ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 33

ஹதீத் பாகம் – 33

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن حكيم بن حزام قال سألت النبي صلى الله عليه وسلم فأعطاني ثم سألته

فأعطاني ثم سألته فأعطاني ثم قال هذا المال وربما قال سفيان قال لي يا

حكيم [ ص: 2366 ] إن هذا المال خضرة حلوة فمن أخذه بطيب نفس

بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه وكان كالذي يأكل

ولا يشبع واليد العليا خير من اليد السفلى

6441 ஹக்கீம் இப்னு ஹிஜாம் (ரலி)

⇓ ↔ سألت النبي صلى الله عليه وسلم فأعطاني

நான் நபி (ஸல்) விடம் கேட்டேன் அவர்கள் எனக்கு (பணம்) தந்தார்கள்

 ⇓ ↔ ثم سألته فأعطاني

மீண்டும் கேட்டபோது தந்தார்கள்

⇓ ↔ ثم سألته فأعطاني

மீண்டும் கேட்டபோது தந்தார்கள்

⇓ ↔ إن هذا المال خضرة حلوة

இந்த சொத்து பசுமையானதாகவும் இனிமையானதாகவும் இருக்கும்

⇓ ↔ فمن أخذه

யார் அதை எடுக்கிறார்களோ

  திருப்தியான மனதுடன்↔ بطيب نفس

⇓ ↔ بورك له فيه

அதில் அவருக்கு அபிவிருத்தி செய்யப்படும்  

 ⇓ ↔ ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه

யார் அதை அதிருப்தியான மனதுடன் எடுக்கிறாரோ அவருக்கு அதில் அபிவிருத்தி இருக்காது

⇓ ↔ وكان كالذي يأكل ولا يشبع

சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவன் போல் ஆகி விடுவான்

⇓ ↔ واليد العليا خير من اليد السفلى

தாழ்ந்த கையை விட சிறந்தது உயர்ந்த கைகள் தான்

 அதற்கு பிறகு அந்த ஸஹாபி வேறு எவரிடமும் எதையும் கேட்க கூடாது என்று முடிவெடுத்து மரணம் வரை அதை கடை பிடித்தார்கள். அவர்கள் வாகனத்தில் செல்லும்போது ஒரு சட்டை கீழே விழுந்தாலும் பிறரிடம் கேட்காமல் தானே தன் வேலைகளை செய்து கொண்டார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) காலத்தில் இவருடைய ஜகாத் பங்கை கூட அவர் வாங்கவில்லை.

  ஹுனைன் யுத்தத்தில் மக்கா வாசிகளுக்கு அதிகமாக கொடுத்தார்கள். சிலருக்கு அதிகமாக கொடுக்கிறேன் அவர்களது தேவையை அறிந்து. சிலரது மனநிறைவின் காரணமாக அல்லாஹ்வின் புறம் விட்டு விடுகிறேன் அவர்களில் ஒருவர் தான் அம்ரு இப்னு தஹ்லப்.  

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 32

ஹதீத் பாகம் – 32

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

هذا المال خضرة حلوة

சொத்து பசுமையானதும் இனிமையானதும் தான்

باب قول النبي صلى الله عليه وسلم هذا المال خضرة حلوة وقال الله تعالى زين

للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة

والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا قال عمر اللهم إنا لا

نستطيع إلا أن نفرح بما زينته لنا اللهم إني أسألك أن أنفقه في حقه

⇓ ↔ هذا المال خضرة حلوة 

சொத்து பசுமையானதும் இனிமையானதும் தான்

❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:14 :

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ

وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِندَهُ

حُسْنُ الْمَآبِ

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

⇓ ↔ زين للناس 

மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டிருக்கு  

⇓ ↔ الشهوات 

மனதில் வரக்கூடிய இச்சைகள் ஆசைகள் எல்லாவற்றையும் குறிக்கும்

  பெண்களில் ↔ من النساء

 குழந்தைகள் ↔ والبنين

 குவியல்கள்  ↔ والقناطير المقنطرة

 ⇓ ↔ من الذهب والفضة

தங்கங்களிலும் வெள்ளியிலும்

 ⇓ ↔ والخيل المسومة

அடையாளமிடப்பட்ட குதிரைகள்

 கால்நடைகள்↔ والأنعام

  விவசாய நிலங்கள் ↔ والحرث

⇓ ↔ ذلك متاع الحياة الدنيا

இவையனைத்தும் இந்த உலகத்தின் இன்பங்கள்

⚀قال عمر  – உமர் (ரலி) கூறினார்கள்

⇓ ↔ اللهم إنا لا نستطيع إلا أن نفرح بما زينته لنا

யா அல்லாஹ் நீ எவையெல்லாம் எங்களுக்கு கவர்ச்சியாக ஆக்கியிருக்கிறாயோ அவற்றில் எங்களால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை.

