ஹிஸ்னுல் முஸ்லிம் 22

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 22

தலைப்பு – 10

الذكر عند الخروج من المنزل

வீட்டிலிருந்து வெளியேறும்போது ஓதும் துஆ

بسم الله ، توكَّلْتُ على الله ، ولا حَوْلَ ولا قُوةَ إلا بالله

அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு  ↔ بسم الله

↔ توكَّلْتُ على الله

என்னுடைய சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்திருக்கிறேன்

↔ ولا حَوْلَ ولا قُوةَ إلا بالله

இறைவனைக்கொண்டே அன்றி எனக்கு சக்தியோ பலமோ இல்லை

أبو داود 4/ 325 والترمذي 5/ 490 وانظر صحيح الترمذي3/ 151

قال رسول الله صلى الله عليه و سلم:

وعنْ أنسٍ رضيَ اللَّهُ عنه قال : قال : رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَنْ قَالَ يعنِي إذا خَرَج مِنْ بيْتِهِ : بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ ، يقالُ لهُ هُديتَ وَكُفِيت ووُقِيتَ ، وتنحَّى عنه الشَّيْطَانُ » رواه أبو داودَ والترمذيُّ ، والنِّسائِيُّ وغيرُهمِ

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – எவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறும்போது

بسم الله توكلت على الله، لا حولَ، ولا قوة إلا بالله

என்று கூறுகிறாரே அவரிடம் கூறப்படும் உனக்கு போதுமாக்கப்பட்டுவிட்டது பாதுகாக்கப்பட்டு விட்டாய் மேலும் ஷைத்தான் அவரை விட்டு விலகி விடுவான். (திர்மிதி 3427)

இஸ்ஹாக் அவர்களை தொட்டும் இப்னு ஜுரைஜ் அறிவிக்கிறார் என்று இந்த ஹதீஸில் இடம் பெறுகிறது.

இமாம் புஹாரி அறிவிக்கையில் – இஸ்ஹாக் வழியாக இப்னு ஜுரைஜ் இந்த செய்தியை தவிர வேறு எந்த செய்தியும் அறிவித்ததாக நான் காணவில்லை. இவர் அவரிடம் கேட்டதாக எந்த செய்தியுமில்லை.

《☆》 ஆகவே இந்த செய்தி பலஹீனமானது.

ஹிஸ்னுல் முஸ்லிம் 21B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 21🅱️

15-سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أشْهَدُ أنْ لَا إِلَهَ إِلاَّ أنْتَ، أسْتَغْفِرُكَ وأَتُوبُ إِلَيْكَ

النسائي في عمل اليوم والليلة ص173 وانظر  إرواء الغليل 1/ 135 و2/  94

كَفَّارَةُ الـمَجْلِسِ

《☆》 இந்த துஆ நாம் ஒரு சபையை விட்டு பிரியும்போது ஓதும் துஆ வாகும். ஆனால்

فهذا الحديث رواه النسائي في عمل اليوم والليلة والحاكم في المستدرك، ولفظه: من توضأ فقال: سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك كتب في رقٍ ثم طبع بطابع فلم يكسر إلى يوم القيامة

《☆》 அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – யார் உளூ செய்து அதற்கு பின்னால்.

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

என்று கூறுகிறாரோ அவர் மீது அது பதிவு செய்யப்பட்டு முத்திரை குத்தப்பட்டு மறுமை வரை பாதுகாக்கப்படும்.(நஸயீ – சுனனுல் குப்ரா 9829, அமலி யவ்மி வல்லைலா 173)

《☆》 இந்த செய்தியை அறிவிக்கும் அனைவரும் அறிவிப்பாளர் தொடரை அபூஸயீத் (ரலி) உடன் நிறுத்திக்கொள்கின்றனர். ஆகவே இது நபி (ஸல்) விடமிருந்து வந்த செய்தியல்ல. மாறாக இது அபூசயீத் (ரலி) வின் செய்தி தான் எனவே இது மவ்கூஃப் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

《☆》 ஒரே ஒரு அறிவிப்பாளர் இந்த அறிவிப்பை மர்ஃபூஹ்(நபி (ஸல்) விடமிருந்தே அபூ சயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்) என அறிவித்துள்ளார்கள். அவர்கள் நம்பிக்கையான மனன சக்தியுள்ள ஒரு அறிவிப்பாளராகவும் இருக்கிறார்.

