ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 23

ஹதீத் பாகம் – 23

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

ஸூரத்து ஃபாத்திர் 35 : 5, 6

(5) மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.

(6) நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.

اصحاب السعير جمعه سعر قال مجاهد الغرور الشيطان

முஜாஹித் (ரஹ்) – الغرور என்றால் ஷைத்தான் (ஏமாற்றக்கூடியவன்)

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 22

 

ஹதீத் பாகம் – 22

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

حَدَّثَنِي يحي بن موسى، حَدَّثَنَا وكيع، حَدَّثَنَا إسماعيل، عَنْ قيس، قَالَ : سَمِعْتُ

خَبَابا وَقَدِ اكْتَوَى يَوْمَئِذٍ سَبْعًا فِي بَطْنِهِ، وَقَالَ : ” لَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَليْهِ

وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِلْمَوْتِ لَدَعَوْتُ بِلْمَوْتِ، إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلّى اللهُ عَلَيْهِ

وَسَلَّمَ مَضَوْا وَلَمْ تَنْقُصْهُمُ الدُّنْيَا بِشَيْءٍ، وَإِنَّا أَصَبْنَا مِنَ الدُّنْيَا مَا لَا نَجِدُ لَهُ مَوْضِعًا

إِلَّا التُّرَابَ

ஹப்பாப் இப்னு அரத் (ரலி) வை ஒரு தாபிஃ சந்திக்க வந்த பொது அவரது வயிற்றில் 7 சுட்ட அடையாளம் இருந்தது. அப்போது ஹப்பாப் (ரலி) – நபி (ஸல்) மரணத்தை கேட்டு துஆ செய்வதை தடை செய்யாவிட்டால் நான் அதை கேட்டு துஆ செய்திருப்பேன். நபி (ஸல்) வின் தோழர்கள் போய்விட்டார்கள் அவர்களுடைய கூலியிலிருந்து இந்த உலகம் எந்த ஒன்றையும் குறைக்கவில்லை. இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் நாங்கள் அனுபவித்து விட்டோம் கிடைத்த பொருளாதாரத்தை மண்ணில் போடும் அளவிற்கு.

வேறொரு செய்தியில்:

 நான் ஹப்பாப் (ரலி) யை சந்திக்க சென்ற போது அவர்கள் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார்கள் அப்போது இது போல கூறினார்கள்.

 அபூவாயில் (ரலி) ஹப்பாப் (ரலி) யை பற்றி அறிவிக்கிறார்கள் – நாங்கள் நபியவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம் என்று கூறி விட்டு இந்த செய்தியைக் கூறினார்கள்.  

باب قول الله تعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا

يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا

من أصحاب السعير جمعه سعر قال مجاهد الغرور الشيطان

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 21

ஹதீத் பாகம் – 21

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خير الناس قرني

 ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء أقوام تسبق شهادة أحدهم يمينه

ويمينه شهادته قال إبراهيم وكانوا يضربوننا على الشهادة والعهد

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – சமுதாயத்தில் சிறந்தது என் தலைமுறை பிறகு அடுத்து வரும் தலைமுறை பிறகு அடுத்து வரும் தலைமுறை அதன் பின் வரும் தலைமுறை அவர்களில் சாட்சியத்திற்கும் சத்தியத்திற்கும் போட்டி வரும்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 20

ஹதீத் பாகம் – 19 & 20

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

فعن عمران بن الحصين – رضي الله عنهما – عن النبي – صلى الله عليه وسلم

– أنه قال : (خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ) قال عمران : فما

أدري، قال النبي – صلى الله عيه وسلم – مرتين أو ثلاثًا ثم يكون بعدهم قوم

يَشهدون ولا يُستشهدون ويخونون ولا يوتمنون وينذرون ولا يوفون ويظهر فيهم

السِّمَن

நூற்றாண்டு, ஆரம்பம், சமூகம் ↔ قرن

உங்களில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் ↔ خيركم قرني

பின்னர் அவர்களுக்கு பின்னர் தொடர்ந்து வரக்கூடியவர்கள் ↔ ثم الذين يلونهم

அவர்களுக்கு பின்னர் ஒரு சமுதாயம் உருவாகுவார்கள் ↔ ثم يكون بعدهم قوم

சாட்சி சொல்லுவார்கள் ஆனால்                                    

அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் ↔ يَشهدون ولا يُستشهدون

மோசடி செய்து கொண்டே இருப்பார்கள்                             

அமானிதம் பேண மாட்டார்கள் ↔ ويخونون ولا يوتمنون

நேர்ச்சை வைப்பதில் வேகமாக இருப்பார்கள்                          

ஆனால் நிறைவேற்றுவதில் பின்தங்குவார்கள் ↔ وينذرون ولا يوفون

கொழுப்பு அதிகரிக்கும் ↔ ويظهر فيهم السِّمَن

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி(ஸல்) – சமுதாயத்தில் சிறந்தது எனது சமுதாயம் பிறகு அவர்களுக்கு பின்னர் தொடர்ந்து வரக்கூடிய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களுக்கு அடுத்த சமுதாயம். அதற்கு பின்னல் சாட்சிக்கு அழைக்காமல் சாட்சி சொல்ல வருவார்கள். அமானிதம் பேணாமல் மோசடி செய்வார்கள் நேர்ச்சை வைப்பார்கள் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். அந்த காலத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 19

