ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 43

ஹதீத் பாகம் – 43

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜ عن عائشة رضي الله عنها قالت لقد توفي النبي صلى الله عليه وسلم وما في

رفي من شيء يأكله ذو كبد إلا شطر شعير في رف لي فأكلت منه حتى طال علي

فكلته ففني

ஆயிஷா (ரலி) –  உயிருள்ள ஒன்று(ஒரு மனிதர்) சாப்பிடக்கூடிய எதுவும் எங்களிடம் இல்லை எங்கள் வீட்டின் தட்டில் எஞ்சியிருந்த கோதுமையை தவிர அதிலிருந்து நான் உண்டு வந்தேன். ஆனால் அது முடியவில்லையே என்று நான் நினைக்கும் அளவுக்கு உபயோகித்தேன். அதை அளந்து பார்த்தேன் அத்துடன் அது முடிவடைந்து விட்டது.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 42

ஹதீத் பாகம் – 42

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜ خِوَانٍ حَتَّى مَاتَ وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ.

அனஸ் (ரலி) – நபி (ஸல்) மரணிக்கும் வரை உணவை (மேஜையில்) வைத்து உண்ணவே இல்லை சமைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்ட எந்த ஒரு ரொட்டியையும் நபி (ஸல்) மரணிக்கும் வரை உண்ணவே இல்லை.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 41

ஹதீத் பாகம் – 41

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

  قال محمد صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء

واطلعت في النار فرأيت أكثر أهلها النساء 

இம்ரான் இப்னு  ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – நான் சொர்க்கத்தில் பார்த்தேன் அதில் அதிகமான ஏழைகள் இருந்தார்கள் நான் நரகத்தை பார்த்தேன் அதில் அதிகமான பெண்களை கண்டேன்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 40

ஹதீத் பாகம் – 40

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

6448 حدثنا الحميدي حدثنا سفيان حدثنا الأعمش قال سمعت أبا وائل قال عدنا

خبابا فقال هاجرنا مع النبي صلى الله عليه وسلم نريد وجه الله فوقع أجرنا على

الله فمنا من مضى لم يأخذ من أجره منهم مصعب بن عمير قتل يوم أحد وترك

نمرة فإذا غطينا رأسه بدت رجلاه وإذا غطينا رجليه بدا رأسه فأمرنا النبي صلى

الله عليه وسلم أن نغطي رأسه ونجعل على رجليه شيئا من الإذخر ومنا من أينعت

له ثمرته فهو يهدبها

நாங்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடி நபி (ஸல்) உடன் ஹிஜ்ரத் செய்தோம் எங்களுக்கு கூலி தர வேண்டிய கடமை அல்லாஹ் வுக்கு இருந்தது அல்லாஹ் தரக்கூடிய அந்த நன்மையில் எதையும் அனுபவிக்காமல் மரணித்தவர்கள் எங்களில் இருக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் தான் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) உஹத் யுத்தத்தின் நாளில் அவர் கொல்லப்பட்டார் ஒரே ஒரு (கோடுகள் வரையப்பட்ட) துணியை மட்டுமே விட்டுச்சென்றார் அந்த துணியால் தலையை மூடினால் கால் வெளியே தெரிந்தது காலை மூடினால் தலை வெளியே தெரியும் நபி (ஸல்) எங்களுக்கு கட்டளையிட்டார்கள் தலையை மூடிவிடுமாறு கால் பகுதியில் இத்ஹிர்(ஒரு புல் வகை) ஐ வைத்து (மறையுங்கள்) எங்களில் அவரது முயற்சி பலனளித்து அதை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்  

 இந்த ஹதீஸின் மூலம் ஜனாஸா முழுமையாக மூடப்பட வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 39

