (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

கோபத்திற்கு உள்ளானவர்கள் ;


1- 
அது யூதர்களை குறிக்கும்


♥️ சூரா முஜாதலா↔️58:14

எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோஅவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீராஅவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்அவர்களில் உள்ளவர்களும்அ ல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.

2- சத்தியம் எதுவென்று தெரிந்தும் அதன் படி அமல் செய்யாமல் இருப்பவர்கள்

(ஆசிரியர் கருத்து) الضالين


1- நபி (ஸல்) அவர்கள் தூதராக வருவதற்கு முன்னால் இருந்த கிறிஸ்தவர்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தூதராக வந்த பிறகு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வின் தூதர் தான் என்று தெரிந்தே நிராகரிக்கிறார்கள்.


2- 
அறியாமையின் காரணத்தினால் சத்தியம் அல்லாதவற்றை கொண்டு அமல் செய்யக்கூடியவர்கள்

நேர்வழியிலிருந்து வழித்தவற  காரணங்கள்;

1- அறியாமை


2- 
பிடிவாதம்

ஆமீன் சொல்வது ;


ஹதீத் – ஆமீன் சொல்லும்போது மஸ்ஜிதுகள் அதிரும்

  • நபி (ஸல்) – இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள்
  • தனியே தொழுதாலும் ஜமாஅத் உடன் தொழுதாலும் ஃபாத்திஹா ஓதிய பின் ஆமீன் சொல்ல வேண்டும்.
  • தொழுகை அல்லாத நேரத்தில் ஃபாத்திஹா ஓதினால் ஆமீன் சொல்ல வேண்டுமாஇல்லையா❔என்பதில் ருத்து வேறுபாடு உள்ளது. ஆமீன் சொல்வது சிறந்தது

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 17)- 13c

தஃப்ஸீர் பாடம் 17

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)

        

عَلَيْهِمْ اَنْعَمْتَ الّذِيْنَ صِرَاطَ
அவர்கள்
மீது
நீ அருள்
புரிந்தாய்
எத்தகையதென்றால் பாதை

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

♥️ சூரத்துன்னிசா↔️4:69

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள்ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 16)- 13b

தஃப்ஸீர் பாடம் 16

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13b)

 வசனம் 6

 

الْمُسْتَقِيمَ الصِّرَاطَ اهْدِنَا
நேரான பாதை எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக

🔹 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

🔘ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன் கடைசி வரை இருக்கும்.

🔘மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் பாலம் என்று கூறும் கருத்து சரியானதல்ல.

🔘 நேரான வழி எது?
நபி (ஸல்) கொண்டு வந்த மார்க்கம்.

சூரா அல் அன்ஆம் 6:153

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ⬇

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்6:153

சிராத் 2 வகைப்படும்
1) صراط المستقيم – நேரான வழி
2) صراط ملتوى مروج – கோணலான வழி
நபி (ஸல்) – நேரான கோடு வரைந்து இது தான் நேரான வழி இதில் செல்ல விடாமல் தடுக்க எல்லா பக்கமும் ஷைத்தான்கள் முயற்சிப்பார்கள். ஷைதான்களுக்கு நீங்கள் பதிலளித்தால் நரகத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள்.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 15)- 13a

தஃப்ஸீர் பாடம் 15

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13a)

اهْدِنَا – هدى – هداية – எங்களுக்கு நேர்வழி காட்டு

ஹிதாயத் இரண்டு வகைப்படும் ;


1) هداية الارشاد –  நேர்வழியை காட்டுவது

 (28:56 –  நீ விரும்பியவருக்கெல்லாம் நேர்வழி கொடுக்க உன்னால் முடியாது ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி கொடுப்பான்).


நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க நபி (ஸல்) அவர்களால் முடியவில்லை.


நூஹ்(அலை) அவர்களின் மகனுக்கும் மனைவிக்கும் ஹிதாயத் கொடுக்க அவர்களால் முடியவில்லை


இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க அவரால் முடியவில்லை.


2) هداية التوفيق – நேர்வழியைக் கொடுப்பது


(42:52 
நபியே நிச்சயமாக நீங்கள் நேரான வழி காட்டுவீர்கள் )

 சூரா ஆலு இம்ரான் 3:8

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ 

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

🔘 நபி (ஸல்) அதிகமாக கேட்ட துஆ⤵

اللهم يا مقلب القلوب ثبت قلبي علي دينكـ

(உள்ளங்களை புறட்டுபவனே என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் நிலைக்கச்செய்)
🔘 அனஸ் (ரலி) விடம் நபி (ஸல்) கூறினார்கள் – உள்ளங்கள் அல்லாஹ்வுடைய இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ளன அதை அவன் விரும்பிய படி புரட்டுவான்
🔘 ஒரு அடியான் சொர்கவாசிகளின் அமலையே செய்து கொண்டிருப்பான் அவனுக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு ஜான் தூரம் தான் இருக்கும் அப்போது நரகத்திற்கான ஒரு செயலை செய்து நரகம் சென்று விடுவான்;
இன்னொரு அடியான் நரகவாசியின் செயலையே செய்துகொண்டிருப்பான் அவனுக்கும் நரகத்திற்கும் ஒரு ஜான் தூரம் தான் இருக்கும் அப்போது சொர்க்கதிற்கான செயலை செய்து சொர்க்கம் சென்று விடுவான்.