ஹதீத் பாகம் – 19 & 20

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

فعن عمران بن الحصين – رضي الله عنهما – عن النبي – صلى الله عليه وسلم

– أنه قال : (خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ) قال عمران : فما

أدري، قال النبي – صلى الله عيه وسلم – مرتين أو ثلاثًا ثم يكون بعدهم قوم

يَشهدون ولا يُستشهدون ويخونون ولا يوتمنون وينذرون ولا يوفون ويظهر فيهم

السِّمَن

நூற்றாண்டு, ஆரம்பம், சமூகம் ↔ قرن

உங்களில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் ↔ خيركم قرني

பின்னர் அவர்களுக்கு பின்னர் தொடர்ந்து வரக்கூடியவர்கள் ↔ ثم الذين يلونهم

அவர்களுக்கு பின்னர் ஒரு சமுதாயம் உருவாகுவார்கள் ↔ ثم يكون بعدهم قوم

சாட்சி சொல்லுவார்கள் ஆனால்                                    

அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் ↔ يَشهدون ولا يُستشهدون

மோசடி செய்து கொண்டே இருப்பார்கள்                             

அமானிதம் பேண மாட்டார்கள் ↔ ويخونون ولا يوتمنون

நேர்ச்சை வைப்பதில் வேகமாக இருப்பார்கள்                          

ஆனால் நிறைவேற்றுவதில் பின்தங்குவார்கள் ↔ وينذرون ولا يوفون

கொழுப்பு அதிகரிக்கும் ↔ ويظهر فيهم السِّمَن

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி(ஸல்) – சமுதாயத்தில் சிறந்தது எனது சமுதாயம் பிறகு அவர்களுக்கு பின்னர் தொடர்ந்து வரக்கூடிய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களுக்கு அடுத்த சமுதாயம். அதற்கு பின்னல் சாட்சிக்கு அழைக்காமல் சாட்சி சொல்ல வருவார்கள். அமானிதம் பேணாமல் மோசடி செய்வார்கள் நேர்ச்சை வைப்பார்கள் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். அந்த காலத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 18

ஹதீத் பாகம் – 18

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

إن هذا المال خضرة حلوة وإن كل ما أنبت الربيع يقتل حبطا أو يلم إلا آكلة

الخضرة أكلت حتى إذا امتدت خاصرتاها استقبلت الشمس فاجترت وثلطت وبالت

ثم عادت فأكلت وإن هذا المال حلوة من أخذه بحقه ووضعه في حقه المعونة هو

ومن أخذه بغير حقه كان كالذي يأكل ولا يشبع

……சொத்து இருக்கிறதே அது பசுமையானது சுவையானது. ஓடைகளில் முளைக்கக்கூடிய விளைச்சல்கள் ஒன்றை அழிக்கும் அல்லது அழிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும். கால்நடைகள் உண்ணக்கூடிய இடங்களை தவிர. அவை சாப்பிட்டுவிட்டு சூரியனை நோக்கி உட்கார்ந்து கொள்ளும். ஏற்கனவே உண்டதை எடுத்து மென்றுகொண்டிருக்கும். பிறகு மலஜலம் கழிக்கும். இதை மீண்டும் மீண்டும் செய்யும். ஆகவே சொத்தை அதை செலவழிக்க வேண்டிய முறையில் உபயோகித்தால் அது அவருக்கு மிகச்சிறந்த உதவியாக அவருக்கு அமையும். யார் முறையற்ற முறையில் அதை உள்வாங்குகிறாரோ அவர் நிறைய சாப்பிட்டு பசியடங்காதவன் போலாகிவிடுவான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 17

