நஜீசின் வகைகள் பாகம் 4

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 4

المني والمذي والودي

 சிறுநீரும் பிறகு வரும் வெள்ளை நிற வழுவழுப்பான நீர்  ↔ الودى 

    இச்சை நீர் ↔ المذي 

 (இந்திரியம் (குளிப்பு கடமை ↔ المني  

(8) الودى – சிறுநீருக்குப் பிறகு  வரும் வெள்ளை நிற கனமான திரவம். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
ஆயிஷா (ரலி) – சிறுநீர் கழித்ததற்கு பின் வரும் வதீ வந்தால் உளூ முறிந்து விடும். அவர்கள் அதை சுத்தப்படுத்த வேண்டும் குளிக்கத்தேவையில்லை.

 ✽ நபி (ஸல்) – والمذي والودي வெளிப்பட்டால் நீங்கள் உறுப்புகளை சுத்தம் செய்து விட்டு உளூ செய்தால்  போதுமானது.

(9) المذي – இச்சை நீர். வழுவழுப்பான வெள்ளை திரவம். பாலியல் உணர்வுகள் ஏற்படும்போது அல்லது  கணவன் மனைவி உறவின் ஆரம்பத்தில் வரும். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டுவிட்டால் கழுவ வேண்டும்.

  அலி (ரலி) – எனக்கு அதிகமான மதி வெளியாகும். நபி (ஸல்) என்னுடைய மாமனாராக இருந்ததால் இதை பற்றி கேட்க வெட்கப்பட்டேன். ஆதலால் இன்னொருவர் மூலம் நபி (ஸல்) விடம் கேட்டபோது – நபி (ஸல்) அவரிடம் உளூ செய்யச் சொன்னார்கள்(புஹாரி). ஆகவே மதி வெளிப்பட்டால் சுத்தம் செய்ய வேண்டும் என்பதால் அதை அசுத்தம் என்று நாம் அறிகிறோம்.

  நான் அதிகமாக மதி வெளியாகக்கூடியவனாக இருந்தேன். ஆதலால் நான் அதிகமாக குளித்துக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) கூறினார்கள் நீங்கள் உளூ செய்தால் போதுமானது. ஆடையில் பட்டால் அதில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். (அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி)

உலமாக்கள் – உடலில் பட்டால் கழுவ வேண்டும் உடையில் பட்டால் தண்ணீர் தெளித்து விடுங்கள்.

(10) المني – இந்திரியம் (குளிப்பு கடமை).
இது சுத்தமா அசுத்தமா என்பதில் அறிஞர்களுக்கிடையில் 2 கருத்துக்கள் இருக்கிறது. இது உடையில் பட்டால் ஈரமாக இருந்தால் கழுவிக்கொள்ள வேண்டும் காய்ந்துவிட்டால் சுரண்டி விட்டால் போதுமானது.

  ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் ஆடையில் இந்திரியம் காய்ந்திருந்தால் நான் என் விரலால் சுரண்டி விடுவேன். ஈரமாக இருந்தால் நான் கழுவி விடுவேன். (தாரகுத்னி)

நஜீசின் வகைகள் பாகம் 3

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 3

நஜீஸின் வகைகள்:

  1. செத்த பிராணிகள்
  2. இரத்தம்
  3. பன்றி இறைச்சி
  4. மனிதனுடைய வாந்தி
  5. மனிதனுடைய சிறுநீர்
  6. மனிதனுடைய மலம்

மேற்கூறப்பட்ட  மூன்றும் நஜீஸ் என்பதில் எந்தக்கருத்து  வேறுபாடும் இல்லை. ஆனால் வாந்தி குறைந்த அளவில் இருந்தால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகமாகி விட்டால் கழுவிட வேண்டும்.

           7.  சிறுபிள்ளைகள் சிறுநீர்

தாய்ப்பாலை மட்டுமே குடிக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளித்துவிட்டால் போதுமானது பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும்
உம்முகைஸ் (ரலி)  உணவு உண்ணாத தாய்ப்பால் மட்டுமே குடிக்கக்கூடிய ஆண்குழந்தையை கொண்டு வந்தார்கள் அந்தக் குழந்தை நபி (ஸல்) வின் மடியில் சிறுநீர் கழித்த போது நபி (ஸல்) தன் ஆடையில் தண்ணீர் மட்டும் தெளித்து விட்டார்கள் அதை கழுவவில்லை.

