ஹிஸ்னுல் முஸ்லிம் 14

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 14

3- دعاء لبس الثوب الجديد

حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ النَّجَّادُ إِمْلاءً ، قَالَ : قُرِئَ عَلَى يَحْيَى بْنِ جَعْفَرٍ وَأَنَا أَسْمَعُ ، ثنا عَبْدُ الْوَهَّابِ ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : كَانَ النَّبِيُّ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ قَمِيصًا أَوْ إِزَارًا أَوْ عِمَامَةً , يَقُولُ : ” اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ، أَنْتَ كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ ” ، قَالَ أَبُو نَضْرَةَ : وَكَانَ أَصْحَابُ النَّبِيِّ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا رَأَوْا عَلَى أَحَدِهِمْ ثَوْبًا , قَالُوا : يَبْلَى وَيُخْلِفُ اللَّهُ عَزَّ وَجَلَّ

உனக்கே எல்லாப்புகழும் ↔ اللَّهُمَّ لَكَ الحَمْدُ

நீயே எனக்கு இந்த ஆடையை அணிவித்தாய் ↔ أَنْتَ كَسَوتَنِيه

அதன் நன்மையிலிருந்து கேட்கிறேன் ↔ أسْألك مِنْ خَيرِهِ

அது செய்யப்பட நன்மையையும் நான்கேட்கிறேன் ↔ وخَيْرَ ما صُنع لَهُ

அதன் தீங்கை விட்டும் நான் பாதுகாவல்தேடுகிறேன் ↔ وأعُوذُ بِكَ مِنْ شرِّه

அது செய்யப்பட தீங்கிலிருந்தும் ↔ وشَرَّ ما صُنِعَ لَهُ

(திர்மிதி, அபூதாவூத்) இந்த செய்தி பலஹீனமானதாகும். 

இதில் சயீத் அல் ஜுரைரீ என்பவர் இடம்பெறுகிறார்.

ஹதீஸ் கலை

ஒருவர் நல்ல மனன சக்தியுள்ளவராக இருப்பார் அவர் பிற்காலத்தில் மனன சக்தி இழந்து விட்டால் குழப்பநிலைக்கு முன்னால் கேட்டவர்களது செய்தியை எடுப்பார்கள் குழப்ப நிலைக்கு பின்னால் கேட்டவர்கள் செய்தியை எடுக்க மாட்டார்கள். குழப்ப நிலைக்கு முன்பா பின்பா என்று தெரியவில்லையென்றால் அவர்களது செய்தியை எடுக்க மாட்டார்கள்.

✤ சயீத் அல் ஜுரைரீ இடமிருந்து 9 பேர் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்த 9 பேரும் இவரது மனன நிலை குழப்பத்திற்கு பின்னர் அறிவித்தவர்கள்.

 💫ஆனால் 2 பேர் குழப்ப நிலைக்கு முன்பு கேட்டவர்கள் அவர்கள் ஹம்மாத் இப்னு சலமா, மற்றும் அப்துல் வஹ்ஹாப் இப்னு சகஃபீ அந்த அறிவிப்பில் ஸஹாபியின் பெயர் இடம்பெறவில்லை. ஆகவே இது ஏற்றுக்கொள்ளத்தக்க செய்தியல்ல.

ஹிஸ்னுல் முஸ்லிம் 13

ஹிஸ்னுல் முஸ்லிம் 12

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 12

مَنْ لَبِسَ ثَوْباًً فقال: الحَمْدُ لله الذِي كَساني هذا( الثوب ) ورَزَقَنِيه مِنْ غَيْرِ حَوْلٍ مِنّي ولا قُوةٍ

அணிவித்தான் ↔ كَساني

இந்த ஆடையை ↔ هذا( الثوب

எனக்கு அவன் ரிஸ்க் அளித்தான் ↔  ورَزَقَنِيه

என்னுடைய முயற்சியில்லாமல்  ↔ مِنْ غَيْرِ حَوْلٍ مِنّي

பலமுமில்லாமல்  ↔ ولا قُوةٍ

🍁 இந்த செய்தி பலஹீனமானது. இதனுடன் சேர்த்து

 (حديث مرفوع) حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ ، حَدَّثَنَا سَعِيدٌ ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ ، عَنْ أَبِيهِ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” مَنْ أَكَلَ طَعَامًا ، ثُمَّ قَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعِمْنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ، وَمَنْ لَبِسَ ثَوْبًا ، قَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

