ஹிஸ்னுல் முஸ்லிம் 7B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 7B

Book : 80 புஹாரி

மற்றொரு அறிவிப்பில்

وعن حُذَيْفَةَ رضي اللَّه عنه قال : : كان النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدهُ تَحْتَ خَدِّهِ ، ثمَّ يَقُولُ : « اللَّهُمَّ بِاسْمِكَ أمُوتُ وَ أَحْيَا » وإذا اسْتيْقَظَ قَالَ : «الحَمْدُ للَّهِ اَلَّذي أَحْيَانَا بعْدَ مَا أَمَاتَنَا وإليه النُّشُورُ » . رواه البخاري

⬇️↔ إذا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ

(நபி ஸல்)இரவில் தன் படுக்கைக்கு சென்றால்

⬇️↔ وَضَعَ يَدهُ تَحْتَ خَدِّهِ

தனது கையை கன்னத்திற்கு கீழ் வைப்பார்கள்

பிறகு கூறுவார்கள் ↔  ثمَّ يَقُولُ

اللَّهُمَّ بِاسْمِكَ أمُوتُ وَ أَحْيَا

யா அல்லாஹ் ↔ اللَّهُمَّ  

உன்னுடைய பெயரைக்கொண்டு ↔ بِاسْمِكَ

நான் மரணிக்கிறேன் ↔  أمُوتُ

மேலும் உயிர்பெறுகின்றேன் ↔ وَ أَحْيَا  

⬇️↔ وإذا اسْتيْقَظَ قَالَ

அவர் விழித்தெழுந்தால் கூறுவார்.

الحَمْدُ للَّهِ اَلَّذي أَحْيَانَا بعْدَ مَا أَمَاتَنَا وإليه النُّشُورُ

عَنْ حُذَيْفَةَ قَالَ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ قَالَ‏:‏ بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا، وَإِذَا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ قَالَ‏:‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

  1. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால்بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا ‘பிஸ்மிக்கல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்)’ என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழுகிறபோது, ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 7A

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 7A

اذكار الاستيقاظ – விழிக்கும் நேரத்தின் துஆக்கள்

மொழியர்த்தம்

منامகனவு

يقظةநினைவு الاستيقاظவிழிக்கும் நேரம்

الحمد لله الذى احيانا بعدما اماتنا واليه النشور

⬇️↔ الحمد لله

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே

⬇️↔ الذى احيانا

என்னை உயிர்ப்பித்தவன்

பிறகு ↔ بعد  

ما اماتنا ↔ எமது மரணத்திற்கு

⬇️↔ واليه النشور

அவன் பக்கமே எழுப்பப்படுவோம்

🍁எனது மரணத்திற்கு பிறகு என்னை எழுப்பிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

ஆதாரம் :

ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்

عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: ((بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا))، وَإِذَا قَامَ قَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

  1. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா‘(بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا) ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது

‘الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

 

 

ஹிஸ்னுல் முஸ்லிம் 6

 

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 6

இஹ்ஸான் :

يا رسول الله ما الإحسان قال أن تعبد الله كأنك تراه، فإنك إن لم تره فإنَّه يراك

நபி (ஸல்) ளிடம் இஹ்ஸான் என்றால் என்ன என்று கேட்கப்பட்டபோது நீ அல்லாஹ்வை பார்க்க முடியாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இபாதத் செய்தல்.

🔷இஹ்ஸான் என்ற ஒரு நிலையை அடைவதற்கு திக்ருகளும் துஆக்களும் பெரிதளவில் உதவும்.

🔷திக்ருகளுடன் ஷைத்தானுடன் போராடுபவனும் ,திக்ரில்லாமல் ஷைத்தானுடன் போராடுபவனும் ஆயுதத்துடன் யுத்தம் செய்பவனும் ஆயுதம் இல்லாமல் யுத்தம் செய்பவனையும் போலாவான்.  

ஹிஸ்னுல் முஸ்லிம் 5

 

 

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 5

நாம் ஏன் இந்த புத்தகத்தை கற்கப்போகிறோம்?

