ஃபிக்ஹ் பாகம் – 6
காலுறையின் மீது மஸஹ் செய்தல்
[highlight color=”pink”]எத்தனை நாட்கள் மஸஹ் செய்யலாம்?[/highlight]
ஊர்வாசிகள் :
→ ஒரு இரவும் ஒரு பகலும்
பிரயாணிகள் :
→ 3 பகலும் 3 இரவுகளும்
சப்வான் இப்னு அஸ்ஸான் ரலி-நபி ஸல் எங்களிடம் ஏவினார்கள்-சுத்தமான நிலையில் காலுறை அணிந்திருந்தால் ஊரிலிருந்தால் ஒரு நாளும் பிரயாணத்தில் 3 நாட்களும் மஸஹ் செய்ய ஏவினார்கள். குளிப்பு கடமையான நிலை வந்தாலே தவிர அதை நாங்கள் கழட்டுவதில்லை (முஸ்னத் ஷாபிஈ, அஹ்மத், இப்னு ஹுஸைமா, திர்மிதி மற்றும் நஸயீ – இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று கூறுகிறார்கள்)
ஆயிஷா ரலி விடம் காலுறையில் மஸஹ் செய்வதை பற்றி நான் பத்வா கேட்டேன். அதற்கு ஆயிஷா ரலி அலீ ரலி அவர்களிடம் இதைப்பற்றி கேளுங்கள் அவர் என்னை விட மிக அறிந்தவர் என கூறினார்கள்-அலி ரலி கூறினார்கள் – நபி ஸல் பிரயாணிக்கு 3 இரவு 3 பகல்களும் ஊர்வாசிக்கு ஒரு இரவு ஒரு பகலும் அனுமதித்தார்கள்(அஹ்மத், முஸ்லீம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா).
கருத்துரைகள் (Comments)