தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)- 12c

தஃப்ஸீர் பாடம் 14

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12c)

🔰 மனிதர்களின் சக்திக்கு உட்பட்டு உதவி கேட்கலாமா❔

  • அவசிய தேவைகளுக்கு மட்டுமே உதவி கேட்பது சிறந்தது.
  • நீ உதவி கேட்பதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று தெரிந்தால் கேட்கலாம்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் 6
1) சலாமுக்கு பதில் சொல்வது.
2) ஒருவர் தும்மினால் الحمد لله. சொன்னால் நாம் பதிலுக்கு يرحمك الله சொல்ல வேண்டும்.
3) நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும்.
4) விருந்துக்கு அழைத்தால் பதில் கொடுக்க வேண்டும்.
5) ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லவேண்டும்.
6) உபதேசம் கேட்டால் உபதேசம் செய்ய வேண்டும்.

⭕ நபி (ஸல்) –  ஒரு சகோதரரின் கஷ்டத்தை நீக்குபவரின் கஷ்டத்தை அல்லாஹ் நீக்குவான்.

⭕ ஹராமான விஷயங்களில் யாருக்கும் உதவி செய்யக்கூடாது.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13)- 12b

தஃப்ஸீர் பாடம் 13

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12b)

⭕ மனிதர்களின் உதவிகளை குர்ஆன் சுன்னா ஆர்வமூட்டுகிறது


❤ சூரா அல்மாயிதா 5:2 ↔(நன்மை மற்றும் இறையச்சம் போன்ற
விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் )


⭕ 
நபி (ஸல்) ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான்.

ஷேக் உதைமீன் – உதவி தேடல் இரண்டு வகைப்படும் :

  1. நம் பலம்ஆற்றல்நம்மைச்சூழ உள்ள காரணிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உதவி தேடுதல் (மனித சக்திக்கு அப்பாற்பட்டது).
  2. மனிதசக்திக்கு உட்பட்டது.

🔰படைப்பினங்களிடம் உதவி தேடுதல் எல்லா நிலைகளிலும் அனுமதிக்கப்பட்டதா
எல்லா நிலைகளிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.யாரிடம் உதவி கேட்டுச்செல்கிறோமோ அவரால் அந்த உதவியை செய்ய முடிந்தால் தான் அது அனுமதிக்கப்படும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட உதவியை மனிதரிடம் தேடுவது ஹராம் ஆகும்.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12)- 12a

தஃப்ஸீர் பாடம் 12

ஸுரா அல் ஃபாத்திஹா
(பாகம் 
12a)

🔰இந்த வகுப்பில் கல்வியின் முக்கியத்தை நாம் அறிந்திருப்போம்.

🔰அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவே கூடாது என்று இந்த வசனம் வலியிருத்துகிறது.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)

தஃப்ஸீர் பாடம் 11

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)

♥️ சூரா முஃமின்↔️40:16

அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு
மறைந்ததாக இருக்காது
அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகியஅடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே
யாகும்.

♥️ சூரா ஃபஜ்ரி↔️89:22

இன்னும்வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

♥️ சூரா தாஹா↔️20:108

அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்அதில் எத்தகைய கோணலும் இருக்காதுஇன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லா சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.

ஆசிரியரின் கருத்து :

1. மறுமை நாளின் உண்மையான ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே
2. 
மறுமை என்பது நிச்சயமாக உள்ளது
3. 
இவ்வசனம் மனிதர்களை அமல் செய்யத்தூண்டுகிறது
♥️வசனம்-5

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾

 

اِيَّاكَ نَعْبُدُ وَ اِيَّاكَ نَسْتَعِيْن
உன்னை மட்டுமே நாங்கள் வணங்குகிறோம் மேலும் உன்னிடம் மட்டுமே நாங்கள் உதவி தேடுகிறோம்

இதில் வணக்கம் உண்டு
1-
 نعبد – عبد – அடிபணிவது

🔹அல்லாஹ்வுக்கு முழுக்க முழுக்க பணிந்து அடிபணிய வேண்டும்
🔹அல்லாஹ் விரும்பி அங்கீகரிக்கின்ற வெளிப்படையான உள்ளார்ந்த அணைத்து செயல்களும் இபாதத் ஆகும்
🔹உதைமீன் (ரஹ்)- அல்லாஹ் ஏவிய அனைத்தையும் செய்வதையும் அவன் தடுத்த அனைத்தையும் விடுவதும் செய்வது தான்.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10)