ஹதீஸ் கலை விதி :

நபித்தோழர்களால் ஆய்வு செய்து அறிவிக்க முடியாத விஷயங்களை நபித்தோழர்கள் அறிவித்ததாக வந்தாலும் அது நபி (ஸல்) சொன்னதாக அந்த அறிவிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: மறுமையை பற்றி ஏதேனும் ஒரு சம்பவத்தை நபித்தோழர் அறிவித்தால் அது அவரது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாகவும் இருக்கிறது அவர்கள் பொய் சொல்வதிலிருந்தும் தூய்மையானவர்கள் என்ற அடிப்படையில் அது நபி (ஸல்) வின் மூலமாக தெரிந்து கொண்டு தான் அறிவிக்கிறார்கள் என நாம் விளங்கிக்கொள்ளலாம்.

《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ இந்த அறிவிப்பை ஹஸன் தரத்தில் உள்ளது என்று அறிவிக்கிறார்கள்.

ஷேக் அல்பானி அவர்களும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது அறிவிப்பாளர்களை ஆய்வு செய்தால் இது நபி (ஸல்) வரை செல்லாத, நபித்தோழரோடு நிறுத்தப்பட்ட ஹதீஸாக இருப்பினும் இது சொந்த புத்தியால் சொல்ல முடியாத விஷயமாக இருப்பதால் ஆகவே இது நபி (ஸல்) விடமிருந்து கேட்டு தான் அந்த ஸஹாபி அறிவிக்கிறார்கள் என்று நாம் விளங்கிக்கொள்கிறோம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 21A

 

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 21🅰️

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ((مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ

《☆》 உமர் (ரலி) -நபி (ஸல்) – யாரொருவர் அழகிய முறையில் உளூ செய்கிறாரோ; பிறகு

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

என்று கூறுகிறாரே அவருக்கு சொர்க்கத்தின் 8 வாயில்கள் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயிலில் நுழைவார்.

குறிப்பு :

🌺 முஸ்லிமில் வரும் செய்தி உக்பத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் வழியாக வந்தது; இந்த செய்தி உமர் (ரலி) வழியாக வந்ததாக இருக்கிறது. மேலும் இதில் அதிகப்படியான ஒரு செய்தி இருக்கிறது.

🌺 இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் – இது ஷாத் ஆன செய்தியாகும் மேலும் இது நிராகரிக்கத்தக்க செய்தியாகும். இந்த ஹதீஸில் இந்த அதிகப்படியான வார்த்தை ஆதாரபூர்வமாக நிரூபணமாகவில்லை.

🌺 ஜஹ்பர் இப்னு முஹம்மத் இப்னு இம்ரான் – இமாம் திர்மிதியின் ஆசிரியர். இவரிடம் மனனத்தில் ஒரு சிறிய குறை இருக்கிறது. இவரைத்தவிர வேறு எந்த அறிவிப்பாளரும் இந்த அதிகப்படியான செய்தியை அறிவிக்கவில்லை.

மேலும் இவர் இந்த செய்தியில் உமர் இப்னு கத்தாப் (ரலி) விற்கும் அபூ உஸ்மான் என்ற அறிவிப்பாளருக்கும் இடையில் உள்ள உக்பத் இப்னு ஆமீர் (ரலி) வை விட்டுவிட்டார்,

ஸைத் இப்னு ஹுபாப் என்பவருக்கும் முஆவியத் இப்னு ஸாலிஹ் என்பவருக்கும் இடையில் ஒருவரை விட்டுவிட்டார்.

🌺 இமாம் அஹமத் ஷாகிர் – திர்மிதி யின் இந்த அறிவிப்பில் மட்டுமே இந்த அதிகப்படியான செய்தி இடம்பெறுவதால் இந்த செய்தி பலஹீனமானது.

