நஜீசின் வகைகள் பாகம் 13B

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13B

🔰 மலஜலம் கழித்தால் வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது.

🔰 நிர்பந்த  சூழல் உள்ளவர்கள் வலது கையால் சுத்தம் செய்வதில் தவறில்லை.

🔰 அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சிறுநீர் கழிக்கச்சென்றால் சுத்தம் 

 

நஜீசின் வகைகள் பாகம் 13A

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13A

  • கப்ரில் வேதனை செய்ய பட்டவர்களை பற்றி நபி(ஸல்) கூறிய ஹதீஸ்; வேறொரு அறிவிப்பில் 
    அவர் தான் சிறுநீர் கழிக்கும்போது தன் ஆடையை மறைக்க மாட்டார்கள்.
  • மற்றொருவர் கோள்சொல்லித்திரிந்தவராவார் 
  • உள்ளதைச்சொல்வது தான் புறம்; இல்லாததை சொல்வது அவதூறு என்பதை நாம் புரிந்து கொள்வோம்

நஜீசின் வகைகள் பாகம் 12

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 12

 குபா வாசிகள் கற்களாலும் தண்ணீராலும் சுத்தம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை புகழ்ந்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான்.

 நபி (ஸல்) – உங்களிலொருவர் மலம் கழிக்கச்சென்றால் 3 கற்களைக்கொண்டு சுத்தம் செய்யட்டும் அது அவர்களுக்கு போதுமானது (அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, தாரகுத்னி)

 அனஸ் (ரலி) – நபி (ஸல்) மலஜலம் கழிக்கச்சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போவோம். பொதுவாக நபி (ஸல்) சிறுநீர்கழிக்கும் இடத்தை குத்தி அதற்கேற்ப அந்த இடத்தை ஆக்கிவிட்டு சிறுநீர் கழிப்பார்கள்.

 இப்னு அப்பாஸ் (ரலி) – ஒருமுறை நபி (ஸல்) இரண்டு கப்ர்களுக்கு அருகாமையில் நடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் பெரிய தவறு செய்யவில்லை ஒருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார். இன்னொருவர் கோள் சொல்லித்திரிந்தார். (திர்மிதி, அபூ தாவூத், நஸாயீ)

இன்னொரு அறிவிப்பில்: பெரிய குற்றமல்ல ஆனாலும் பெரிய குற்றம் தான் என்று கூறினார்கள்.

 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் சிறுநீரிலிருந்து உங்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள் அதிகமான கப்ரின் வேதனை அதிலிருந்துதான் வருகிறது.

❤ பெரும்பாவம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

 எந்த பாவம் செய்தால் நரகத்தை பற்றி எச்சரிக்கப்பட்டிருக்கிறதோ அது பெரும்பாவம்.

 எந்த பாவத்தை செய்தால் அல்லாஹ்வுடைய தூதருடைய சாபம் உண்டாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அது பெரும்பாவமாகும்.

உதாரணம்: வட்டி சம்பந்தமாக, பெற்றோர்களை சபிப்பவர்கள், இது போன்றவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அறிவித்திருக்கிறார்கள்.

நஜீசின் வகைகள் பாகம் 11

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11

لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه

 நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்)

 தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு)

 ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் அதை உண்மைப்படுத்தாதீர். (திர்மிதி)

 ஹுதைபா (ரலி) – நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் தம் குப்பைகளை கொட்டும் இடத்தில் நபி (ஸல்) நின்று சிறுநீர் கழித்தார்கள். நான் கொஞ்சம் தூரமாக நின்றேன் நபி (ஸல்) கொஞ்சம் அருகில் வரச்சொன்ன போது சென்றேன் நபி (ஸல்) உளூ செய்தார்கள்.

 ஆகவே அவசிய தேவையிருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம் என மேற்கூறப்பட்ட ஹதீஸுகளிலிருந்து புரிகிறது.

நஜீசின் வகைகள் பாகம் 10

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10

திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம்.