தஃப்ஸீர் பாடம் 10

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10)

 مَالِكِ يَوْمِ الدِّينِ 

الدِينِ  الدِّينِ  يَوْمِ مَالِكِ
கூலி கொடுத்தல் (அல்லது) செயல் மறுமை நாள் அரசன்

 

مالك மற்றும்  ملك இவை இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பில் மலிக் இருக்கிறார்கள் (உதாரணம்: மலிக் சல்மான்) ஆனால் மனிதர்களை மாலிக் என்று நாம்
சொல்வதில்லை.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 9)

தஃப்ஸீர் பாடம் 9

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 9)

  🔹அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் அவனுடைய ரஹ்மத்தின் மீது தங்கியிருக்கிறது
என்னுடைய கோபத்தை அன்பு மிஞ்சிவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கற்றுத்தந்தார்கள்
🔹ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தேடியலைகிறாள் – கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறாள் – அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் இடுவாளா?- இந்தப் பெண்ணை விடவும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக அன்புடையவனாக இருக்கிறான்.
🔹அல்லாஹ்வுடைய அன்பை 100 ஆக பிரித்து அதில் 99% தன்னிடம் வைத்துக்கொண்டான் 1% மட்டும் தான் பூமியில் அனுப்பினான். பூமியில் நாம் காணும் அன்பு அந்த 1% இன் விளைவு தான்.
🔹ஒரு பாலைவனத்தில் ஒட்டகத்தை தொலைத்தவன் ஒட்டகம் கிடைத்ததும் அடையும் சந்தோஷத்தை விட ஒரு மனிதன் பாவ மன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் சந்தோஷம் அடைகிறான்.
♥️ சூரத்தஜ் ஜூமர் 39:️53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக (39:53)

🔹அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை வந்தால் அவன் மீது உண்மையான அன்பு வெளிப்படும்.

♥️ சூரத்துத் தவ்பா 9: ️24 (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8)

தஃப்ஸீர் பாடம் 8

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8)

வசனம் 3:

 الرَّحْمَٰنِ ↔ அல்லாஹ்விடம் இருக்கும் பண்பு

 الرَّحِيمِ  பிறரின்மீது அல்லாஹ் காட்டக்கூடிய பண்பு.

الرَّحْمَٰنِ ம் الرَّحِيمِ ம் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வந்தால்இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம் வரும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் தனித்தனியே வந்தால் இந்த இரண்டு
வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான்.

உதாரணம்:-

ஈமான், இஸ்லாம் இந்த இரண்டு வார்த்தையும் ஒரே இடத்தில் வந்தால், ஈமானிற்கு வேறு அர்த்தமும், இஸ்லாமிற்கு வேறு அர்த்தமும் கொடுக்கப்படும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் (வெவ்வேறு இடங்களில்) தனித்தனியாக வந்தால் இந்த இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் ஒன்று தான்.

🔶ஸிஃபாஅத் தாத்தியா
🔶ஸிஃபாஅத் ஃபிஅலியா
என்ற தலைப்பை நாம் விரிவாக அகீதா பாடத்தில் பார்ப்போம் ;

சிறிது விரிவாக கூறவேண்டும் என்றால் 
🔹அல்லாஹ்வுடைய குணமாக சொல்வது ரஹ்மான் என்றும்.
🔹அவன் பிறரின்மீது காட்டக்கூடிய அன்பை ரஹீம் என்றும் புரிந்துகொள்ளுங்கள்.
●அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன; யார் அதை புரிந்து மனனம் செய்கிறார்களோ அவர்களுக்கு சுவர்க்கம் உண்டு என்று ஹதீஸ் உள்ளது.
● ஆனால் அந்த 99 பெயர்களும் என்ன என்று சரியான அறிவிப்புகள்மூலம் அறிவிக்கப்படவில்லை.
● திருகுர்ஆனில் 80ற்க்கும் மேற்பட்ட அல்லாஹ்வின் திருநாமங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7)

தஃப்ஸீர் பாடம் 7

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7)

