ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 14

ஸீரா பாகம் – 14

உன் நபியை அறிந்துகொள்

 துக்க ஆண்டு

 அங்கிலிருந்து வெளியேறிய 6 மாதத்தில் அபூ தாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள்.

 பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ரமலானில் அன்னை கதீஜா(ரலி) தன் 65 வது வயதில் மரணமடைந்தார்கள். நபி(ஸல்) – கதீஜாவை போன்ற மனைவி எனக்கு வேறு யாருமில்லை. தன் செல்வத்தில் என்னை சேர்த்துக்கொண்டார். துக்கமுற்ற போது எனக்கு மகிழ்ச்சியூட்டினார்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.

 கதீஜா(ரலி) இறந்து பல வருடங்கள் கழித்தப்பின்னரும் நபி(ஸல்) அவர்களுடைய தோழிகளை கண்ணியப்படுத்தினார்கள்.

 ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தன்னை விட வயதில் மூத்த ஸஹாபி பெண்களில் ஒருவரான சவ்தா (ரலி) வை ஷவ்வால் மாதம் நபி (ஸல்) திருமணம் செய்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 13

ஸீரா பாகம் – 13

உன் நபியை அறிந்துகொள்

 நபி (ஸல்) வின் ஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் அபூ தாலிப் கணவாயில் ஒதுக்கிவிட்டனர் மக்கா வாசிகள்.

 3 வருடங்கள் அங்கே பஞ்சத்திலும் பட்டினியாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள்.

 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – மிருகங்களின் எலும்புகளை அதன் தோல்களையெல்லாம் வைத்து நாங்கள் உண்ண ஆரம்பித்தோம்.

 அந்த உடன்படிக்கை கஃபாவிற்குள் வைக்கப்பட்டிருந்தது அதை கரையான் அரித்து விட்டது அல்லாஹ் என்று எழுதப்பட்ட இடத்தைத்தவிர. அதற்கு பிறகு, ஹாஷிம் குறைஷி குடும்பத்தினர் சிலர் ஒன்று சேர்ந்து அந்த ஒப்பந்தத்தை முறிக்கும்படி கஃபத்துல்லாஹ்வின் அருகில் ஆலோசனை செய்தார்கள். ஆகவே கணவாயிலிருந்து வெளியே வந்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 12

ஸீரா பாகம் – 12

உன் நபியை அறிந்துகொள்

 முஸ்லிம்கள் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அனுமதி பெற்று ஹிஜ்ரத் செய்ய அறிவுரை செய்தார்கள்.

 நபித்துவத்தின் 5 – 6 ஆண்டு சில முஸ்லிம்கள் ஹபஷா சென்றார்கள்.

 பிறகு 83 ஆண்களும் 19 பெண்களும் 6 ஆம் ஆண்டு ஹபஷா சென்றனர்.

 ஹபஷா மன்னரை முஸ்லிம்களுக்கு ஏதிராக திரும்புவதற்காக மக்கா முஷ்ரிக்குகள் சிலரை அனுப்பினார்கள். ஆனால் அவர்களது முயற்சி வீணடிக்கப்பட்டுவிட்டது.

 நபி (ஸல்) துன்புறுத்தப்பட்டார்கள் அபூ ஜஹல் நபி (ஸல்) வின் மீது ஒட்டகத்தின் அசுத்தங்களை போடுவதற்கு கட்டளையிட்டான்.

 நபி (ஸல்) ஸஜ்தா செய்யும்போது மிதிக்க வந்தான். நபி (ஸல்) வை கொலை செய்ய முயற்சித்தார்கள். இது போன்ற பல விதமான தொல்லைகள் நபி(ஸல்) விற்கு குறைஷிகளால் ஏற்பட்டது.

 ஒரு பிரச்சனைக்கு பிறகு ஹம்சா (ரலி) இஸ்லாத்தை தழுவினார்கள் பிறகு சிறிது காலத்திலேயே உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவினார்கள்.

 உமர் (ரலி) வின் இஸ்லாம் நபியுடைய பிரார்த்தனையின் பிரதிபலிப்பாக இருந்தது.

 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – நாங்கள் பலஹீனமாக இருந்தோம் உமர்(ரலி) இஸ்லாமை தழுவியபோது அல்லாஹ் எங்களுக்கு கண்ணியத்தை கொடுத்தான்.

 உமர் (ரலி) இஸ்லாத்திற்கு வந்த பின் முஸ்லிம்கள் கஃபா வில் தைரியமாக தொழ ஆரம்பித்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 11

ஸீரா பாகம் – 11

உன் நபியை அறிந்துகொள்

  3 ஆண்டுகளுக்குப் பிறகு :

ஸூரத்துல் ஹிஜ்ர் 15:94

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

   ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!என்ற இறை வசனம் இறக்கப்பட்டது.

பிறகு நபி(ஸல்) மூடப்பழக்கங்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ் வை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 10

ஸீரா பாகம் – 10

உன் நபியை அறிந்துகொள்

40 வயது முழுமையடைந்த போது

ஹிரா குகையில் தனித்திருக்க ஆரம்பித்த 3ஆம் ஆண்டின் ரமலான் மாதம் பிறை 21 திங்கள் கிழமை (ஏறக்குறைய கி.பி 610 ஆகஸ்ட் 10)

அப்போது நபி (ஸல்) விற்கு நாற்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் 12 நாட்கள் முழுமையடைந்து இருந்தன.

ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) வை கட்டியணைத்தார்கள். நபி (ஸல்) சிரமப்படும் அளவிற்கு அணைத்தார்கள். ஓதுங்கள் ஓதுங்கள் என கூறியபோது நபி (ஸல்) எனக்கு படிக்க தெரியாதே?- ஜிப்ரஈல் (அலை) 96 வது அத்தியாயத்தின் ஆரம்ப 6 வசனங்களை ஓதி காண்பித்தார்கள்.