⇓ ↔ اللهم إني أسألك

யா அல்லாஹ் உன்னிடம் நான் கேட்கிறேன்

⇓ ↔ أن أنفقه

அதை செலவு செய்ய

⇓ ↔  في حقه

அதற்கு உரிய முறையில்

 

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 31

ஹதீத் பாகம் – 31

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

[highlight color=”blue”]6440[/highlight] அனஸ் (ரலி)

وَقَالَ لَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أُبَيٍّ قَال كُنَّا نَرَى

 ⇓ هَذَا مِنْ الْقُرْآنِ حَتَّى نَزَلَتْ أَلْهَاكُمْ التَّكَاثُرُ كُنَّا نَرَى هَذَا مِنْ   الْقُرْآنِ

நாங்கள் இதை குர்ஆனில் (ஒரு வசனமாக ) கண்டோம்.

⇓حَتَّى نَزَلَتْ أَلْهَاكُمْ التَّكَاثُرُ

சூரா தகாசுர் இறங்கும் வரை

❣ மேற்கூறப்பட்ட ஹதீதில் நாம் புரிந்து கொள்ளவேண்டியவை குர்ஆனில் சட்டம் மாற்றப்பட்ட வசனங்களும் உள்ளது என்பது போல ஓதல் மாற்றப்பட்ட வசனங்களும் உள்ளன.இப்னு அப்பாஸ் (ரலி) இந்த ஹதீஸ் ஆரம்பத்தில் குர்ஆனில் ஓதப்படும் வசனமாக இருந்தது என்பது எனக்கு தெரியாது என்று தான் இங்கு கூறுகிறார்கள்.

உபை இப்னு கஹ்ப் (ரலி) இதை ஆரம்ப காலத்தில் நாங்கள் இதை குர்ஆன் வசனமாக ஓதிக்கொண்டிருந்தோம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

❣ ஓதல் மாற்றப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று குழப்பவாதிகள் கேட்கின்றனர். குர்ஆனில் சட்டம் மாற்றப்படுவதற்கான என்ன நியாயம் இருக்கிறதோ அத்தனை நியாயங்களும் இதில் இருக்கிறது.

❣சட்டம் மாற்றப்படுவது என்பதே இஸ்லாத்தில் இல்லை என்னும் மெளலானா மெளதூதி அவர்களது வாதம் பிழையானதாகும்.

✳ ஸூரத்துல் பகரா 2:106

مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

 

 

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 30

ஹதீத் பாகம் – 30

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

6439: அனஸ் இப்னு மாலிக் (ரலி) –

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ أَحَبَّ أَنْ

يَكُونَ لَهُ وَادِيَانِ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ

ஆதமுடைய மகனுக்கு தங்கத்தால் ஆன ஒரு ஓடை இருந்தால்

⇓ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ

இரண்டு ஓடை இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவான் 

⇓ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ

அவனுடைய வாயை மண்ணைத்தவிர வேறெதுவும் நிரப்பாது 

⇓ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

பாவமன்னிப்பு தேடுபவர்களுக்கு அல்லாஹ் மன்னிக்கிறான் 

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 29

ஹதீத் பாகம் – 29

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لَأَحَبَّ أّنَّ

لّهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

قَلَ ابْنُ عَبَّاسٍ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا قَالَ وَسَمِعْتُ ابْنَ الْزُّبَيْرِ يَقُولُ ذَلِكَ

عَلَى الْمِنْبَرِ

[highlight color=”yellow”]6437[/highlight] இப்னு அப்பாஸ் (ரலி) –

⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ

ஆதமுடைய மகனுக்கு இருந்தால் 

⇓ مِثْلَ وَادٍ 

ஒரு ஓடை இருந்தால் 

⇓ مَالاً

சொத்து 

⇓ لَأَحَبَّ

அவன் விரும்புவான்

⇓ أّنَّ لّهُ إِلَيْهِ مِثْلَهُ

அதைப்போன்று இன்னொன்று அவனுக்கு இருக்கவேண்டுமென்று

⇓ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ

ஆதமுடைய மகனின் கண்ணை மண்ணைத்தவிர வேறெதுவும் நிரப்பாது

⇓ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

பாவமன்னிப்பு தேடுபவருக்கு அல்லாஹ் மன்னிக்கிறான்

⇓ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا

அது அல்குர்ஆனில் உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது

⇓ قَالَ وَسَمِعْتُ ابْنَ الْزُّبَيْرِ يَقُولُ ذَلِكَ عَلَى الْمِنْبَرِ

இப்னு சுபைர் மிம்பரில் இதை சொல்வதை நான் கேட்டேன்.