 இந்த வசனத்தில் அல்லாஹ், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை முற்படுத்திஅவன் படைத்தவன் என்பதை பின்னால் சொன்னதற்கான காரணம்நபிமார்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் அனைத்தும்இறைவன் தான்
படைத்தான் என்பதில்
எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் வணக்கத்தை மட்டும் பிறருக்கு செலுத்தினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

உலகங்களிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான். அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த ஒருவனுக்கு ஒரு காலமும் பெருமை வராது.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)

தஃப்ஸீர் பாடம் 6

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)

 

لِلَّهِ للَّه  لِ حَمْد حَمِدَ
அல்லாஹ்விற்கு  அல்லாஹ் க்கு புகழ் புகழ்ந்தான்


  الْحَمْدُ ல் வரும் ال  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال )

  •  அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன.
  •  அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம்للهஎன்பதுதான்.
  •  لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த முடியாது.
  • لله என்ற வார்த்தை إلاهஎன்ற வார்த்தையில் இருந்து வந்தது.
  • إلاه என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் என்று அர்த்தம்.
  • لله என்ற வார்த்தைக்கான சரியான மொழி பெயர்ப்பு தமிழில் செய்ய முடியாது.
  • ரப் என்ற வார்த்தைக்குள் மூன்று பண்புகள் இருக்க வேண்டும்.
    i)
    படைத்தல்
    ii)
    ஆட்சி அதிகாரம்
    iii)
    நிர்வகித்தல்

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5)

தஃப்ஸீர் பாடம் 5

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5)

1) அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா?
அல்லாஹ்வுடைய மகத்துவத்துக்கும் கண்ணியத்துக்கும் உரிய உருவம் அவனுக்கு இருக்கிறது; ஆனால் அது எப்படிப்பட்டது என்பதை நாம் சிந்திக்கவோ, கற்பனை செய்யவோ முடியாது. ஏனென்றால் அவனைப் போன்ற வேறு எதுவும் இல்லை.

2) الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தா?

  • அது சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத் என்று சில அறிஞர்கள் கருத்து கூறுகிறார்கள்.
    சில அறிஞர்கள்; குர்ஆனில் எந்த ஒரு சூராவை ஓதுவதாக இருந்தாலும்

الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ ஓதி ஆரம்பிக்க வேண்டும். ஆகவே அது ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தல்ல என்று கருத்துக் கூறுகிறார்கள்.


ஆதாரம்:

(i) அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸில்; தொழுகை மனிதனுக்கும், இறைவனுக்கும் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று கூறும் அந்த ஹதீஸில்  الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِين  இல் இருந்துதான் ஆரம்பமாகிறது; அதில் بِسْمِ اللَّهِ இடம்பெறவில்லை.
(ii)ஏகோபித்த கருத்தின்படி சூரத்துல் ஃபாத்திஹாவில் ஏழு வசனங்கள்தான் உள்ளது.

الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ உபயோகிக்க வேண்டிய இடங்கள்:

(i)குர்ஆனின் ஒவ்வொரு சூராவின் ஆரம்பத்திலும் பிஸ்மி ஓத வேண்டும் .

(ஆதாரம் : இப்னு அப்பாஸ் (ரலி) குர்ஆனின் ஓவ்வொரு சூராக்களையும் எப்படி பிரிப்பது என்று பிஸ்மி இறங்கும் வரை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருக்கவில்லை)

(ii)சூரத்துத் தவ்பா ஒன்பதாவது அத்தியாயத்தைத் தவிர மற்ற அனைத்து சூராக்களுக்கும் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டும்.

(iii)வஸிய்யத்(உயில்) எழுதும் போது الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ என்று எழுத வேண்டும். கடிதம் எழுதும் போது நபி(ஸல்) அவர்கள் الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ கொண்டு ஆரம்பித்துள்ளார்கள்.

(iv)பத்திரம் எழுதும் போது.

(v)மார்க்க ரீதியான பத்திரங்கள் எழுதும் போது.

 (vi)சாப்பிடும் போது, ஆடை அணியும் போது, ஒளு செய்யும் போது பிஸ்மில்லாஹ் என்று மட்டும் தான் கூறவேண்டும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே கற்றுத்தந்துள்ளார்கள்.