தொழுகையின் முக்கியத்துவம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

தொழுகையின் முக்கியத்துவம்

ஸூரத்து மர்யம் 19:59

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43

فِىْ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوْنَۙ‏

(40)(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

عَنِ الْمُجْرِمِيْنَۙ‏

(41)குற்றவாளிகளைக் குறித்து-

مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏

(42)“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏

(43)அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

தொழுகையின் முக்கியத்துவம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொழுகையின் முக்கியத்துவம்

🍒ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும். 

🍒நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும்.

🍒நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த உடன் அல்லது ஞாபகம் வந்த உடன் அதை தொழ வேண்டும்.

 

தொழுகையின் முக்கியத்துவம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

தொழுகையின் முக்கியத்துவம்

🍒நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள்.

🍒அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான்.

🍒அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான்.

🍒நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி)

🍒நபி (ஸல்) அவர்களது மரண நேரத்தில் செய்த உபதேசத்தில் இறுதியானது தொழுகை தொழுகை என்பதாகும்.

🍒இஸ்லாத்தின் கடமைகள் ஒவ்வொன்றாக விடுபட்டுபோகும் அதில் இறுதியாக விடுபடுவது தொழுகையாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

நிஃபாஸ்

 ஹைல் மற்றும் நிஃபாஸின் நேரத்தில் தொழவோ, நோன்பு வைக்கவோ கணவன் மனைவி ஒன்று சேரவோ கூடாது.

ஸூரத்துல் பகரா 2:222

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

❊ நபி (ஸல்) – உடலுறவைத்தவிர மனைவியுடன் அந்த நேரத்தில் நீங்கள் சேர்ந்து வாழலாம்(முஸ்லீம்)

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

நிஃபாஸ்

عن أم سلمة قالت كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم

أربعين يوما

 உம்மு ஸலமா (ரலி) – பெருந்தொடக்கு ஏற்பட்ட பெண்கள் 40 நாட்கள் வரை எதிர்பார்த்திருப்பார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி)

சிலர் இதை தவறாக விளங்கி 40 நாள் வரை சுத்தமாகிய பின்னும் காத்திருப்பது தவறாகும்.

 அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் பிரசவித்த பெண் சுத்தமான பின் தொழ ஆரம்பித்து விட வேண்டும். ஆனால் 40 நாட்களுக்கு பின்னும் இரத்தம் வந்தால் அவர்கள் சுத்தமாகி தொழுகையை தொடர வேண்டும்.

 40 நாட்களுக்கு மேல் பெருந்தொடக்கு உள்ளவர்கள்; குளித்துவிட்டு  தொழ வேண்டும். பாங்கு சொன்னதற்கு பிறகு இரத்தம் வரும் பகுதியை சுத்தம் செய்துவிட்டு  உளூ செய்து விட்டு  இரத்தம் வெளியேறாமல் துணியை வைத்து விட்டு தொழ வேண்டும்.

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

நிஃபாஸ்

நிஃபாஸ் – பிள்ளைப்பேரின் காரணமாக வெளியேறக்கூடிய இரத்தம்.(குறைமாதத்தில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் சரியே)

பிள்ளைப்பெறின் நேரத்திலோ அல்லது பிள்ளைப்பேறுக்கு முன்னரோ பிள்ளை பேருக்கு பின்னரோ வரும் இரத்தத்தை நிஃபாஸ் என்போம்.

கால அளவு

  •  குறைந்த காலத்திற்கு எந்த அளவும் இல்லை
  •  குழந்தை பிறந்து சிறிது நேரத்திலே கூட இரத்தம் நின்று விடலாம் அல்லது சில குழந்தைகள் இரத்தம் இல்லாமலேயே பிறக்கலாம். எவ்வாறாயினும் எத்தனை விரைவில் அந்த இரத்தம் நின்று விட்டாலும் அந்த பெண் பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாகி விடுகிறாள்.

அதிகமான காலம் 40 நாள் வரை இருக்கலாம். அதற்குப்பின்னும் இரத்தப்போக்கு இருந்தால் அதை நாம் பெருந்தொடக்காக கருத முடியாது.

மாதவிடாய் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

மாதவிடாய்

மாதவிடாயின் கால எல்லை

⚜ சில அறிஞர்கள் குறைந்தபட்ச நாட்கள் 1 என்றும் நடுநிலையாக 7 என்றும் அதிகபட்சமாக 15 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு காலஅளவு குறிப்பிடப்படவில்லை.

சில அறிஞர்களின் கருத்துக்கள்

⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸிலும் மாதவிடாயை பற்றி சில சட்டங்கள் கூறியிருக்கிறான். ஆனால் அதன் கால அளவை அதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மாதவிடாயிற்கும் இன்னொரு மாதவிடாயிற்கும் இடையில் எத்தனை கால அளவு இருக்க வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அதற்கு கால அளவை கூற முடியாது.யார் இதற்கு மாற்றமாக கால அளவு நிர்ணயித்து கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக கருத்து தெரிவிக்கின்றனர் (பதாவா இப்னு தைமிய்யாஹ் 19 பாகம் 237 பக்கம் )

⚜ ஷேக் உஸைமீன் (ரஹ்) –

الحيض متى جاء فهو حيض ، سواء طالت المدة بينه وبين الحيضة السابقة أم

قصرت فإذا حاضت وطهرت

⚜மாதவிடாய் எந்த நேரத்தில் வந்தாலும் அது மாதவிடாய் தான். முதல் மாதவிடாயிற்கும் இரண்டாவது மாதவிடாயிற்கும் இடையிலுள்ள கால எல்லை நீளமாகவோ குறைவாகவோ இருக்கலாம். இரத்தம் வந்தால் அது மாதவிடாயாகவே கருதப்படும்.