 அலி (ரலி) – நபி (ஸல்) – தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளில் ஆண்குழந்தையின் சிறுநீர் பட்டால் தண்ணீர் தெளித்தால் போதுமானது பெண்குழந்தையின் சிறுநீர் பட்டால் கழுவ வேண்டும்

நஜீசின் வகைகள் பாகம் 2

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 2

[highlight color=”yellow”]இரத்தம்[/highlight]

 பிராணிகளின் உடம்பிலிருந்து ஓடக்கூடிய இரத்தம் அசுத்தமாகும் (இரத்தம் சாப்பிடுவதும் ஹராமாகும்).

 மாதவிடாய்க்கால இரத்தமும் அசுத்தமாகும்.

 ஆயிஷா (ரலி) – நாங்கள் கறிகளை சமைத்து சாப்பிடுவோம். சமைத்த பாத்திரத்தில் இரத்தத்தின் அடையாளங்கள் இருக்கும்(ஆகவே சிறிய அளவிலான கறியுடன் இருக்கும் இரத்தம் அசுத்தமல்ல).

 முஸ்லிம்கள் காயங்களுடன் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறிய அளவிலான இரத்தம் அசுத்தமல்ல.

[highlight color=”yellow”]பன்றி[/highlight]

❤  சூரா அல் அன்ஆம் 6:145

قُل لَّا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا

مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ

وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَّحِيمٌ

   நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் – (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்..

நஜீசின் வகைகள் பாகம் 1

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 1

சூரா அல் முத்தஸ்ஸிர் 74:4

وَثِيَابَكَ فَطَهِّرْ

➥   உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

சூரா அல்பகறா 2:222

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

   பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

   நபி (ஸல்) – சுத்தம் ஈமானின் பாதியாகும்

   செத்த பிராணி

இஸ்லாம் சொன்ன பிரகாரம் அறுக்கப்பட்ட பிராணிகள் ஹலாலானவை. அதை தவிர எப்படி செத்தாலும் அந்த பிராணிகள் ஹலாலானவை அல்ல (கழுத்து நெறிக்கப்பட்டது , அடிபட்டு இறந்தது, தானாக செத்தவை …..)

சூரா அல்மாயிதா 5:3

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ

   செத்தவைகள் உங்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கிறது.

விதிவிலக்குகள்

  மீன் செத்துப்போனாலும் நஜீஸ் அல்ல.

நபி (ஸல்) –  கடல் நீர் தன்னிலும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும். அதில் செத்தவையும் ஹலால் தான்.

  இப்னு உமர் ரலி – நபி (ஸல்) – எங்களுக்கு இரண்டு மையத்துகள் ஹலாலாக்கப்பட்டிருக்கிறது மீனும் வெட்டுக்கிளியும்.

(முஸ்னத் இமாம் அஹ்மத், இப்னு மஜா, பைஹகீ, தாரகுத்னீ) இந்த ஹதீஸ் பலகீனமானதாக இருந்தாலும் அந்த ஸஹாபியின் செய்தி உண்மையானது என இமாம் அஹ்மத் கூறுகிறார்.

  எந்த உயிரினங்களின் உடம்பில் ஓடும் ரத்தம் இல்லையோ அவைகள் செத்தால் அது நஜீஸ் அல்ல (எறும்பு, தேனீப்பூச்சி).

  செத்த பிராணிகளின் எலும்பு, கொம்பு, நகம் போன்றவை கழுவினால் சுத்தமாகிவிடும்.

 இப்னு அப்பாஆஸ் (ரலி) – மைமூனா (ரலி) க்கு ஒரு ஆடு கொடுக்கப்பட்டது அது செத்துவிட்டது. நபி (ஸல்) – அதன் தோலை எடுத்து பதப்படுத்தியிருக்கலாமே அதில் பிரயோஜனமடைந்திருக்கலாமே – அதை உண்பது தான் ஹராம்.

சுத்தம் பாகம் 7

 

சுத்தம் பாகம் 6B

 

சுத்தம் பாகம் 6A

 

 

சுத்தம் பாகம் 5

சுத்தம் பாகம் 4

சுத்தம் பாகம் 3B