ஹதீத் பாகம் – 17

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

6063

عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم إن أكثر ما أخاف

عليكم ما يخرج الله لكم من بركات الأرض قيل وما بركات الأرض قال زهرة الدنيا

فقال له رجل هل يأتي الخير بالشر فصمت النبي صلى الله عليه وسلم حتى ظننا

أنه ينزل عليه ثم جعل يمسح عن جبينه فقال أين السائل قال أنا قال أبو سعيد لقد

حمدناه حين طعل ذلك قال لا يأتي الخير إلا بالخير

6427 அபூ ஸயீத் அல் ஹுத்ரீ (ரலி நபி(ஸல்) – நான் இந்த உலகத்தில் உங்களுக்கு அதிகமாக பயப்படுவதெல்லாம் பூமியிலிருந்து வரக்கூடிய பரக்கத்திற்கு மட்டும் தான் – பரக்கத் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது – உலகத்தின் கவர்ச்சி – ஒரு மனிதர் எழுந்து – ஒரு நன்மை ஒரு கெட்டதைக் கொண்டு வருமா? – நபி(ஸல்) அமைதியாகி பிறகு கேள்விகேட்டவர் எங்கே என கேட்டார்கள் – நன்மை நன்மையை தவிர வேறு எதையும் தராது ஆனால்……….

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 16

ஹதீத் பாகம் – 16

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِ أَنَّ النَّبِىَّ صّلَّى الله عَلَيهِ وَسَلَّمَ خَرَجَ يَومًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ

صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ ثُمَّ انْصَرَفَ إِلََى الْمِنْبَرِ فَقَالَ إِنِّي فَرَطٌ لَكُم وَأَنَا شَهِيدٌ عَلَيكُمْ وَإِنِّي

وَاللهِ لَأَنْظُرُ إِلَى حوْضِي الْآنَ وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنَ الْأَرْضِ أَوْ مَفَاتِيحَ

الْأَرْضِ وَإِنِّي وَاللهِ مَا أَخَافُ عَلَيكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنْ أَخَافُ عَلَيكُمْ أَنْ تَنَافَسُوا

فِيهَا

6426 உக்பத் இப்னு அமீர் (ரலி) நபி(ஸல்) – ஜனாஸாவிற்கு தொழுவிக்க வேண்டிய அந்த தொழுகையை உஹதில் ஷஹீதாக்கப்பட்டவர்களுக்காக தொழுதார்கள். நான் உங்களை விட்டும் முந்திவிடுவேன் நான் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னுடைய ஹவ்தை நான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறான். உலகத்தின் கஜானாக்களின் சாவிகள் எனக்கு தரப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்குப்பின்னால் நீங்கள் இணைவைப்பதை விட உலக செல்வங்களுக்காக போட்டி போடுவதையே நான் பயப்படுகிறேன்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 15B

ஹதீத் பாகம் – 15B

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

பஹரைனிலிருந்து ஜிஸ்யா பணம் வந்திருந்தபோது நபி(ஸல்) சுபுஹூ தொழ சென்றார்கள்; பிறகு புன்னகைத்துவிட்டு அபூஉபைதா வந்த செய்தியை அனைவரும் அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிறார்கள்; ஸஹாபாக்கள் ஆம் என்கிறார்கள்.

ابسروا وأمَّلُوا ما يَسُرُّكُم، فوالله ما الفقر أخشى عليكم، ولكني أخشى أن تبسط

الدنيا عليكم كما بسطت على من كان قبلكم فتنافَسُوها كما تنافسُوها فتُهلِككم كما

أهلكتْهُم

ஆசை வையுங்கள் நல்ல செய்தி நான் உங்களுக்கு வறுமையை பயப்படவில்லை உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு எவ்வாறு உலகம் அவர்களுக்கு விசாலமாக்கப்பட்டதோ அது போன்று உங்களுக்கு இந்த உலகம் விசாலமாக்கப்பட்டு நீங்கள் அதிலே மூழ்கி அவர்கள் போட்டி போட்டது போன்று நீங்களும் போட்டி போட்டு அவர்களை பொருளாதாரம் திசைதிருப்பி அழித்தது போன்று உங்களையும் பொருளாதாரம் திசைதிருப்பி அழித்து விடுவதை தான் நான் அஞ்சுகிறேன்.

 ஸூரத்துல் பகரா 2:195

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

   அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 15A

ஹதீத் பாகம்-15A

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

சரித்திரத்தில் சில தகவல்கள்

  • ஈராக் எல்லை முதல் ஒமான் வரும்வரையுள்ள பகுதியை பஹ்ரைன் என்று அழைக்கப்பட்டது.
  • இப்போது உள்ள பஹ்ரைனுக்கு அவால் என்ற பெயரிருந்தது.
  • நபி (ஸல்) காலத்து பஹ்ரைனுக்கும் பாரசீக ஆதிக்கம் இருந்த பகுதியாக இருந்தது.
  •  பஹ்ரைனிலிருந்தவர்கள் யுத்தத்திற்கு வராமல் ஜிஸ்யா வரி செலுத்த உடன்பட்டிருந்தார்கள்.
  •  அந்தக்காலத்தில் ஈரானின் பெயர் பாரிஸ் என்றிருந்தது.