🌺 இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வரிசையில் குழப்பங்கள் இருக்கின்றன. இந்த தலைப்பில் அதிகமான ஆதாரபூர்வமான செய்திகள் இல்லை.

🌺 இமாம் புஹாரி – உமர் (ரலி) விடமிருந்து அபூ இத்ரீஸ் எந்த செய்தியையும் கேட்கவில்லை.

🌺 சமகால அறிஞர் அப்துல் அஸீஸ் அத்தரீfபீ – இந்த வார்த்தை ஆதாரபூர்வமானதல்ல.

《☆》 ஆகவே

اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

இது பலஹீனமான செய்தி என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 20

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 20

9- الذكر بعد الفراغ من الوضوء

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ، عَنْ رَبِيعَةَ يَعْنِي ابْنَ يَزِيدَ ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ . ح وَحَدَّثَنِي أَبُو عُثْمَانَ ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، قَالَ : كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الإِبِلِ ، فَجَاءَتْ نَوْبَتِي ، فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ ، فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا يُحَدِّثُ النَّاسَ ، فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ : ” مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ ، فَيُحْسِنُ وُضُوءَهُ ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ” ، قَالَ : فَقُلْتُ : مَا أَجْوَدَ هَذِهِ ؟ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ ، يَقُولُ : الَّتِي قَبْلَهَا أَجْوَدُ ، فَنَظَرْتُ ، فَإِذَا عُمَرُ ، قَالَ : إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا ، قَالَ : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ ، فَيُبْلِغُ ، أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ، ثُمَّ يَقُولُ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ،

《☆》 உக்பத் இப்னு ஆமீர் (ரலி) – எங்களுக்கு ஒட்டகம் மேய்க்கும் பொறுப்புகள் இருந்தன அதில் என்னுடைய தவணை வந்தபோது அதை முடித்துவிட்டு நபி (ஸல்) விடம் வந்தபோது நபி (ஸல்) மக்களிடம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். ஒரு முஸ்லீம் உளூ செய்து, அதை அழகான முறையில் செய்து, பின்னர் நின்று 2 ரகாஅத்துக்கள் தொழுது உள்ளத்தாலும் முகத்தாலும் இறைவனை முன்னோக்கினால் அவருக்கு சொர்க்கம் வாஜிபாகி விடும் . அப்போது நான் கூறினேன்; எவ்வளவு அருமையான செய்தி என்று கூறியபோது; முன்னால் இருந்த உமர் (ரலி) கூறினார்கள்; நீங்கள் வரும் முன் கூறிய செய்தி இதை விட சிறந்தது; ஒருவர் உளூ செய்து அதை பூரணமான அழகான முறையில் செய்து, பிறகு  أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ  என்று கூறுகிறாரே அவருக்கு சொர்க்கத்தின் 8 வாயில்கள் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் வழியே உள்ளே நுழைவார் (முஸ்லீம்)

ஹிஸ்னுல் முஸ்லிம் 19

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 19

8- الذكر قبل الوضوء

حدثنا قتيبة بن سعيد حدثنا محمد بن موسى عن يعقوب بن سلمة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر اسم الله تعالى عليه

《☆》 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யாருக்கு உளூ இல்லையோ அவருக்கு தொழுகை இல்லை. யார் உளூ செய்யும்போது பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையோ அவருக்கு உளூ இல்லை.
《☆》 இந்த ஹதீஸில் அறிஞர்களுக்கு மத்தியில் பல விதமான கருத்துவேறுபாடுகள் இருக்கிறது.

《☆》 பிஸ்மில்லாஹ் இல்லையென்றால் உளூ கூடாது என்ற கருத்துக்கு நம்மால் வர முடியவில்லை. எனினும் பிஸ்மில்லாஹ் கூறுவது விரும்பத்தக்கது என்றே நாம் விளங்கிக்கொள்கிறோம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 18

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 18

7- دعاء الخروج من الخلاء கழிவறையை விட்டு வெளியேறும்போது  துஆ :

