உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

மர்ம ஸ்தானத்தை தொடுவது

مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ

 புஸ்ரா பின்த் சப்வான் (ரலி) – நபி (ஸல்) –  யாரேனும் ஒருவர் தன்னுடைய மர்ம உறுப்பை  தொட்டால் அவர் உளூ செய்யும் வரை தொழ வேண்டாம்(அஹ்மத், திர்மிதி-  ஸஹீஹ், அபூதாவூத், நஸயீ, புஹாரி – இது சம்மந்தமான விஷயத்தில் இது தான் ஆதாரப்பூர்வமானது )

 இப்னு அலீ (ரலி) – நபி (ஸல்) விடம் ஒரு மனிதர் கேட்டார்-ஒரு மனிதர் தன்னுடைய ஆணுறுப்பை தொட்டால் உளூ செய்ய வேண்டுமா? – நபி (ஸல்) – அதுவும் ஒரு உறுப்பு தான் ஆகவே உளூ முறியாது(அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னு ஹிப்பான் ரஹ்-ஸஹீஹ், இப்னுல் மதீனி -மேற்கூறப்பட்ட ஹதீஸை விட இது ஏற்புடையது)

ஆகவே மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் வேண்டுமென்றே தொட்டால் உளூ முறியும் தெரியாமல் பட்டால் உளூ முறியாது என்று ஒரு கருத்து இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

புத்தி நீங்கி விடுவது :

தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு புத்தி நீங்கி விடுதல் (உதாரணம் : பைத்தியம் பிடித்தல், மயக்கமடைதல்…..)

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

ஆழ்ந்த தூக்கம் :

சப்வான் இப்னு அஸ்ஸான்(ரலி) – நபி(ஸல்) – நாங்கள் பிரயாணத்திலிருந்ததால் 3 நாட்களுக்கு காலுறைகளை கழட்ட வேண்டாம் என்றும் குளிப்பு கடமையானால் கழட்ட வேண்டுமென்றும் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ காலுறையை கழட்ட தேவையில்லை என்று கட்டளையிட்டார்கள், (அஹ்மத், நஸயீ, திர்மிதி – ஸஹீஹ்)

 இந்த ஹதீஸின் மூலம் தூங்கினால் உளூ முறியும் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.

 அனஸ் (ரலி) – நபித்தோழர்கள் இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வருவார்கள் அப்போது நபி(ஸல்) தொழுவிக்க வரும் வரை தலைகள் சாய்ந்து போகும் வரை தூங்குவார்கள் பிறகு உளூ செய்யாமல் தொழுவார்கள். ( முஸ்லீம், ஸுனன் அபூதாவூத், திர்மிதி)

 ஷுஹபா (ரலி) – நபி (ஸல்) வின் தோழர்கள் தொழுகைக்காக எழுப்பப்படுவார்கள் அவர்கள் குறட்டை சத்தத்தை நான் கேட்டிருக்கிறேன் எழுந்து உளூ செய்யாமல் தொழுதார்கள்.

❈ இப்னுல் முபாரக் (ரஹ்) கருத்து : அவர்கள் உட்கார்ந்து தூங்கினார்கள் என்று நாங்கள் இதை புரிந்துகொள்கிறோம் என்றார்கள்.

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

முன்பின் துவாரத்தினால் ஏதேனும் வெளியாகுதல் :

1. சிறுநீர்

2. மலம் கழிப்பது

ஸூரத்துல் மாயிதா 5:6

அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;

3. பின் துவாரத்தினால் காற்று வெளியாகுதல்:

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் சிறு தொடக்கு ஏற்பட்டு விட்டால் அவர் உளூ செய்யும் வரை அவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒருவர் அபூஹுரைரா (ரலி) யிடம் – சிறுதொடக்கு என்றால் என்ன? – பின்துவாரத்தினால் காற்று போவது (புஹாரி, முஸ்லீம்).

(வயிற்றில் குழப்பம் ஏற்பட்டால் சந்தேகமேற்பட்டால்)

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சத்தத்தையோ, வாடையோ உணராத வரை தொழுகையிலிருந்து வெளியாக வேண்டாம் (முஸ்லீம்).

4. مني – இந்திரியம்

5. مذي – இச்சை நீர்

6. ودي – சிறுநீரும் பிறகு வரக்கூடிய ஒரு வழுவழுப்பான நீர்.

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11

உளூவின் சுன்னத்துக்கள்

உளூவின் காணிக்கையான தொழுகை :

அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. இதை தவிர வேறு எந்த மிகச்சிறந்த நற்செயலையும் நான் செய்யவில்லை”.

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10

உளூவின் சுன்னத்துக்கள்

தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது :

🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்)  தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள்

🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க ஒரு சாஊ-உம்மை விட சிறந்த மனிதர் நபி (ஸல்) விற்க்கே அந்த தண்ணீர் போதுமானதாக இருந்தது (அஹ்மத், தப்ரானீ)

துஆ

أَشْهَدُ أَنْ لَا إِلَـهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لَا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّـداً عَبْـدُهُ وَرَسُـولُـهُ

🌷 உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்ததற்கு பின்னால் – அஷ்ஹது அந் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு என்று ஓதினால் அவருக்கு சொர்க்கத்தின் 8 வாசல்கள் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசல் வழியாக நுழைவார். (முஸ்லீம்)

سُبْحـَانَكَ اللَّهُـمَّ وَبِحَمْدِكَ، أَشْهَـدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَـيْكَ

🌷 அபூ சயீத் அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) – யாரவது ஒருவர் உளூ செய்து அதற்கு பிறகு சுபானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன் லா இலாஹா இல்லா அன்த அஸ்தக்பிருக வ அதூபு இலைக் இதை ஓதினால் ஒரு துண்டில் நன்மை எழுதப்பட்டு ஒரு முத்திரையிடப்பட்டு பிறகு அது மறுமை வரை உடைக்கப்படாது(தப்ரானீ)

 

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9

உளூவின் சுன்னத்துக்கள்

முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்:

 நபி  (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள்.

 அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டபோது இது தான் ஆபரணங்கள் அணியக்கூடிய இடம் என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத் – இது அபூஹுரைரா (ரலி) வின் கருத்தாகும்  )

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8

உளூவின் சுன்னத்துக்கள்

இடை விடாமல் செய்வது:

💠 சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும்

இரண்டு  காதுகளையும் தடவுவது

💠 நபி (ஸல்)  தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்)

💠 இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் ஒருமுறை தடவினார்கள் (அஹ்மத், அபூதாவூத்)

💠 இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) இரண்டு ஆல்காட்டி விரலால் காதுகளில் உள் பகுதியையும்  பெருவிரலால் காதின் வெளிப்பகுதியை வைத்து மஸஹ் செய்வார்கள்.

 

 

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7

உளூவின் சுன்னத்துக்கள்

 வலதில் ஆரம்பிப்பது :

 இரண்டு உறுப்புக்களை

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்)

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ)

உறுப்புக்களை தேய்ப்பது :

 முதல் முறை நன்றாக தேய்த்து கழுவி விட்டு அடுத்தடுத்த முறைகள்  ஊற்றி கழுவ வேண்டும்.

உளூவின் சுன்னத்துகள் பாகம் 6

ஃபிக்ஹ் பாகம் – 6

உளூவின் சுன்னத்துக்கள்

விரல்களையும் குடைந்து கழுவுதல் :

 இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள்.

மூன்று முறை கழுவுவது :

 நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட அதிகமாக எவர் செய்கிறாரோ அவர் தவறிழைத்து விட்டார், எல்லை கடந்து விட்டார், அநியாயம் செய்து விட்டார் (அஹ்மத், நஸாயீ)

 உஸ்மான் (ரலி) – நபி(ஸல்) மூன்று முறை கழுவி உளூ செய்தார்கள் (முஸ்லீம்).

 நபி(ஸல்) ஒரு முறையும் உளூ செய்துள்ளார்கள் இரு முறையும் உளூ செய்துள்ளார்கள் மூன்று முறையும் உளூ செய்துள்ளார்கள்.

 மற்ற உறுப்புகளை மூன்று முறை கழுவினாலும் தலையை தடவுதல் காதை தடவுதல் ஒரு முறை தான் நபி(ஸல்) செய்துள்ளார்கள்.