நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 1

ஸீரா பாகம் – 1

நேசம் இன்றி ஈமான் இல்லை

 அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நேசம் வைப்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.

 ஸஹாபாக்கள் மார்க்கத்தை இந்த அளவிற்கு பின்பற்றினார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் கொண்டிருந்த நேசமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

 அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காமல் அவர்களுடைய இஸ்லாமும் ஈமானும் முழுமையடையாது.

ஸூரத்துல் ஆதியாத்தி – 8:

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏

 இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

ஸூரத்துல் ஃபஜ்ரி – 20 :

وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ‏

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

ஸூரத்துல் கியாமா – 20 :

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ‏

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

உலக விஷயங்களை நேசிப்பதில் தவறில்லை. ஆனால் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் விட அதிகமாக உலக விஷயங்களை நேசிக்கக் கூடாது.

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 7

ஸீரா பாகம் – 7

நபியை நம்பிக்கை கொள்வோம்

அல்லாஹ் மலக்குகளிடம் ஆதம்(அலை) க்கு சிரம் பணிய சொன்னபோது மலக்குகள் செய்தார்கள். ஆனால் இப்லீஸ் அறிவை உபயோகித்தான். என்னை தீயால் படைத்தாய் ஆதமை மண்ணால் படைத்திருக்கிறாய். ஆகவே அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக logic பேசினான்.

ஆதலால் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக புத்தியை உபயோகித்ததால் அல்லாஹ் அவனை சபித்தான்.

 ஸூரத்து ஸாத் 38:85

“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 6

ஸீரா பாகம் – 6

நபியை நம்பிக்கை கொள்வோம்

ஜுபைர்(ரலி) விற்குமன்சாரி தோழர் ஒருவருக்கும் இடையில் உண்டான பிரச்சனையில் அல்லாஹ் இறக்கிய வசனம்.

ஸூரத்துன்னிஸா 4 : 65 

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்

ஸூரத்துல் அஹ்ஜாப 33 : 36

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما, قال : قال رسول الله صلي الله عليه وسلم : لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به

நபி(ஸல்) நான் கொண்டு வந்ததை உங்கள் ஆசைகள் பின்பற்றாத வரை நீங்கள் முஃமினாக ஆக முடியாது.

ஸூரத்துல் பகரா 2 : 34

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

அல்லாஹ் மலக்குகளிடம் ஆதம்(அலை) க்கு சுஜூத் செய்யச் சொன்னபோது ஷைத்தான் பெருமையடித்தான்.

 

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 5

ஸீரா பாகம் – 5

நபியை நம்பிக்கை கொள்வோம்

 சூரா அன்னிஸா 4:136

 முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

நபி(ஸல்) சில வேளைகளில் வஹியல்லாத விஷயங்கள் செய்தாலும் உடனுக்குடன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை கொண்டோ அல்லது வஹியைக் கொண்டோ அதை திருத்தியிருக்கிறான்.

 

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 4

ஸீரா பாகம் – 4

நபியை நம்பிக்கை கொள்வோம்

💕 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஈமான் கொள்ளுங்கள். நபி(ஸல்) சொல்வதை கேட்காத மக்கள் அல்லாஹ்வை நிராகரிக்கிறார்கள்.

(ஆதாரம்: சூரா அல் ஹதீத் 57 : 7,8)

💕 ஸூரத்துத் தஃகாபுன் 64 : 8 

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் – அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்

💕 ஸூரத்துந்நஜ்ம் 53 : 1 – 4

🌹 விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

🌹 உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.

🌹 அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

🌹 அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

💕ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69 : 44 – 46 

🌹 அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் –

🌹 அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

🌹 பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

💕 ஸூரத்துல் ஜுமுஆ 62 : 2 

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

💕 இறைவனின் கட்டளைக்கும் நாட்டத்திற்கும் மாற்றமாக நபி(ஸல்) ஒருபோதும் பேச மாட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 3

ஸீரா பாகம் – 3

நபியை நம்பிக்கை கொள்வோம்

ஸூரத்துத் தவ்பா – 62 :

يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْ‌ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏

(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.

💠 அல்லாஹ்வை ஒருவன் திருப்திப் படுத்த நாடினால் அவனது தூதர் எப்படி வழி  காட்டினாரோ அவ்வாறுதான் முடியும்.

💠 தொதர்களுடைய வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள்.

💠 தூதர்கள் உலக வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் வழி காட்டியதோடு மட்டுமல்லாமல் இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தார்கள்.

💠 உலகத்தில் உள்ள அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டவர் முஹம்மது நபி(ஸல்) ஆவார்.

💠 எந்த விதமான சஞ்சலமும் சந்தேகமும் இல்லாமல் முழுமையாக அல்லாஹ்வுடைய நபியை நாம் ஈமான் கொள்ளவேண்டும்.

 

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 2

ஸீரா பாகம் – 2

நபியை நம்பிக்கை கொள்வோம்

படைத்தவன் ஒருவன் தான் என்பதில் உலகில் யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. அல்லாஹ்வை அவனுடைய தூதர்களின் வழியாகத்தான் சரியான முறைப்படி நம்ப முடியும். தூதர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால் அல்லாஹ்வை சரியான முறைப்படி புரிந்து கொள்ள முடியாது. அந்த தூதர்கள் உலக வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டினார்கள். அதே சமயம் அல்லாஹ்வை பற்றியும் அவனை வணங்க வேண்டிய முறையையும் கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் ஆனால் அகில உலகிற்கும் தூதராக அனுப்பப்பட்டவர் நம்முடைய முஹம்மது(ஸல்) ஆவார்கள்.

قُلْ يَاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُولَ الله اِلَيْكُمْ جَمِيْعَاْ الَّذِى لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْاَرْضِ لَا اِلَهَ اِلَّا هُوَ يُحْيِ وَيُمِيْتُ فَاَامِنُوْا بِاللهِ

وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ

(நபியே!) நீர் கூறுவீராக: ” மனிதர்களே மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்” வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை. அவனே உயிர்பிக்கின்றான்; அவனே மரணம் அடைய செய்கின்றான் – ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுத படிக்கத்தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்.அவரும் அல்லாஹ்வின் மீதும் அவனின் வசனங்கள் மீதும் ஈமான் கொள்கிறார். அவரையே பின் பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.

ஸூரத்துல் அஃராஃப் – 158:

இறுதி நபியையும் அவருக்கு முன்னால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களையும் நாம் நம்பிக்கை கொள்வோம்.

 

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 1

ஸீரா பாகம் – 1

நபியை நம்பிக்கை கொள்வோம்

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்
  • உலக இன்பங்கள்

இவை யாவும் இல்லாதவன் நஷ்டவாளி அல்ல…

உண்மையில் நஷ்டவாளி, ஈமானை இழந்தவனே அல்லது ஈமானை அடையாதவனே ஆவான்….

مَا كَان مُحَمَّدٌ اَبآَ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ الله وَخَاتَمَ النََبِيَنّز  وَكَانَ اللهُ بِكُلَِ شَيْءٍ عَلِيمًا

முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை;  ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி(முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லா பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 

ஸூரத்துல் அஹ்ஜாப – 40 :

எந்த விதமான மன சஞ்சலமும் இல்லாமல் நபி(ஸல்) வை ஈமான் கொள்ள வேண்டும்.

 

Practicing Surah Al Fathiha

29 Practicing the letter ياء