தயம்மும் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6

சுத்தம் – தயம்மும்

🏵 கடுமையான குளிர்

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – “தாதுஸ்ஸலாஸில்” என்ற போருக்கு நான் அனுப்பப்பட்ட போது குளிர் கடுமையாக இருந்தது. அத்துடன் எனக்கு குளிப்பும் கடமையானது. குளித்தால் இறந்துவிடுவேன் என்று எனக்கு பயம் உண்டானது. எனவே, தயம்மும் செய்த உடன் வந்த தோழர்களுக்கு இமாமாக ஸூபுஹ் தொழவைத்தேன். நாங்கள் நபிகளாரிடம் வந்த போது நடந்த சம்பவத்தை தோழர்கள் கூறினார்கள். நபி (ஸல்) என்னிடம் கேட்டார்கள். “அம்ரே! உங்களுக்கு குளிப்புக் கடமையான நிலையில் தோழர்களுக்கு சுபுஹூத் தொழுகையை தொழ வைத்தீர்களா?என்று அதற்கு நான் கூறினேன் எனக்கு இந்த ஆயத்து நினைவிற்கு வந்தது, ஸூரத்துன்னிஸாவு 4:29.(…நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்)என்ற வசனம் நினைவிற்கு வந்தது ஆதலால் நான் குளிக்காமல் தயம்மும் செய்து மக்களுக்கு தொழ வைத்தேன் என்று கூறியதை கேட்டு நபி (ஸல்) சிரித்தார்கள் (அஹ்மத், அபூதாவூத், ஹக்கீம், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான்)

தயம்மும் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5

சுத்தம் – தயம்மும்

🏵 நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது

நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது 

ஜாபிர் (ரலி) -நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவருடைய தலையில் ஒரு கல் பட்டதால் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அவருக்கு குளிப்பும் கடமையானது. “எனக்கு தயம்மும் செய்வதற்கு ஏதேனும் அனுமதி உள்ளதா”? என்று தம் தோழர்களிடம் கேட்டார். “தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தயம்மும் செய்வதற்கு அனுமதியில்லை” என அவர்கள் கூறினார்கள். அதைக்கேட்ட அவரும் குளித்தார். அதனால் மரணமடைந்துவிட்டார். நாங்கள் நபிகளாரிடம் வந்து விவரம் கூறிய போது நபி (ஸல்)- அவரை அவர்கள் கொன்றுவிட்டனர்! அவர்களை அல்லாஹ்-வும் மரணமடைய செய்வானாக! தெரியாவிட்டால் அவர்கள் விசாரித்திருக்கலாமே! கேள்விதான் அறியாமையின் மருந்து! அவர் தயம்மும் செய்யவோ காயமான இடத்தில் ஒரு துணியால் கட்டி அதன் மேல் மஸஹ் செய்து உடலின் மீதிப் பாகங்களை  கழுவினாலோ போதுமானது தானே!!!!!
(அபூதாவூத், தாரகுத்னீ)

தயம்மும் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

சுத்தம் – தயம்மும்

[highlight color=”green”]எந்த காரணங்களுக்கு தயம்மும் செய்யலாம்?[/highlight]

🏵 தண்ணீர் இல்லையென்றால்

ஆதாரம் :

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) உடன் ஒரு பிரயாணத்திலிருந்தபோது நபி (ஸல்) எங்களுக்கு தொழுவித்தார்கள் அப்போது ஒரு மனிதர் தொழாமல் தனிமையிலிருந்தார்கள். நபி (ஸல்) அவரிடம் காரணம் கேட்டபோது அவர் எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது தண்ணீருமில்லை ஆகவே நான் தொழவில்லையென்று கூறினார்கள். நீங்கள் மண்ணை வைத்து தயம்மும் செய்திருக்கலாமே என்று நபி (ஸல்) உபதேசித்தார்கள்(புஹாரி, முஸ்லீம்)

அபூதர் (ரலி) -10 ஆண்டுகள் வரை தண்ணீரில்லையென்றாலும் மண் அதற்கு பகரமாக சுத்தம் செய்யக்கூடியதாக இருக்கிறது.(அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி-ஹசன் ஸஹீஹ்)

தயம்மும் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

சுத்தம் – தயம்மும்

[highlight color=”green”]தயம்மும் எப்போது கடமையாக்கப்பட்டது?[/highlight]