غُفْرانَكَ யா அல்லாஹ் உன் மன்னிப்பை வேண்டுகிறேன்

حدثنا محمد بن إسمعيل حدثنا مالك بن إسمعيل عن إسرائيل بن يونس عن يوسف بن أبي بردة عن أبيه عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال غفرانك قال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث إسرائيل عن يوسف بن أبي بردة وأبو بردة بن أبي موسى اسمه عامر بن عبد الله بن قيس الأشعري ولا نعرف في هذا الباب إلا حديث عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم

《☆》 ஆயிஷா (ரலி) -நபி (ஸல்) (கழிவறைக்கு செல்லும்) வெட்டவெளியிலிருந்து திரும்பினால் غفرانك என்று கூறுவார்கள்   (திர்மிதி, அபூதாவூத்)

குறிப்பு;

《☆》 யாரைப்பற்றியெல்லாம் தகவல்கள் இல்லையோ அவர்களை நம்பகமானவர்கள் என்று கூறும் வழக்கமுள்ளவர்கள் இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் இஜிலி

《☆》 இதில் யூசுஃப் இப்னு அபீபுர்தா என்பவர் இடம்பெறுகிறார் – இவரை இப்னு ஹிப்பான் (ரஹ்) மற்றும் இமாம் இஜிலி நம்பகமானவர் என்கிறார்கள்.

《☆》 இமாம் ஹாக்கிம் தனது முஸ்தத்ரக் என்ற நூலில் பாகம் 1 பக்கம் 261 – யூசுஃப் இப்னு அபீபுர்தா அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) யின் குடும்பத்தில் வந்தவர்களிலேயே மிக நம்பகமானவர்.

சுருக்கம்:

 

கழிவறையில் நுழையும்போது :

اللهُمَّ إنّي أعُوذُ بِكَ مِنَ الخُبثِ والخبائِثِ

கழிவறையிலிருந்து வெளியேறும்போது :

غفرانك

ஹிஸ்னுல் முஸ்லிம் 17

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 17

دعاء دخول الخلاء  கழிவறையில் நுழையும்போது

بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث

என்ற துஆ வில் வரும் பிஸ்மில்லாஹ் ஆதாரமற்றது என கடந்த வகுப்பில் படித்தோம்.

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال : اللهُمَّ إنّي أعُوذُ بِكَ مِنَ الخُبثِ والخبائِثِ

《☆》 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – மலஜலம் கழிக்குமிடத்தில் நுழைந்தால் ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்ற இந்த துஆ வை கூறுவார்கள்(புஹாரி)

குறிப்பு:

《☆》 அனஸ் (ரலி) மூலமாக வரக்கூடிய அறிவிப்புகள் பல இருப்பினும் இமாம் புஹாரி அவர்கள் அதில் சரியானதை தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

إذا دخل الخلاء கழிவறையில் நுழைந்தால்

மொழியடிப்படையில் இதை இருவிதமாக புரிந்துகொள்ளலாம்

ஸூரத்துல் மாயிதா 5:6

اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ

…தொழுகைக்காக நின்றால் ….(தொழுகைக்காக நிற்க விரும்பினால் என்று விளங்க வேண்டும்)

🍁 ஆகவே கழிவறையில் நுழைந்தால் என்று புரிந்துகொள்ளாமல் நுழைய விரும்பினால் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم (كان إذا أراد أن يدخل الخلاء قال : اللهم إني أعوذ بك من الخبث والخبائث) رواه البخاري

கழிவறையில் நுழைய விரும்பினால் (புஹாரி) ↔ كان إذا أراد أن يدخل الخلاء

ஹிஸ்னுல் முஸ்லிம் 16B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 16 B

ستر ما بين الجن وعورات بني آدم إذا دخل الكنيف: أن يقول: بسم الله

《☆》 அலீ (ரலி) – நபி (ஸல்) – ஆதமுடைய மக்களுடைய மர்மஸ்தானத்திற்கும்  ஜின்களுக்கும் இடையே  உள்ள திரையே அவர்கள் கழிப்பிடத்திற்கு சென்றால் பிஸ்மில்லாஹ் என்று கூறுவது தான்.

