உளூவின் சுன்னத்துகள் பாகம் 5

ஃபிக்ஹ் பாகம் – 5

உளூவின் சுன்னத்துக்கள்

[highlight color=”green”]தாடியை குடைந்து கழுவுவது[/highlight]

🌹 உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்)

🌹 அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி ஏவினான் என்று கூறினார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் பைஹகீ, ஹாகிம்)

🌹 இந்த நேரத்தில் தாடி வைப்பது கடமை அதை மழிப்பது ஹராம் என்பதையும் நாம் விளங்கியவர்களாக இருக்க வேண்டும்.

உளூவின் சுன்னத்துகள் பாகம் 4

ஃபிக்ஹ் பாகம் – 4

உளூவின் சுன்னத்துக்கள்

 லாகீத் (ரலி) – நபி (ஸல்) விடம் – உளூவை கற்றுத்தாருங்கள் – நபி (ஸல்)- முழுமையாக உளூ செய்யுங்கள் – விரல்களுக்கிடையில் குடைந்து கழுவுங்கள், மூக்கிற்கு தண்ணீர் செலுத்துங்கள் அதையும் அதிகப்படுத்துங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர (அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி – ஸஹீஹ் என கூறுகிறார்)

 வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் சீறி விடுவது சிறந்ததாகும்

உளூவின் சுன்னத்துகள் பாகம் 3

ஃபிக்ஹ் பாகம் – 3

உளூவின் சுன்னத்துக்கள்

الاستنشاق والاستنثار

மூக்கில் தண்ணீர் செலுத்தி வெளியேற்றல் :

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீர் செலுத்தி சீறி விடட்டும் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லீம்)

 அலி (ரலி) உளூ செய்யும் தண்ணீரை கொண்டு வரச்சொல்லி வாய்க்கும் மூக்குக்கும் தண்ணீர் செலுத்திவிட்டு தன் இடது கையால் மூக்கை சீறிவிட்டார்கள் பிறகு இதை மூன்று முறை செய்தார்கள் பிறகு நபி (ஸல்) இப்படித்தான் உளூ செய்தார்கள் என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத், நஸாயீ)

ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَ جَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ

وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا

 அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) – நபி (ஸல்) – ஒரே அள்ளில் வாய்க்கும், மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள் அதை 3 முறை செய்தார்கள். (புஹாரி, முஸ்லீம்)

 இன்னொரு அறிவிப்பில் 3 முறை அள்ளி மூக்கில் ஏற்றி சீறி விட்டார்கள் என வந்துள்ளது.

உளூவின் சுன்னத்துகள் பாகம் 2

ஃபிக்ஹ் பாகம் – 2

உளூவின் சுன்னத்துக்கள்

உறுப்புக்களை கழுவுதல் :

"</p ஒரு முறை கழுவுதல் கட்டாயம் ஆனால் ஒன்றுக்கும் அதிகமான முறை கழுவுவது சுன்னத் ஆனால் 3 முறைக்கும்  அதிகமாக கழுவக்கூடாது

இரண்டு கைகளை மணிக்கட்டு வரை கழுவுதல் :

"</p அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) – நபி (ஸல்) தன் கைகளை மணிக்கட்டு வரை கழுவியதை நான் பார்த்தேன்(முஸ்னத் இமாம் அஹ்மத், ஸுனன் நஸாயீ)

"</p அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் 3 முறை கைகளை கழுவாமல் அவர் பாத்திரத்தில் கையை விட வேண்டாம் ஏனெனில் தூங்கும்போது அவரது கை எங்கு தங்கியிருந்தது என்று அவருக்கு தெரியாது (திர்மிதி,, நஸாயீ, இப்னுமாஜா,புஹாரி – 3 முறை என்ற வாசகம் குறிப்பிடவில்லை)

வாய் கொப்பளித்தல் :

"</p லாகீத் இப்னு சப்ரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் உளூ செய்தால் வாய் கொப்பளியுங்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் பைஹகீ).