ஆயிஷா (ரலி)-நபியவர்களுடன் ஒரு பிரயாணத்தில் நாங்கள் இருந்தோம். ‘பைதா என்ற இடத்தை அடைந்த போது என்னுடைய ஒரு மாலை அறுந்து எங்கேயோ விழுந்துவிட்டது. அதனைத் தேடுவதற்காக நபியும், நபித்தோழர்களும் அங்கேயே தங்கினார்கள். அந்த இடத்திலோ, எங்களிடத்திலோ தண்ணீர் இருக்கவில்லை. மக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஆயிஷா செய்த வேலையைப் பார்த்தீர்களா?” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களோ என் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த நிலையில், அபூபக்கர் (ரலி) என்னை நோக்கி வேகமாக வந்தார். வந்தவர் என்னிடம் சப்தம் போட்டார். அல்லாஹ் நாடிய அளவுக்கு என்னை குறை கூறி, தம் கைகளால் என் விலாப்புறத்தில் குத்தினார். அப்போது நபி (ஸல்) என்னுடைய மடியில்தலையை வைத்துப் படுத்துக் கொண்டு இருந்ததால், நபியவர்கள் விழித்துவிடக்கூடும் என்பதால் நான் அசையாமல் இருந்தேன். அப்போது  தான் அல்லாஹ் தயம்முமின் ஆயத்தை இறக்கினான்.உஸைத் இப்னு ஹுலைல் (ரலி) – அபூபக்கர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரே உங்கள் குடும்பத்தின் மூலமாக அல்லாஹ் இந்த சமூகத்திற்கு தந்த பல அருள்களில் இதுவும் ஒன்று என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் எந்த ஒட்டகத்தில் பிரயாணம் செய்து வந்தோமோ அதற்கு கீழ் தான் என்னுடைய மாலை இருந்தது.(புஹாரி, முஸ்லீம்)

தயம்மும் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

சுத்தம் – தயம்மும்

جعلت الأرض كلها لي ولأمتي [ ص: 324 ] مسجدا وطهورا ، فأينما أدركت

رجلا من أمتي الصلاة فعنده مسجده وعنده طهوره }  أحمد ) .

அபூ உமாமா (ரலி) – பூமியெல்லாம் என்னுடைய உம்மத்திற்கு தொழுமிடமாகவும் சுத்தமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எங்கிருந்த போதும் அவருக்கு தொழுகை வந்து விட்டால் அங்கேயே அவருடைய தொழுகைக்காக உளூ செய்யக்கூடிய பொருள் இருக்கிறது. (அஹ்மத்)

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – எனக்கு முன் சென்ற சமூகத்திற்கு கொடுக்கப்படாத 5 விஷயங்கள் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

 ஒரு மாத தொலைதூரத்திற்கு பயத்தை கொண்டு உதவி செய்யப்பட்டிருக்கிறேன், 

 எனக்கு பூமி முழுவதும் தொழுமிடமாகவும் சுத்தம் செய்யுமிடமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது, என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதருக்கு எங்கு தொழுகை வந்தாலும் அவர் தொழுது கொள்ளலாம்,

 எனக்கு கனீமத் (யுத்தத்தில் கிடைக்கும் பொருட்கள்) ஹலாலாக்கப்பட்டிருக்கிறது,

 சிபாரிசு செய்யும் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது,

 ஒவ்வொரு நபியும் அவர்களுடைய கூட்டத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார் நான் உலகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டிருக்கிறேன்.

தயம்மும் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

சுத்தம் – தயம்மும்

தயம்மும் – ஒன்றை நாடுவது

முகத்தையும் கையையும் தடவுவதற்காக சுத்தமான மண்ணை நாடுவது தொழுகை போன்ற வணக்கங்களை ஆகுமானதாக ஆக்குவதற்காக.

எதற்காக தயம்மும்?

கடமையான குளிப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அல்லது உளூ செய்ய முடியாத பட்சத்தில் தயம்மும் செய்யலாம்.

❤ ஸூரத்துன்னிஸாவு 4:43

وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ

تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا

غَفُوْرًا‏

 நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

❤ ஸூரத்துல் மாயிதா 5:6

ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ

تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ

 தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்

கடமையான குளிப்பு பாகம் – 13

ஃபிக்ஹ் பாகம் – 13

கடமையான குளிப்பு

[highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight]

 கடமையான குளியல் கணவன் குளித்த பாத்திரத்தில் மனைவியோ; மனைவி குளித்த பாத்திரத்தில் கணவனோ குளிப்பதில் எந்த தடையும் இல்லை.