ஹதீத் பாகம் – 39

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب فضل الفقر

 ஏழ்மையின் சிறப்பு

حدثنا إسماعيل قال حدثني عبد العزيز بن أبي حازم عن أبيه عن سهل بن سعد

الساعدي أنه قال مر رجل على رسول الله صلى الله عليه وسلم فقال لرجل عنده

جالس ما رأيك في هذا فقال رجل من أشراف الناس هذا والله حري إن خطب أن

ينكح وإن شفع أن يشفع قال فسكت رسول الله صلى الله عليه وسلم ثم مر رجل

آخر فقال له رسول الله صلى الله عليه وسلم ما رأيك في هذا فقال يا رسول الله

هذا رجل من فقراء المسلمين هذا حري إن خطب أن لا ينكح وإن شفع أن لا

يشفع وإن قال أن لا يسمع لقوله فقال رسول الله صلى الله عليه وسلم هذا خير من

ملء الأرض مثل هذا

சஹல் இப்னு சஹத் அஸ்சாஹிதீ (ரலி) நபி (ஸல்) அமர்ந்திருக்கும் நேரத்தில் ஒரு மனிதர் நபி (ஸல்) வை கடந்து சென்றார் நபி (ஸல்) வின் அருகில் அமர்ந்திருந்தவரிடம் கடந்து சென்றவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கவர் குறிப்பிட்ட அந்த நபரைப்பற்றி “இவர் மக்களிலேயே மிகவும் கண்ணியமானவர்களில் ஒருவர், இவர் யாரையாவது திருமணம் முடிப்பதை பற்றி பேசினால் திருமணம் முடித்துக்கொடுத்துவிடுவார்கள். இவர் யாருக்கேனும் பரிந்துரை செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும். அப்போது நபி (ஸல்) அமைதியாக இருந்தார்கள்.பிறகு இன்னொரு மனிதர் அந்த சபையை கடந்து சென்றார் இவரைப்பற்றி உங்களது  கருத்து என்ன என்று நபி (ஸல்) கேட்டபோது இவர் முஸ்லிம்களில் ஏழையானவர் இவர் திருமணம் பேசினால் அவருக்கு திருமணம் முடித்துக்கொடுக்க முன் வர மாட்டார்கள். அவரது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.இவருடைய உபதேசத்தை மக்கள் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். அப்போது நபி (ஸல்) முன்பு கூறப்பட்டவரை விட இவர் பூமி நிரம்பும் அளவுக்கு இவர் மிகவும் சிறந்தவர்.

அவர் ஜுஹைத் இப்னு சூராக்கத்தல் கிஃபாரியாக இருக்கலாம் என்று இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ கருத்து தெரிவித்துள்ளார்கள்.

🔷 ️நபி (ஸல்) -உங்களில் சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களிடம் தீனார் திர்ஹமை கேட்டால் நீங்கள் கொடுக்க மாட்டீர்கள். ஆனால் அவர் அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை கேட்டாலும் அதை அல்லாஹ் கொடுப்பான்.

விளக்கம் :

 عن أبي هريرة – رضي الله عنه – قال: قال رسول الله – صلى الله عليه وسلم

-: ((رُبَّ أشعث أغبر مدفوع بالأبواب، لو أقسم على الله         لأبرَّه))؛ رواه

مسلم

அபூஹுரைரா (ரலி) – பரட்டை தலையுடைய, அவர்களை பார்த்ததும் கதவை சாத்தும் அளவுக்கு உள்ள சிலர் இருக்கிறார்கள் அல்லாஹ் வின்  மீது ஆணையிட்டு அவர்கள் ஒன்று நடக்க வேண்டும் அல்லது நடக்க கூடாது என்று சத்தியம் செய்தால் அவர்களது சத்தியத்திற்கு அல்லாஹ் உதவுவான் (முஸ்லீம்)

🔷 ஆயிஷா ரலி இடம் உணவு கேட்டு வந்து 3 பேரெத்தம்பழங்கள் கிடைக்கப்பெற்று அதில் இரண்டை இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து ஒன்றை உண்ணச்செல்லும்போது பிள்ளைகளின் தேவை கருதி அதையும் பங்கிட்டு கொடுத்த பெண்மணியை பற்றி நபி (ஸல்) கூறுகையில் அவர்களுக்கு அல்லாஹ்  சொர்க்கத்தை கடமையாக்கிவிட்டான் என்று கூறினார்கள்