[highlight color=”yellow”]6438 [/highlight]

سَمِعْتُ ابْنُ الزُّبَيْرِ عَلَى الْمِنْبَرِ بِمَكَّةَ فِي خُطْبَتِهِ يَقُولُ

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) மக்காவில் மிம்பரிலிருந்து உரை நிகழ்த்தும்போது கூறினார்கள்

⇓ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ

மனிதர்களே ! நபி(ஸல்) கூறுபவர்களாக இருந்தார்கள்

⇓ لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلْنًا مِنْ ذَهَبٍ

ஆதமின் மகனுக்கு தங்கத்தால் நிரப்பப்பட்ட ஒரு ஓடை அவனுக்கு கொடுக்கப்படுகிறது

⇓ أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا

அவனுக்கு இரண்டாவதை அவன் ஆசைப்படுவான் 

⇓ وَلَوْ أُعْطِيَ ثَانِيًا

இரண்டாவது அவனுக்கு கொடுக்கப்பட்டால்

⇓ أَحَبَّ لَيْهِ ثَالِثًا

மூன்றாவதை அவன் விரும்புவான்

⇓ وَلَا يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ

ஆதமுடைய மகனுடைய இதயத்தை மண்ணை தவிர வேறேதும் அடைக்காது

⇓ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

பாவமன்னிப்பு கேட்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கிறான்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 28

ஹதீத் பாகம் – 28

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

سَمِعْتُ النَّبِيَّ صّلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى

ثَالِثًا وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ

6436 இப்னு அப்பாஸ் (ரலி) –

 ⇓ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ

ஆதமின் மகனுக்கு சொத்துக்களால் இரண்டு ஓடைகள் இருந்தால்

⇓ لاَبْتَغَى ثَالِثًا

 மூன்றாவதை அவன் தேடுவான்

⇓ وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ

ஆதமின் மகனின் இதயத்தின் நடுப்பகுதியை மண்ணை தவிர வேறேதும் நிரப்பாது.

{1 – மரண நேரத்தில் தான் அவன் தேவைகள் தீரும்.

2- எவ்வளவு தேடினாலும் நீ இறுதியாக மண்ணால் நிரப்பப்பட போகிறவன்.}

⇓ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ

யாரெல்லாம் பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 27

ஹதீத் பாகம் – 27

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، يُكَفِّرُ هَا الصِّيَامُ وَالصَّلَاةُ

وَالصَّدَقَةُ

ஹுதைபா (ரலி) – ஒரு மனிதனுக்கு சொத்தில் ஏற்படும் சோதனை, தன்னில் தன் பிள்ளைக்கும் அண்டைவீடு என அனைத்து விஷயங்களிலும் ஏற்படும் சோதனைகளுக்கு நோன்பு, தொழுகை, தர்மம் பரிகாரமாக அமைந்து விடும். (முஸ்லீம்)

எதிலெல்லாம் உலக கவர்ச்சி இருக்கிறதோ அதெல்லாம் சோதனை தான்.

قال رسول الله صلى عليه وسلم تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن

أعطي رضي وإن لم يعط لم يرض

அபூஹுரைரா (ரலி) –

தீனாரின் (தங்க நாணயம் அடிமை) நாசமடைந்தான் – تعس عبد الدينار

மேலும் திர்ஹ(த்தின் அடிமை) (வெள்ளி நாணயம்) – والدرهم

கம்பளி மற்றும் போர்வைகள் (அடிமை நாசமடையட்டும்) (இது தூக்கத்தையும் குறிக்கும், ஆடைகளின் ஆசைகளில் எல்லை மீறுவதையும் குறிக்கும்) – والقطيفة والخميصة