நபி (ஸல்) பயந்தவராக வீட்டிற்கு விரைந்து வந்து மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ,,,,,,,زملونى زملونى (என்னை போர்த்துங்கள் போர்த்துங்கள் ) என்றார்கள் அப்போது கதீஜா (ரலி) நபி (ஸல்) விற்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

பிறகு ஒரு முறை நபி (ஸல்) நடந்து வருகையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு பெரிய நாற்காலியில் ஜிப்ரஈல் (அலை) உட்கார்ந்திருந்ததை கண்டார்கள். அப்போது 74 வது அத்தியாயம் இறக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 3 ஆண்டுகள் ரகசியமாக அழைப்புப்பணி செய்தார்கள்.
கதீஜா(ரலி), அலி (ரலி), அபூபக்கர் (ரலி),  போன்ற சில ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9

ஸீரா பாகம் – 9

உன் நபியை அறிந்துகொள்

 38 ஆம் வயதில் :

சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள்.

ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள்.

 நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் :

அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன.

நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின.

இதே நிலை 40 வது வயது வரை தொடர்ந்தன.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 8

ஸீரா பாகம் – 8

உன் நபியை அறிந்துகொள்

 35 வயதில் :

குறைஷிகள் கஃபாவை புதுப்பிக்க முடிவு செய்து ஹலாலான பணத்தைக்கொண்டு கட்ட முடிவு செய்தார்கள். கட்டும்போது ஹஜருல் அஸ்வதை யார் அதன் இடத்தில் வைப்பது என சர்ச்சை ஏற்பட்டது. அப்போது நடுநிசியில் இறைவழிபாட்டிற்காக யார் முதலில் கஃபாவிற்கு வருகிறாரோ அவரை நடுவராக்க முடிவு செய்தார்கள். அப்போது அங்கே நபி(ஸல்) தான் முதலில் வந்தார்கள்.

 நபி(ஸல்) வின் தீர்ப்பு :

ஒரு பெரிய போர்வையை கொண்டு வந்து ஹஜருல் அஸ்வதை அதில் வைத்து அனைவரும் அந்த போர்வையை தூக்கிக் கொண்டு வாருங்கள் என கூறினார்கள். பிறகு நபி(ஸல்) தனது கையால் அதை எடுத்து கஃபாவில் வைத்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 7

ஸீரா பாகம் – 7

உன் நபியை அறிந்துகொள்

 25 ஆம் வயதில் :

விதவையாக இருந்த கதீஜா(ரலி) தன் செல்வத்தை பாதுகாத்து அதில் வியாபாரம் செய்ய நல்ல நம்பகமான ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அந்த வியாபாரத்தில் நபி(ஸல்) நல்ல லாபம் ஈட்டினார்கள்.

தோழியின் மூலம் திருமண விருப்பத்தை கதீஜா (ரலி) தெரிவித்த போது பெரிய தந்தை அபுதாலிபின் சம்மதத்தோடு திருமணம் செய்ய நபி(ஸல்) ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது கதீஜா(றால்) வின் வயது 40.

அதற்கு பிறகு உள்ள காலங்களில் நபி(ஸல்) கதீஜா(ரலி) உடன் வாழ்ந்தார்கள். அவர்களது வியாபாரத்தை நல்ல முறையில் செய்து வந்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 6

ஸீரா பாகம் – 6

உன் நபியை அறிந்துகொள்

 15 வயதில் :

குறைஷி மற்றும் ஹவாசின் குலத்தவர்களுக்கிடையில் நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். ( சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்தார்கள்).

 20 வது வயது :

வியாபாரத்திற்காக வந்த ஒருவரின் பொருளை வாங்கிவிட்டு அதற்கான கிரயம் கொடுக்கப்படவில்லை. அப்போது அநீதிக்கெதிரான ஹில்ஃபுல் ஃபுலூல் (சிறப்பிற்குரிய ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள். ( நபி(ஸல்) நபித்துவத்திற்கு பிறகும் இந்த ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து அது போன்ற ஒப்பந்தத்தில் இன்னும் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்கள்).

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 5

ஸீரா பாகம் – 5

உன் நபியை அறிந்துகொள்

 நபி(ஸல்) 3 வயது முதல் 6 வயது வரை தாய் ஆமினாவிடம் வளர்ந்தார்கள். பிறகு  தாய் ஆமினா அவர்களும் இறந்துவிட்டார்கள்.

 6 – 8 வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். (அப்துல் முத்தலிப் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருக்கும் ஒருவர் நபி(ஸல்) வாக தான் இருந்தார்கள்.

 8 வயது முதல் தன் தந்தையின் மூத்த சகோதரர்களில் 3வது சகோதரரான அபுதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்.

 12 வயதில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார்கள். (நபி (ஸல்) – எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்திருக்கிறார்கள் நானும் ஆடு மேய்த்திருக்கிறேன்.)

 ஒரு முறை அபூதாலிப் அவர்களுடன் நபி(ஸல்) வியாபாரத்திற்காக சிரியா சென்றபோது அவர்கள் நபி என்பதை கண்டுபிடித்து விட்டு இனிமேல் அவரை எங்கும் கொண்டு செல்ல வேண்டாம் என ஒரு பாதிரியார் வலியுறுத்தியதால் நபி(ஸல்) வை அபூதாலிப் அதற்குப்பிறகு எங்கும் கொண்டு செல்லவில்லை.