நபி (ஸல்) – யார் உணவருந்தி இந்த துஆவை செய்கிறாரோ அவரது முந்திய மற்றும் பிந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் யார் ஒரு ஆடை அணியும் நேரத்தில் இந்த துஆ வை செய்கிறாரோ அவரது முந்திய பிந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்  (அபூதாவூத்- இந்த அறிவிப்பு பலஹீனமானதாகும்

முந்திய பிந்திய பாவம் :

முந்திய பாவம் என்றால் ஆரம்பத்தில் செய்த பாவம்

பிந்திய பாவம் என்பது அண்மையில் செய்த பாவம்

🍁 முஸ்னத் அஷ்ஷாமிலும் இந்த செய்தி இடம்பெறுகிறது.  

🌺இந்த செய்தியில் அபூ மர்ஹூம் என்ற ஒருவர் இடம்பெறுகிறார். இவரை இமாம் அபூ ஹாதிம், இமாம் தஹபீ, இப்னு மஹீன் போன்ற அறிஞர்கள் பலஹீனமானவர் என்று விமர்சித்திருக்கிறார்கள்.சிலர் இவரை لا باس என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

🌺 ஹதீஸ் கலை விமர்சனக்குறிப்புகள் :

ஒருவருடைய தரம் பற்றி எந்த விதமான  செய்தியும் இல்லாத சமயத்தில் அவரைப்பற்றிய பாதகமான விமர்சனமோ அல்லது  அவரை பலஹீனப்படுத்தும் வகையில் உள்ள விமர்சனங்கள் வந்தால் அது அறிஞர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும்.

🌺 ஒருவர் நம்பகமானவர் பலமானவர் என்ற நிலையில் இருக்கும்போது ஒரு பாதகமான செய்தி அல்லது அவரை பலஹீனப்படுத்தும் விமர்சனம் வந்தால் அவைகளை மிகப் பெரும் ஆய்வுக்கு உட்படுத்தியே ஒப்பிட்டு அவரை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை அறிஞர்கள் முடிவு எடுப்பார்கள்

🌺 ஆகவே அபூ மர்ஹூம் என்பவர் இடம் பெறுவதால் இந்த செய்தி பலஹீனமடைகிறது.

🌺 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி தனது நூலில் இதே ஹதீஸ் இன்னொரு அறிவிப்பாளர் வரிசையில் என்னிடம் இருக்கிறது என்று கூறினார்கள். அந்த அறிவிப்பை தாரீஹ் இப்னு அசாக்கீரிலும், முஸ்னத் அஷ்ஷாமீ – இமாம் தப்றானீ யிலும் இந்த செய்தி இடம்பெற்றிருக்கிறது. அதில் அல் வலீத் இப்னுல் வலீத் அத்திமிஷ்கீ என்பவர் இடம்பெறுகிறார். அவர் மிகவும் பலஹீனமானவராக இருப்பதால் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்ற நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.இமாம் தார குத்னீ இவரை முன்கருல் ஹதீஸ் (நிராகரிக்கத்தக்கவர்) என்று விமர்சித்திருக்கிறார்.