ستر ما بين أعين الجن وعورات بني آدم إذا نزعوا ثيابهم أن يقولوا بسم الله

《☆》 அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) – ஆதமுடைய மக்களுடைய மர்மஸ்தானத்திற்கும்  ஜின்களுக்கும் இடையே  உள்ள திரையே அவர்கள் ஆடையை களைந்தால் பிஸ்மில்லாஹ் என்று கூறுவது தான்.

سِتْرُ ما بَيْنَ أعْيُن الجِنِّ وَعَوْرَاتِ بَني آدَمَ إذا وَضَعَ أحدُهُمْ ثَوْبَهُ أنْ يقول: ” بِسم الله

《☆》 அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) – ஆதமுடைய மக்களுடைய மர்மஸ்தானத்திற்கும்  ஜின்களுக்கும் இடையே  உள்ள திரையே அவர்கள் ஆடையை களைந்தால் பிஸ்மில்லாஹ் என்று கூறுவது தான்.

《☆》 இமாம் தாரகுத்னீ (கிதாபுல் இலல், 12ஆம் பாகம் 101 ஆம் பாகத்தில் கூறுகிறார்) – இது நிரூபணமில்லாத அறிவிப்பாளர்களை கொண்ட செய்தி ஆகவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ – இந்த தலைப்பில் எந்த கருத்தும் ஆதாரபூர்வமானதல்ல.

《☆》 பிற்காலத்து அறிஞர்களில் அல்பானி, பின் பாஸ் போன்றவர்கள் இதை ஹசன் தரம் என்று அறிவிக்கிறார்கள். எனினும் ஆரம்ப கால அறிஞர்களின் கருத்தே இந்த விஷயத்தில் பலமாக இருக்கிறது.

சுருக்கம் :

《☆》 இந்த ஹதீஸ் அனஸ் (ரலி), அலி (ரலி), அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி),முஹாவியத் இப்னு ஹைதா (ரலி), போன்ற நபித்தோழர்கள் அறிவித்திருப்பதாக இருக்கும் எந்த செய்தியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்று இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இது 3 விதமாக வந்துள்ளது

(1) பொதுவாக ஆடையை களைந்தால்

(2) குளிப்பறையில் ஆடையை களைந்தால்

(3) கழிவறையில் நுழையும்போது கூறும் பிஸ்மில்லாஹ்

🍁 மேற்கூறப்பட்ட 3 செய்திகளும் பலஹீனமான ஆதாரமற்ற செய்திகளாகும்.

🍁 ஆகவே ஆடை களையும் நேரத்தில் எந்த துஆவும் இல்லையென்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 16A

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 16 A

ما يقول إذا وضع الثوب – ஆடையை களைந்தால் என்ன கூறவேண்டும்

《☆》 இந்த துஆ உண்மையில் மலஜலம் கழிப்பதற்காக ஆடையை களையும்போது ஓதும் துஆ என்ற தலைப்பில் கொண்டு வந்திருக்க வேண்டும்.

《☆》 நபித்தோழர்கள் பலர் மூலம் அறிவிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

சில அறிவிப்புகளில் இந்த துஆ بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث என்று இடம் பெறுகிறது
இன்னும் சில அறிவிப்புகளில் நபி (ஸல்) ஆடையை களைந்தால் இதை ஓதுவார்கள் என்றும்
இன்னும் சில அறிவிப்புகளில் நபி (ஸல்) கழிப்பிடத்திற்கு நுழைந்தால் اللهم إني أعوذ بك من الخبث والخبائث என்று கூறுவார்கள் மேலும் ஆடையை களைந்தால் بسم الله என்று கூறுவார்கள் என்று இடம்பெறுகிறது.

《☆》 அனைத்தும் ஒரே ஹதீஸ் தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 15

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 15

الدعاء لمن لبس ثوباً جديداً

புதிதாக ஆடை அணிந்தவரை நோக்கி சொல்லும் துஆ :

تُبْلي ويَخْلِفُ الله تعالى

நன்றாக உடு அல்லாஹ் உனக்கு பின்னால் இன்னும் அதிகமாக தருவான்

நன்றாக உடு ↔ تُبْلي ابلى

– பின்னால் (பிறகு) ↔ ويَخْلِفُخلف

《☆》 இந்த செய்தி மேற்கூறப்பட்ட ஜுரைரீ அவர்களது செய்தியில் கூடுதலாக வரும் செய்தியாகும். ஆகவே இது ஆதாரமற்றதாகும்.

