ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34

ஸீரா பாகம் – 34

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் :

  • மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்)
    இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது
  • ரைஹானா பின்த் ஜைது (ரலி)

நபி(ஸல்) வின் பிள்ளைகள் :

நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர

நபி(ஸல்) வின் ஆண் மக்கள் :

  • காசிம்
  • அப்துல்லாஹ்

இவர்கள் இருவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.

நபி (ஸல்) வின் பெண் மக்கள் :

  • ஜைனப் (ரலி) – அபுல் ஆஸ் இப்னு ரபீஹ் மனம் முடித்தார்கள். பத்ர் போரில் பிடிக்கப்பட்ட கைதிகளில் அவரும் ஒருவராக இருந்தார்கள். அவரை விடுவிப்பதற்காக கதீஜா (ரலி) அவர்களின் மாலை கொடுத்தனுப்பப்பட்டது. அவரை விடுவிக்கும்போது என் மகள் ஸைனப் (ரலி) ஐ என்னிடம் அனுப்பிவிட வேண்டும் என்று கட்டளையிட்டு அவரை விடுவித்தார்கள். பிறகு அபுல் ஆஸ் இப்னு ரபீஹ் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்கள்.
  • பாத்திமா (ரலி) – அலீ இப்னு அபீதாலிப் (ரலி) மணம்முடித்தார்கள்
  • ருகையா (ரலி)
  • உம்மு குல்தும் (ரலி)

இவர்கள் இருவரையும் அபூலஹபின் மகன்கள் மணம்முடித்திருந்தார்கள். நபி(ஸல்) இஸ்லாத்தை அறிவித்ததும் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு பிறகு உஸ்மான்(ரலி) இவர்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக மணம்முடித்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா பாகம் – 33

உன் நபியை அறிந்துகொள்

நபியவர்களின் குடும்பம்

💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை :

  • ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
  • சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
  • அபூதாலிப்

💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் :

  • ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
  • அபூலஹப் கைதாக் முகவ்விம் ழிரார்
  • அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)

💠 நபி (ஸல்) வின் மாமிகள் :

  • உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)பார்ரா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)ஆதிகா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)சபிய்யா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)அர்வா(இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை)உமைமா (இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை )

💠 நபி (ஸல்) வின் மனைவிமார்கள் :

  • கதீஜா பின்த் குவைலித் (ரலி)
  • ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)     
  • ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி)       
  • ஹப்ஸா பின்த் உமர் (ரலி)        
  • ஜைனப் பின்த் குஸைமா (ரலி)
  • ஜைனப் பின்த் ஜஹஷ் (ரலி)      
  • ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி)   
  • உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ ஸுஃப்யான் (ரலி)
  • சபிய்யா பின்த் ஹை (ரலி)
  • உம்மு ஸலமா பின்த் அபூ உமய்யா (ரலி)
  • மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி)

💠 இதில் கதீஜா (ரலி) அவர்களும் ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) உயிருடனிருக்கும்போதே இறந்துவிட்டார்கள். ஒரே சமயத்தில் 9 மனைவிமார்களுடன் நபி (ஸல்) வாழ்ந்தார்கள்.

💠 நபி (ஸல்) மனைவிமார்களுடன் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள், மனைவிகளுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32

உன் நபியை அறிந்துகொள்

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா :

ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள்.

💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்)

நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது என்று கூறினார்கள்.

 

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 31

ஸீரா பாகம் – 31

உன் நபியை அறிந்துகொள்

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு :

❣ தபூக் யுத்தம் (வறுமை போர்)

ரோமர்கள் முஸ்லிம்களை தாக்குவதற்காக வருவதை அறிந்த நபி(ஸல்) 30,000 பேரை கொண்ட படையை தயார் செய்து அனுப்பினார்கள்.

 

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 30

ஸீரா பாகம் – 30

உன் நபியை அறிந்துகொள்

 நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள்.

 நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள்.