 

உளூவின் சுன்னத்துகள் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1

உளூவின் சுன்னத்துகள்

[highlight color=”yellow”]சுன்னத் என்றால் என்ன?[/highlight]

 நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை.

[highlight color=”yellow”]பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல்[/highlight]

 எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும்.

[highlight color=”yellow”]பல் துலக்குவது (சிவாக்)[/highlight]

❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை.

 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வீட்டில் நுழைந்தால் முதலாவதாக பல் துலக்குவார்கள்.

قَالَ رَسُولُا اللهِ صَلَّى اللهُ عَلَيهِ وَسَلَّم : ( لَولاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى، لَأَمَرْتُهُمْ عِنْدَ كُلِّ

صَلاَةٍ بِوُضُوءٍ، وَمَعَ كُلِّ وُضُوءٍ بِسِوَاكٍ

 நபி (ஸல்) – என் உம்மத்திற்கு சிரமமாக இல்லையென்றால் ஒவ்வொரு உளூவிற்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். (முவத்தா மாலிக்)

நபி (ஸல்) – மனிதர்கள் வெறுக்கும் துர்நாற்றங்களை மலக்குகளும் வெறுக்கின்றனர்.

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 5

 

ஃபிக்ஹ் பாகம் – 5

உளூவின் ஃபர்ளுகள்

   4. தலையை தடவுதல் (மஸஹ்):

 முடிமுளைக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து பிடரி வரை தடவ வேண்டும்.

 நபி (ஸல்) தன் இரண்டு கைகளையும் வைத்து தலை முழுவதும் மஸஹ் செய்தார்கள்.

தலையை மூடியிருந்தால் :

 பிலால் (ரலி) – நபி (ஸல்) – உங்கள் இரண்டு காலுறையின் மீதும் தலை பாகை மீதும் மஸஹ் செய்யுங்கள் – புஹாரி, அஹ்மத், இப்னு மாஜா

 முஃகைரா இப்னு ஷுஅபா (ரலி) – நபி (ஸல்) – தன முன் நெற்றி முடியில் தடவிவிட்டு தலைப்பாகை மீது மஸஹ் செய்திருக்கிறார்கள் (முஸ்லீம்)

   5. இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவுதல்.

   6. முறையாக செய்யவேண்டும்.

ஃபிக்ஹ் இமாம்கள் கூறுகிறார்கள்:

கழுவவேண்டிய உறுப்புகளும், தடவக்கூடிய உறுப்புகளும் வரும்போது தனித்தனியே சொல்ல வேண்டும். ஆனால் இப்படித்தான் செய்யவேண்டும் என்பதால் தான் அல்லாஹ் இதில் தலையை தடவுதலை இடையில் கூறுகிறான் என்று கூறுகிறார்கள்.

முறைப்படி செய்ய வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான் ஆகவே நாம் உளூவை முறைப்படி செய்யவேண்டும்.

உளூவின் ஃபர்ளுகள் 6

  1. நிய்யத்
  2. முகத்தை கழுவுதல்
  3. கைகள் ( முழங்கைகள் வரை )
  4. தலையை தடவுதல் ( மஸஹ் )
  5. இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவுதல்
  6. முறையாக செய்யவேண்டும்

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 4

ஃபிக்ஹ் பாகம் – 4

உளூவின் ஃபர்ளுகள்

உளூவின் ஃபர்ளுகள்

 ❤ ஸூரத்துல் மாயிதா 5:6

  1. முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்,
  2. கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள்,
  3. தலைகளை தடவிக்கொள்ளுங்கள்,
  4. இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்

 குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும்.

உளூவின் பர்ளுகள்:

   1. நிய்யத்

ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி (ஸல்) – எண்ணங்களை கொண்டே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது கூலி கொடுக்கப்படும்.

 இபாதத் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்; இஸ்லாஹ் ( அல்லாஹ்விற்காக செய்தல் என எண்ணம் கொள்ளுதல்) வேண்டும்.

 நிய்யத் (எண்ணம்) உள்ளத்தால் ஒன்றை நினைப்பது அல்லது உறுதிப்படுத்துவது.

 இப்னுல் கய்யிம் (ரஹ்) – நிய்யத்தின் இடம் உள்ளமாகும்.

நிய்யத்திற்கும் நாவிற்கு சம்பந்தமில்லை. நிய்யத்தை நாவல் சொல்பவர் மார்க்கத்தில் புதுமையை (பித்அத்) செய்தவராவார்.

   2. முகத்தை கழுவுதல்:

முடி துடங்கும் இடம் முதல் தாடை வரை இரண்டு காதுகளுக்கு இடைப்பட்ட பகுதி முழுவதும் கழுவ வேண்டும்.

   3. கைகள் (முழங்கைகள் வரை):

விரல் நுனியிலிருந்து முழங்கைகள் வரை கழுவ வேண்டும்.

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 3

ஃபிக்ஹ்

உளூவின் பர்ளுகள் பாகம் – 3

  அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன்.

  உங்களுடைய உம்மத்தை மறுமையில் எப்படி அடையாளம் காண்பீர்கள்? – கருத்த குதிரைகளில் ஒரு குதிரையில் மட்டும் முகமும் காலும் வெளுத்த குதிரையை காண்பது போல் உளூவின் அடையாளத்தை வைத்து என் உம்மத்தை கண்டு பிடிப்பேன். (ஸஹீஹ் முஸ்லீம்)

  நபி (ஸல்) பிலால் (ரலி) யின் காலடி சத்தத்தை சொர்க்கத்தில் கேட்டார்கள். காரணம் கேட்ட போது நான் எப்பொழுது உளூ முறிந்தாலும் உடனே உளூ செய்து விட்டு இரண்டு ரக்காத் தொழுவேன் என்றார்கள்.

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 2

ஃபிக்ஹ்

உளூவின் பர்ளுகள் பாகம் – 2

உளூவின் சிறப்பு

 அப்துல்லாஹ் இப்னு சனாபித்தீ (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் உளூ செய்து அவன் வாய் கொப்பளித்தால் அவன் வாயினால் செய்த பாவங்கள் வெளியாகும், மூக்கை கழுவினால் மூக்கினால் செய்த பாவங்கள் வெளியாகிறது, முகத்தை கழுவினால் முகம் செய்த பாவங்கள் வெளியாகிறது, கைகளை கழுவினால் நகங்களுக்கு கீழால் செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது மஸஹ் செய்தால் தலையால் காதுகளால் செய்த பாவங்கள் வெளியாகிறது, கால்களை கழுவினால் கால் விரல்களுடைய நகங்களுக்கு கீழே செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது. பள்ளிக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு எட்டும் அவர்களுடைய தொழுகையும் மேலதிக நன்மையாகும். (முவத்தா மாலிக், ஸுனன் நஸயீ, இப்னு, ஹாகிம்)

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய பாவங்களையெல்லாம் அழிக்கப்பட்டு நன்மைகள் உயர்த்தப்படக்கூடிய ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

  1. வெறுப்புள்ள நேரங்களிலும், பரிபூரண உளூ செய்தல்,
  2. பள்ளிகளுக்கு எட்டுக்களை அதிகமாக வைப்பது
  3. தொழுகைக்காக காத்திருப்பது

யுத்தக்களத்தின் நேரத்தில் கிடைக்கும் நன்மை இதற்கு கிடைக்கும். (முஸ்லீம், திர்மிதி, நஸாயீ)

 உளூவை பாதுகாப்பவர் முஃமின் என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு மாஜா அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னு ஆஸ ரழி தவ்பான் ரழி)

உளூவின் ஃபர்ளுகள் பாகம் 1

ஃபிக்ஹ்

உளூவின் பர்ளுகள் பாகம் – 1

❤ ஸூரத்துல் மாயிதா 5:6

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)………

 இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம்.

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவருக்கு சிறு தொடக்கு ஏற்பட்டு விட்டால் உளூ செய்யும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. (புஹாரி, முஸ்லீம்)