Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 41
ஸீரா பாகம் – 41
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை :
- அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது,
- மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது,
- மவ்லூதுகள் ஓதுவது
💠ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும்
💠அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது
💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை புகழ்ந்தது போன்று புகழாதீர்கள்.
💠நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனது தூதராகவும் இருக்கிறேன்
💠அவர்களுடைய வழிமுறைகளை நகைப்பது
💠அவர்கள் மனிதர் இல்லையென்று கூறுவது
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 40
ஸீரா பாகம் – 40
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை
அவர்கள் மீது பொய்யுரைப்பது
அவர்களை ஏசுவது (ஹதீஸை விமர்சிப்பது, பரிகாசிப்பதும் இறைநிராகரிப்பாகும்)
அவர்களை பரிகாசம் செய்வது
❤ ஸூரத்துத் தவ்பா 9:65,66
(65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
(66) புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 39
ஸீரா பாகம் – 39
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்
💠அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும்
💠அவர்களை நேசிக்க வேண்டும்
💠அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்
💠அவர்களை பின்பற்ற வேண்டும்
💠அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும்
💠அவர்களை மதிக்க வேண்டும்
💠அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும்
💠அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும்
தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது
அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூற வேண்டும்.
❤ ஸூரத்துல்ஆல இம்ரான்3:31,32
(31)(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
(32) (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38
ஸீரா பாகம் – 38
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள்
💠 தூதர்களின் இறுதி முத்திரை
இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்)
💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும்
💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்
💠 ஏராளமான அற்புதங்களை உடையவர்
💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம் கொடுக்கப்படுபவர்
💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர்
💠 பாதுகாக்கப்பட்ட இறுதி இறைவேதம் கொடுக்கப்பட்டவர்
💠உலக மக்கள் அனைவருக்கும் தூதராக கருணையாக அனுப்பப்பட்டவர்
💠அவருடைய கண்கள் தூங்கும் உள்ளம் தூங்காது
💠நபித்துவ முத்திரை உடையவர்
💠அவர்களுடைய மனைவிமார்கள் நம் தாய்மார்கள்
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 37
ஸீரா பாகம் – 37
உன் நபியை அறிந்துகொள்
அலீ இப்னு அபீதாலிப் (ரலி) நபி (ஸல்) வை வர்ணித்து கூறுகிறார்கள்.
💠 நபி (ஸல்) மிக நெட்டையோ மிக குட்டையோ இல்லை. கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர், அடர்த்தியான சுருட்டை முடியுடையவருமல்லர், கோரை முடி கொண்டவரவுமல்லர், சுருட்டை கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர், பெருத்த உடம்பில்லை, முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல, சிவந்த வெண்மை நிறமானவர், கருவிழி உடையவர், நீண்ட இமை முடி பெற்றவர், புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர், நெஞ்சு முதல் தொப்புள் வரை கொடி போன்ற முடியுடையவர், உடம்பில் முடியிருக்காது, உள்ளங்காலும் கையும் தடித்தவர், அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள், திரும்பிப்பார்த்தால் முழுமையாக திரும்பிப்பார்ப்பார்கள், இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரையிருக்கும், தூதர்களில் இருந்தியானவர், மக்களில் மிக அதிகம் வழங்கும் கையுள்ளவர், துணிவுடைய உள்ளம் கொண்டவர், மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர், மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர், மிக மிருதுவானவர், பழக மிகக்கண்ணியமிக்கவர், திடீரெனப்பார்த்தால் அச்சம் தரும் வடிவம், அறிமுகமானவர் அவரை விரும்புவர், அவர்களை யார் வர்ணித்தாலும் அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை என்றே கூறுவர் (இப்னு ஹிஷாம்)
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36
ஸீரா பாகம் – 36
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) வின் அழகு
💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர், கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் கொண்டவர், கூட்டுப்புருவம் கொண்டவர், கருண்ட தலைமுடி கொண்டவர், அவரது அமைதி கம்பீரத்தை தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர், தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார், அருகில் சென்றால் பழக இனிமையானவர், நற்பண்பாளர், நாவலர், தெளிந்த நடையுடைய பேச்சாளர், நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் பெற்றவர், அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும், நடுத்தர உயரமுடையவர், பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார், இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர், மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர், சிறந்த கண்ணியம் வாய்ந்தவர், நண்பர்கள் புடை சூழ இருப்பவர், அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர், அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர், பணிவிடைக்குரியவர், மக்கள் கூட்டம் பெற்றவர், கடுகடுப்பானவருமல்லர், பிறரை குறைவாக மதிப்பவரும் அல்லர் (ஜாதுல் மஆது).
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 35
ஸீரா பாகம் – 35
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) வின் பெயர்கள் :
أنا محمد وأنا أحمد ، وأنا الماحي الذي يمحو الله بي الكفر ، وأنا الحاشر الذي يُحشَرُ الناس على قدمي ، وأنا العاقب الذي ليس بعده نبي
நான் முஹம்மத் மேலும் நான் அஹ்மத், நான் மாஹி அதாவது நான் இறைநிராகரிப்பை அழிக்கின்றவன்.
நான் ஹாஷிர் அதாவது மக்களை நான் ஒன்று சேர்ப்பவன் என்னுடைய பாதத்திற்கு அருகில் தான் மக்களெல்லாம் மறுமையில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
நான் ஆகிப் எனக்கு பின்னால் நபியில்லை. (புஹாரி)
أنا محمد وأحمد والحاشر والمقفي ونبي التوبة والملحمة
والمقفى ↔ இறுதியாக வந்த நபி
ونبي التوبة ↔ மன்னிப்பின் நபி
والملحمة ↔ (போர் செய்யும் நபி (அபூதாவூத்
கருத்துரைகள் (Comments)