ஆதாரம் :

إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا

   அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்)

 இப்னு உமர் (ரலி) – நான் என்னுடைய சகோதரி ஹப்ஸா (ரலி) யின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் மேலேறியபோது நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற அமர்ந்திருந்தார்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கஹ்பாவை பின்னோக்கியும் அமர்ந்திருந்தார்கள் ( கட்டிடத்துக்குள் ) (புஹாரி, முஸ்லீம்)

 பொந்துகளில் மலஜலம் கழிப்பதை நபி (ஸல்) தடுத்தார்கள் ஏனெனில் அது ஜின்கள் குடியிருக்குமிடம் என்று கூறினார்கள் ( அஹ்மத், நஸயீ, அபூதாவூத், ஹாகிம், பைஹகீ )

 நபி (ஸல்) – இரண்டு சாபங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மனிதர்கள் நடக்கக்கூடிய பாதையும் அவர்கள் அமரக்கூடிய நிழல்களும். (அங்கே மலஜலம் கழிக்காதீர்கள்)

 குளிக்கும் இடங்களில் மலஜலம் கழிக்கக்கூடாது.

நஜீசின் வகைகள் பாகம் 9

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 9

 நாம் கழிவறைக்குள் செல்லும்போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாகங்களை கொண்டு செல்லக்கூடாது. கட்டாயமான சூழலில் உள்ளே கொண்டு செல்லலாம் என இமாம்கள் கருத்து கூறுகின்றனர்.

 நபி (ஸல்) – வெட்டவெளியில் தேவையை நிறைவேற்றச்சென்றால் தூரமாக செல்வார்கள் (அபூதாவூத்)

ஜாபிர் (ரலி) -நபி (ஸல்) உடன் நான் ஒரு பிரயாணத்திற்கு சென்றேன் அப்போது நபி (ஸல்) தன் வெளிதேவைகளுக்கு செல்வதாகயிருந்தால் மற்றவர்களின் கண்களிலிருந்து மறையும் அளவிற்கு தூரமாக செல்வார்கள்  (இப்னு மாஜா)

[highlight color=”pink”]கழிவறையில் செல்வதானால் :[/highlight]

بِسْمِ اللَّهِ. اللَّهُـمَّ إِنِّي أَعُـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبَائِثِ

அல்லாஹுவின் பெயரால் ↔ بِسْمِ اللَّهِ

 நிச்சயமாக நான்↔ إِنِّي 

அல்லாஹுவே ↔ اللَّهُـمَّ

 உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் ↔ أَعُـوذُ بِـكَ

  ஆண் ஷைத்தானிலிருந்தும் ↔ مِـنَ الْخُـبْث

 பெண் ஷைத்தானிலிருந்தும் ↔ وَالْخَبَائِثِ

 திறந்தவெளியில் தேவைகளை நிறைவேற்றச்சென்றால் ஆடைகளை உயர்த்தும்போது இந்த துஆ வை செய்ய வேண்டும்.
 மலம் ஜலம் கழிக்கும்போது அவசியத்தேவையில்லாமல் பேசக்கூடாது. அல்லாஹ்வை நினைவு கூறுவதை தவிர்க்க வேண்டும்.
 நபி (ஸல்) – ஒருமுறை சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போது அந்த வழியாக சென்ற ஒருவர் ஸலாம் சொன்னபோது நபி (ஸல்) பதில் சொல்லவில்லை.

 

நஜீசின் வகைகள் பாகம் 8

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 8

சல்மான் அல் பாரிஸ் (ரலி) இடம் ஒரு யூதர் கேட்டார் உன்னுடைய நபி எல்லாவற்றையும் உங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார்களா? என்று கேட்ட போது; ஆம், எங்களுடைய நபி (ஸல்) எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்திருக்கிறார்கள்;

  • எங்களுக்கு மலஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கக்கூடாது
  • வலது கையால் சுத்தம் செய்யக்கூடாது,
  • தண்ணீர் இல்லாதபோது 3 கற்களால் சுத்தம் செய்வது,
  • எலும்பை கொண்டும் மிருகங்களின் மலங்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்றும் கற்றுத்தந்தார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

நஜீசின் வகைகள் பாகம் 7

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 7

மது

 மதுபானம் அசுத்தமா?