 إن الله يحب العبد التقي الغني الخفي

சஅத் (ரலி)-நபி (ஸல்) – இறையச்சமுள்ள பிறரை சார்ந்து வாழாத(போதுமென்ற உள்ளம் கொண்ட)அறிமுகமற்று வாழ்பவரை அல்லாஹ் விரும்புகிறான்.

(முஸ்லீம்)

الخفي – அவர் வந்தால் அவர் வந்திருக்கிறார் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்திருக்காது அவர் வரவில்லையென்றால் அதைப்பற்றி யாரும் கேட்கவும் மாட்டார்கள்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 38

ஹதீத் பாகம் – 38

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الغنى غنى النفس   வசதி என்பது உள்ளத்தின் செல்வம் தான்

❤ சூரா அல் முஃமினூன் : 23 : 55, 56 & 63

اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ‏

(55) அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?

نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ‌ ؕ بَلْ لَّا يَشْعُرُوْنَ‏

(56) அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.

وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ‏

(63) இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.

قال ابن عيينة لم يعملوها لا بد من أن يعملوها

இப்னு உயைனா கூறுகிறார் அவர்கள் இன்னும் செய்ய வேண்டிய அமல்கள் இருக்கின்றன என்று அல்லாஹ் இங்கு கூறுவது அவர்கள் செய்யாத சில பாவங்கள் இன்னும் இருக்கின்றன அதை இந்த பொருளாதாரத்தின் மூலம் அவர்கள் செய்வார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ليس الغنى عن كثرة العرض

ولكن الغنى غنى النفس

அபூஹுரைரா (ரலி) – பொருளாதாரம் என்பது ஒருவனுக்கு நிறைய வசதிகள் இருப்பதல்ல உண்மையில் வசதியென்பது உள்ளத்தின் திருப்தியே.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 37

ஹதீத் பாகம் – 37

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) என்னிடம் உஹத் மலையளவுக்கு தங்கம் இருந்தாலும் அதை 3 வது இரவு கழியும் நேரம், அதில் ஒரு தீனாரையும் நான் வைத்துக்கொள்ள மாட்டேன்; கடனுக்காக நான் வைத்திருக்கக்கூடிய பணத்தை தவிர. அந்த சொத்திலிருந்து இப்படி இப்படி இப்படியாக(வலது, இடது, முன்னாலும் பின்னாலும்) தருமம் செய்யும் வரை. இந்த உலகத்தில் அதிகமாக தேடக்கூடியவர்கள் தான் மறுமை நாளில் மிகவும் குறைந்தவர்கள் அதை (இவ்வாறெல்லாம் அல்லாஹ் வின் பாதையில் செலவு செய்யவில்லையெனில்). அப்படிப்பட்டவர்கள் குறைந்தவர்கள் என்று கூறி நடந்தார்கள். நான் வரும் வரை நீங்கள் இங்கேயே உட்காருங்கள் என்று கூறி விட்டு சென்றார்கள். பிறகு அந்த இருட்டில் நபி (ஸல்) நடந்து சென்றார்கள். அவர்கள் என் கண்ணிலிருந்து மறையும் வரை நடந்தார்கள். ஒரு உயர்ந்த சப்தத்தை கேட்டு நபி (ஸல்) ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று பயந்தேன் ஆனாலும் நபி (ஸல்) வர வேண்டாம் என்று கூறியதால் அங்கேயே அமர்ந்தேன். பிறகு நபி (ஸல்) வந்ததும் யா ரசூலுல்லாஹ் ஒரு சப்தத்தை கேட்டு பயந்தேன் என்றதும் அது ஜிப்ரஈல் (அலை) என்றார்கள். அவர் என்னிடம் வந்து கூறினார் யாரெல்லாம் இணை வைக்காமல் உன் சமுதாயத்தில் மரணிக்கிறாரோ அவர் சொர்க்கம் நுழைவார் என்றார் அவர் விபச்சாரம் செய்து திருடினாலுமா என்ற போது ஆம் என்றார்.

