ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24

ஸீரா பாகம் – 24

உன் நபியை அறிந்துகொள்

 பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு நபி (ஸல்) மஸ்ஜிதில் அழுது கொண்டிருந்தார்கள் உமர் (ரலி) காரணத்தை கேட்டார்கள். அப்போது அல்லாஹ் உங்கள் விருப்பத்திற்கேற்ப வசனத்தை இறக்கினான் என்று இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

❤ ஸூரத்துல் முஜாதலா 58:22

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 23

ஸீரா பாகம் – 23

உன் நபியை அறிந்துகொள்

 ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள்

  1. தூ அம்ர்
  2. பஹ்ரான்
  3. உஹூத்
  4. ஹம்ராவுல் அஸத்

💠 இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 22

ஸீரா பாகம் – 22

உன் நபியை அறிந்துகொள்

 அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான்.

 நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும்.

 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான்.

 எதில் நபி (ஸல்) தங்களது தோழர்களை மட்டும் அனுப்பினார்களோ  அந்த போருக்கு ஸரிய்யா என்று சொல்லப்படும்.

 நபி (ஸல்) ஏறக்குறைய 64 ஸரிய்யா க்களை; சிறிய யுத்தக்குழுக்களை போருக்காக அனுப்பினார்கள்.

 ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நடந்த யுத்தங்கள்

  1. அபுவா
  2. புவாத்
  3. உஷைரா
  4. சஃப்வான்
  5. பெரிய பதர்
  6. பனூ சுலைம்
  7. பனூ கைனுகா
  8. சவீக்

 பெரிய பதரிலும் கைனுகாவிலும் தான் யுத்தம் நடந்தது. மற்ற போர்களிலெல்லாம் சந்திப்பதற்காக சென்றார்கள் ஆனால்; அங்கு போர் நடக்கவில்லை.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 21

ஸீரா பாகம் – 21

உன் நபியை அறிந்துகொள்

 மஸ்ஜிதுன்னபவியில் கல்வி கற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 குறைஷிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பினார்கள்.

 குறைஷிகளின் வியாபார பாதைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20

ஸீரா பாகம் – 20

உன் நபியை அறிந்துகொள்

✿ சஹது இப்னு ரபீஆ (ரலி);  அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள்.  

 நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள்

 மதீனாவில் வசித்த அனைத்து யூத குலத்துடனும் நபி (ஸல்)  சமாதான  ஒப்பந்தம் செய்தார்கள்

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 19

ஸீரா பாகம் – 19

உன் நபியை அறிந்துகொள்

 💠 முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) வை வரவேற்றார்கள். மதீனாவின் வாசலில் சிறுவர்களை நிறுத்தி கவிதை பாடி வரவேற்றார்கள்.

💠 அனைவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என விரும்பி அழைத்தார்கள் நபி (ஸல்) தன் ஒட்டகத்திற்கு வஹீ  வருகிறது அது எங்கே நிற்கிறதோ அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) வீட்டில் நின்றது. உடனே அபூ அய்யூப் அல்  அன்சாரி (ரலி) நபி (ஸல்) வின் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தார்கள். மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வருமாறு நபி (ஸல்) விடம் கேட்டபோது ஒரு மனிதன் தன் பொருட்களுடன் தானே இருக்க முடியும் என்று கூறி அபூ அய்யூப் (ரலி) வீட்டில் தங்கினார்கள்

💠 பிறகு மஸ்ஜித் நபவியை நிர்மானித்தார்கள். அதை சுற்றி நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அறைகளை அமைத்தார்கள்

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 18

ஸீரா பாகம் – 18

உன் நபியை அறிந்துகொள்

 நபித்துவத்தின் 14 ஆவது ஆண்டு

💠 சபர் மாதம் பிறை 27 இல் ஹிஜ்ரா புறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகலில் குபா வந்தடைந்தார்கள்.

💠 குபாவில் நபியவர்கள் தங்குவதற்காக மஸ்ஜித் கட்டப்பட்டிருந்தது.

 ஸூரத்துத் தவ்பா 9:108

لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ

يُحِبُّ الْمُطَّهِّرِينَ

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் – நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

💠 பிறகு வெள்ளியன்று காலையில் புறப்பட்டு வழியில் பனூ சஅது குடும்பத்தார் வசிக்கும் இடத்தில்  ஜும்ஆ தொழுதுவிட்டு மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.

 

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 17

ஸீரா பாகம் – 17

உன் நபியை அறிந்துகொள்

 நபித்துவத்தின் 12 ஆவது ஆண்டு

 நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் ஹஜ் காலத்தில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்கள் மதீனாவிற்கு சென்று மேலும் சிலருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துவிட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் நாங்கள் இஸ்லாமை ஏற்போம் பிறருக்கும் பரப்புவோம் என்று ஒப்பந்தம் செய்து விட்டு சென்றார்கள்.

