பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்)
III . கடல் நீர்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள்.
(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
பொருள்: இறைவனே! கிழக்குக்கும், மேற்குக்கும் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! எனக்கும் எனது தவறுகளுக்கும் மத்தியில் இடை வெளியை ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ்! அழுக்கிலிருந்து வெண்ணிற ஆடையைத் தூய்மைப்படுத்துவது போன்று! என்னுடைய தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப் படுத்து-வாயாக! யா அல்லாஹ்! தண்ணீர், பனி, மற்றும் பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களைப் போக்குவாயாக!.
இயன்றவரை இந்த துஆவை பாடமாக்கி தொழுகையில்
தக்பீருக்கும் ஃபாத்திஹாவுக்கும் இடையில் ஓதிவாருங்கள்
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَمن يرد الله به خيرا يفقهه في الدين
(எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை
கொடுப்பான்)
அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே.
●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க
அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வருவது இயல்புதான்;அதில் குர்ஆன் ஹதீஸுக்கு நெருக்கமாக உள்ளதைத்தான் பின்பற்ற வேண்டும்.
●ஆனால் அகீதா சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு கருத்து வேறுபாடுக்கும் இடமேயில்லை.
●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் ஆய்வு செய்யலாம்; அகீதா சம்பந்தமான விஷயங்களில் ஆய்வு என்பதேகிடையாது. குர்ஆனும் ஹதீஸும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்;ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது.
ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது.
●ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது.
فَقيه:- جمع – فُقهاءُ
மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்;அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும்
அழைப்பார்கள்.
மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால்
மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது என்று அர்த்தம்.
●அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள்.
●விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து அறிவை பெருவது.
عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن
الله خلق الرحمة يوم خلقها مائة رحمةفأمسك عنده تسعا وتسعين رحمةوأرسل
في خلقه كلهم رحمة واحدةفلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييئس
من الجنةولو يعلم المؤمن بكل الذي عند الله من العذاب لم يأمن من النار
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சொல்ல நான் கேட்டேன்-அல்லாஹ் ரஹ்மத்தை படைத்த நாளில் அதை 100 ஆக படைத்தான்.அதில் தன்னிடத்தில் 99ஐ தன்னிடம் வைத்துக்கொண்டான் மீதமுள்ள ஒரேயொரு ரஹ்மத்தை படைப்பினங்கள் அனைத்திற்கும் அனுப்பினான்அல்லாஹ்விடம் இருக்கக்கூடிய ரஹ்மத்தை ஒரு காஃபிர் அறிந்தாலும் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதில் அவன் நம்பிக்கையிழக்க மாட்டான்அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய தண்டனைகள் பற்றிய முழுமையான அறிவு ஒரு முஃமினிடத்தில் இருந்திருந்தால் நான் என்ன செய்தாலும் நரகத்திற்கு தான் செல்வேன் என்று அவன் நினைப்பான்.
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டால் ஃபிர்தௌஸை கேளுங்கள்.அது சொர்க்கத்தின் மத்தியில் இருக்கிறது அது உயர்ந்த பகுதியிலும் இருக்கிறது அதற்கு மேல் தான் அர் ரஹ்மானின் அர்ஷும் இருக்கிறது.
(99) அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை.
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
ஸூரத்துல் அஃலா 87:19
صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
عن أنس بن مالك رضي الله عنه قال سمعته يقول إن رسول الله صلى الله عليه
وسلم صلى لنا يوما الصلاة ثم رقي المنبر فأشار بيده قبل قبلة المسجد فقال قد
أريت الآن منذ صليت لكم الصلاة الجنة والنارممثلتين في قبل هذا الجدار فلم
أر كاليوم في الخير والشر فلم أر كاليوم في الخير والشر
✤ அனஸ் (ரலி) – நபி (ஸல்) ஒரு முறை கடமையான ஒரு தொழுகையை தொழுது விட்டு பிறகு மிம்பரில் ஏறினார்கள் பிறகு மஸ்ஜிதின் கிப்லாவின் பக்கம் கையை சுட்டிக் காட்டி நான் இப்போது தொழவைத்தபோது சொர்க்கமும் நரகமும் எனக்கு அந்தப்பக்கம் காட்டப்பட்டது.இன்றைய தினத்தை போல நல்லதிலும் கெட்டதிலும் நான் கண்டதில்லை.
கருத்துரைகள் (Comments)