💠 நபி (ஸல்) -உங்களிலொருவர் உஹத் மலையளவு தங்கம் தருமம் செய்தாலும் என்னுடைய தோழருடைய ஒரு பிடி அளவு தருமத்திற்கு சமமாகாது

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 36

ஹதீத் பாகம் – 36

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن أبي ذر رضي الله عنه قال خرجت ليلة من الليالي فإذا رسول الله صلى الله

عليه وسلم يمشي وحده وليس معه إنسان قال فظننت أنه يكره أن يمشي معه أحد

قال فجعلت أمشي في ظل القمر فالتفت فرآني فقال من هذا قلت أبو ذر جعلني الله

فداءك قال يا أبا ذر تعاله قال فمشيت معه ساعة فقال إن المكثرين هم المقلون

يوم القيامة إلا من أعطاه الله خيرا فنفح فيه يمينه وشماله وبين يديه ووراءه

وعمل فيه خيرا قال فمشيت معه ساعة فقال لي اجلس ها هنا قال فأجلسني في

قاع حوله حجارة فقال لي اجلس ها هنا حتى أرجع إليك قال فانطلق في الحرة

حتى لا أراه فلبث عني فأطال اللبث ثم إني سمعته وهو مقبل وهو يقول وإن سرق

وإن زنى قال فلما جاء لم أصبر حتى قلت يا نبي الله جعلني الله فداءك من تكلم في

جانب الحرة ما سمعت أحدا يرجع إليك شيئا قال ذلك جبريل عليه السلام عرض

لي في جانب الحرة قال بشر أمتك أنه من مات لا يشرك بالله شيئا دخل الجنة قلت

يا جبريل وإن سرق وإن زنى قال نعم قال قلت وإن سرق وإن زنى قال نعم وإن

شرب الخمر قال النضر أخبرنا شعبة حدثنا حبيب بن أبي ثابت والأعمش وعبد

العزيز بن رفيع حدثنا زيد بن وهب بهذا قال أبو عبد الله حديث أبي صالح عن أبي

الدرداء مرسل لا يصح إنما أردنا للمعرفة والصحيح حديث أبي ذر قيل لأبي عبد

الله حديث عطاء بن يسار عن أبي الدرداء قال مرسل أيضا لا يصح والصحيح

حديث أبي ذر وقال اضربوا على حديث أبي الدرداء هذا إذا مات قال لا إله إلا الله

عند الموت

அபூதர் அல் கிபாரீ (ரலி) – ஒரு இரவில் நான் வெளியே சென்றேன். நபி (ஸல்) தனியாக நடப்பதை நான் கண்டேன் அவர்களுடன் ஒருவரும் இல்லை; என்று நான் நினைத்தேன் நபி (ஸல்) தன்னுடன் யாரும் வருவதை இந்நேரத்தில் விரும்பவில்லையென்று நான் சந்திரனின் நிழலில் நடக்க ஆரம்பித்தேன் நபி (ஸல்) திரும்பியபோது என்னை கண்டார்கள் இது யாரென்று கேட்டார்கள்  நான் அபூதர் என்று கூறினேன் மேலும் அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் (என்று கூறினேன்) வாருங்கள் அபூதர்ரே என்று நபி (ஸல்) அழைத்தார்கள் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன் இந்த உலகத்தில் அதிகமாக தேடக்கூடியவர்கள் தான் மறுமையில் குறைவாக அடையக்கூடியவர்கள் யாருக்கெல்லாம் அல்லாஹ் பொருளாதாரத்தை கொடுத்து அதை அவர் வலதிலும் இடதிலும் முன்னாலும் பின்னாலும் தாராளமாக செலவழிக்கிறாரோ அவரைத்தவிர இன்னும் சிறிது நேரம் நபி (ஸல்) உடன் நடந்தேன் நபி (ஸல்) என்னிடம் இங்கே அமருங்கள் என்று கூறினார்கள் கற்கள் சூழ்ந்திருக்கும் சம தரையில் என்னை அமர வைத்தார்கள் நான் திரும்பி வரும் வரை இங்கு அமருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் நான் காண முடியாத அளவிற்கு தூரமாக நபி (ஸல்) சென்றுவிட்டார்கள்