 சூரா அல்மாயிதா 5:90 ↔ ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

 அதை அருந்துவதும் விற்பதும் ஹராம் ஆனால் அதை தொட்டால் அசுத்தமல்ல.

 அசுத்தமானவைகள் சாப்பிடக்கூடிய பிராணிகளின் மாமிசங்களை உண்பதையும் அதன் பாலை அருந்துவதையும் நபி (ஸல்) தடுத்திருக்கிறார்கள். அதில் பிரயாணம் செய்வதை தடுத்திருக்கிறார்கள்.

நஜீசின் வகைகள் பாகம் 6

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 6

நாய்

 இஸ்லாம் அனுமதித்த 3 காரணங்களை தவிர வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பவர்கள் அமல்களில் 1 கீராத் நன்மை அவர்களது நன்மையிலிருந்து பறிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட 3 காரணங்கள்:

1. வேட்டை 
2. விவசாயம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க 
3. வீட்டின் பாதுகாப்பிற்காக

لا تدخل الملائكة بيتاً فيه كلب ولا صورة

➥   நபி (ஸல்) – எந்த வீட்டில் நாயும் உருவப்படங்களும் இருக்கிறதோ அந்த வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்.

 ஒரு முறை ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) விடம் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் சொல்லப்பட்ட நேரத்தில் அவர் வரவில்லை. ஏனெனில் நபி (ஸல்) வின் வீட்டில் கட்டிலின் அடியில் குட்டி நாயொன்று இருந்தது.
 நபி (ஸல்) – உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் நக்கிவிட்டால் அதை 7 முறை கழுவுங்கள் அதில் ஒரு முறை மண் சேர்த்து கழுவுங்கள்.

நஜீசின் வகைகள் பாகம் 5

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 5

 உண்பதற்கு தடுக்கப்பட்ட பிராணிகளின் சிறுநீரும் மலமும் அசுத்தமாகும் (கழுதை, பருந்து….)

 அப்துல்லாஹ் இப்னு மசூத் – நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற சென்றார்கள்.என்னிடம் 3 கற்களை கொண்டு வரச்சொன்னார்கள் ஆனால் 2 கற்கள் தான் எனக்கு கிடைத்தது ஆனால் 3 வது கல் கிடைக்காததால் 3 வதாக கழுதையின் விட்டையை கொண்டு சென்றேன். அந்த கழுதையின் விட்டையை வீசிவிட்டார்கள்.

 எந்த பிராணியுடைய மாமிசத்தை உண்பதற்கு அனுமதியிருக்கிறதோ அதனுடைய மலமும் ஜலமும் நஜீஸ் அல்ல.

 ஆதாரம் – அனஸ் (ரலி) – சில மக்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு ஒட்டகத்தின் பாலையும் சிறுநீரையும் குடிக்கக்கொடுக்கச் சொன்னார்கள்.

 நபி (ஸல்) – அசுத்தமான பொருளில் அல்லாஹ் நிவாரணத்தை வைக்கவில்லை .

 நபி (ஸல்) விடம் – ஆட்டுத்தொழுவம் அல்லது மாட்டுத்தொழுவத்தில் தொழலாமா என்று கேட்டபோது தொழலாமே என்று கூறினார்கள். ஒட்டகம் கட்டப்படும் இடத்தில தொழலாமா என்று கேட்டபோது வேண்டாம் என தடுத்தார்கள்.

 இப்னு முன்திர் (ரஹ்) கூறினார்கள் – உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் மலஜலம் அசுத்தமா இல்லையா என்பதில் இரு கருத்துக்கள் இருக்கிறது. 
ஒட்டகத்தின் சிறுநீர் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது