ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 53

ஹதீத் பாகம் – 53

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال سددوا وقاربوا وأبشروا فإنه لا

يدخل أحدا الجنة عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله

بمغفرة ورحمة قال أظنه عن أبي النضر عن أبي سلمة عن عائشة وقال عفان

حدثنا وهيب عن موسى بن عقبة قال سمعت أبا سلمة عن عائشة عن النبي صلى

الله عليه وسلم سددوا وأبشروا قال مجاهد قولا سديدا وسدادا صدقا

 ஆயிஷா (ரலி) – நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் முறையாக நடந்து கொள்ளுங்கள் நல்ல செய்திகளுடன் செல்லுங்கள்(சோர்வடைந்து விட வேண்டாம்) உங்கள் எவரது அமல்களும் அவரை சொர்க்கத்தில் நுழைக்காது. உங்களுக்குமா யா ரசூலுல்லாஹ்; என்று கேட்டபோது ஆம் எனக்கும் தான் ஆனால் அல்லாஹ் அவனது மன்னிப்பையும் ரஹ்மத்தையும் கொண்டு என்னை சூழ்ந்து கொண்டான்.

முஜாஹித் ரஹ் அவர்கள் 4:9 سَدِيْدًا‏ என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்கள்

فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوا قَوْلًا سَدِيْدًا‏

✤ மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 52

ஹதீத் பாகம் – 52

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن علقمة قال سألت أم المؤمنين عائشة قلت يا أم المؤمنين كيف كان عمل النبي

صلى الله عليه وسلم هل كان يخص شيئا من الأيام قالت لا كان عمله ديمة وأيكم

يستطيع ما كان النبي صلى الله عليه وسلم يستطيع

 அல்கமா (ரலி) கூறினார்கள் நான் உம்முல் முஹ்மினீன் ஆயிஷா (ரலி) இடம் கேட்டேன் நபி (ஸல்) அவர்களது அமல்கள் எப்படி இருந்ததுஅமல்களுக்கு என்று ஏதேனும் நாட்களை ஒதுக்கியிருந்தார்களா? என்று.

ஆயிஷா (ரலி) இல்லை என்று கூறினார்கள். அவர்களது அமல்கள் தொடர்ந்திருக்கக்கூடியதாக இருந்ததுஉங்களில் எவருக்கு நபி (ஸல்) விற்கு சாத்தியமானது சாத்தியமாகும்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 51

ஹதீத் பாகம் – 51

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال سددوا وقاربوا واعلموا أن لن

يدخل أحدكم عمله الجنة وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل

 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் நெருங்குங்கள் அறிந்து கொள்ளுங்கள் உங்களில் எவரையும் உங்கள் அமல்கள் சொர்க்கத்தில் கொண்டு சேர்த்து விடாது அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பமான அமல் தொடர்ந்து செய்யும் அமலாகும்.

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) விடம் நபி (ஸல்) கூறினார்கள் நீங்கள் இரவில் தொழுதுகொண்டிருந்து அதை விட்டு விட்ட மனிதரை போல ஆகி விட வேண்டாம்

 عن عائشة رضي الله عنها أنها قالت سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال

أحب إلى الله قال أدومها وإن قل وقال اكلفوا من الأعمال ما تطيقون

 ஆயிஷா (ரலி) – அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான அமல் எது என்று நபி (ஸல்) விடம் வினவப்பட்டது. குறைந்திருந்தாலும் தொடர்ந்து செய்யும் அமலாகும் என பதிலளித்தார்கள். பிறகு கூறினார்கள் உங்களால் முடிந்த அமல்களில் உங்களை ஈடுபடுத்துங்கள்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 50

ஹதீத் பாகம் – 50

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜ حدثنا آدم حدثنا ابن أبي ذئب عن سعيد المقبري عن أبي هريرة رضي الله

عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله قالوا ولا

أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمة سددوا وقاربوا واغدوا

وروحوا وشيء من الدلجة والقصد القصد تبلغوا

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் – உங்களில் எவரையும் மறுமையில் அவரது அமல்கள் பாதுகாக்கப்போவதில்லை (நபித்தோழர்கள்) உங்களையுமா யா ரசூலுல்லாஹ்? என்று கேட்டார்கள் என்னையும் காப்பாற்றாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் தனது அருளைக்கொண்டு என்னை சூழ்ந்து கொண்டாலே தவிற. நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குங்கள் காலையிலும் மாலையிலும் இரவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அமல்கள் செய்யுங்கள் நடுநிலையாக சென்றால் நீங்கள் சரியான இடத்தை அடைந்து கொள்வீர்கள்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 49

ஹதீத் பாகம் – 49

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب القصد والمداومة على العمل

நடுநிலையான போக்கும் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்தலும்

⚜ حدثنا عبدان أخبرنا أبي عن شعبة عن أشعث قال سمعت أبي قال سمعت

مسروقا قال سألت عائشة رضي الله عنها أي العمل كان أحب إلى النبي صلى الله

عليه وسلم قالت الدائم قال قلت فأي حين كان يقوم قالت كان يقوم إذا سمع

الصارخ

நான் ஆயிஷா (ரலி) விடம்  நபி (ஸல்) விற்கு மிகவும் விருப்பமான அமல்  எது என்று கேட்டேன் அதற்கு தொடர்ச்சியாக செய்யப்படும் அமல் என பதிலளித்தார்கள். நபி (ஸல்) இரவில் எப்பொழுது எழும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்❓ சப்தமிடும் சேவலின் சப்தத்தை கேட்கும் நேரத்தில் விழிப்பார்கள்.

 حدثنا قتيبة عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أنها قالت كان

أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم الذي يدوم عليه صاحبه

ஆயிஷா (ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன் அமல்களில் நபி (ஸல்) விற்கு மிகவும்விருப்பமானது  தொடர்ந்து செய்யக்கூடிய அமல் தான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 48

ஹதீத் பாகம் – 48

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜  عن عروة عن عائشة أنها قالت لعروة ابن أختي إن كنا لننظر إلى الهلال

ثلاثة أهلة في شهرين وما أوقدت في أبيات رسول الله صلى الله عليه وسلم

نارفقلت ما كان يعيشكم قالت الأسودان التمر والماء إلا أنه قد كان لرسول الله

صلى الله عليه وسلم جيران من الأنصار كان لهم منائح وكانوا يمنحون رسول الله

صلى الله عليه وسلم من أبياتهم فيسقيناه

ஆயிஷா (ரலி) உர்வா அவர்களை பார்த்து சொன்னார்கள்-என் சகோதரியின் மகனே நாங்கள் 2 மாதங்கள் 3 பிறைகளை பார்த்தோம் நபி (ஸல்) அவர்களுடைய வீடுகளில் எங்கும் விளக்கு எரியாது. அப்போது உர்வா அவர்கள் அப்படியாயின் நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? – ஆயிஷா (ரலி) இரண்டு கருப்புக்களை கொண்டு-ஈத்தம்பழமும் தண்ணீரும். சில சமயங்களில் அண்டை வீட்டு அன்சாரிகளிடம் மனாஇஹுகள்(அன்பளிப்பாக பெறப்பட்ட ஆட்டுப்பால்கள்) இருக்கும் அதிலிருந்து குடிப்போம் என்று பதிலளித்தார்கள்.

⚜  عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم

ارزق آل محمد قوتا

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – முஹம்மதுடைய குடும்பத்திற்கு உணவு கொடுப்பாயாக

வேறொரு அறிவிப்பில்

நபி (ஸல்) – முஹம்மதுடைய குடும்பத்திற்கு உணவை போதும் என்ற அளவிற்கு உணவை கொடுப்பாயாக

⚜ நபி (ஸல்) – அல்லாஹ் என்னிடம் மக்காவின் பத்ஹா என்ற இடத்தை தங்கமாக்கி தரவா என்று கேட்டான் நான் வேண்டாம் என்று சொன்னேன். நான் சாப்பிடும் நாளில் உனக்கு நன்றி கூறுவேன் பசித்திருக்கும்போது உன்னை நினைத்து உன்னிடம் வருவேன் என்று கூறினேன்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 47

ஹதீத் பாகம் – 47

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜  حدثني أحمد ابن أبي رجاء حدثنا النضر عن هشام قال أخبرني أبي عن

عائشة قالت كان فراش رسول الله صلى الله عليه وسلم من أدم وحشوه من ليف

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் படுக்கையாக தோலாலான விரிப்பு இருந்தது அது ஓலைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.

⚜  حدثنا قتادة قال كنا نأتي أنس بن مالك وخبازه قائم وقال كلوا فما أعلم النبي

صلى الله عليه وسلم رأى رغيفا مرققا حتى لحق بالله ولا رأى شاة سميطا بعينه

قط

கத்தாதா (ரஹ்)- நாங்கள் அனஸ் இப்னு மாலிக் (ரலி) இடம் செல்வோம் அவருக்கு ஹுபுஸ்(ரொட்டி) செய்பவர் அங்கிருந்தார்கள். அதை எங்களிடம் உன்ன சொல்லிவிட்டு -நபி (ஸல்) அல்லாஹ்வை சந்திக்கின்ற வரை முறையாக தயார்படுத்தப்பட்ட ரொட்டியை சாப்பிட்டதாக நான் அறிந்ததில்லை. நல்ல முறையில் சதையுள்ள ஆட்டிறைச்சியை நபி (ஸல்) உண்டது எனக்கு தெரியாது.

⚜  حدثنا محمد بن المثنى حدثنا يحيى حدثنا هشام أخبرني أبي عن عائشة

رضي الله عنها قالت كان يأتي علينا الشهر ما نوقد فيه نارا إنما هو التمر والماء

إلا أن نؤتى باللحيم

ஆயிஷா (ரலி) – ஒரு முறை கூட அடுப்பில் நெருப்பு மூட்டாத மாதங்கள் எங்கள் வாழ்வில் இருந்தது நாங்கள் ஈத்தம்பழத்தையும் தண்ணீரையும் தான் உண்டிருப்போம் யாரேனும் கொஞ்சமாக இறைச்சியை எங்களுக்கு அளித்தாலே தவிர.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 46

ஹதீத் பாகம் – 46

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜  عن عائشة قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من

طعام بر ثلاث ليال تباعا حتى قبض  

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் குடும்பம் மதீனாவிற்கு வந்த நாள் முதல் 3 இரவுகள் தொடராக வயிறார கோதுமை உணவை கூட உண்டதில்லை நபி (ஸல்) வின் மரணம் வரை.

⚜  قوله حدثني عثمان هو ابن أبي شيبة وجرير هو ابن عبد الحميد ومنصور

هو ابن المعتمر وإبراهيم هو النخعي والأسود هو ابن يزيد وهؤلاء كلهم كوفيون .

அப்படியாயின் நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் என ஆயிஷா (ரலி) விடம் கேட்டபோதும் இரண்டு கருப்புகள் – ஈத்தம்பழமும் தண்ணீரையும் வைத்து வாழ்ந்தோம்

⚜  حدثني إسحاق بن إبراهيم بن عبد الرحمن حدثنا إسحاق هو الأزرق عن

مسعر بن كدام عن هلال الوزان عن عروة عن عائشة رضي الله عنها قالت ما

أكل آل محمد صلى الله عليه وسلم أكلتين في يوم إلا إحداهما تمر

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) ஒருநாளில் இருவேளை உணவு உண்டார்களென்றால் அதில் ஒன்று ஈத்தம்பழமாக இருக்கும்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 45

ஹதீத் பாகம் – 45

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜  سمعت سعدا يقول إني لأول العرب رمى بسهم في سبيل الله ورأيتنا نغزو

وما لنا طعام إلا ورق الحبلة وهذا السمر وإن أحدنا ليضع كما تضع الشاة ما له

خلط ثم أصبحت بنو أسد تعزرني على الإسلام خبت إذا وضل سعيي

ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) கூறினார்கள் அரபுகளின் அல்லாஹ்வின் பாதையில் முதலாவது அம்பெய்தவன் நான் நாங்கள் யுத்தகளத்தில் இருக்கும்போது கருவேலமரத்தை தவிர உண்பதற்கு எங்களுக்கு வேறெதுவும் இருக்காது அதன் காரணமாக எங்கள் மலங்கள் காளர்ப்பில்லாத மலமாக இருக்கும் பனூ அஸத் என்னுடைய இஸ்லாம் சரியில்லை என்று கூறுகிறார்களே அது உண்மையாக இருந்தால் நான் பட்ட கஷ்டங்கள் நாசமாகி விட்டது

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 44

ஹதீத் பாகம் – 44

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب كيف كان عيش النبي صلى الله عليه وسلم وأصحابه وتخليهم من الدنيا

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களது வாழ்வும் அவர்கள் உலக விஷயத்தில் எப்படி ஒதுங்கி இருந்தார்கள் என்பது பற்றிய பாடமும்

أن أبا هريرة كان يقول ألله الذي لا إله إلا هو إن كنت لأعتمد بكبدي على الأرض

من الجوع وإن كنت لأشد الحجر على بطني من الجوع ولقد قعدت يوما على

طريقهم الذي يخرجون منه فمر أبو بكر فسألته عن آية من كتاب الله ما سألته إلا

ليشبعني فمر ولم يفعل ثم مر بي عمر فسألته عن آية من كتاب الله ما سألته إلا

ليشبعني فمر فلم يفعل ثم مر بي أبو القاسم صلى الله عليه وسلم فتبسم حين رآني

وعرف ما في نفسي وما في وجهي ثم قال يا أبا هر قلت لبيك يا رسول الله قال

الحق ومضى فتبعته فدخل فاستأذن فأذن لي فدخل فوجد لبنا في قدح فقال من أين

هذا اللبن قالوا أهداه لك فلان أو فلانة قال أبا هر قلت لبيك يا رسول الله قال الحق

إلى أهل الصفة فادعهم لي قال وأهل الصفة أضياف الإسلام لا يأوون إلى أهل ولا

مال ولا على أحد إذا أتته صدقة بعث بها إليهم ولم يتناول منها شيئا وإذا أتته

هدية أرسل إليهم وأصاب منها وأشركهم فيها فساءني ذلك فقلت وما هذا اللبن في

أهل الصفة كنت أحق أنا أن أصيب من هذا اللبن شربة أتقوى بها فإذا جاء أمرني

فكنت أنا أعطيهم وما عسى أن يبلغني من هذا اللبن ولم يكن من طاعة الله وطاعة

رسوله صلى الله عليه وسلم بد فأتيتهم فدعوتهم فأقبلوا فاستأذنوا فأذن لهم

وأخذوا مجالسهم من البيت قال يا أبا هر قلت لبيك يا رسول الله قال خذ فأعطهم

قال فأخذت القدح فجعلت أعطيه الرجل فيشرب حتى يروى ثم يرد علي القدح

فأعطيه الرجل فيشرب حتى يروى ثم يرد علي القدح فيشرب حتى يروى ثم يرد

علي القدح حتى انتهيت إلى النبي صلى الله عليه وسلم وقد روي القوم كلهم فأخذ

القدح فوضعه على يده فنظر إلي فتبسم فقال أبا هر قلت لبيك يا رسول الله قال

بقيت أنا وأنت قلت صدقت يا رسول الله قال اقعد فاشرب فقعدت فشربت فقال

اشرب فشربت فما زال يقول اشرب حتى قلت لا والذي بعثك بالحق ما أجد له

مسلكا قال فأرني فأعطيته القدح فحمد الله وسمى وشرب الفضلة

அபூஹுரைரா (ரலி) அவர் கூறினார் – எவனைத்தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீது சத்தியமாக (நபி (ஸல்) வின் காலத்தில்) பசியின் காரணமாக எனது ஈரலை நிலத்தில் வைத்து அமர்த்துவேன் பசியின் காரணமாக எனது வயிற்றில் கல்லை கட்டிக்கொள்வேன் ஒரு நாள் பசியின் அகோரத்தின் காரணமாக பள்ளிவாயிலில் அனைவரும் வெளியேறும் பக்கம் அமர்ந்தேன் அபூபக்கர் (ரலி) அந்த பக்கம் சென்றார்கள் அப்போது அல்லாஹ் வுடைய வேதவசனத்தைப்பற்றி  அவரிடம் கேட்டேன் அவர் எனது பசியை புரிந்து கொண்டு உணவளிப்பார் என்ற நோக்கத்தில் தான் கேட்டேன் ஆனால் அவர் அதை புரிந்து கொள்ளவில்லை பிறகு உமர் (ரலி) சென்றார்கள் அவரிடம் ஒரு குர்ஆன் வசனத்தை பற்றி கேட்டேன் அவரும் அதே போன்று குர்ஆனை விளங்க வைத்துவிட்டு சென்று விட்டார்கள் பிறகு நபி (ஸல்) சென்றார்கள் என்னைக்கண்டதும் புன்னகைத்தார்கள் என்னுடைய உள்ளத்தில் உள்ளதையும் முகத்தில் உள்ளதையும் அறிந்து கொண்டார்கள் அபூஹுரைராவே என்று அழைத்தார்கள் இதோ நான் இருக்கிறேன் யா ரசூலுல்லாஹ் என்று பதிலளித்தேன் என்னுடன் வாருங்கள் என்று அழைத்ததும் நான் பின்னால் சென்றேன் வீட்டிற்குள் சென்றார்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள் பிறகு அனுமதியளிக்கப்பட்டது அங்கு நபி (ஸல்) பாலை கண்டார்கள் இது எங்கிருந்து வந்தது என வீட்டில் உள்ளவர்களை கேட்டார்கள் இன்னார் இதை தந்தார்கள் என அவர்கள் பதிலளித்தார்கள் அபூஹுரைராவை அழைத்ததும் ஆஜராகிறேன் என்று அவர் கூறினார்கள் சுஃப்பா வாசிகளை அழைத்து வாருங்கள் அவர்கள் இஸ்லாத்தின் விருந்தினர்கள் அவர்களுக்கு சொத்தும் இல்லை குடும்பமும் இல்லை அவர்களுக்கு பொறுப்பெடுக்கவும் யாருமில்லை நபி (ஸல்) விற்கு எப்போது ஸதகா வந்தாலும் அதை அவர்களுக்கு அனுப்பி விடுவார்கள் அதில் எதையும் நபி (ஸல்) எடுக்க மாட்டார்கள் நபி (ஸல்) விற்கு அன்பளிப்புகள் வந்தால் அதை நபி (ஸல்) அவர்களும் எடுத்துக்கொண்டு அவர்களுக்கும் பங்கு கொடுப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அந்த நேரம் அதை சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த பால் இத்தனை பேருக்கும் போதாதே என்று நினைத்துக்கொண்டேன் அந்த பாலை குடிப்பதற்கு இவர்கள் அனைவரையும் விட நான் தான் தகுதியானவனாக இருந்தேன் அவர்களை அழைத்து இதை நான் தான் அவர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் பிறகு எனக்கு கிடைக்குமா என்று நினைத்தேன் ஆனாலும் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடைய கட்டளைக்கு நான் கட்டுப்பட வேண்டுமே அதனால் நான் அவர்களை அழைத்து வந்தேன் அவர்களும் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார்கள் அனுமதியளிக்கப்பட்டது அவர்கள் வீட்டில் அமர்ந்ததும் அபூஹுரைரே என்று நபி (ஸல்) அழைத்ததும் நான் ஆஜராகிறேன் என்று கூறினேன் நபி (ஸல்) என்னிடம் அந்த பாலை அவர்களுக்கு கொடுக்கச்சொன்னார்கள் நானும் ஒவ்வொருக்கும் கொடுத்தேன் ஒவ்வொருவரும் குடித்து முடித்து என்னிடம் தந்தார்கள் பிறகு அங்குள்ள அனைவரும் குடித்த பிறகு நபி (ஸல்) அந்த பால் கோப்பையை என்னுடைய கையிலிருந்து எடுத்தார்கள் நபி (ஸல்) கோப்பையை எடுத்து புன்னகைத்து அபூஹூரைரே என்று அழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்ற போது நீங்களும் நானும் தான் பாக்கியாக இருக்கிறோம் என்று கூறியபோது ஆமாம் யா ரசூலுல்லாஹ் என்றேன் அப்போது நபி (ஸல்) என்னை உட்காரச்சொன்னார்கள் நான் உட்கார்ந்தேன் குடிக்க சொன்னார்கள் நான் குடித்தேன் மீண்டும் மீண்டும் குடிக்கச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள் நானும் குடித்தேன் பிறகு இனி எனக்கு குடிக்க வயிற்றில் இடமே இல்லை என்று கூறும் வரை நபி (ஸல்) குடிக்கச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்த கோப்பையை கேட்டார்கள் நான் கொடுத்தேன் நபி (ஸல்) அல்ஹம்துலில்லாஹ் கூறி பிறகு பிஸ்மில்லாஹ் கூறி அல்லாஹ் வின் பரக்கத்திலிருந்து எஞ்சியதைக்குடித்தார்கள்.