 பிற சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாத்தை ஏத்தி வைத்தார்கள் ஆனால் பெரும்பாலானவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

 இஸ்லாம் தீவிரமாக பரவியது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அன்சாரிகள், முஷ்ரிக்குகளுடன் ஹஜ் செய்ய வந்தார்கள். துல் ஹஜ் 13 ஆம் நாள் இரகசியமாக அன்சாரிகள் நபி(ஸல்) வை சந்தித்தார்கள். அப்பாஸ் (ரலி) ரசூலுல்லாஹ் வின் பாதுகாப்பை பற்றிக் கேட்டார்கள். அன்சாரிகள் தங்கள் உயிரினும் மேலாக நபி (ஸல்) வை பாதுகாப்போம் என உறுதியளித்தனர்.

 நபி(ஸல்) மதீனா செல்லவிருக்கும் செய்தி குறைஷிகளுக்கு தெரிய வந்தது. நபி(ஸல்) வை கொல்ல பல திட்டமிட்டார்கள்.

 நபி (ஸல்) சவ்ர் குகையில் தங்கி ஹிஜ்ரத் சென்ற விஷயங்களை விரிவாக படிப்போம்.

إِنْ شَاءِ الله

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 16

ஸீரா பாகம் – 16

உன் நபியை அறிந்துகொள்

 நபித்துவத்தின் 11 ஆவது ஆண்டு தாயிஃபில் :

நபி(ஸல்) வை அடித்து கொடுமைப்படுத்திய போது; மலைகளின் மலக்குகள் இந்த ஊரை அழித்துவிடட்டுமா என நபி(ஸல்) விடம் அனுமதி கேட்டபோது அல்லாஹ் நாடினால் இந்த முஷ்ரிக்குகளின் பரம்பரையில் முஸ்லிம்களை உருவாக்குவான் என்று கூறி அவர்களை விட்டு விடச்சொன்னார்கள்.

 மிஃராஜ் :

 இது எந்த ஆண்டு நடந்தது என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துவேறுபாடு இருக்கிறது. நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு நடந்தது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து.

 புராக் என்ற வாகனத்தில் நபி(ஸல்) மஸ்ஜிதுல் அஸ்கா விற்கு சென்றார்கள். நபிமார்களுக்கு இமாமாக தொழுதார்கள். பிறகு 7 வது வானத்தில் மூஸா(அலை) யை கண்டார்கள். அல்லாஹ் கடமையாக்கிய 50 நேர தொழுகை மூஸா(அலை) யின் அறிவுரைப்படி நபி(ஸல்) அல்லாஹ்விடம் 5 ஆக குறைத்து கேட்டு அனுமதி பெற்றார்கள். நபி(ஸல்) பல நபிமார்களை வானத்தில் சந்தித்தார்கள். ஜிப்ரயீல்(அலை) சித்ரத்துல் முன்தஹா என்னும் இலந்தை மரம் வரை நபி (ஸல்) உடன் சென்றார்கள். பிறகு நபி (ஸல்) வானத்திற்கு சென்று அல்லாஹ்விடம் 5 வேலைகள் தொழுகையை கடமை என்ற உத்தரவை பெற்று வந்தார்கள்.

 நபி (ஸல்) மிஃராஜில் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள் மேலும் பல சம்பவங்களைக் கண்டார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 15

ஸீரா பாகம் – 15

உன் நபியை அறிந்துகொள்

 துல்கஅதாவில் தாயிப் நகரத்திற்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள். ஆனால் அம்மக்கள் இஸ்லாமை ஏற்கவில்லை.

 ஆயிஷா(ரலி) – நபி(ஸல்) விடம் உங்கள் வாழ்க்கையில் மிக துன்பமான நாள் எது? – தாயிப் மக்கள் கொடுமைப்படுத்திய அந்த நாட்களில் தான் மிக அதிகமாக துன்பப்பட்டேன்.

 பல கோத்திரங்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு மக்காவிற்கு வரும் ஹாஜிகளிடம் தாவா செய்தார்கள்.

 மதீனாவிலிருந்து 6 வாலிபர்கள் ஹஜ்ஜிற்காக வந்திருந்தார்கள். நபி (ஸல்) வின் அறிவுரைகளைக் கேட்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

 11 ஆம் ஆண்டு ஆயிஷா(ரலி) வை திருமணம் முடித்தார்கள்.

 பிறகு மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்டார்கள்.