🌺 ஆனால் ஷேக் அல்பானி, இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ, ஷேக் பின் பாஸ்(ரஹ்) இந்த ஹதீஸை ஹசன் என்ற தரத்தில் உள்ளது என்று கூறியிருப்பினும் இமாம் தஹபீ, இமாம் இப்னு மஹீன், இமாம் அபூ ஹாதிம் இவரை பலஹீனப்படுத்துவதும் தான் வலுவான வாதமாக இருப்பதால் இந்த செய்தி பலஹீனமானது என்பதே பொருத்தமான கருத்தாகும்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 11

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 11

🍁 நபியவர்கள் காலையில் எழுந்து துஆ செய்தார்கள் என்றால் ஒரு துஆ வை தான் ஓதினார்கள்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 10

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 10

وحدثني عن مالك عن مخرمة بن سليمان عن كريب مولى ابن عباس أن عبد الله بن عباس أخبره أنه بات ليلة عند ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي خالته قال فاضطجعت في عرض الوسادة واضطجع رسول الله صلى الله عليه وسلم وأهله في طولها فنام رسول الله صلى الله عليه وسلم حتى إذا انتصف الليل أو قبله بقليل أو بعده بقليل استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس يمسح النوم عن وجهه بيده ثم قرأ العشر الآيات الخواتم من سورة آل عمران ثم قام إلى شن معلق فتوضأ منه فأحسن وضوءه ثم قام يصلي قال ابن عباس فقمت فصنعت مثل ما صنع ثم ذهبت فقمت إلى جنبه فوضع رسول الله صلى الله عليه وسلم يده اليمنى على رأسي وأخذ بأذني اليمنى يفتلها فصلى ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم أوتر ثم اضطجع حتى أتاه المؤذن فصلى ركعتين خفيفتين ثم خرج فصلى الصبح

இப்னு அப்பாஸ் (ரலி)- என்னுடைய தாயின் சகோதரி உம்மு மைமூனா அவர்களது வீட்டில் நான் தங்கியபோது நபி (ஸல்) விழித்தெழுந்து உட்கார்ந்து முகத்திலிருந்து தூக்கத்தை துடைத்தார்கள் ஆல இம்ரான் சூராவின் கடைசி 10 வசனங்களை ஓதினார்கள்.பிறகு ஒரு தோல்பையிலிருந்து தண்ணீர் எடுத்து அழகிய முறையில் உளூ செய்து தொழுதார்கள்

புகாரியில் 4569

இப்னு அப்பாஸ் (ரலி) கொஞ்ச நேரம் மனைவியுடன் பேசிவிட்டு தூங்கி இரவின் 3 வது பகுதியில் விழித்து வானத்தை பார்த்தார்கள் பிறகு اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ என்ற வசனம் முதல் சூரா ஆல இம்ரான் இறுதி வரை ஓதினார்கள்.

 

ஆகவே காலையில் விழித்தெழுந்தால் ஓதக்கூடிய துஆக்கள் :

” الحَمْدُ لله الذِي أحْيَانا بَعْدَ مَا أمَاتَنَا* وإلَيْهِ النَشُور*  “[1]

2- ” الحَمْدُ لله الذِي عَافَانِي في جَسَدِي ورَدَّ عَلَيَّ رُوحِي، وأَذِنَ لي بِذِكْرهِ “[2].

ஹசன் தரம்  

இரவில் திடீரென விழித்தெழுந்தால் :

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

இரவுத்தொழுகைக்காக நபி (ஸல்) எழுகின்ற நேரத்தில் ஓதும் துஆ :

ஆல இம்ரான் கடைசி 3:190 – 200 வரை உள்ள வசனங்கள்

ஹிஸ்னுல் முஸ்லிம் 9B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 9B

இந்த ஹதீஸை பற்றி அறிவிப்பாளர்கள் வரிசையில் அறிஞர்களுக்கிடையில் சர்ச்சை இருக்கிறது

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قام أحدكم عن فراشه ثم رجع إليه فلينفضه بصنفة إزاره ثلاث مرات فإنه لا يدري ما خلفه عليه بعد فإذا اضطجع فليقل باسمك ربي وضعت جنبي وبك أرفعه فإن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين فإذا استيقظ فليقل الحمد لله الذي عافاني في جسدي ورد علي روحي وأذن لي بذكره وفي الباب عن جابر وعائشة قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن وروى بعضهم هذا الحديث وقال فلينفضه بداخلة إزاره