கிடைத்தால் திருப்பியாக இருப்பான் – إن أعطي رضي

கிடைக்கவில்லையென்றால் – وإن لم يعط

பொருந்திக்கொள்ளமாட்டான் – لم يرض

✳ பனீ இஸ்ராயீல் 17:26,27

وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا‏

(26) இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

(27) நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 26

ஹதீத் பாகம் – 26

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ما يتقى من فتنة المال

சொத்துக்கள் பற்றிய சோதனையை அஞ்சுதல்

يوم التغابن – மறுமை நாள்(மனிதன் அறிவற்றவனாக நடந்து கொண்டான் என்பதை உணரும் நாள்)

اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ

நபி (ஸல்) மிம்பரிலிருந்து உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் அப்போது ஹஸன் ஹுசைன் (ரலி) விளையாடிக்கொண்டு வருவதை கண்டு இறங்கி பிள்ளைகளை அணைத்து தூக்கிவிட்டு இந்த குழந்தைகளை கண்டு என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறிவிட்டு உங்களுடைய சொத்துக்களும் பிள்ளைகளும் உங்களுக்கு சோதனை தான் என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான் என்று கூறினார்கள்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 25

ஹதீத் பாகம் – 25

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ذهاب الصالحين ويقال الذهاب المطر

நல்ல மக்கள் காணாமல் போதல் அல்லது நல்ல மக்களை இழத்தல்:

  தஹாப் என்றால் மழை என்று கூறப்படுகிறது ↔ ويقال الذهاب المطر

 சாதாரண மழை ↔ ذِهبا

مرداس الأسلمي قال قال النبي صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول

ويبقى حفالة كحفالة الشعير أو التمر لا يباليهم الله بالة قال  أبو عبد الله يقال

حفالة وحثالة – 6434

மிர்தாஸ் அல் அஸ்லமீ – நபி (ஸல்) –                       

நல்லவர்கள் போய் விடுவார்கள் ↔ يذهب الصالحون 

முதலாவது வந்தவர்கள் முதலாவதாக போவார்கள் ↔ الأول فالأول

(ஒன்றன் பின் ஒன்றாக)                        

கோதுமையில் புறம்தள்ளப்படும் பதர்களைப்  ↔ ويبقى حفالة كحفالة الشعير 

போன்றவர்கள் எஞ்சி இருப்பார்கள்                                         

அல்லது பேரீச்சம்பழத்தில் (நிராகரிக்கப்படும் பகுதியை ↔ أو التمر 

போன்றவர்கள் எஞ்சி இருப்பார்கள்)                  

அல்லாஹ் அவர்களை கணக்கிலேயே எடுக்க மாட்டான்  لا يباليهم الله بالة 

 இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ↔ قال أبو عبد الله 

குப்பை, பதர், வீணான பொருட்களை குறிக்கும் ↔ يقال حفالة وحثالة  

என்ற அமைப்பில் அரபியில் வரும் அனைத்தும் ↔ فُعالَة 

குப்பை, பதர், வீணான பொருட்களை குறிக்கும்             

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 24

ஹதீத் பாகம் – 24

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

حثنا سعد بن حفص حدثنا شيبان عن يحيى عن محمد بن إبراهم القرشي قال

أخبرني معاذ بن عبد الرحمن أن حمران بن أبان أخبره قال أتيت عثمان بن عفان

بطهور وهو جالس على المقاعد فتوضأ فاحسن الوضوء ثم قال رأيت النبي صلى

الله عليه وسلم توضأ مثل هذا الوضوء ثم أتى المسجد فركع ركعتين ثم جلس غفر

له ما تقدم من ذنبه قال وقال النبي صلى الله عليه وسلم لاتغتروا

நான் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றேன் அவர் அழகிய முறையில் உளூ செய்தார். நபி(ஸல்) இதே இடத்தில் உளூ செய்தார்கள். நான் உளூ செய்தது போல உளூ செய்தார்கள். யார் நான் உளூ செய்தது போல உளூ செய்கிறார்களோ பின்னர் மஸ்ஜிதிற்கு வந்து 2 ரக்காத்துகள் தொழுகிறாரோ பின்னர் அமர்ந்திருக்கிறாரோ அவருடைய முன் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று கூறி விட்டு நபி(ஸல்) ஏமார்ந்து விட வேண்டாம் என நபி(ஸல்) கூறினார்கள்.

இதற்கு விளக்கம் : இந்த கூலியை வைத்து ஏமார்ந்து விட வேண்டாம்.