 

  • நாம் ஒரு திக்ர் செய்கிறோம் அதன் இம்மை மறுமை பலன்  என்ன என்று தெரியவேண்டுமென்றால் அதன் கருத்துக்கள் கட்டாயமாக நமக்கு  தெரிந்திருக்க வேண்டும்.
  • அறிவிப்பாளர்கள் வரிசை பார்த்து ஸஹீஹ் ஆனதா ளயீஃப் ஆனதா என்று அதன் நம்பகத்தன்மையை ஆய்வோம்.
  • ஒரு திக்ர் படிக்கும்போது அதன் சிறப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

لا يزال لسانك رطبا من ذكر الله

நபி (ஸல்)  – உன்னுடைய நாவு அல்லாஹ்வுடைய திக்ரில் ஈரமாகவே இருக்கட்டும் என கூறியிருக்கிறார்கள்.

சூரா அர்ரஃது 13:28

ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ

மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன….

ஹிஸ்னுல் முஸ்லிம் 4

 

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 4

எவ்வாறு  படிக்கப்போகிறோம்?

திக்ருகளை 6 வகையாக பிரிப்போம்

 

  • اذكار العادات அன்றாடம் நாம் சொல்லக்கூடிய பிரார்த்தனைகள்
  • اذكار العبادات தொழுகை நோன்பு சகாத் போன்ற இபாத்தோடு தொடர்புடைய  பிரார்த்தனைகள்
  • اذكار بعد الصلاة தொழுகைக்கு பிறகு ஓதும் துஆக்கள்
  • اذكار الصباح والمساء காலை மாலை துஆக்கள்.
  • اذكار الظروف الخاصة சந்தர்ப்ப துஆக்கள்
  • தூங்கும் பொழுதும் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதும் ஓதும் துஆக்கள்

 

 

ஹிஸ்னுல் முஸ்லிம் 3

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 3

🔷சயீத் அல் கஹ்தான் என்ற இந்த நூலாசிரியர் எழுபதிற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்.

🎋وظلمات البدعة في ضوء الكتاب والسنة குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பித்அத்தின் இருள்கள்.

🎋نور التوحيد وظلمات الشرك في ضوء الكتاب والسنة தவ்ஹீதின் ஒளி குர் ஆன்  சுன்னத் அடிப்படையில்,

🎋குர் ஆன்  சுன்னத் ஒளியில் ஜகாத்,

🎋குர் ஆன் சுன்னத் அடிப்படையில் பிரயாணத்தொழுகை.

என நேர்த்தியான முறையில் அழகிய நடையில் தொகுத்திருக்கிறார் என்பதை காண முடிகிறது. தற்போது அவர் ரியாத்தில் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.

🔷ஹிஸ்னுல் முஸ்லிம் என்ற இந்த நூல் நாற்பத்து மூன்று  மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளது.

🔷இந்த நூலுக்கு விரிவுரையும் வந்திருக்கிறது. அதை தன்னுடைய மேற்பார்வையில் வேறொரு விரிவுரையை மாற்றியமைத்தார். திக்ரின் சிறப்புக்களாக இமாம் இப்னுல் கைய்யிம்  அவர்களது தொகுப்பில் ஐம்பதிற்கும்  மேற்பட்ட பதிவுகளை அதில் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

நூலின் பிரதிகள் பற்றிய குறிப்பு:

இதில் பல பிரதிகள் இருக்கின்றன.  அதில் சில கருத்துக்களை அவர் பின்வாங்கியது தெரியாமல் பழைய பிரதிகளை அச்சடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்னுல் முஸ்லிம் 2

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 2

ஆசிரியர் குறிப்பு:

🔷இவர் கஹ்தான் கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் ஆசீர் என்ற மாநிலத்தில் பிறந்தவர். சமகாலத்தில் வாழும் ஒருவராக இருக்கிறார். இவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் விபத்தில் காலமானார்கள். அதில் ஒருவரான அப்துர் ரஹ்மான் என்பவர் தம் பதினெட்டு  வயதிலேயே  மூன்று புத்தகங்களை எழுதிவிட்டார். அதில் மிக முக்கியமான புத்தகம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அவர்களை  பற்றியதாகும். சிறு வயதிலேயே மிகப்பேணுதலான நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்த அவர் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுது விட்டு  வருகையில் விபத்தில் காயமடைந்து  மரணமடைந்தார்

ஹிஸ்னுல் முஸ்லிம் 1

 

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 1

துஆக்கள் தொடர்பாக காலம் காலமாக பற்பல நூற்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

உதாரணம்:

🍁இமாம் நஸயீ عمل اليوم والليلة அமலு யவ்மின் வல்லய்லா என்ற துஆ புத்தகத்தை தொகுத்தார்கள்.

🍁இமாம் நவவீ ரஹ்  اذكار என்ற தனி நூல் துஆக்கள் தொடர்பாக  எழுதியுள்ளார்கள். அதில் ரியாளுஸ்ஸாலிஹீனையும் சேர்ப்பார்கள்.

🍁இமாம் இப்னு தைமிய்யாஹ் வின் “الكلم الطيب”அல்கலீமுதய்யிப் என்ற தொகுப்பு உள்ளது. இவரது இந்த நூலை ஸஹீஹ் ளயீப் என்ற அடிப்படையில் பிரித்து ஷேக் அல்பானீ (ரஹ்)அவர்கள் صحيح الكلم الطيب  என்று பிரித்து எழுதியுள்ளார்கள்.

🔷இவை போல துஆ க்கள் சம்மந்தமாக இருநூற்றுக்கும்  மேற்பட்ட தொகுப்புகள் உள்ளன.

🔷நவீன காலத்து தொகுப்புகள் ورد  விர்த் அல்லது  اوراد அவ்ராத் اذكار அத்கார் என்ற பெயரில் காணலாம்.

سعيد بن علي بن وهف القحطاني சயீத் இப்னு அலீ இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானீ  அவர்கள் الذكر والدعاء والعلاج بالرُّقى من الكتاب والسنة அதிலிருந்து அன்றாட துஆக்களை தனியாக பிரித்தெடுத்த நூல் தான் حصن المسلم ஹிஸ்னுல்  முஸ்லீம் என்ற நூல்.

حصن المسلم ஒரு முஸ்லிமின் அரண்

حصن – حصون – கோட்டை

ஆதாரம்:

சூரா அல் ஹஷர் 59:2

وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ

தொழுகையின் முக்கியத்துவம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5

தொழுகையின் முக்கியத்துவம்

🍒அப்துல்லாஹ் இப்னு ஷகீக் என்ற தாபிஈ-இன் கருத்து –  தொழுகையை தவிர மற்ற எந்த அமலையும் விட்டுவிட்டால் ஒருவர் காஃபிராகிவிடுவார் என ஸஹாபாக்கள் கருதவில்லை.

ஸூரத்துல் முஃமினூன் 23:1; 2; 9; 10

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

(1)ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏

(2)அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏

(9)மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏

(10)இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.

ஸூரத்துல் பகரா 2:153

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

தொழுகையின் முக்கியத்துவம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

தொழுகையின் முக்கியத்துவம்

 عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : { بين الرجل وبين الكفر

ترك الصلاة }

🍒 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கும் இறைநிராகரிப்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதே (புஹாரி)

 قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها

فقد كفر

🍒 புரைதா (ரலி) – நபி (ஸல்) நமக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகை தான் அதை விட்டவர் அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்(அஹ்மத், திர்மிதி, நஸயீ,இப்னு மாஜா, அபூதாவூத்)

🍒 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று சொல்லி தொழுகையை நிலை நாட்டி ஜகாத் கொடுக்கும் வரை மக்களுடன் போர் செய்ய நான் ஏவப்பட்டுள்ளேன். எவர் அதை செய்தாரோ அவர் என்னிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொண்டார்கள்.