❈ இப்னு அப்பாஸ் (ரலி) -நபி (ஸல்) சில மனைவிமார்கள் குளித்த பாத்திரத்தில் நபி (ஸல்) குளிக்க போனபோது மனைவி நான் கடமையான குளியல் குளித்த தண்ணீராயிற்றே என்று கேட்டபோது நபி (ஸல்) கூறுவார்கள் நீங்கள் பெருந்தொடக்காக இருந்திருக்கலாம் நீங்கள் குளித்த தண்ணீர் பெருந்தொடக்கு ஆகாது. (அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி – ஹசன் ஸஹீஹ்).

❈ ஆயிஷா (ரலி) நபி (ஸல்) உடன் ஒரே பாத்திரத்தில் குளித்திருக்கிறார்கள். நபி (ஸல்) எனக்கும் கொஞ்சம் தண்ணீர் இருக்கட்டும் என்று மாறி மாறி கூறிக்கொள்வார்களாம்.

❈ மனைவிமார்கள் அல்லாஹ் வின் அமானிதம் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

❈ யாரேனும் ஒரு பெண் முஃமினான கணவனை துன்புறுத்தினால் அவருக்காக நியமிக்கப்பட்ட ஹூருல் ஈன்கள் அவளை சபிக்கிறார்கள்.

கடமையான குளிப்பு பாகம் – 12

ஃபிக்ஹ் பாகம் – 12

கடமையான குளிப்பு

[highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight]

 பல குளிப்புகள் கடமையுள்ளவர்கள் ஒரே நிய்யத்தில் ஒரே குளியல் குளித்தால் போதுமானது

 கடமையான குளிப்பை குளித்ததற்கு பிறகு உளூ செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் குளித்ததற்கு பிறகு உளூ செய்ய மாட்டார்கள்

❖ இப்னு உமர் (ரலி) – கடமையான குளிப்பிற்கு பின்னால் உளூ செய்வேன் என்ற ஒரு மனிதரிடம் நீங்க உங்களை கஷ்டப்படுத்திக்கொள்கிறீர்கள். குளிப்பே போதுமானது என்று கூறினார்கள்.

❖ இப்னுல் அரபி என்ற சட்டமேதை கடமையான குளிப்பிற்குள் உளூவும் வந்துவிடும் என்பதில் உலமாக்களுக்கு இடையில் கருத்துவேறுபாடு இல்லை என்றார்கள்.

❖ குளிப்பு கடமையான நேரத்தில் நகம் வெட்டுவதோ முடி எடுப்பதோ வெட்டுவதோ தடை செய்யப்பட்டதல்ல.

கடமையான குளிப்பு பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11

கடமையான குளிப்பு

[highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight]

💠 அஸ்மா பின்த் யஸீத் (ரலி)-நபி (ஸல்) விடம் மாதவிடாய் பெண்கள் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டபோது இலந்தயிலை கலந்த தண்ணீரால் குளித்துவிட்டு மாதவிடாயின் இடத்தை கஸ்தூரியால் சுத்தப்படுத்துங்கள்-எவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கேட்டபோது- சுப்ஹானல்லாஹ் என்று நபி (ஸல்) சொன்னதும் ஆயிஷா (ரலி) ஒரு பஞ்சால் வாசனை திரவத்தை நனைத்து இரத்தம் வந்த இடத்தில் தேய்த்துக்கொள்ளுமாறு கற்றுக்கொடுத்தார்கள். இதை கூறிவிட்டு அன்சாரிப்பெண்கள் நல்லவர்கள் மார்க்க விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள் என ஆயிஷா (ரலி) கூறினார்கள்

(புஹாரி, முஸ்லீம்)

கடமையான குளிப்பு பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10

கடமையான குளிப்பு

[highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight]

பெண்களின் குளிப்பு

⚜ எல்லா முடிகளும் நனைய வேண்டும்

உம்மு ஸலமா (ரலி)-யா ரசூலுல்லாஹ் என்னுடைய முடி அடர்த்தியானது நான் கடமையான குளிப்பு குளிக்கும்போது பின்னிய முடியை அவிழ்க்க வேண்டுமா?-நபி (ஸல்)- 3 முறை தண்ணீர் தலை முழுவதும் தண்ணீர் ஊற்றினால் போதுமானது.பிறகு உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.(முஸ்லீம், திர்மிதி, அஹ்மத்)

⚜ உபைத் இப்னு உமைர் (ரலி) – ஆயிஷா (ரலி) கூறினார்கள்-பெண்கள் கடமையான குளிப்பின்போது தலை முடியை அவிழ்க்கவேண்டுமென்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறியதாக நான் கேள்விப்பட்டேன்-நானும் நபி (ஸல்) வும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம் நான் என்னுடைய தலையில் 3 அல்லுகளை தவிர ஊற்றவே இல்லை(முஸ்லீம், அஹ்மத்)