⚜ ஆனால் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து உதிரப்போக்கு வந்துகொண்டே இருந்தால் அவர்கள் المستحاضة என்ற நிலையில் இருப்பார்கள். அவர்கள் நோய் வரும் முன் சரியான உதிரப்போக்கு இருந்த காலத்தை வைத்து கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

⚜ ஷேக் அப்துல் கரீமுல் ஹுதைர் என்ற ஹதீஸ் இரண்டு ஹைலுக்கு மத்தியில் எந்த கால எல்லையும் நிர்ணயிக்க முடியாது. எப்போது ஒரு பெண் மாதவிடாயின் இரத்தத்தை காண்கிறாளோ அப்போது அவள் மாதவிடாய் காலம் தொடங்கும். அது துர்நாற்றமுள்ள கருப்பு கலந்த நிறமான இரத்தமாக இருக்கலாம் என உதாரணம் கூறினார்கள்.

⚜ ஆகவே மாதவிடாய்க்கான சரியான கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என்பதே சரியான கருத்தாகும்.

மாதவிடாய் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

மாதவிடாய்

(2) சிவப்பு நிறம்

(3) மஞ்சள் நிறம்

(4) கலங்கிய அழுக்கு நிறம்

⚜ அல்கமா இப்னு அபீஅல்கமா அவர்களது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.அக்காலத்தில் பெண்கள் தங்களது மாதவிடாய் தூய்மையடைந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள ஆயிஷா (ரலி) விடம் தங்களது வெளியேறும் நீரின் நிறத்தை ஒரு பஞ்சு போன்ற துணியில் வைத்து அனுப்புவார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அந்த பஞ்சில் வெள்ளை நிறத்தை காணும் வரை அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள் (முவத்தா மாலிக், இமாம் புஹாரி தன்னுடைய தலைப்பில் இந்த செய்தியை குறிப்பிட்டிருக்கிறார்கள்)

⚜ இது மாதவிடாயின் கால எல்லையில் இருந்தால் தான் இதை மாதவிடாயாக கருத வேண்டும்.

⚜உம்மு அத்தீயா (ரலி) – சுத்தமானதற்கு பிறகு மஞ்சள் நிறத்தையோ கலங்கிய நிறத்தையோ நாங்கள் மாதவிடாயாக கணக்கெடுக்க மாட்டோம் (புஹாரி)

மாதவிடாய் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

மாதவிடாய்

الحيض في اللغة العربية هو السيلان؛

ஹைல் என்ற சொல்லுக்கு அரபியில் நேரடி அர்த்தம் ஓடுதல்(இரத்தம்)

ஆரோக்கியமான நேரத்தில் ஒரு பெண்ணுடைய உறுப்பிலிருந்து வெளியாகக்கூடிய இரத்தத்திற்கு பெயர் தான் ஹைல் எனப்படும்.

⚜ அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி ஒரு பெண் 9 வயதிற்கு பிறகு பூப்பெய்கிறாள்  என்று கருதப்படுகிறது.

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் எந்த வயதில் முடியவேண்டும் என்ற எந்த வரைமுறையும் காணப்படவில்லை.

மாதவிடாய் இரத்தத்தின் நிறங்கள்

(1) கருப்பு நிறம்

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களுக்கு தொடர் உதிரப்போக்கு (استحاضة) உள்ள பெண்ணாக இருந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தன் நிலையை பற்றி கூறி மார்க்கச்சட்டம் கேட்டபோது நபி (ஸல்) மாதவிடாய்க்கான கருப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருந்தால் நீங்கள் தொழாதீர்கள் அது வேறு நிறத்திலிருந்தால் அது நோயின் காரணத்தினாலாக இருக்கலாம் ஆகவே உளூ செய்து தொழுதுகொள்ளுங்கள்.(ஸுனன் அபீதாவுத், நஸயீ, ஸஹீஹ் இப்னு ஹிப்பான், ஸுனன் தார குத்னீ – இமாம் ஹாக்கிம் இமாம் முஸ்லிம் அவர்களது நிபந்தனைகளுக்கு இது உட்ப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கிறார்கள்)

தயம்மும் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 1

சுத்தம் – தயம்மும்

🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அந்த தண்ணீரை எடுக்கச்சென்றால் ஆபத்து வரும் என்ற பட்சத்தில் தயம்மும் செய்யலாம்.

🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அதை பயன் படுத்தினால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் போய் விடும்.

அலீ (ரலி) – ஒரு மனிதர் ஒரு பிரயாணத்தில் செல்லும்போது அவருக்கு குளிப்பு கடமையான நிலை ஏற்பட்டு அந்த தண்ணீரை உபயோகித்தால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் ஆகிவிடும் என்றிருந்தால் அப்போது தயம்மும் செய்வது தான் சிறந்தது (தாரகுத்னீ)