إلبِسْ جَدِيداً وعِشْ حميداً ومُتْ شهيداً

إلبِسْ جَدِيداً وعِشْ حميداً ومُتْ شهيداً

புதிய ஆடை அணியுங்கள் ↔ إلبِسْ جَدِيداً

புகழுக்குரியவராக வாழுங்கள் ↔ وعِشْ حميداً

ஷஹீதாக மரணியுங்கள் ↔ ومُتْ شهيداً

قال الإمام أحمد رحمه الله (ج2ص88): حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَىَ آلِهِ وَسَلَّمَ عَلَى عُمَرَ ثَوْبًا أَبْيَضَ فَقَالَ أَجَدِيدٌ ثَوْبُكَ أَمْ غَسِيلٌ فَقَالَ فَلَا أَدْرِي مَا رَدَّ عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَىَ آلِهِ وَسَلَّمَ : ( الْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا)

《☆》 நபி (ஸல்) உமர் (ரலி) யை பார்த்து இந்த வெள்ளை ஆடையை நீங்கள் துவைத்து உடுத்தீர்களா அல்லது புதிய ஆடையா என்று கேட்டார்கள் அதற்கு உமர் (ரலி) என்ன பதிலளித்தார்கள் என்று தெரியவில்லை அப்போது புதிய ஆடை அணிந்து புகழுக்குரியவராக வாழ்ந்து ஷஹீதாக மரணியுங்கள் என்று உமர் (ரலி) விற்காக துஆ செய்தார்கள். ஆகவே இது உமர் (ரலி) மட்டும் உள்ள துஆ வாகும்.

ஹதீஸ் கலை

நுட்பமான குறை العلل

《☆》 ஹதீஸ்களை அறிஞர்களுக்கு மட்டுமே அறியக்கூடிய நுட்பமான குறைபாடுகளை இலல் என்று கூறுவார்.இது மஹ்மரின் செய்தியல்ல என்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். மேலும் இது நிராகரிக்க தக்க ஹதீஸ் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.இமாம் புஹாரி மேலும் அவரது மாணவர் திர்மிதி உள்ளிட்ட அறிஞர்கள் இதை நிராகரிக்கத்தக்க செய்தி என்று இதை மறுக்கின்றனர்.

புஹாரி 3071

عن أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ {أُتِيَ النَّبِيُّ -صلى الله عليه وسلم- بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ فَقَالَ: مَنْ تَرَوْنَ أَنْ نَكْسُوَ هَذِهِ فَسَكَتَ الْقَوْمُ قَالَ ائْتُونِي بِأُمِّ خَالِدٍ .فَأُتِيَ بِهَا تُحْمَلُ فَأَخَذَ الْخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا ،وَقَالَ: أَبْلِي وَأَخْلِقِي .وَكَانَ فِيهَا

عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ فَقَالَ:يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَاهْ وَسَنَاهْ بِالْحَبَشِيَّةِ حَسَنٌ

《☆》 உம்மு ஹாலித் – நான் ஒரு புதிய மஞ்சள் நிற ஆடையை
அணிந்திருந்தேன் நபி (ஸல்) அழகு அழகு என்று கூறினார்கள் பிறகு நான் நபி (ஸல்) வின் முதுகில் இருக்கும் நபித்துவ முத்திரையில் விளையாட ஆரம்பித்தேன். அப்போது அவரது தந்தை அவர்களை பிடித்து இழுத்தபோது அப்போது நபி (ஸல்) அவர்களை விடுங்கள் என்றார்கள் பின்னர் என்னை பார்த்து أَبْلِي وَأَخْلِقِي என்று 3 முறை கூறினார்கள்.

 

சாப்பிட்டு முடித்த உடன்:

الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

புதிய ஆடை அணிந்தவரை நோக்கி :

    أَبْلِي وَأَخْلِقِي