 ஹுனைன்

12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 29

ஸீரா பாகம் – 29

உன் நபியை அறிந்துகொள்

 ஹிஜ்ரி 8 வது ஆண்டு :

  • மக்கா வெற்றி
  • ஹுனைன்
  • தாயிப்

மக்கா வெற்றி:

💠 ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை குறைஷிகள் மீறியதால் நபி (ஸல்) மக்கா வாசிகளுடன் போர் செய்ய ஆயத்தமானார்கள். பதரில் கலந்து கொண்ட ஹாதிம் (ரலி) ஒரு பெண்மணி மூலமாக இந்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவித்து கடிதம் எழுதி அனுப்பினார்கள். அல்லாஹ் அதை நபி (ஸல்) விற்கு அறிவித்ததால் நபி (ஸல்) அலி (ரலி) யையும் ஸுபைர் (ரலி) யையும் அழைத்து அந்த கடிதத்தை கொண்டு வரச்சொல்லி உத்தரவிட்டார்கள். கடிதம் கிடைத்ததும் அவர் பதரில் கலந்த ஸஹாபி என்பதால் மன்னித்துவிட்டார்கள்.

 

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா பாகம் – 28

உன் நபியை அறிந்துகொள்

 💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள்.

ஹிஜ்ரி  7 வது ஆண்டு

  • காபா
  • கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்)
  • தாதுர் ரிகா
  • உம்ரத்துல் கனா

💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 இல் அவர்கள் உம்ரா செய்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27

ஸீரா பாகம் – 27

உன் நபியை அறிந்துகொள்

 உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி  இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு  அனைத்தும் சாதகமாகவும் இருந்தது.  

 நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஏன் உடன் படவேண்டும்? என்று நபி (ஸல்) விடமும் பிறகு அபூபக்கர் (ரலி) இடமும் கோபமாக பேசினார்கள். (இதை நினைத்து மரணம் வரை உமர் (ரலி) வருந்தியிருக்கிறார்கள்)

 ஸஹாபிகள் யாரும் இஹ்ராமை கலைக்காமல் இருப்பதை கண்டு வருந்திய நபி (ஸல்) அவர்கள் , தன் மனைவி உம்மு ஸலமா (ரலி) இடம் நபி (ஸல்) அவர்கள் தன் கவலையை தெரிவித்தார்கள். மனைவியின் ஆலோசனைப்படி நபி (ஸல்) மொட்டையடித்து பலி கொடுத்தார்கள் அதைத்தொடர்ந்து அனைத்து ஸஹாபாக்களும் மொட்டையடித்து இஹ்ராமை கலைத்து விட்டார்கள். நபி (ஸல்) உமர் (ரலி) யை அழைத்து இந்த வசனம் இறக்கப்பட்டதை கூறினார்கள். உமர் (ரலி) சந்தோஷமடைந்தார்கள்.

❤  ஸூரத்துல் ஃபத்ஹ் 48 : 1, 2

(1) (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்

(2) உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 26

ஸீரா பாகம் – 26

உன் நபியை அறிந்துகொள்

❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு :

  1. பனூ லிஹ்யான் போர்
  2. ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்)

 இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

 நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் (ரலி) யை மட்டும் உம்ரா விற்கு அனுமதிப்பதாக கூறினார்கள். பிறகு உஸ்மான் (ரலி) யை காணவில்லை என்பதால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடன் பைஅத் செய்யுமாறு சஹாபாக்களிடம் சொன்னார்கள். அல்லாஹ் அந்த பைஅத்தை பொருந்திக்கொண்டு வசனம் இறக்கினான்.

❤ ஸூரத்துல் ஃபத்ஹ் 48:18

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 25

ஸீரா பாகம் – 25

உன் நபியை அறிந்துகொள்

 

ஹிஜ்ரி 4  வது ஆண்டு

  • பனூ நழீர்
  • பத்ரு

💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை.  

ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு

  • தவ்மதுல் ஜன்தல்  
  • பனூ அல் முஸ்தலக்
  • அஹ்ஸாப்
  • பனூ குரைழா

💠 இதில் தவ்மதுல் ஜன்தல் ஐ தவிர மூன்று போர்களிலும் யுத்தங்கள் நடந்தது.

💠 எந்த இடத்தில் யுத்தம் நடக்கிறதோ அல்லது யாருடன் போர் நடந்ததோ அந்த இடத்தின் பெயர் அல்லது அந்த கோத்திரத்தின் பெயரை வைத்து தான் அந்த போரின் பெயர்.  

💠 அஹ்ஸாப் (அகழ் யுத்தம் – கந்தக் யுத்தம்)

சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் ஆட்களை திரட்டி 12,000 வீரர்களை கொண்டு மதீனாவை மொத்தமாக அழிக்க குறைஷிகள் திட்டமிட்ட போது சல்மான் அல் பாரிஸ் (ரலி) மதீனாவை சுற்றி அகழ் தோண்டி விட்டால் அந்த படை மதினாவிற்குள் நுழையாமல் ஊர்மக்களை பாதுகாக்க