《☆》 அபூஹுரைரா (ரலி) – உங்களிலொருவர் படுக்கையிலிருந்து எழுந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வந்தால் உங்கள் ஆடைகளால் அந்த விரிப்பை 3 முறை தட்டி விடுங்கள். நீங்கள் சென்ற பின்னர் அங்கு என்ன இருந்தது என்று அறியமாட்டீர்கள். அவர் அந்த விரிப்பில் தூங்கினால் கூறட்டும்

⬇️↔️ باسمك ربي

யா அல்லாஹ் உனது பெயரைக்கொண்டு

⬇️↔️ وضعت جنبي

என்னுடைய விலாவை(புறத்தை வைத்தேன்)

⬇️↔️ وبك أرفعه

உன் பெயரைக்கொண்டே உயர்த்துவேன்

⬇️↔️ فإن أمسكت نفسي

நீ எனது உயிரைப்பிடித்துக்கொண்டால்

அதற்கு இரக்கம் காட்டு ↔  فارحمه

நீ அதை விட்டுவிட்டால் ↔ وإن أرسلتها

⬇️↔️ فاحفظها بما تحفظ به عبادك الصالحين

உனது நல்லடியார்களுடைய உயிர்களை பேணுவது போல பேணிக்கொள்.

🍁மேலும் இந்த துஆ வை கூறிவிட்டு அவர் விழித்தெழுந்தால் அவர்

الحمد لله الذي عافاني في جسدي ورد علي روحي وأذن لي بذكره

🍁இதை ஓதிக்கொள்ளட்டும்.

பலர் இந்த துஆவை தூங்க போகும்போது ஓதுவர் ஆனால் இதன் வார்த்தைகளை பார்த்தால் தூங்கி எழுந்து எங்காவது சென்று வந்து பிறகு படுக்க நினைக்கையில் ஓதும் துஆ என இதன் வார்த்தைகளை பார்த்தால் அறிய முடிகின்றது.

🍁புகாரியில் இந்த ஹதீஸை 7393 இல் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் அவர்களிடமிருந்து சயீத் அல் மக்பூரி என்பவர் அறிவிக்கிறார்கள்.

புகாரியில் தூங்கி எழுந்து இதை சொல்லுங்கள் என்று வரவில்லை.

🍁 சயீத் அல் மக்பூரி அவர்களிடமிருந்து பலர் இதை அறிவித்திருந்தாலும் யாரும் விழித்தெழுந்தால் இதை கூறவேண்டும் என்று அறிவிக்கவில்லை

ஆனால் சயீத் அல் மக்பூரி அவர்கள் மூலமாக அறிவிக்கும் முஹம்மத் இப்னு இஜ்லான் என்பவர் மட்டுமே இதை அறிவிக்கிறார்கள். முஹம்மத் இப்னு இஜ்லான் இவர் பலமானவரல்ல. குறிப்பாக அபூஹுரைரா (ரலி) வை தொட்டும் வரும் ஹதீஸ்கள் விஷயத்தில் இவருக்கு சில சிக்கல்கள் இருக்கிறது.

🍁ஷேக் அல்பானி (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்), திர்மிதி போன்றவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இது திக்ர் சம்மந்தப்பட்ட விஷயத்தால் இந்த ஹதீஸை ஹஸன்(ஏற்றுக்கொள்ளத்தக்கது) என்ற தரத்திலேயே நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 9A

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 9A

فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ

தூக்கத்திலிருந்து விழித்தால்: பிறகு எனது உடலில் ஆரோக்கியத்தை தந்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.எனது ரூஹை திருப்பி தந்தவனுக்கே. அவனை நினைவு கூற அனுமதி தந்தானே (ஸுனன் திர்மிதி – 3401)

ஹிஸ்னுல் முஸ்லிம் 8B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 8B

حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي أَوْ دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلَاتُهُ

《☆》 உபாதா இப்னு ஸாமித் (ரலி) யாரொருவர் திடீரென தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறாரோ மேலும்

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

என்று கூறிவிட்டு பிறகு

 اللَّهُمَّ اغْفِرْ لِي

என்று கூறுகிறாரோ அல்லது துஆ கேட்கிறாரோ அவருக்கு பதிலளிக்கப்படும். அவர் உளூ செய்து தொழுதால் அந்த தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்.(புஹாரி)