நீண்ட நேரமாக நபி (ஸல்) வரவில்லை நபி (ஸல்) திரும்பி வருகையில் அவர் சொல்லக்கேட்டேன் அவர்கள் கூறினார்கள்.

திருடினாலும் விபச்சாரம் செய்தாலும் அப்போது என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் (என்று கூறினேன்) அந்தப்பகுதியில் நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு எவரும் பதில் சொல்வதை நான் செவியுறவில்லை அது ஜிப்ரஈல் (அலை) அந்தப்பகுதியில் ஜிப்ரஈல் (அலை) வந்தார்கள் அவர் கூறினார் உங்கள் உம்மத்திற்கு ஒரு நற்செயதி சொல்லுங்கள் எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் இந்த உலகத்தில் மரணிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் உண்டு என்று அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தலுமா? என்று நபி (ஸல்) கேட்டபோது ஜிப்ரஈல் (அலை) ஆம் என்றார்கள் திருடினாலும் விபச்சாரம் செய்தலும் என்று நானும் நபி ஸல் விடம் கேட்டேன் அவர்கள் ஆம் என்றார்கள் அவர் சாராயம் குடித்திருந்தாலும் சரியே.

⚜ மற்ற ஹதீஸுகளை ஆய்வு செய்து அறிந்ததில் ஏகத்துவத்தின் உறுதியாக இருந்தவர் தண்டிக்கப்பட்டாலும் பிறகு சொர்க்கம் செல்லுவார்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 35

ஹதீத் பாகம் – 35

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

المكثرون هم المقلون அதிகமாக தேடிக்கொள்பவர்கள் தான் மறுமையில்  குறைவாக இருக்கக்கூடியவர்கள்

من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون

أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا

يعملون

❤ சூரா ஹூது – 11:15 ; 16

(15) எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.

(16) இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!

❤ சூரா அல்ஜூக்ருஃப் – 43:33

நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

❤ சூரா அல் அஹ்காஃப் 46:20

அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 34

ஹதீத் பாகம் – 34

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ما قدم من ماله فهو له எந்த சொத்துக்களையெல்லாம் முற்படுத்துகிறாரோ அது அவருக்குரியது

حدثني عمر بن حفص حدثني أبي حدثنا الأعمش قال حدثني إبراهيم التيمي عن

الحارث بن سويد قال عبد الله قال النبي صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب

إليه من ماله قالوا يا رسول الله ما منا أحد إلا ماله أحب إليه قال فإن ماله ما قدم

ومال وارثه ما أخر

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் எவருக்கு நீங்கள் அனுபவிக்கும் சொத்தை விட உங்கள் வாரிசுகள் அனுபவிக்கும் சொத்து விருப்பமானதாக இருக்கிறது?- அதற்கு அவர்கள் கூறினார்கள்: எண்களில் அனைவருக்கும் நாம் அனுபவிக்கும் சொத்தே விருப்பமானதாக இருக்கும். நபி (ஸல்) – உங்களுடைய சொத்து என்பது எதையெல்லாம் இந்த உலகத்தில் உபயோகிக்கிறாரோ(தருமம்) அது தான் அவரது சொத்து எதையெல்லாம் உபயோகிக்கவில்லையோ அது அவருடையதல்ல.