ஹிஸ்னுல் முஸ்லிம் 8A

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 8A

இரவில் தூக்கத்திற்கு இடையில் திடீரென விழித்தெழுந்தால்

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ , فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , لَهُ الْمُلْكُ , وَلَهُ الْحَمْدُ , وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ , سُبْحَانَ اللَّهِ , وَالْحَمْدُ لِلَّهِ , وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ , وَاللَّهُ أَكْبَرُ , وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ , ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي , غُفِرَ لَهُ ” , قَالَ الْوَلِيدُ : أَوْ قَالَ : دَعَا اسْتُجِيبَ لَهُ , فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلَاتُهُ

யாரொருவர் இரவில் திடீரென விழித்தெழுந்து எழும் நேரத்தில் இந்த துஆ வை ஓதுகிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.அல்லது நபியவர்கள் இப்படி கூறியிருக்கலாம் அவர் துஆ செய்தால் பதிலளிக்கப்படும். அவர் எழுந்து உளூ செய்து விட்டு தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்

من تعار من الليل

تعارَّ

இந்த வார்த்தைக்கு சிலர் விழித்தெழுந்தால், தூக்கமின்மையால் உருண்டு புரள்வது, என்றெல்லாம் பல விதமான கருத்துக்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் இது சாதாரணமான தூக்கத்தில் விழித்தெழும் அந்த அமைப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.

⬇️↔ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவர் எவரும் இல்லவே இல்லை

அவன் தனித்தவன் ↔  وَحْدَهُ

⬇️↔ لَا شَرِيكَ لَهُ

அவனுக்கு எந்த இணையும் இல்லை

ஆட்சி அவனுக்குரியது ↔  لَهُ الْمُلْكُ

புகழ் அவனுக்குரியது ↔  وَلَهُ الْحَمْدُ

⬇️↔ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்

அல்லாஹ் தூய்மையானவன் ↔ سُبْحَانَ اللَّهِ

⬇️↔ وَالْحَمْدُ لِلَّهِ

புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது

⬇️↔ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ

மேலும் வணக்கத்திற்குரியவன் அவனைத்தவிர வேறு யாருமில்லை

⬇️↔ وَاللَّهُ أَكْبَرُ

மேலும் அல்லாஹ் மிகப்பெரியவன்

முயற்சியுமில்லை ↔  وَلَا حَوْلَ

பலமுமில்லை ↔ وَلَا قُوَّةَ

⬇️↔ إِلَّا بِاللَّهِ 

அல்லாஹ்வைக்  கொண்டே அன்றி

⬇️↔ الْعَلِيِّ الْعَظِيمِ 

மிக உயர்ந்தவன் மகத்துவமிக்கவன்

⬇️↔ رَبِّ اغْفِرْ لِي

என்னுடைய இறைவனே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக

(இப்னு மாஜா)

ஹிஸ்னுல் முஸ்லிம் 7C

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 7C

Book :80 புஹாரி

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ وَإِذَا أَصْبَحَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ)). [ صحيح البخاري عن حذيفة

《☆》ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) தூங்கச்சென்றால் اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ என்று கூறுவார்கள்.யா அல்லாஹ்! உன் பெயரைக்கொண்டு தான் நான் உயிர் பெறுகிறேன் மேலும் மரணிக்கிறேன்

وَإِذَا أَصْبَحَ காலையில் விழித்தெழுந்தால்

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

என்று கூறுவார்கள்.

7395عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ ، قَالَ : بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا ، فَإِذَا اسْتَيْقَظَ قَالَ : الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا ، وَإِلَيْهِ النُّشُورُ

《☆》அபூதர் (ரலி) வின் அறிவிப்பில் நபி (ஸல்)

بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا

உன்னுடைய பெயரைக்கொண்டு ↔ بِاسْمِكَ

நாங்கள் மரணிக்கிறோம் ↔  نَمُوتُ

⬇️↔ وَنَحْيَا 

மேலும் நாங்கள் உயிர்த்தெழுகிறோம்

(புஹாரி)